Thursday, September 17, 2009

பொக்கிஷமான பொழுதுகள்…சேரனுக்கு நன்றி

   ரசனைகள் மாறுபடும். இதில் பதிவிடப்போவது என் ரசனையை மட்டுமே பிரதிபலிக்கும்.

     ந்தப் படத்தை ஏன் இத்தனை நாள் பார்க்கவில்லை என்ற கேள்வியை என்னுள் ஊட்டிய படம் ‘பொக்கிஷம்’.இலக்கிய வடிவில் ஒரு இயல்பான சினிமா என துணைத்தலைப்பைப் பார்த்ததும், இதர பதிவர்களின் தாறுமாறான விமர்சனங்களும், முன்பே கதை தெரிந்துவிட்டதும் நான் பொக்கிஷத்தைத் தேடுவதற்கான நாட்களைச் சற்று தள்ளிப்போட்டுவிட்டன.

   அதையும் மீறி தனிமையும்,நானும் மட்டும் ஓரிரு மதியப்பொழுதுகளிலும்,ஒரு இரவுப்பொழுதிலும் இதனை ரசித்தோம்.பார்த்து ரசிப்போர்களுக்கு மத்தியில் நான் ரசித்துப் பார்ப்பவன்.அதனால்தான் தெரிந்த கதை,கதை நாயகனாக சேரன்,கடிதக்காதல் இவையெல்லாம் புறந்தள்ளப்பட்டு ஒரு கலைப்பொக்கிஷமாகவே என் மனதில் நிற்கிறது படம்.

    காதலர்கள் பல்விளக்குவதற்குக்கூட கைப்பேசியின் அலைகளை அனுப்பும் இக்காலகட்டத்தில் ஆரம்பிக்கும் படம், தொடக்கத்திலேயே நவீனக்காதலர்களின் அவசரநிலையைச் சொல்லிவிடுகிறது.மகேஷாக வரும் ஆர்யன் ராஜேஸ் தற்செயலாக தனது அப்பா லெனினின்(சேரன்) பழைய பெட்டியைத் திறப்பதில் இன்னும் வாசம் மாறாமலிருக்கும் அவரது காதல் கடிதப்பூக்களைக் காண்கிறான்.தனது காதலி நதீராவுக்கும்(பத்மப்ரியா),அவருக்கும் இடையிலிருந்த காதலின் சாட்சிகளாய் இருந்த கடிதங்களையும்,நாட்குறிப்பேடுகளையும் பிரித்துப்படிக்கையில் விரிகிறது 1971 காலகட்டம்.

     கல்கத்தாவில் கப்பல்துறையில் பொறியாளர் லெனின், தன் தந்தையின் மருத்துவசிகிச்சைக்காக சென்னை வருகிறார். அதே மருத்துவமனையில் தாயின் நலம் நோக்கி நாகூரிலிருந்து வருபவர் நதீரா. தமிழ் இலக்கியம் பயிலும் நதீராவின் தமிழில் கவரப்பட்ட லெனின் நட்புக்குடை விரிக்க,அதில் பட்டும் படாமல் மனம் நுழைக்கிறார் நதீரா.பின் இருவரும் அவரவர் இடங்கள் செல்ல,நட்பை மட்டும் கடிதத்தில் வளர்க்க மறக்கவில்லை.நட்பு மெலிந்ததால், காதல் வலுத்ததா இல்லை நட்பு வலுத்ததால் காதல் பிறந்ததா எனப் பார்க்கவியலாமலேயே காதல் பூத்து விடுகிறது.ஒரு குறுந்தகவல் அனுப்பிவிட்டு சென்றடையும் தகவல் வந்து சேரும் அரை நிமிடங்களுக்கே ஆளாய்ப் பறக்கிறோம். அப்படியிருக்கையில் ஒருவார காலம் கழித்தே பதில் கடிதம் வருமென்ற நிலையில் காதல் படும்பாடுதான் என்னவாயிருக்கும்…

     ழகுத்தமிழில் கடிதமனுப்புவதும், அஞ்சல் பெட்டியில் போட்டு விட்டு அதற்குக் குடை விரிப்பதும், தபால் காரர் சரியாக வேலை செய்கிறாரா என வேவு பார்ப்பதும் என காதலுக்கான எல்லாப் பைத்தியக்காரத் தனங்களையும் பதிவிட்டிருப்பது அழகு.பின்புலமாகக் கடிதவரிகள் வாசிக்கப்படும்போது, அக்கடிதத்தில் அஞ்சல் துறை முத்திரையிடுகையில் குரலில் தோன்றும் வலி ரசிக்க வைத்தது.அவ்வப்பொழுது அணைமீறாத அலையாய் வந்து செல்லும் குறும்பாடல்களும்,கதையைச் சொல்லும் பாடல்வரிகளும் சிறந்த தேர்வு.கல்கத்தாவின் அக்காலத்திய டிராம் வண்டிகள்,இறுக்கம் நுழையாத தெருக்கள், அதே போல 70களின் சென்னை,பேருந்துகள் என அழகாக வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குனர் வைரபாலன்.

