Friday, May 27, 2011

தேசிய விருது பெற்ற திரைச்சீலை ‘ஜீவா சார்’

   2010 ஆம் ஆண்டுக்கான , திரைப்பட ஆய்வு குறித்த தேசியவிருது பெற்ற ஜீவாநந்தன் சாரை வாழ்த்துகிறேன்...
  முகப்புத்தகத்தில் தான் நண்பராக அறிமுகமானார். இளையராஜாவின் இசையில் இன்னும் நெருக்கமானோம்...
   இவர் திரைப்படங்களுக்கு பேனர் வரைவதைத் தொழிலாக வைத்திருந்தாலும், வக்கீல் படித்தவர்...இந்திய, உலகப் படங்களைப் பற்றி விமர்சனங்கள் எழுதியிருக்கிறார்.(நான் படித்ததில்லை. படிக்கவேண்டும்.)
   எனினும் எனது அனைத்து கிறுக்கல்களுக்கும் அவர் போடும் ‘லைக்’ ஒரு தனிக் கிறக்கத்தை என்னுள் ஏற்படுத்தி, என்னை ஊக்குவிக்கும்....

சமீபத்திய வருத்தம், கடந்தமாதம் கோவை சென்றிருந்தும், ஒரு இனம்புரியாத தயக்கத்தால், அவரைப் பார்க்காமல் வந்து விட்டேன் . வருத்தம்தான்...
   வாராவாரம், குழ்ந்தைகளுக்கு, இன்னும் சில ஓவியர்களுடன் சேர்ந்து ஓவிய வகுப்புகள் நடத்திவருகிறார்...
   மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்...
சார்க்கோலில் கார்ட்ரிட்ஜ் பேப்பரில் வரைந்த ஒரு அவசர ஓவியம்....

Sunday, May 22, 2011

எனது வார இறுதி-சல்மா,தனுஷ்,சுஜாதா,பிம்பா

  நேற்றைய இரவின் இரண்டாம் ஜாமம் முழுவதும், சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’யே ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததனால், காலை ஐந்து மணிக்குத்தான் தூங்கப் போனேன். இன்னொரு அத்தியாயம், இன்னொரு அத்தியாயம் என உள்ளே இழுத்துக் கொண்டே செல்கிறது கதை. நமக்கு அதிகம் அறியாத முஸ்லீம் மக்களின்(பெண்களின்) வாழ்க்கையை ,பெண்களின் வழியாகவும், அவர்களின் பேச்சுக்களின் வழியாகவுமே அறியச் செய்கிறார்....

      குறியீடு, பின் நவீனத்துவம்,இசம், ரசம் என எத்தகைய வெங்காயங்களும் இல்லாமல், இயல்பான உரையாடல்களிலேயே நகர்ந்து செல்கிறது கதை.கதாபாத்திரங்களும், அவர்களின் பெயர், உறவுமுறைகள் நினைவில் வைக்க முதலில் சிரமமிருந்தாலும், கதையோட்டத்தில் பழகிப் போய்விடுகிறது...இன்னும் முடிக்கவில்லை.இரு நாட்களில் முடித்துவிடலாம்.

                          *******************************************************

   சன் டிவியில் ‘ஒத்த சொல்லால’ பாட்டு அமர்க்களப் படுகிறது. முதல் நாள் தியேட்டரில் பார்க்கும்போதே ஆடத் தூண்டிய பாடல். சூப்பர்...
                          ********************************************************
சுஜாதாவின் ‘தீண்டும் இன்பம்’ எடுத்தேன். அரைநாளில் முடித்துவிட்டேன். ஒரே வார்த்தையில் சொல்வதானால் ‘குப்பை’.
  
