Sunday, October 30, 2011

சுற்றம் 'பார்க்'கின் குற்றம் இல்லை‍ லைவ் ஸ்கெட்ச் 301011

கொஞ்ச நாளாக் குளிர் விட்டுப் போச்சு. எனக்கு மட்டுமில்லைங்க. இங்க குளிர் குறைஞ்சிடுச்சு...இரண்டு வாரமாச்சு. ஓரளவு பழகியாச்சு.

எல்லா இடத்துலயும் ஜெர்மன் மொழியில்தான் எழுதி இருக்காங்க. ஏதோ நினைப்பில நாம நடந்து போன, எதிர்ல வர்றவங்க 'ஹலோ' சொல்லிட்டுப் போறாங்க. திடுக்கிட்டு என்னனு பார்க்கிறதுக்குள்ள அவங்க வேலையைப் பார்த்துட்டுப் போக ஆரம்பிச்சுடுறாங்க.

நிறையப் பேர் சைக்கிள் வைத்திருக்கிறார்கள். சைக்கிளை டிரையினிலும் ஏற்றுகிறார்கள்.நல்ல யோசனைதான்.

குளிரைத் தாங்குவதற்காக எல்லாக்கட்டிடங்களுமே பாதிக் கட்டுமானம் மரத்தில் செய்திருக்கிறார்கள். மச்சுவீடு மாடிவீடு எல்லாம் கிடையாது, பார்த்தவரை ஓட்டு வீடுதான்.#நல்ல தரமான கட்டைகள் போலும்

பெண்கள்... எழுத ஆரம்பித்தால் மானிட்டர் நனைந்துவிடும். அலுவலக லேப்டாப் என்பதால் அதனைத் தவிர்க்க நினைக்கிறேன். ஒரே வரியில் சொன்னால், 'திருத்தமாக இருக்கிறார்கள்'. ரயிலிலேயே மேக்கப்பையும் முடிக்கிறார்கள்(எல்லா ஊர்லயும் இதே கூத்துதான் போல).போன பாராகிராப்பில் கடைசியில் போட்ட ஹேஷ்டேக் வார்த்தைகளை இந்த பாராகிராப்போடு நீங்கள் குழப்பிப் படித்தான் நான் பொறுப்பல்ல ;)

இன்னும் ஃப்ரான்ங்ஃபர்ட் தவிர ஊர்சுற்ற ஆரம்பிக்கவில்லை. திட்டம் இருக்கிறது. விரைவில் பகிர்கிறேன்.

விதவிதமான பானங்கள் கிடைக்கின்றன். இது இங்கே 'குடி'சைத் தொழில் போலும். பெயர் எல்லாம் அவர்கள் மொழியிலேயே இருப்பதால், எது விஸ்கி, ஓட்கா, ஒயின் , பீர் எனத் தெரியவில்லை. நமக்கு அது தேவையில்லை என்பதால் விட்டுவிட்டேன்.(பகிர்ந்தது பொதுநலன் சேவை கருதி) ;)


காஸ்ட் ஆஃப் லிவிங் அதிகம். சரக்கைத் தவிர்த்து எல்லாப் பொருட்களும் விலை அதிகம். மெக்டொனால்ட்ஸ் இருக்கிறது.நேற்றுதான் கேஃஎஃப் சியைக் கண்டுபிடித்தேன்.

இன்று காலை போகவேண்டிய பார்க் இது. தூங்கிவிட்டதால் மதியம் சென்றேன். ஆர்டிஸ்ட் பென்னில் வரைந்தது. ஒன்றரை மணிநேரம்.

பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள்....

நிறைய பல்புகள் சுவாரஸ்யமான நிகழ்வுகள் இருக்கின்றன பகிர்வுக்கு,

இப்பதிவு ஓவிய ரசிப்புக்கு என்பதால் பின்னர் சொல்கிறேன்.

