Thursday, September 3, 2009

ரசித்த கவிதை+எனது ஓவியம்

    Copy of scan0002

           ஆனந்தவிகடன் பவளவிழாக் கொண்டாட்ட நேரத்தில் வெளியாகிப் பரிசு பெற்ற கவிதை இது.கவிஞர் வித்யாஷங்கர் எழுதியது. அவர் வலைப்பூவும் வைத்திருக்கிறார். அதன் சுட்டி இங்கே.படித்ததும் பிடித்துப் போனது.கவிதையின் மீதான ஈர்ப்பை மேலும் அதிகமாக்கியது, அதற்கு வரைந்திருந்த ஓவியமாகும்(யார் வரைந்தது தெரியவில்லை). ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் ரத்தச்சிவப்பு குங்குமமும்,சற்றுக் கீழே பார்த்தால் முன்னதன் கோபத்தைக் குளிர்பனியாக்கும் கண்களுமாக பார்த்ததும் கைகளைப் பரபரக்க வைத்தது.கையில் இருந்தது கறுப்புப் பேனா மட்டும்தான். வரைந்து தள்ளிவிட்டேன்.மூலப் படத்தின் அம்சமான அழகான கண்கள், எனது ஓவியத்தில் சரியாக வரவில்லை. ஆனால் வந்தவரையில் எனக்குப் பிடித்திருந்தது. பதிவிடுவதற்காக ஸ்கேன் செய்த பின் கம்ப்யூட்டர் பெயிண்ட் ப்ரஷில் குங்குமத்திற்கு மட்டும் சிவப்பு வண்ணம் தீட்டினேன்.

20 comments:

  1. ரசிக்கும் படியாக இருக்கு தல ;)

    ReplyDelete
  2. உங்க கையெழுத்து அழகா இருக்கு. வரைந்த படம் போலவே.

    ReplyDelete
  3. மேஸ்ட்ரோவின் வயலின் தீற்றல்கள்,புல்லாங்குழல் இடைச்செருகல்கள்,கிடார் நரம்பிசைகள் போல கவிதையைக் கையால் எழுதி அழகுப் படுத்திட்டிங்க.

    ReplyDelete
  4. அருமை...
    படமும் கவிதையும்.

    ReplyDelete
  5. நல்லா இருக்கு நண்பரே

    கவிஞர் வித்யாஷ்ங்கர் என் விருப்பமான கவிஞர்
    இந்தக் கவிதையைப் பாருங்கள்,

    கருப்பட்டி மிட்டாய்க்குப் பிள்ளையழ
    பலத்த கைதட்டலுக்கிடையில்
    கரகாட்டக்காரிக்கு
    ராசாத்தேவர் அன்பளிப்பு
    நூத்தியொன்னு

    ReplyDelete
  6. கவிதை ரொம்ப பிடிச்சுது. அதுக்காக நீங்க மெனெக்கெட்டு ஓவியம் வரைஞ்சு ஸ்கேன் செய்து அதை மேலும் அழகு படுத்தி வெளியிட்டது இன்னும் பிடிச்சது.

    ReplyDelete
  7. @கோபிநாத்...
    நன்றி தல.. எப்படி தல, எப்பப் பதிவு போட்டாலும் உடனே உங்களுக்குத் தெரிஞ்சுடுது...????!!!! மகிழ்ச்சியே...

    @மகேஷ்...
    நன்றி மகேஷ்..//கையெழுத்து அழகா இருக்கு.//
    கொஞ்சம் ஓவர் இது.

    ReplyDelete
  8. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

    இவண்
    உலவு.காம்

    ReplyDelete
  9. @ கே.ரவிஷங்கர்...
    நன்றி சார். ராஜாவின் இசையோடு இணைத்துப் பாராட்டியது மிக உயர்வு நவிற்சி சார்.

    @அகல்விளக்கு...
    முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி அகல்விளக்கு..(அகல்விளக்கு அருமையான பெயர். நினைத்தவுடன் கண்முன் காட்சியாய்...)