Copy of vlcsnap-25692

   ளிப்பதிவு நல்லா இருக்குன்னு சொன்னா, எப்படி உனக்குத் தெரியும்..அதன் நுணுக்கமா,இல்லை வெளிச்ச அளவா எனத் தொழில்நுட்பத்தில் நுழைந்து கேட்ட என் மனசாட்சிக்குச் சொன்னேன்,பார்க்கும் காட்சிகளில் நடிகர்கள் இருப்பதை விட நான் இருந்தால் நல்ல ஒளிப்பதிவு என்று.நதீராவைப் பார்க்க வந்து,அவர் எங்கு போனார் எனத் தெரியாமல், தேவதையின் தடங்கள் ஒட்டிய மணல் துகளாவது சாட்சியாகாதா எனத் தேடித் திரியும் காட்சிகளில் அலைபாய்வது லெனின் மட்டுமல்ல,நாமும்தான்.அக்காட்சிகளில் வெறுமையை,காதலி தந்தையின் துரோகத்தைக் கண்களுக்குள் பாய்ச்சி விடுகிறது ஒளிப்பதிவு(ராஜேஷ் யாதவ்).

     நதீராவுடன் கடிதத்தில் காதலிக்க ஆரம்பித்த பிறகு, முதன் முறை தொலைபேசியில் தவிப்புடன் பேச,உடனேயே அணை திறந்த மடையென ‘உன்னைப் பார்க்கவேண்டும்’ என நதிரா கொட்டிவிடும் காட்சியும்,அவரைப் பார்க்கப் பேருந்தில் வருகிற போது,உடன் தொடரும்,”வரும் வழியெங்குமே உன் முகம் தோன்றுமே” பாடலும் நெகிழ்வின் கதவுகளை உடைத்துவிட்டது.

      தீராவைத் தேடிக் கிடைக்காத நாட்கள் லெனினின் நாட்குறிப்பேட்டில் விதவையாக இருக்கின்றன. அவளுக்கு அனுப்ப நினைத்த கடிதங்கள் முகவரியற்று முடங்கிக் கிடக்கின்றன.அதற்க்குள்ளிருக்கும் வரிகள் லெனினுக்கு மட்டுமே தெரியும்.நதீராவின் பார்வை படாததால் கல்லாய்ச் சமைந்த அகலிகையான எழுத்துக்களை அவர்வசம் சேர்க்க லெனினின் ம்கன் மகேஷ் முடிவெடுப்பது,லெனினின் மரணத்தோடு காதல் முடிந்துவிடவில்லை எனச் சொல்ல வைக்கிறது.

    தேடியலைந்து மலேஷியாவில் முதுமை தழுவிய, அப்பாவின் காதலியைக் கண்டு அறிமுகம் செய்து கொள்கையில், நதீராவின் அழுகையில் தெறித்த காதல் என்னையும் நனைத்துவிட்டது.தனக்கான கடிதங்களைக் காலம் தாமதமாகக் கொடுக்கிறது என்பதை அறிந்த நதீரா,அதே சமயம் தன் காத்திருப்பின் அவசியம் பூரணமானதையும் உணர்கிறாள்.

    அக்கால முஸ்லீம்களின் கடுமையான சட்டங்களுக்கிடையிலும் காதல் வைராக்கியத்தில் தனித்திருக்கும் நதீராவின் பெருமூச்சோடு படம் முடிந்தாலும், மூச்சின் வெப்பம் இன்னும் என்னைச் சுடுகிறது.இதில்தான் சேரனின் வெற்றி அடங்கியிருக்கிறது.சத்யம்,மாயாஜாலில் 50 நாள் ஓடுவது வெற்றியல்ல என்பது என் எண்ணம்.சேரன் வடித்த கவிதை எனக்குப் புரிந்தது. பிடிபட்டது.ரசிக்கவைத்தது.அழ வைத்தது.சினிமா விமர்சனம் பண்ணக்கூடாதென்ற என் நிலையை மாற்றி இப்படிப் பதிவிடவும் தூண்டியது.