இன்னொரு விஷயம், ப்ளாக்கருக்கு தீபாவளி சட்டை போட்டுவிட்டேன். புது டெம்ப்ளேட் எப்படியிருக்கிறது என நேரங்கிடைத்தால் பார்த்துவிட்டு ஃபீட்பேக் சொல்லுங்கள்....:)

Sunday, October 23, 2011

ரோம்பெர்பெர்க்-பிரான்க்பார்ட் -Sketch -23 OCT 2011




ஜெர்மனி வந்த நாள்ள இருந்து இந்த நாள் வரை கடுமையான ஜலதோஷம், கூடவே காதல் போலக் காய்ச்சலும் ..(உள்ள இருந்து படுத்தி எடுக்குது, வெளிய யாருக்கும் தெரியலை).ஆபீஸ், ஹோட்டல் ரூம், ட்ரைன் மற்றும் ஷாப்பிங் மால் தவிர எல்லா இடத்துலயும் குளிர் கொல்லுது. வந்து இறங்கினப்போ பத்து டிகிரி இருந்தது. போகப் போக தேமுதிக செல்வாக்கு மாதிரி குறைஞ்ச கிட்டே இருக்குது.



muukku சிந்திச் சிந்தி அது காணாமப் போகாததுதான் மிச்சம்,,,(அது போகாது, இன்னும் ஏகப்பட்ட பேர்கிட்ட நோஸ்கட்வாங்க வேண்டி இருக்குதே..;) )




நேத்து புல்லா தூங்கியே கழிச்சாச்சு...இன்னைக்குக் காலையில சீக்கிரம் பத்து மணிக்கெல்லாம் எழுந்து இந்த இடத்துக்குத்தான் போனோம்.இது முனிசிபாலிட்டி பிள்டிங்க்காம் , ரெண்டாவது உலகப் போர் அப்ப , மேயர்கள் மற்ற உறுப்பினர்கள் எல்லாம் இங்கதாn ரகசிய மீட்டிங் போட்டாங்களாம். அப்புறம் இங்கு குண்டு போட்டாங்களாம். அதுக்கப்புறம் புதுசா நிர்மாணம் செய்தார்களாம்...என் நண்பன் சொல்லக் கேள்வி. அங்கு எல்லாமே ஜெர்மன் மொழியிலையே எழுதி இருக்காங்க...அட்லீஸ்ட் மதுரைத் தமிழ்ல கூட எழுதி வைக்கலை. விக்கிப்பீடியாவில பார்த்தாலும் ஜெர்மன் தான்...:(


இந்த இடத்தைத் தாண்டிப் போனால் 'ரெயின்நதி வருகிறது....




இந்தக் கட்டிடத்திற்கு நான் போன நேரம் பதினோரு மணி இருக்கும். வரைய ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் என் அருகில் ஒரு ஜென்டில் மேன் வந்தார் தொப்பியுடன். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தொப்பியைக் கீழே வைத்துவிட்டு முழங்கால் போட்டு அமர்ந்தார்....ஒ ஒ... நம்ம ஒர்க்குக்கு 'HATS OFF' சொல்கிறாரோ சிம்பாலிக்காக என்று நினைத்தேன். பின்புதான் தெரிந்தது, அவர் பிசினசிற்காக கல்லாவைத் திறந்திருக்கிறார் என. (அது சர்ச் வாசல். நிறைய சில்லறை தேரும்) இதைப் பார்த்துப் பதறிய என் நண்பன் என்னைச் சுற்றிலும் ஏதும் டப்பா இருக்குதா என செக் செய்துவிட்டு இல்லைஎன்ற பிறகுதான் பெருமூச்சு விட்டான்..,(இருந்திருந்தா அட்லீஸ்ட் ஒரு பர்கருக்காவது தேறி இருக்கும்...:( )




நேற்று புதிதாக சில pens வாங்கினேன்... அதை முதல் முறையாக உபயோகித்து வரைந்தது... தொண்ணுறு நிமிடங்கள் செலவானது...


