Saturday, March 26, 2011

நேரடி போர்ட்ரெய்ட் பை லைவ் மாடல்ஸ்-பென்சில் ஓவியம்

      இன்று ஓவியர் பிரபாவின் வீட்டில் லைவ் மாடல் போர்ட்ரெயிட் செஸன் நடைபெற்றது.....
    
     பென்சிலில் வரைந்தேன். அவை பின் வருமாறு....

மொபைலில் படம் பிடித்ததால், கொஞ்சம் சாய்வாக இருக்கலாம்... நேரடியாக நன்றாக இருந்தன. பல வருடங்களுக்குப் பிறகு நேரடியாக மாடல்களைப் பார்த்து வரைந்தேன்...(முன்பு நண்பர்களைப் பார்த்து வரைந்தேன்)....

Wednesday, March 23, 2011

தனிமை-பென்சில் ஓவியம்

          K B Kulkarni யின் ஒரு ஓவியத்தைப் பார்த்து பென்சிலில் வரைந்தது.(ஒரிஜினல்:ஆயில் பெயிண்டிங்). இது Inspiring ஆ , இல்ல Copy ஆ?
இதன் அவுட்லைன் மட்டும் இன்னுமொன்று பென்சிலில் வரைந்து வைத்திருக்கிறேன்.அதற்கு வாட்டர்கலர் கொடுக்க இருக்கிறேன். முடித்ததும் பதிவேற்றுகிறேன்.




Saturday, March 19, 2011

*அரிக்கேன் விளக்கு-வாட்டர்கலர்-வெர்ஷன் 2*

தவறெனும் புற்களின் மேல் நடக்க நடக்கப் புலனாகிறது புதியபாதை....

  முந்தைய பதிவில் போட்டிருந்த ஓவியம் சரிவர இல்லை. நலம் விரும்பும் ஒரு ஓவியரிடம் கருத்துக் கேட்டதில், தவறுகளைச் சுட்டிக்காட்டியும், அறிவுரைகள் கூறினார்.

  அதனால் மறுபடியும் புதிதாக வரைந்துவிட்டேன். முன்னதிற்கு இது பரவாயில்லை. ‘சில் அவுட்’ எஃபக்டை ஓரளவுக்குக் கொண்டு வந்து விட்டேன் எனக் கூறிக் கொள்ளலாம்.


Thursday, March 10, 2011

75வது பதிவு- போர்ட்ரெய்ட் ஓவியங்கள் ஸ்பெஷல்-பொக்கிஷம்

     மிழ்ப்பதிவுலகுக்கு வந்து மூன்றாண்டுகள் ஆனநிலையில் இப்போதுதான் 75வது பதிவு வருகிறதெனில் நான் எவ்வளவு ஆக்டிவாக உள்ளேன் என எண்ணிப்பாருங்கள். ;-) நம்பர்களில் நம்பிக்கையில்லை.(தரத்தில் மட்டும் என்ன வாழுதாம் எனக்கேட்டு விடாதீர்கள்) மனதுக்குத் தோணும் போது மட்டும் பதிவிடுகிறேன். பல பத்து(பல நூறு சொல்லுமளவுக்கு இல்லை) ரசனையான பதிவ நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். இப்போது எழுத்தை விடவும் கோடுகள் பக்கமே அதிகம் சாய்ந்து கொண்டிருக்கிறேன்.

      ன்று பெட்டியை நோண்டுகையில் கிடைத்த பழைய நோட்டில், பத்து வருடங்களுக்கு முன்(வேலையில்லாத போது) கிடைத்த இதழ்களைப் பார்த்துக் கிறுக்கித் தள்ளிய இவ்வோவியங்கள் கிடைத்தன. பெரும்பான்மை படங்கள் கறுப்பு பால்பாயிண்ட் பேனாவில் அரைமணி நேரத்திற்குள் வரையப் பட்டவை. ஒரு ஆவணமாக்க வேண்டுமெனவும், சில நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும்(கொஞ்சம் சுயமோகம்) அவற்றைப் பதிவிடுகிறேன். இப்போது அதிகம் உருவப் படங்கள் வரைவதில்லை.உங்களின் வாழ்த்துக்கள் இன்னும் நிறைய நல்ல கோடுகளை என்னிடமிருந்து வெளிக் கொணரும் என நம்புகிறேன்.

குறிப்பு: அதிகப் படங்கள் போட்டிருப்பதால் சிறியதாக்கியிருக்கிறேன். கிளிக்கிப் பெரிதாக்கிப் பார்த்தால் ஓரளவு நன்றாக இருக்கும்.

பாவனா-பென்(ண்)சில்
இதழ் அட்டைப்படம்-பென்(ண்)சில்
ஓவியர் கோபுலு-பால்பாயிண்ட் பென்
ஏதோ ஜோக்-பால் பாயிண்ட் பென்
பெண்-பால்பாயிண்ட் பென்
மாதவன் -பால்பாயிண்ட் பென்
ஸ்வேதா குட்டி-பால் பாயிண்ட் பென்
வாலி- பால் பாயிண்ட் பென்
கீர்த்தனா-கன்னத்தில் முத்தமிட்டால்-பால்பாயிண்ட் பென்
திரிஷா(சினிமாவுக்கு முன்)-பால்பாயிண்ட் பென்
நந்திதா தாஸ் அஸ் அழகி-பால் பாயிண்ட் பென்
லாலேட்டன் -பால் பாயிண்ட் பென்
தனுஷ்-பால்பாயிண்ட் பென்
வைரமுத்து-போஸ்டர் (அ) வாட்டர் கலர்(நினைவில்லை) ம.செ வின் ஓவியத்தில் இன்ஸ்பைர் ஆகி வரைந்தது
ஜெயகாந்தன் - ஜெல் பென்
இசை-பால் பாயிண்ட் பென்
     

Saturday, March 5, 2011