2010 ஆம் ஆண்டுக்கான , திரைப்பட ஆய்வு குறித்த தேசியவிருது பெற்ற ஜீவாநந்தன் சாரை வாழ்த்துகிறேன்...
முகப்புத்தகத்தில் தான் நண்பராக அறிமுகமானார். இளையராஜாவின் இசையில் இன்னும் நெருக்கமானோம்...
இவர் திரைப்படங்களுக்கு பேனர் வரைவதைத் தொழிலாக வைத்திருந்தாலும், வக்கீல் படித்தவர்...இந்திய, உலகப் படங்களைப் பற்றி விமர்சனங்கள் எழுதியிருக்கிறார்.(நான் படித்ததில்லை. படிக்கவேண்டும்.)
எனினும் எனது அனைத்து கிறுக்கல்களுக்கும் அவர் போடும் ‘லைக்’ ஒரு தனிக் கிறக்கத்தை என்னுள் ஏற்படுத்தி, என்னை ஊக்குவிக்கும்....
சமீபத்திய வருத்தம், கடந்தமாதம் கோவை சென்றிருந்தும், ஒரு இனம்புரியாத தயக்கத்தால், அவரைப் பார்க்காமல் வந்து விட்டேன் . வருத்தம்தான்...
வாராவாரம், குழ்ந்தைகளுக்கு, இன்னும் சில ஓவியர்களுடன் சேர்ந்து ஓவிய வகுப்புகள் நடத்திவருகிறார்...
மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்...
சார்க்கோலில் கார்ட்ரிட்ஜ் பேப்பரில் வரைந்த ஒரு அவசர ஓவியம்....

ஜீவா சாரைப் பற்றிய பகிர்தலோடு, அவரை அருமையான ஓவியமாகவும் வரைந்திருக்கிறீங்க.
ReplyDeleteஅழகான கை வண்ணம்.
இவ்ளோ நாளா காணல்லை, கோவையில் பிசியாகி விட்டீர்களா சகோ.
விருதுக்குப்பிறகு இவரைப் பற்றி “தி ஹிந்து” வில் பேட்டி வந்தது.இவரின் சினிமா ஆர்வம் தெரிந்தது. படம் சூப்பர்.
ReplyDeleteமாப்பி உன்னை போல ஒருவர்
ReplyDeletehttp://chandanaar.blogspot.com/2011/05/blog-post_27.html
நேரம் கிடைக்கும் போது பாருங்கள் ;)
அன்பு நண்பருக்கு வணக்கம் !
ReplyDeleteஎனது கவிதை ஒன்றில் உங்களின் மறுமொழி ஒன்றை கண்டேன் .அதில் இணைத்திருக்கும் ஓவியம் தங்களுடையது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள் . முதலில் எனது கவிதையில் உங்களின் அனுமதி இன்று உங்களின் ஓவியத்தை பயன்படுத்தியமைக்கு மன்னிக்கவும் .ஒரு நண்பர் அனுப்பிய மடல் ஓவியங்களில் இந்தப் ஓவியமும் எனக்கு கிடைத்தது . எனது கவிதை கூட அந்த ஓவியத்திர்க்காகவே எழுதியதுதான் .இப்பொழுது நீங்கள் மறுமொழியில் சொல்லிய பொழுதுதான் இது தாங்கள் வரைந்த ஓவியம் என்பதை அறிந்துகொண்டேன் .தவறாக நினைக்காவிட்டால் சிறு விண்ணப்பம் இயன்றால் தாங்கள் வரையும் ஓவியத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் தங்களின் அடையாளம் அல்லது பெயரை சேர்த்து வைக்கவும் .காரணம் இது ஒரு பொதுவெளி என்பதால் சில நேரங்களில் பலருக்கு உங்களின் ஓவியம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது .அப்பொழுது என்னைபோன்று பயன்படுத்த எண்ணுவோர் தங்களுக்கு நன்றிகள் சொல்ல வசதியாக இருக்கும் .தற்போது தங்களின் ஓவியத்தை கவிதையில் இருந்து நீக்கிவிட்டேன் . மிகவும் சிறப்பாக ஓவியம் வரையும் திறமை உங்களுக்குள் இருக்கிறது .ஓவியம் என்பது அனைவராலும் எளிதில் இயலாத ஒன்றேன்பதை நன்றாக அறிவேன் . தொடரட்டும் உங்களின் சேவை வாழ்த்துக்கள் . என்றும் உங்களின் ஓவிய ரசிகனாய்.
-பனித்துளிசங்கர்
நான் இதுவரை அறியாத மனிதரை அழகிய ஓவியம் வாயிலாக அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் நண்பரே . வாழ்த்துக்கள் தொடருங்கள்
ReplyDelete@நிரூபன்...
ReplyDeleteநன்றி... ஆமாம் இந்தமாசம் ப்ரொடக்டிவிட்டி கம்மிதான். ஒரு பெரிய படம் எடுத்துக் கொண்டேன். அது இன்னும் முடிந்தபாடில்லை. அதிக உழைப்பு கேட்கிறது...
@கே.ரவிஷங்கர்...
நன்றி சார்...
@கோபிநாத்...
ReplyDeleteநன்றி மாப்பி...அறிமுகத்திற்கும் நன்றி... ஆனால் அவர் முன்னமேயா ஃபேஸ்புக்கில் எனது நண்பர். நீ கொடுத்த சுட்டியில் உள்ள படம் பார்த்துதான் இது வரைந்தேன். அப்பதிவில் அவரையே ஜீவாசார் படம் வரையச் சொல்லிக் கேட்டேன். அப்பொழுதுதான் ஏன் நாம் வரைந்தால் என்ன எனத் தோன்றியது :)
@பனித்துளி சங்கர்....
ReplyDeleteநண்பரே... மன்னிக்கவும்...வாட்டர் மார்க் போடாததும் என் தவறுதான்...
இதற்காக ஏன் படத்தை எடுத்தீர்கள்... என் பெயரையும் போட்டிருந்தால் நன்றாக் இருக்குமென நப்பாசைதான்.
https://profiles.google.com/thamizhparavai/posts/31WezCwHrkh
உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/05/blog-post_6309.html
@தம்பி கூர்மதியன்...
ReplyDeleteநன்றி நண்பரே... வலைச்சரம் சென்று வந்தேன். நல்ல தொகுப்பு...தொடர்க...