பி.கு: என் ஹெச் எம் இல்லை., தமிழ் எடிட்டரில் காப்பி செய்து பேஸ்ட் செய்ய முடியவில்லை.... அதனால் இந்த 'ஜாக்கி'த தமிழை மன்னிக்கவும்....












Saturday, October 15, 2011

ஸ்கெட்ச் க்ராவ்லர்ஸ் பெங்களூர் ஷாப்பிங்

காலைல முக்கியமான ஷாப்பிங் போகணும்,. இன்னைக்கு முழுக்கவே ஷாப்பிங்தான் ப்ளான்.ஆனாலும் கொஞ்சம் நேரம் கிடைச்சது. அதனாலஸ்கெட்ச் கிராவ்ல்நிகழ்வுக்குப் போயிட்டேன்.Sketch crawlerss ந்றது, உலகம் முழுக்க எல்லா ஓவியர்களும் ஏதாவது ஒரு இடத்துல ஒண்ணு கூடிக்
கும்மியடிச்சிட்டு, கொஞ்சம் கிறுக்கிட்டு ஸ்கெட்ச் கிராவ்லர்ஸ்க்கான இணையதளத்துல அப்லோட் பண்ணனும்.இது மூணுமாசத்துக்கொருக்கா ஏதாவது ஒரு சனிக்கிழமை நடக்கும்(அனேகமா ரெண்டாவது சனிக்கிழமையா
இருக்கும்).

ஏன் அங்க போக முடிவெடுத்தேன்னா, அது பிரிகேட் ரோடு. என் ஷாப்பிங்கையும் அங்க முக்கால்வாசி முடிச்சிடலாம்.ஆடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு; அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சுன்ற கதையா முதல்ல ஸ்கெட்ச் கிராவ்லர்ஸ் நிகழ்வுக்குப் போனேன். இது போன்ற நிகழ்வில் நான் கலந்து கொள்வது இரண்டாவது தடவை. நடுவில் ஒரு முறை ஒர்க்ஷாப் ஒன்றிற்குச் சென்றதால் மிஸ் ஆகிவிட்டது. ஆறேழு பேர் வந்திருந்தாங்க.பிரிகேட் ரோட்டில இருக்க ஓபரா ஹவுஸ்தான் டார்கெட். ஆனா இன்னிக்கு ஓவர் வெயில் அஜித்தைப் பொளந்துருச்சு. அதனால கூலா அதுக்கு எதிர்த்தாப்புல இருந்த மால்லகபே காபி டேக்குள்ள தஞ்சம் புகுந்துட்டோம். பென் மட்டும்தான் இருந்தது. அதிலயே அட்ஜஸ்ட் பண்ணி இந்த ரெண்டு படத்தைப் போட்டுட்டேன்.


மதியம் பிஸ்ஸா ஹட் போனா, கல்யாண வீட்டு அப்பளம் சைஸுல இருக்கிறவெஜ் சுப்ரீமோலார்ஜ் க்கு (மூணு பேர் சாப்பிட்டோம்), 600 ரூபா பில்லப் போட்டுட்டான் வக்காளி. பிட்சர் வேணுமான்ன்னு கேட்டான். ‘டேய் நான் சொன்னது செவன் அப்டான்னேன். எனக்குத் தெரிஞ்சதுபிட்சர்னா பீர் தான். அப்புறம்தான் புரிஞ்சதுபிட்சர்னா பெரிய ஜாடியாம். அது ஃபுல்லாக் கொடுப்பானுங்களாம் கூல் ட்ரிங்க்ஸை.


நண்பர்களின் ஆலோசனையோடு புதுக்கேமரா வாங்கியாச்சு. மயில் மற்றும் உமாநாத் செல்வனுக்கு நன்றிகள். அவர்கள் சொன்னது சோனி. ஆனா அது 10 மெகாபிக்சல். அதான் நான் கேனான் 14 மெகாபிக்சல் கேமரா வாங்கிட்டேன். 5 X ஜூம்.விலை ஏழாயிரத்துக்குக் கொஞ்சம் கீழே. முதல் ஃபோட்டோ திருஷ்டி கழிக்கிறதுக்காக சேல்ஸ்மேன் என்னையே எடுத்தாரு. அதனால அத என் டெஸ்க்டாப்ல வச்சிருக்கேன். வெளியாள் பார்வைக்கு அனுமதியில்லை.