படு செயற்கை...:(((((((

                        **********************************************************


இடைப்பட்ட நேரங்களில் ஒரு அனாட்டமி ஸ்டடிக்காக ஒரு பென்சில் ஸ்கெட்ச் ஓடிக் கொண்டிருக்கிறது.நாளைக்குள் முடிக்கத் திட்டம்...ஸ்டெட்லர் பென்சிலில் வரைவதே தனி சுகானுபவம். என்ன ஒரு 8B பென்சிலின் விலை மட்டும் 50 ரூபாய்தான் :)

                         ********************************************************
   இன்று காலையில் வெகுதாமதமாக பத்து மணிக்குத்தான் எழுந்தேன். இன்றைய வீக் எண்ட் ஜாம் ஆக்டிவிட்டி, பசவனகுடியில் உள்ள ‘பிம்பா ஆர்ட் ஃபவுண்டேசன்’ இல். எல்லாமே புது இடங்கள் என்பதால் வெள்ளி மாலை அலுவலகம் விட்டு வரும்போதே A3 size ஷீட்டில் மேப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்வேன்.மேப்பில் எளிதாக இருக்கும் வழி, நேரில் சென்றால் மட்டும் குழப்பியடிப்பதேன். எங்கெல்லாம், இரு பாதைகள் பிரியுமோ, அந்த இடத்தில் வந்ததும், தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளத் தோன்றும். ஹெல்மெட் இருப்பதால் அதற்கு வழியில்லை. மிகச் சரியாக , தவறான பாதையில் போய்விடுவேன். பின் நீண்ட தூரம் சென்று யாரிடமாவது கேட்டு, யு டர்ன் எடுத்து வர வேண்டும்...கூகிள் மேப்பை விடவும் சிறந்தவர்கள் ஆட்டோக்காரர்கள்.நன்றி....

          பிம்பா ஆர்ட் ஃபவுண்டேஷனில் ஓவியம், இதர கலைகள் சொல்லிக் கொடுக்கிறார்கள். 100 வருடப் பழமையானது இந்நிறுவனம். பலவித கலை வேலைப்பாட்டுப் பொருள்கள் சேகரித்து வைத்திருக்கிறார்கள்.,..
நான் போன நேரம் 12 மணி. குழுவில் மற்றவர்கள் அந்நேரம், அங்கே நடக்கும், ‘ராசலோக்’ எனும் தோல்பாவைக் கூத்தைக் காணச் சென்றுவிட்டனர்.நான் வெளியில் இருந்த ‘சூரிய நாராயணனின்’ சிலை’யை வரைய ஆரம்பித்துவிட்டேன். 75 நிமிடங்கள் பிடித்தது.பால் பாயிண்ட் பென்னில் வரைந்தது...
 

Thursday, May 19, 2011

மொட்ட மாடி மொட்ட மாடி...

   நண்பர் மகேஷ் எடுத்த புகைப்படம்தான் இதற்கு ரெஃபரென்ஸ்...வாட்டர்கலரில் செய்தது...

Sunday, May 15, 2011

மதுரை மெஸ் 140511

  நேற்றைய நாள் முழுவதும் ஊர் சுற்றல்தான். காலையில் ‘அழகர்சாமியின் குதிரை’ டிவிட்டர் நண்பர் TBCD யுடன் சென்றேன். கே.ஆர் புரம் புஷ்பாஞ்சலி திரையரங்கம். டிக்கட் விலை 70 ரூபாய்தான். அழகாகப் பராமரிக்கிறார்கள் திரையரங்கை. சீட்டுகளும் நன்றாக உள்ளது. ஒரே குறை AC போடவில்லை. சரி மின்விசிறியாவது போடலாமல்லவா? அதுவும் இல்லை. வியர்க்க விறுவிறுக்கப் படம் பார்த்துவிட்டு வந்தோம்.
   எதிர்பார்த்துப் போன அளவுக்கு படம் இல்லை. ஆனால் நல்லதொரு படம். எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சுசீந்திரனின் முந்தைய இரு படங்களை ஒப்பிடுகையில் இது ஒரு மாற்றுக் குறைவுதான்.இளையராஜாவின் இசை நன்றாக இருந்தது. எனினும் மேற்கத்திய இசை இல்லாமல், நமது இசையையே வழங்கி இருந்தால் ஏகப் பொருத்தமாயிருந்திருக்கும். ஆரம்பத்தில் வரும் ‘அடியே இவளே’ பாடலைப் போலவே, படம் முழுக்க இசையமைத்திருந்திருக்கலாம். க்ளைமேக்ஸ் எனக்குப் பிடித்திருந்தது.மெல்லிய நகைச்சுவையோடிய படம்.சுசீந்திரனிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்....