       நிறைகள் இன்னும் நிறைய இருக்கின்றன. குறைகளும் குறைவாய் இருக்கின்றன …என் மனதுக்குள் பதிவிட்டு மகிழ்ந்து கொள்கிறேன்…

பானைச் சோறு இதோ….

இது பற்றிய இன்னுமொரு பதிவு இங்கே…

29 comments:

  1. //நதீராவைத் தேடிக் கிடைக்காத நாட்கள் லெனினின் நாட்குறிப்பேட்டில் விதவையாக இருக்கின்றன//

    வாவ்!!! படத்தை விட பதிவு டாப் கிளாஸ் சகா. அடிக்கடி எழுதுங்களேன்.. வார்த்தைகள் அர்த்தத்தோடு ஒலிக்கின்றன.

    ஒரு சிட்டிங்கிலே இந்த பதிவை முடிச்சிட்டிங்களா? அப்படியென்றால் படம் உங்களுக்குள் ஏற்படுத்திய ஆச்சரியம் பெரியது..

    கைய கொடுங்க..

    ReplyDelete
  2. //கார்க்கி கூறியது...
    வாவ்!!! படத்தை விட பதிவு டாப் கிளாஸ் சகா. அடிக்கடி எழுதுங்களேன்.. வார்த்தைகள் அர்த்தத்தோடு ஒலிக்கின்றன.

    ரிப்பீட்டேய்!!

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம்.
    இராசிப்பாய் இருக்கிறது.
    --வித்யா

    ReplyDelete
  4. ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க பரணி.

    அனுஜன்யா

    ReplyDelete
  5. @கார்க்கி...
    நன்றி சகா ஊக்கத்திற்கு...
    படத்தில் வரும் கடிதத்தமிழ் வரிகள் மிகப் பிடித்திருந்தது. அந்த பாதிப்பில் பதிவு வந்துவிட்டது...
    //அடிக்கடி எழுதுங்களேன்.. //
    முயல்கிறேன் சகா...

    @கார்த்திக்...
    வாழ்த்துக்கு நன்றி கார்த்திக்

    @விதூஷ்...
    வருகைக்கும்,ரசிப்புக்கும் நன்றி வித்யா...

    @அனுஜன்யா...
    பாராட்டுக்கு நன்றி அனுஜன்யா சார்...

    ReplyDelete
  6. நான் இன்னும் பார்க்கவில்லை.

    உணர்வூ பூர்வமாக பார்த்து ரசித்து உள்ளீர்கள்.உங்களது பொக்கிஷம் ஆகிவிட்டது.எழுத்திலும் வடிந்திருக்கிறது.பொது விதிஒன்று
    உள்ளது.நம் ரசனையும் பொது ரசன்னையும் பெரும்பாலசமயங்களில் ஒத்துப்போவதில்லை.

    ஒரிரு நல்ல விமர்சனமும் படித்தேன் உங்களது மாதிரி.

    பாடலும் பார்த்தேன்.ராஜா 10% ரகுமான் 90% பாதிப்புத் தெரிகிறது.
    நல்லா இருக்கு.

    எல்லோரும் ரசிக்கும்படியாக கொடுத்திருக்கலாம் என்பது என் கருத்து.

    ReplyDelete
  7. அருமையான சொல்லாடல்களில் வசிகரிக்கிறீர்கள் நண்பா.படத்தைப் பார்க்கத் தூண்டும் அலசல்.

    ReplyDelete
  8. அருமை நண்பர் தமிழ்பறவை,
    ரொம்ப அழகான வார்த்தை ப்ரயோகங்கள்,அலுப்பு தட்டவேயில்லை.
    இதை சேரனுக்கு அனுப்பி வையுங்கள்.

    இது மூலம் படத்தை சிலாகித்தவர்களும் உண்டு என்று விளங்கிக் கொள்ளட்டும்.

    இனி மேல் இப்படி யாரும் பரீட்ச்சார்த்தமான முயற்ச்சிகள் எடுப்பார்களா?என்பது சந்தேகமே.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  9. Excellent review da..if you had written this right after the release, it would have been much better..Cheran will be happy if he sees your review.. :-)
    I read in one of cheran interview(after the pokkishm release), he really pissed off with the reviewers.. He suggested the reviewers to see the movie at least minimum 3 times before writing the review.. i thought it was 'dubba' movie..But, I really liked this movie..Cheran should have done better in his acting..Cheran gets into the role well, but the only concern is limitation with his facial expression..I hope he stops acting and stick with only directing..I really enjoyed his old movies.. Padmapriya was awesome...She was toooo old in the end...It reminded me of TITANIC :-)

    ReplyDelete
  10. நான் இன்னும் பார்க்கவில்லை.

