Monday, February 28, 2011

சிவப்பு மொசைக் தரை-ஓவியம்

       னது அறையின் படுக்கையில் அமர்ந்து வரைந்தது. ஒருச்சாய்த்திருக்கும் கதவு. கதவின் வலப்புறம் மேலே குழல் ஆவிவிளக்கு. அதன் ஒளிவிளைவுகள் கொஞ்சம் மூடிய கதவினாலும், தரையிலிருந்த சிவப்பு மொசைக் கற்களினாலும் விதவிதமாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அதனைக் கொண்டு வர முயற்சித்தேன்.
உபகரணங்கள்: வாட்டர்கலர் பென்சில்கள், கொஞ்சம் தண்ணீரால் சில இடங்களில் டச் அப் செய்யப் பட்டது. திருப்தி ஏற்படவில்லை(நேர்க் கோடுகள் வரைவதில் இன்னும் பயிற்சி தேவை).. இருப்பினும் பரவாயில்லை ரகம்.
மொசைக் தரையின் ஒளிப் பிரதிபலிப்புகள் எனக்குப் பிடித்தது. :) (காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு)  :)))))

    பிராக்டீஸ் மேக்ஸ் எ மேன் பெர்ஃபெக்ட்(நன்றி: சந்தானம்)

15 comments:

  1. வருகைக்கும், ரசிப்புக்கும் மிக்க நன்றி குமார்...

    ReplyDelete
  2. நன்றி ரவிஷங்கர் சார்...(செம ஃப்ளாப்பாயிடுச்சு போல இந்த பெயிண்டிங். :( )

    ReplyDelete
  3. நல்லாவே வந்திருக்குங்க

    கண்களை விட சிறந்த
    கேமரா எதுவுமில்லை
    காட்சியை மனதில் பதிந்து
    நினைவில் கொண்டு
    நிழற் படம் தந்து
    நிஜம்போல் காட்டிட
    முனையும் ஓவியக்கலை
    ஓர் அற்புதம்..

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. @சந்தான சங்கர்....
    நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். ரசிப்புக்கு நன்றி சங்கர்...

    ReplyDelete
  5. Great sketch! I would love to see your other drawings too...
    Hugs!

    ReplyDelete
  6. @Pelusa... Thanks for ur visit...u can see my other sketches in this link
    http://thamizhparavai.blogspot.com/search/label/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

    ReplyDelete
  7. @ம.தி. சுதா... வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி நண்பரே....!

    ReplyDelete
  8. பரணி,

    உங்கள் விரல்களை வியக்கிறேன் நான்! ஓவியத்தின் பிரதிபலிப்பு மிக அருமை...

    ஒரு ஓவியம் காட்சியோடு கூட உணர்வையும் சேர்த்தே காட்டுகிறது, மொழிக்கு எட்டாத உணர்வுகளையும்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. @சுகிர்தா....
    நன்றி சுகிர்தா...வருகைக்கும், ரசனைக் கருத்துப் பகிர்வுக்கும்...

    ReplyDelete
  10. ரொம்ப நாள் கழித்து வந்தாலும்..
    பழகிய வீடு மாதிரி..!

    ஓவியம் அருமை. பிரதிபலிப்பு.. அருமை..!
    எல்லா வகையான உபகரணங்களும் பயன்படுத்தறீங்க போல.

    தொடர்க...!

    அப்புறம் (வெ)ஆயில் பச்சை வெகு அருமை..!

    ReplyDelete
  11. மெக்கானிக்கல் இஞ்ஜினியரா இருந்துக்கிட்டு பர்ஸ்பெக்டிவ்ல கோட்டை விடலாமா???
    ஐஸோமெட்ரிக் நினைவுக்கு வரலியா பரணி..?????
    :))) ட்ராப்டரை வச்சும் முயற்சிக்கலாம்!!!

    ReplyDelete
  12. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஜெகன்...
    ட்ராஃப்டர் வேண்டாம்... வெறும் கைகளிலேயே செய்ய வேண்டும் என்ற பயிற்சிதான் இது...நன்றி...

    ReplyDelete