   மதியம நந்தினியில் மினிமீல்ஸ் முடித்துவிட்டு, நேரே வண்டியை அவென்யூ ரோட்டுக்கு விட்டேன். இரண்டரைமணி நேரம். ட்ராஃபிக் ஜாமிலேயே ஒரு மணி நேரம் போய்விட்டது. அங்கு சென்றபிறகுதான் தெரிந்தது. அது ஒரு ரங்கநாதன் தெரு என்று. அங்கு இருபுறமும் பெயர்ப் பலகைகளைப் பார்த்துக் கொண்டே வண்டியை நகர்த்திக் கொண்டிருந்தேன். ஒரு வழியாகக் கண்டுபிடித்து பர்ச்சேஸ் முடித்துவிட்டுக் கிளம்புகையில் மழை ஆரம்பித்துவிட்டது. அரைமணி நேரம்தான்.அதன் பின் மழையில்லை. திரும்புகையில் ஜில்லென்றிருந்தது. மாலையும், கொஞ்ச நேரம் பெய்த மழையும் பயணத்தை இனிதாக்கியது.
  வீடு திரும்பும் வழியில், மாரத்தள்ளி தள்ளி, ஒயிட்ஃபீல்ட் ரோட்டில் இருக்கும் ‘மதுரை மெஸ்’ சென்றேன். அங்கு தோசைகளை ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்ததால்தான் இப்படமும், இப்பதிவும் வந்தது. இங்கு உணவு அவ்வளவு நன்றாகவுமிருக்காது. அவ்வளவு மோசமாகவுமிருக்காது...(ஒரு செனரல் நாலெட்ஜூக்குதான்)  :)))

Monday, May 9, 2011

எங்க வீட்டுக் குட்டி கொடுத்த போஸ்கள்

    கோவி...என் சகோதரர் பையன்...
அவனை ஒழுங்கா போஸ் கொடுடான்னா, கொடுக்க மாட்டான். அதான் அவன் தூங்கினப்போ வரைஞ்சது இந்தப் படங்கள்...
ஊருக்குப் போனவுடன் ஒரு மண்வண்டி(டிப்பர் லாரி) வாங்கிக் கொடுத்தேன்.ரெண்டு நாள் முழுக்க அதுகூடதான் அவனோட விளையாட்டு. சாப்பிடப் போறப்போ, தூங்கப் போறப்போ, வெளிய கிளம்பற்ப்போ எல்லா நேரத்திலயும், அவன் கைல அதான் இருந்தது.
  இப்பத் தூங்குறப்போ அது பக்கத்துல இருந்தது. நான் தான் படத்தைக் காம்ப்ளிகேட் பண்ண வேணாம்னு அத விட்டுட்டு வரைஞ்சேன்...
செம வாலு....

 இதுதான் அவனோட ஃபேவரைட் போஸ். ஒரு கைவிரலைச் சப்ப ஆரம்பிச்சு, இன்னொரு கை விரலால, அரைநாண் கயிற்றைப் பிடிக்க ஆரம்பிச்சுட்டானா,அவன் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போகப் போறான்னு அர்த்தம்.....
ச்ச்சோ ச்வீட்.........!

கோவைப் பயணம் - கிறுக்கல் குறிப்புகள்

   05 மே 2011- இரவு 9மணி-அத்திப் பள்ளி முதல் ஹோசூர் வரை- டவுன்பஸ் பயணம்...நெடுஞ்சாலையில்..
பஸ்ஸின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினேன்....







05 மே 2011- இரவு 11மணி.ஹோசூர் ரயில் நிலையம் இரவு....நிதானமாக, ஆனால் ஐந்து முதல் 15 செக்கண்டுகளுக்குள்ளாக முடிக்கப்பட்டது ஒவ்வொரு படமும்....








06 மே 2011- இரவு 9மணி.காநதிபுரம் பஸ்நிலையத்திலிருந்து சிங்காநல்லூர் நிலையம் வரை-டவுன்பஸ் பயணம்-ஆனால் நகர்ச் சாலைகளில்...அடிக்கடி நின்றது. ஆனால் குலுக்கல் அதிகம்....