ஏகப்பட்ட ஷாப்பிங் இன்னைக்கு. ஒரே ஆள் நான், டூவீலர்ல வச்சுக் கொண்டு வரமுடியல. இதுக்கு ரெண்டு தீர்வு இருக்கு. ஒண்ணு கல்யாணம் பண்ணனும் இல்ல கார் வாங்கணும். இன்வெஸ்ட்மெண்ட் காஸ்ட்,மெயிண்டெனன்ஸ் செலவு ரெண்டும் வச்சுக் கம்ப்பேர் பண்ணிப்பார்த்தா கார் வாங்குறதுதான் பெட்டர்னு தோணுது. என்னலே நாஞ்சொல்றது சரிதானே....???!!!!


ஏன்ப்பா பஸ்ஸை ஷெட்டுல போட்டுப் பூட்டப் போறாங்களாமே அது உண்மையா? :( சரி சரி அடுத்து வர்ற ஹை டெக் ட்ராவல்ஸ்ல (கூகிள்+) ஏறி இடம் பிடிச்சுக்குவோம்....

Wednesday, October 12, 2011

ஐம் காலிங் ஃப்ரம் ஹெச் எஸ் பி ஸி பேங்க்....

ட்ரிங் ட்ரிங்...

ட்ரிங்...ட்ரிங்.....(மக்களே நான் சொன்னேன்னு யாரும் சரக்கடிக்கப் போயிடாதீங்க...இது ஃபோன் அடிக்கிற சத்தம்....)

ரிசீவரை எடுத்தேன்.

‘ஹலோ’

‘ஹலோ...இட்ஸ் நிஷா. காலிங் ஃப்ரம் ஹெச் எஸ் பி ஸி பேங்க்..ப்ளா ப்ளா ப்ளா...’

ஆரம்பிச்சிட்டாய்ங்க இன்னைக்கும்.ஹ்ம்ம்...
பொண்ணுங்கன்னா ஓவர் பேச்சுத்தான். அதான் கால் செண்டர்ல வேலைக்கு எடுக்குறாய்ங்க போல.

எப்பவாவதுனா பரவாயில்லை. டெய்லி காலைல , சாயந்திரம் ரெண்டு தடவை அதே பேங்குல இருந்து ஃபோன் வரும். என்னய்யா உங்க பஞ்சாயத்துன்னு ஹிங்கிலீஸ்ல கேட்டா, ‘அசோக் சார்..உங்க கிரெடிட் கார்டு’னு ஆரம்பிச்சிருவாய்ங்க.


கடந்த ஆறு மாசமா இதே வேலைதான்.
பொறுமையா சொல்ல ஆரம்பிச்சேன்..’ப்ளீஸ் ஹோல்டான்...!நான் அசோக் இல்லை. பரணி. அவர் உட்கார்ந்திருந்த இடத்துல, நான் இருக்கேன். அவர் டெஸ்க் மாறிப் போயிட்டாரு.அவரோட எக்ஸ்டென்ஷன் நம்பர் இதுன்னு’ நாலு நம்பர் சொல்ல ஆரம்பிக்கிறதுக்குள்ளயே ,’தேங்க் யூ’ன்னு ஃபோனை வச்சிடுவாய்ங்க.


பலசமயம் நான் சீட்லயே இருக்கமாட்டேன். அதனால ஃபோனும் நான் அட்டெண்ட் பண்றதில்லை.

இருந்தும் தொல்லை அதிகமாயிடுச்சு.அப்புறம்தான் ஒரு ஐடியா பண்ணேன்.
எப்பக் கூப்பிட்டாலும், தமிழ்ல மட்டும் பேச ஆரம்பிப்பேன்

‘ஹலோ...இட்ஸ் பூனம். காலிங் ஃப்ரம் ஹெச் எஸ் பி ஸி பேங்க்..ப்ளா ப்ளா ப்ளா...’