    ReplyDelete
  11. தல

    உங்க விமர்சனத்துக்கே கண்டிப்பாக படம் பார்ப்பேன். ஆனா நடிகர் சேரனை நினைச்ச தான்....

    ReplyDelete
  12. அண்ணா படத்தைவிட அழகான விமர்சனம்.வார்த்தைக் கோர்வைகள் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
  13. viththiyaasama ezhuthiyirukkiingka

    nalla irukku nanba

    ReplyDelete
  14. உங்களைப்போல் இந்தப்படத்தைப் பார்ப்பதைத் தள்ளிப்போட்டேன். சில தினங்களுக்கு முன் பார்த்தேன்.நீங்கள் படத்தை அனுபவித்து விமர்சித்துள்ளீர்கள்; படத்தில் அனைவரும் சிறப்பாக
    வாழ்ந்துள்ளார்கள்.அதனால் நடிப்பைத் தேடியோருக்குப் பிடிக்கவில்லைப் போலும்.
    "உன்னைப் பார்க்கவேண்டும்" என்னும் அந்த இரண்டு வார்த்தையுள்ளும் ஓராயிரம் காதல்மொழி
    உங்களைப் போல் அதை நானும் மிக ரசித்தேன்.
    உடல் முழுக்க மூடி விழி இரண்டே வெளியே தெரிந்த போதும்; அந்த விழியாலே நடித்த பத்மப் பிரியா தேர்ந்த நாயகி. இப்போ அடூர் கோபாலகிருஸ்னனின் நான்கு பெண்களிலும் நன்கு பேர்வாங்கியுள்ளார்.
    மகன் -கடிதங்களைக் கொடுத்ததும் படித்துவிட்டு அழுவது....புலம்பவில்லை. அந்த வார்த்தை
    அற்ற சோகமொழி - அருமை
    மொத்தத்தில் நிறைவுகளால் நிறைந்த படம்...ஆனால் சிலருக்குப் பிடிக்காமல் போனது; புதிராக உள்ளது.
    இந்த சினிமாச் சகதியாக்கும் காலக்கட்டத்தில் சேரன் போன்ற படைப்பாளிகளை , கை கொடுக்காவிடில்
    நமக்கே பாதிப்பு.

    ReplyDelete
  15. @ரவிஷங்கர்...
    நன்றி சார்..
    //எல்லோரும் ரசிக்கும்படியாக கொடுத்திருக்கலாம் என்பது என் கருத்து.//
    தோணுச்சு சார்...அப்புறம் என் சுயநலம் இது போதும்ன்னு சொல்லிடுச்சு.
    பின்னணி இசை அவ்வளவாகப் பொருந்தவில்லை.

    @கார்த்திகேயனும்,அறிவுத்தேடலும்...
    வருகைக்கு நன்றி நண்பரே...
    படம் பார்த்தவுடன் எழுந்த உணர்வுகளை அப்படியே கொட்டிவிட்டேன்.சேரனுக்கும் அனுப்பலாம்தான் . எப்படியெனத் தெரியவில்லை.மனதாரப் பாராட்டி விட்டேன்.ஒரு நேர்காணலில் இதுபோல் இனிப் படமெடுக்க மாட்டேன் எனச் சொன்னது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.:-(

    @நாடோடி இலக்கியன்...
    வருகைக்கும்,ரசித்தமைக்கும் நன்றி நண்பரே...

    @கோசி...
    என்ன செய்ய கோசி..? நான் இருக்கும் நிலையில் படத்தைப் பதிவிறக்கிதான் பார்க்க முடிந்தது.ஊருக்குச் சென்று திரையரங்கில் பார்க்கும் எண்ணமுண்டு. முடிந்தால் சேர்ந்து பார்க்கலாம்...
    (நீ ஏன் ஆங்கில ப்ளாக் ஆரம்பிக்கக்கூடாது..?சீரியஸாகச் சொல்கிறேன்)

    @தியாவின் பேனா...
    வருகைக்கு நன்றி நண்பரே... எதிர்பார்ப்பில்லாமல் பாருங்கள்.ஒருவேளை பிடித்துப்போகலாம்.