05 மே 2011- இரவு 11 மணி.-சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் பஸ்ஸில் அமர்ந்தவாறு


Sunday, May 8, 2011

(தமிழ்ப்)பறவை(ப்) பார்வையில் பைக்

       நண்பனின் நிச்சயதார்த்தத்துக்காக கடந்த வெள்ளியன்று கோவை சென்றிருந்தேன். காந்திபுரம் கவிதா தியேட்டரை ஒட்டியுள்ள ஸ்ரீனிவாஸா லாட்ஜில் இரண்டாவது மாடியில் தங்கியிருந்தேன். மாலை நேரம் அறையைவிட்டுக் கிளம்பும்முன், பக்கத்து அபார்ட்மெண்டின் தரைத்தளத்தில் நிறுத்தப் பட்டிருந்த இந்த அப்பாச்சி கண்ணையும், கையையும் உறுத்தியது. சுட்டுட்டேன்....

          பால்பாயிண்ட் பென்னில் கிறுக்கியது. முக்கால்வாசி முடிவடைந்த நிலையில் வண்டிக்காரர் பைக்கை எடுத்துச் சென்றுவிட, என் மொபைலில் முன்னெச்சரிக்கையாக எடுத்துவைத்திருந்த ஃபோட்டோவை ஜூம் பண்ணிப் பண்ணி ஷேடிங்கை முடித்தேன்.
    

Wednesday, May 4, 2011

Illusion- Lady and the dog

     Illusion ட்ரை பண்றதுக்காக, இந்தப் படத்தையும், இந்தப் படத்தையும் கலந்து கட்டி வாட்டர்கலர் பண்ணப்போ வந்த ரிசல்ட் இது.  :(
கரெக்ட் பண்ண முடியலை...போய்த் தொலையுதுன்னு அப்டியே விட்டுட்டேன்...
ப்ளான் பண்ணாம எதுவும் பண்ணக்கூடாது.
  
    சரி.இதையும் பார்த்துட்டுப் போயிடுங்க...இதுவும் கடந்து போகும்...:)

Monday, May 2, 2011

நேரடி உருவப் படங்கள் பயிற்சி

     கடந்து சென்ற வார இறுதி முழுவதும் வேலை இருந்தது. வேலை என்றால், கரும்பு தின்னுவதுதான். பெங்களூரில் பென்சில்ஜாம் ஸ்டூடியோவில் ,’உருவப்படங்கள்’ வரைவது பற்றிய ஒரு பட்டறை இரு நாட்களாக நடந்தது. 

     நேரடி உருவப் ப்டங்கள் வரைவது பற்றிய என் முழு எண்ணத்தையும் தகர்த்துத் தூளாக்கிவிடடது. நான் கற்றுக் கொண்டவற்றைச் சிறிது பகிர்கிறேன்.

   நேரில் பார்த்து அப்படியே வரைவதல்ல அது. மாடலின் கேரக்டர்களையும், அவர்களின் எக்ஸ்பிரஷன்களையும் சொல்ல வேண்டும்.சொல்லும் விதங்கள்தான் வேறு. photo realistic, Impressionism, expressionism என்ற வகைகள்.ஆனநதவிகடனில் பார்க்கும் இளையராஜாவின் ஓவியங்கள் ஃபோட்டோ ரியலிஸ்டிக் வகையைச் சேர்ந்தது எனினும் அது தெளிவாக எக்ஸ்பிரஷன்களையும் தந்துவிடுகிறது.

  இம்பிரஷனிஸம் வகையில், உற்று நோக்கின் வெறும் கிறுக்கல்கள் மட்டுமே தெரியும்.ஆனால் பொதுவாகப் பார்க்கையில் குறிப்பிட்ட மாடலின் கேரக்டரையும், எக்ஸ்பிரஷன்களையும் சொல்லிவிடும்.இது ஓவியரின் திறமைக்கு நல்லதொரு சான்றாகும்.இதற்கு முந்தைய பதிவில் போட்ட ‘இளையராஜா’ ப்டம் இவ்வகையில் நான் முயன்றதாகும்.

  எக்ஸ்பிரஷனிசம் வகைகளில் மாடலின் உருவம் தெள்ளத் தெளிவாக இல்லாவிடினும் அவரது எக்ஸ்பிரஷன்கள் தெளிவாகத் தெரிந்துவிடும்.