‘சொல்லுங்க என்ன வேணும்?’

‘சார்...’

‘சொல்லும்மா என்ன வேணும்?’

‘சம்ஜா நஹி சார்’

ஃபோன் கட்...


‘ஹலோ...இட்ஸ் மாத்ரி. காலிங் ஃப்ரம் ஹெச் எஸ் பி ஸி பேங்க்..ப்ளா ப்ளா ப்ளா...’

‘சன் டிவியா?’

‘சார்’

‘எந்திரன் படத்துல இருந்து ‘கிளிமஞ்சாரோ’ பாட்டு போடுங்க’

‘சார்..க்யா பாத் கர் ரே சார். சம்ஜா நஹி(ன்)’

‘அதாம்மா தாத்தாவும் பேத்தியும் டூயட் பாடுவாங்களே. அந்தப்பாட்டு’

ஃபோன் கட்...

அப்புறம் அப்பப்போ என்ன தோணுதோ, சூரியன் எஃப் எம், கோடைப் பண்பலை இப்டி அடிச்சு விடுவேன்...


ஆனா அவிங்களும் ஓயமாட்டேங்கிறாய்ங்க. இப்பவும் கால் வருது...

அந்த இடத்துல இருந்த அசோக், ரொம்ம்ம்ம்ம்ப நாளா நச்சரிச்சு , போன வாரம்தான் முடிச்சிக் கொடுத்தேன் இந்த போர்ட்ரெயிட்டை...வட இந்தியர்...

ஸ்டெட்லர் 8பி பென்சில் இன் நைட்டிங்கேல் ஆர்ட் ஷீட்...

Tuesday, October 11, 2011

வெல் விஷர்

இதுவும் முந்தைய படங்களைப் போலவே ஆனந்தவிகடனில் இருந்து எடுத்ததுதான்.நன்றி ஆனந்தவிகடன்....!
வாட்டர்கலர் ஆன் வாட்டர்கலர் பேப்பர் ஏ4 சைஸ்....


பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள்....!

Monday, October 10, 2011

புத்தம்புதுக்காலை... பொன்னிற வேளை...

முழுவதும் சில்-அவுட் எஃபக்ட் கொண்டு வரமுடியவில்லை. முடிந்தளவு அந்தக் காலையையும், பறக்கும் தூசியையும் கொணர்ந்ததில் திருப்தி. மைல்ஸ் டூ கோ...

ஆனந்தவிகடனுக்கு நன்றி.புகைப்படமெடுத்திருந்த பத்மநாபனுக்கும் நன்றிகள்...!
வாட்டர்கலர் இன் வாட்டர் கலர் பேப்பர், ஏ4 சைஸ்...!





பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள்....!

Sunday, October 9, 2011

காத்திருந்தேன் தனியே....

காத்திருந்தேன் தனியே....

வீட்டில் ரெஃபரன்ஸ் படங்களுக்காக பழைய விகடன் இதழ்களில் தேடியபோது கிடைத்த படம் இது. ஆனந்தவிகடனுக்கு நன்றி...!வாட்டர் கலர் இன் வாட்டர் கலர் பேப்பர். ஏ4 ஷீட்...

பேலட்டில் வண்ணங்களை ஒருமுறை லோட் செய்தால் அது தீர்ந்தால் அடுத்து லோட் செய்ய சோம்பேறித்தனம். அதனால் முதல்முறை வண்ணங்கள் கலக்கியபின், அதிலிருந்தே புதுப்புதுக் கலவைகளை உருவாக்கி ஒப்பேற்றிவிடுவது வழக்கம்:(

எங்க வீட்டுக் குட்டியின் அலும்புகளையும் மீறி ஓவியம் ஓரளவுக்கு நன்றாக வந்ததில் மகிழ்வே...:)

பார்த்தமைக்கும், ரசித்தமைக்கும் நன்றி....!