    @கோபிநாத்...
    வாங்க தலை...சேரனை ஏன் கதைநாயகனாக்குறீங்க படம் பார்க்கும்போது, நீங்களே கதை நாயகனாக மாறிவிடுங்கள்...

    ReplyDelete
  16. @ஹேமா...
    நன்றி ஹேமா...உங்களுக்குப் பிடிக்குமென நினைக்கிறேன்...

    @மண்குதிரை...
    கவிஞரே கருத்துக்கு நன்றி...

    @யோகன் -பாரீஸ்...
    வருகைக்கு, பகிர்வுக்கும் நன்றி ஐயா...
    //படத்தில் அனைவரும் சிறப்பாக
    வாழ்ந்துள்ளார்கள்.அதனால் நடிப்பைத் தேடியோருக்குப் பிடிக்கவில்லைப் போலும்.//
    சரியாகச் சொன்னீர்கள்...அதிலும் பத்மப்ரியாவின் பாத்திரம் கனம்.ஒவ்வொன்றைப் பற்றியும் சிலாகித்தால் பதிவு நீண்டுவிடுமென்பதால் பொதுவாகப் படத்தில் தென்பட்ட அழகியலை மட்டும் சொன்னேன்.
    //இந்த சினிமாச் சகதியாக்கும் காலக்கட்டத்தில் சேரன் போன்ற படைப்பாளிகளை , கை கொடுக்காவிடில்
    நமக்கே பாதிப்பு.//
    கண்டிப்பாக... சேரன் எவ்வளவு கீழிறங்கிப் படமெடுத்தாலும் நல்ல விசயத்தை மட்டுமே தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ஐயா...

    ReplyDelete
  17. கண்டிப்பா பாத்துரவேண்டியதுதான். இந்த விமர்சனத்துக்காகவும் , இன்னொரு தனிப்பட்ட காரணத்துக்காகவும்.

    ReplyDelete
  18. வருகைக்கு நன்றி குடுகுடுப்பையாரே...
    தனிப்பட்ட காரணம்னா உங்களுக்குள்ளயும் ஒண்ணு,ரெண்டு ஆட்டோகிராஃப்,பொக்கிஷம் இருக்கும் போல... :-)

    ReplyDelete
  19. ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க

    ReplyDelete
  20. >>ஊருக்குச் சென்று திரையரங்கில் பார்க்கும் எண்ணமுண்டு. முடிந்தால் சேர்ந்து பார்க்கலாம்...

    கண்டிப்பாக... நீ எப்பொழுது வருகிறாய்?.. i need to plan my trip accordingly...

    >>(நீ ஏன் ஆங்கில ப்ளாக் ஆரம்பிக்கக்கூடாது..?சீரியஸாகச் சொல்கிறேன்)

    இந்த உசுப்பதேல்களுகேல்லாம் நாங்க மசிய மாட்டோம்

    ReplyDelete
  21. படம் பார்க்கவில்லை
    பார்த்துவிட்ட திருப்தி
    நன்றி நண்பரே..

    ReplyDelete
  22. i dint see the movie yet. But your review is something diff.

    ReplyDelete
  23. @kadaiyam aananth...
    nanRi aananth...

    @santhaana sankar...
    nanRi sankar...

    @magesh...

    nanRi nagesh...
    (sorry for delay)

    ReplyDelete
  24. என்னுடைய பார்வையில் சேரனின் அனைத்து படங்களும் சிறந்த பொக்கிஷம் தான்.......

    ReplyDelete
  25. அப்படியே நம்ம கடைப்பக்கம் வாங்க... உங்கள பதிவெழுத கூப்பிட்டு இருக்கேன்... :)

    ReplyDelete
  26. @ஊடகன்...
    நன்றி ஊடகன்... முதல் வருகைக்கும்,பின் தொடர்வதற்கும்...
    உங்கள் பார்வைதான் எனக்கும் சேரனின் ஓரிரு படங்களைத் தவிர...

    @கயல்விழி நடனம்...
    நன்றி கயல்...கடைப் பக்கம் வருகிறேன்...

    ReplyDelete
  27. நீங்க ஒருத்தர் தான் இந்த படத்தை நல்லதா சொல்லியிருக்கிங்க!

    ReplyDelete
  28. நன்றாக விமர்சித்திருக்கிரீர்கள்.

    ReplyDelete
  29. வால்பையன்:
    வாங்க வால்... இன்னும் இரண்டு,மூன்று பதிவர்கள் பாசிட்டிவ் விமர்சனம் செய்திருக்கிறார்கள்...

    சந்ரு:
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சந்ரு...

    ReplyDelete