    @மண்குதிரை...
    வாருங்கள் கவிஞரே... உங்கள் பகுதியில் வித்யாஷங்கரின் கவிதையைப் படித்தபிந்தான் இதைப் பதிவிட ஞாபகம் வந்தது.நீங்கள் குறிப்பிட்ட கவிதையும், இயல்பு, எளிமை...நன்றி...

    @ஷக்திப்ரபா...
    நன்றி ஷக்திப்ரபா கவிதை,ஓவியம் இரண்டையும் ரசித்தமைக்கு. கவிதைக்கான மூல ஓவியம் எனக்கு மிகப் பிடித்திருந்தது.இன்னும் என் கண்முன்...அதனால்தான் கைப்பிரதி எடுத்து வைத்தேன்...

    @உலவு.கோம்...
    நன்றி...

    ReplyDelete
  10. அண்ணா கவிதை ஒரு அழகு என்றால் அதை அழகாக்கிய விதம் அற்புதம்.சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.பரணி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நல்லாயிருக்குங்க கவிதை நச். ஒவியமும் நன்று.

    ReplyDelete
  12. @ஹேமா...
    மிக்க நன்றி ஹேமா...

    @D.R.அஷோக்...
    முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி அஷோக்...

    ReplyDelete
  13. நல்லா வரைந்திருக்கிறீர்கள்.
    நல்லவேளை என்னால் எதிர் ஓவியம் எல்லாம் போடமுடியாது.

    ReplyDelete
  14. \\தமிழ்ப்பறவை கூறியது...
    @கோபிநாத்...
    நன்றி தல.. எப்படி தல, எப்பப் பதிவு போட்டாலும் உடனே உங்களுக்குத் தெரிஞ்சுடுது...????!!!! மகிழ்ச்சியே...
    \\\

    நான் ரீடார் பாய் (google reader) தல ;))

    ReplyDelete
  15. @குடுகுடுப்பை...
    நன்றி குடுகுடுப்பையாரே...//நல்லவேளை என்னால் எதிர் ஓவியம் எல்லாம் போடமுடியாது.//
    ;-))

    @கயல்விழி நடனம்...
    நன்றி கயல்விழி நடனம்...

    @கோபிநாத்...
    நன்றி கோபிநாத்...அதான் டவுட்டா இருந்தது. விளக்கிவிட்டீர்கள்...

    ReplyDelete
  16. ஓவியமும் கவிதையும் அருமை.. வித்யாஷங்கருக்கும் எனது வாழ்த்துக்கள்..

    //பதிவிடுவதற்காக ஸ்கேன் செய்த பின் கம்ப்யூட்டர் பெயிண்ட் ப்ரஷில் குங்குமத்திற்கு மட்டும் சிவப்பு வண்ணம் தீட்டினேன்.//

    குங்குமத்தின் ஓரங்களில் பயன்படுத்திய ப்ரஷே காட்டிகொடுத்துவிட்டது... பொட்டு மட்டும் கம்ப்யூட்டரில் போட்டிர்கள் என்று..

    ReplyDelete
  17. நன்றி தர்ஷினி..
    கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க...
    நல்லா இருக்குல்ல... அது போதும்...

    ReplyDelete
  18. நானும் ஒரு மாரியாத்தாவை காதலிச்சேன்.. :)

    ஆனா குங்குமத்தையும் கையாலயே வச்சிருந்தா இன்னும் நல்லாருக்கும்...

    ReplyDelete
  19. வாங்க தமிழன் கருப்பி...
    ஏனோ தெரியலை.. ஒரு நிமிடங்களுக்கு முன் தான் உங்கள் நினைப்பு வந்தது...அதற்குள் வந்துவிட்டீர்கள் நன்றி...
    குங்குமத்தைக் கையால் வைத்திருக்கலாம்தான்.அது பழைய ஓவியம். அதன் மேல் கைவைத்து, புராதனக் கோயில்களின் மேல் வண்ணம்பூசிக் கெடுப்பதைப்போல் செய்ய மனமொப்பவில்லை...
    உங்களுக்கு எப்படியோ எனக்கு அது க்ளாசிக்...

    ReplyDelete