Tuesday, March 27, 2012

திருமண அழைப்பிதழ்-எனது வடிவமைப்பு

   நண்பர் கார்த்திகைப் பாண்டியன் திருமணம் நிச்சயித்த உடனேயே சொல்லிவிட்டார், ‘தலைவரே,நம்ம இன்விடேஷன் நீங்கதான் டிசைன் பண்ணனும்னு’...அந்தா இந்தான்னு தள்ளிப்போட்டுட்டேன். சரியாத் தோணலை. கூகிள் இமேஜஸ் பார்க்கையில், மோட்டார்சைக்கிளில் ஒரு சோடி செல்வது போன்ற படம் பார்த்தேன். அடடே...இது நல்லா இருக்கே...

   எத்தனை நாள்தான் திருமணப்பத்திரிக்கையில் ஆணும், பெண்ணும் கழுத்து வலிக்க மாலையோடும், கைநிறையப் பூச்செண்டோடும் காட்சியளிப்பது?? கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமென , நான் பார்த்த புகைப்படத்தை லைன் ட்ராயிங்காக மாற்றினேன் ஆர்டிஸ்ட் பென் உதவியுடன். மாப்பிள்ளைக்கு அனுப்பி அபிப்ராயம் கேட்டதில் , பெண்ணுக்குப் பிடித்துவிட்டதெனச் சொன்னார்.அப்ப இவருக்கும் பிடிச்சமாதிரித்தான் என எண்ணிக் கொண்டேன்.

    கொஞ்சம் வண்ணங்களைப் பூசி, நம்பர் ப்ளேட்டில் அவர்களின் திருமணத் தேதியை எழுதிவிட்டதில் திருமண அழைப்பிதழ் தயார்....:)))

  பி.கு: கூகிளில் புகைப்படம் பதிவேற்றிய ஃபோட்டோகிராஃபர் நண்பருக்கு (Paul) க்கு நன்றிகள்....










Thursday, March 8, 2012

லால்பாக் பென்சில்ஜாம் @ 04மார்ச்12 மற்றும் சில சும்மாட்ராக்கள்

  நான்காம்தேதிய பென்சில்ஜாம் நடந்த இடம் , வேறெங்க, கழுதெ கெட்டாக் குட்டிச் சொவருதான்....:) லால்பாக்தான்...

   ஒவ்வொரு வருகையிலும் ஒவ்வொரு அழகை ஒளித்துக்காட்டுவதில் லால்பாக்கும் ஒரு காதலிதான் எனக்கு ;)
எங்கள் கூடல் இம்முறை ஜப்பானிய மூங்கில் பாலம் அருகில். புதிதாக இரண்டு ’பெண்’’ஜில்’ ஜாம்மர்கள் வந்திருந்தனர். பேக்கு போல முழித்துக் கொண்டிருந்த அழகிகளை வரவேற்றேன்...நாந்தான் பென்சில் ஜாம்மர்ஸ் அட்மின் நு ஒரு பில்டப் கொடுத்தேன்.  பரவாயில்லை, நல்லாவே மரியாதை கிடைக்குது. நுழைவுக் கட்டணம்  500 ரூபாய்ன்னு சொன்னதும் மிரண்டன மான்களின் விழிகள். அதற்கு மேல் விளையாட்டை இழுக்காமல், உண்மையைச் சொல்லிவிட்டேன்....

   காலையில் வரைந்தது இரு வாட்டர்கலர் லேண்ட்ஸ்கேப்புகளும்....


மதியம் லஞ்ச், அருகிலுள்ள ஹரி சூப்பர் சாண்ட்விச்சில்....அடடா அடடா... எத்தனைவகை சாண்ட்விச், தயிர் சாண்ட்விச், சீஸ் சில்லி சாண்ட்விச், குல்கந்து சாண்ட்விச், சாக்லேட் சாண்ட்விச் இன்னும் பல...

    ச்சாட் வகையறாவாக, ‘காங்கிரஸ் மசாலா’ இருந்தது, என்னடான்னு கேட்டா, ஒரு காலத்துல காங்கிரஸ் இரண்டாப் பிரிஞ்சதனால, இரட்டையாகப் பிளவுற்ற கடலையைப் போட்டு மசாலா தடவி விற்பது காங்கிரஸ் மசாலாவாம். அடப்பாவிங்களா...அப்டிப்பார்த்தா, எங்கூர்ல டாஸ்மாக்ல தர்ற பொடிமாஸ்ஸைத்தான் காங்கிரஸ் மசாலான்னு சொல்லணும்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டேன்:))


  அப்டியே சுத்திட்டு, மாலை வரைந்தது இந்தத்தூண்...வேடிக்கை பார்த்த பையனொருவன் அருகில் வந்தான். அவனையும் வரைந்து கொடுத்தோம்.
இனிதே நிறைவுற்றது அன்றைய நாள்...

இனி சிறிது சும்மாட்ராக்கள், இடைப்பட்ட காலத்தில் செய்தவை...
 பெண்கள் தின சிறப்பு ஓவியம்
 

 AXE effect
 சாவி