Saturday, September 10, 2011

அப்பார்ட்மெண்டில் ஒரு பெயர் சூட்டுவிழா(only private)

நதீம் வீடு எங்க?
கேட்டவனுக்குப் பதில்
நான் புதுசுங்க

எதிர்த்த வீட்டில்
ஒரு ஹிந்திக் குடும்பம்
ஒரு சின்னப்பொண்ணு

பக்கத்துல
ஒரு பேச்சுலர்
அடிக்கடி கறி சமைக்கிறான்

இன்னும் ரெண்டு வீடு தள்ளி
எப்பவும் ஒரு நாய் படுத்திருக்கும்
நைட் ரெண்டு மணிக்கு
கதவைப் பிறாண்டுறது
அதுவாக் கூட இருக்கும்

இன்னொரு ஃப்ளோர்
போனதே இல்ல

நதீம் வீடு எங்க?
கேட்டவனுக்குப் பதில்
நான் புதுசுங்க

பதில் எப்பவும் மாறாது

ஆறுமாசங்கழிச்சு...
கண்ணன் மனை இல்லி?
பத்தா நஹி...மே நயா ஆத்மி...

இப்பவும் எதிர்வீட்ல ஒரு
ஹிந்.....

மறதியாய் திறந்து
வைத்த சன்னல்
வழி வந்திருக்கலாம்
இவன்

சிதறிக்கிடந்த
டம்ளர்களை எடுத்து
அடுக்கிய படியே
பெயர் சூட்டித்
திட்டினேன்
தினேஷை...

4 comments:

  1. அண்ணா..
    கவிதையும் அதற்கான படமும் ரொம்ப அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சே.குமார்....

    என்னது அண்ணாவா? ஹலோ மரியாதையா பேசுங்க... நான் தம்பிங்க....:)))

    ReplyDelete
  3. அருமையான கவிதை வாழ்த்துக்கள் .........

    ReplyDelete