 மேற்கண்ட இரு படங்களிலும் இருப்பவர் ஒரே மாடல்தான். வரைந்த விதம் வேறு.அவங்க மாதிரியே இருக்காது :) நான் வழக்கமாக வரையும் பாணியில் வரையாமல், அங்கு பயின்றதை வரைந்தேன்.(குண்டுச்சட்டில எத்தனை நாள் குதிரை ஓட்டுறது)...முதல் படம் ‘எக்ஸ்பிரஷனிஸம்’ வகையில் சாஃப்ட் பேஸ்டலில் வரைந்தது. இரண்டாவது படம் பென்சிலில் வரைந்தது.
நேற்று ஒரு 6 மணி நேரம் மாடலாக அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஓய்வு. ஓய்வின்போது நானும் சக பயிற்சியாளர்களும்(அவங்க ரெண்டுபேரும் பெங்களூர் பொண்ணுங்கதான் :P), அந்த அம்மாவிடம் கேட்டோம், ‘மாடலாக அமர்ந்திருக்கும் போது என்ன நினைத்துக் கொண்டிருந்தீர்கள்’ என....


      அவரின் பதில் பட்டென விழுந்தது,” என் பிள்ளைகளைத்தான். ரெண்டும் சின்னப் பையங்க. வீட்ல  விட்டுட்டு வந்திருக்கேன், இந்நேரம் என்ன பண்ணிட்டுருக்குதுங்களோ...போன வாரம் இப்படித்தான் நான் வெளிய் போய்ட்டு வர்றதுக்குள்ள, கேஸத் தொறந்து விட்டுட்டான் ஒருத்தன். அதான் கொஞ்சம் ப்யம்னு’ சொல்லி முடித்தார்.
உலகத்துல எல்லா அம்மாக்களும் இப்படித்தான் போல.அம்மாக்களின் உலகத்தில் குழந்தைகள்தான் எல்லாமும்....

 மேற்கண்ட இரு படங்களும் முதல்நாள் பயிற்சியில் ஒரு வயதானவரை மாடலாக வைத்து வரைந்தது. (இடையில் மாடல் தூங்கிவிட்டார் என்பது வேறுவிஷயம். அது அடுத்தடுத்த படங்களில் தெரியவரும்.) இம்பிரஸனிஸம் வகை.எல்லாமே க்விக் ஸ்கெட்சஸ். இன்னும் 7,8 படங்கள் இருக்கிறது. எல்லாம் பதிவிடவில்லை.
 சாஃப்ட் பேஸ்டலில் செய்தது.(முதல்முறை இந்த மீடியம் பயன்படுத்தினேன்.) பரவாயில்லை நன்றாகவே வருகிறது. இதில் மேலும் சில எக்ஸ்பெரிமெண்ட்ஸ் பண்ண வேண்டும்.
 இதுவும் சாஃப்ட் பேஸ்டல்தான்.
இது சார்க்கோலில் செய்தது....

மேற்கண்ட மூன்றும், அதே மாடல்தான். எக்ஸ்பிரஷனிஸம் வகையில் செய்தது. க்விக் ஸ்கெட்சஸ்....

மனிதத் தலையின் உள்ளமைப்பை அறிந்து கொள்ள, களிமண்ணில் சிறியதும், பெரியதுமாக மண்டை ஓட்டின் மாதிரி செய்தோம். இதை வைத்து ஸ்ட்ரக்சரை வரைந்து பயிற்சியெடுத்துக் கொண்டோம்...

பொதுவாகக் கற்றுக் கொண்டது, ‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ ,
விளைவுகளை விட முக்கியமானது வழிமுறைதான்....
கற்றுக் கொடுத்த ஸ்மிதா சிவசாமிக்கு நன்றி.
இது ஒரு ஆவணப் பதிவு எனக்கு. உங்களுக்குப் பிடித்திருந்தால் இது ஒரு நல்ல பகிர்வாகவும் எண்ணிக்கொள்கிறேன்....


அப்பாடா, ரொம்ப நாளுக்கப்புறம் நீளமாப் பதிவு எழுதியாச்சு....:)