Monday, February 28, 2011

சிவப்பு மொசைக் தரை-ஓவியம்

       னது அறையின் படுக்கையில் அமர்ந்து வரைந்தது. ஒருச்சாய்த்திருக்கும் கதவு. கதவின் வலப்புறம் மேலே குழல் ஆவிவிளக்கு. அதன் ஒளிவிளைவுகள் கொஞ்சம் மூடிய கதவினாலும், தரையிலிருந்த சிவப்பு மொசைக் கற்களினாலும் விதவிதமாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அதனைக் கொண்டு வர முயற்சித்தேன்.
உபகரணங்கள்: வாட்டர்கலர் பென்சில்கள், கொஞ்சம் தண்ணீரால் சில இடங்களில் டச் அப் செய்யப் பட்டது. திருப்தி ஏற்படவில்லை(நேர்க் கோடுகள் வரைவதில் இன்னும் பயிற்சி தேவை).. இருப்பினும் பரவாயில்லை ரகம்.
மொசைக் தரையின் ஒளிப் பிரதிபலிப்புகள் எனக்குப் பிடித்தது. :) (காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு)  :)))))

    பிராக்டீஸ் மேக்ஸ் எ மேன் பெர்ஃபெக்ட்(நன்றி: சந்தானம்)

Friday, February 4, 2011

வெயில்-ஆயில் பெயிண்டிங்

     அலுவலகத்தில் புதிதாகச் செலலும் ஒரு தளத்தின் சுவர்களை அழகுபடுத்த, எங்களிடம் ஒரு போட்டி வைத்து அதிலிருந்து 15 ஓவியங்களைத் தேர்வு செய்யப் போவதாக அறிவிப்பு வந்தது. கம்பெனி பற்றிய ஒரு தீமுடன் இப்படத்தை வ்ரைந்து கொடுத்திருந்தேன். 50 படங்களில் தேர்வான பதினைந்தில் எனது படமும் ஒன்று. சில காரணங்களால், அப்படத்தில் வரும் தீமை மட்டும்  நீக்கிவிட்டு(படத்தின் கீழ்ப்பகுதியில் தெரியும் பேட்ச் ஒர்க்குக்கு அதுதான் காரணம்)ப் பதிவிட்டிருக்கிறேன்.

உபகரணங்கள்: ஆயில் கலர்,லின்சீட் ஆயில்
அளவு:24" x 34"