Thursday, July 21, 2011

கறுப்புவெள்ளை குடும்பச் சித்திரங்கள்-சிறப்புவாய்ந்தவை-பென்சில் ஓவியங்கள்

 ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் நினைத்துக் கொள்வேன், அம்மாவைப் படம் வரைய வேண்டுமென்று. இந்தமுறை நல்ல வாய்ப்பு கிட்டியது.
அம்மா மட்டுமல்ல, அத்தை, அப்பா, சகோதரர் மகன் என அனைவரையும் லைவ் ஸ்கெட்ச் செய்துவிட்டேன். லைக்னெஸ்ஸூம் நன்றாக வந்திருந்தது.
அனைவரையும் டிவி பார்க்கச் சொல்லிவிட்டு வரைந்தேன். ஃபைனல் டச் இன்றுதான் கொடுக்க முடிந்தது...
அம்மா
இது அப்பா...
இது அத்தை...
இது சகோதரரின் மகன்...
போஸ் கொடுக்கவைப்பதற்குள் பட்ட பாடு அப்பப்பப்பா...தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி, அவன் முழிக்கும் சமயங்களில் மட்டும், விழிகளை வரைந்துவிட்டேன். அதன்பின் மற்ற பாகங்களை வரைந்தேன்.செம க்யூட் அண்ட் நாட்டி பாய்.... மேலேயுள்ள அத்தையை வரையும் போது அவன் சொன்னது, ‘அப்பா, ஆச்சி(அவனுக்கு ஆச்சி) கன்னத்துல இருக்க புண்ணையும் வரையுங்க.” (தழும்பைச் சொல்கிறான்). மேலும் அனைவரையும் நான் டிவி பார்க்கச் சொன்னதால், அவர்கள் சற்று அசைந்தால் கூட, ‘ஆச்சி, அப்பாயி’ டிவி பாருங்க. அப்பா வரையுறாருல்ல’ என அதட்டினான்...:)

இதுவும் அவனது படம்தான். முடிக்கவில்லை. போஸை மாற்றிவிட்டான்...:(

பார்வையிட்டமைக்கு நன்றி...!
எல்லாப் படங்களும் வரைந்தது க்ரேட் 8B Steadler பென்சிலில் கார்ட்ரிட்ஜ் பேப்பரில்.ஒவ்வொரு படமும், லைவ்வாக 20 நிமிடமும், ஃபினிஷிங் டச்சுக்கு (ஆஃப்லைன்) 15 நிமிடமும் எடுத்துக் கொண்டது. தோராயமாக...

Sunday, July 10, 2011

கெம்பேகவுடா அருங்காட்சியகம்-100711

   இந்த வார இறுதி ஊருக்குச் செல்வதாகத் திட்டமிட்டு , கடைசி நேரத்தில் ரத்தாகிவிட்டது. அதனால் இம்முறை தொடர்ந்து நான்காவது வாரம் பென்சில் ஜாம்மர்ஸ் ,மீட் அட்டெண்ட் பண்ணிவிட்டேன்(கடும் சோம்பலையும் மீறி). MG சாலையில் இருக்கும், கேட்பாரற்ற ஒரு கட்டிடம் இந்த கெம்ப கவுடா அருங்காட்சியகம். அங்கு என்ன இருக்குமென்று கூடத் தெரியாது. இன்று போய்ப் பார்த்தால், ‘ஞாயிறு விடுமுறை’யாம். நேற்று இரண்டாவது சனிக்கிழமை விடுமுறையாம். உலகத்துலயே வார இறுதிகள்ல கதவடைக்கிற மியூசியம் வச்சிருக்க கோஷ்டி நம்ம கோஷ்டிதான்.

    அதனாலென்ன போச்சு நமக்கு. எனது தேவை கட்டிடம்தான்...இது மற்றும் இதற்கு அருகிலுள்ள இன்னொரு கட்டிடத்திலும் சேம் பேட்டர்ன் ஸ்ட்ரக்சர் தான்...
கதவு , சன்னல் வேலைப்பாடுகளைப் பிரதியெடுப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது.
அதுவுமில்லாமல் இன்று நிறைய ஜாம்மர்ஸ் வந்திருந்ததால், சாக்லேட், மிக்சர், பேச்சு, கடலை என நிறைய நேரம் வீணாகிவிட்டது.
முதலிலிருக்கும் படம் அங்கு லைவ்வாக நின்று செய்தது.
  
 பின் மொபைலில் படமெடுத்துக் கொண்டு வீட்டில் வந்து தொடர்ந்தேன்...பால்பாயிண்ட் பென்,பிக்மெண்ட் லைனர் 0.8(நம்மூர் மைக்ரோடிப் பேனா மாதிரி இது ஜெர்மன் மேக்) இன் A5 size sketch book....
  ப்ளாக்கர் டீபால்டா தர்ற பிக்னிக் பிக்சர் எடிட்டர்ல பார்டர் போட்டேன். ஐ... ! நல்லா இருக்கே....:))
  குறிப்பு: அவ்ளோ திருப்தியாயில்லை. போனதுக்கு ஆத்தின கடமை இது...



Saturday, July 9, 2011

நான் இப்டில்லாம் சிரிச்சதில்லை:)

    பென்சில் ஜாம்மர்ஸில் 'Nose crunching' expression க்காக படங்கள் வரைஞ்சிருந்தாங்க இரண்டு மூன்று பேர்.அதற்கு வரைய நினைத்தேன். அதே நேரம், தற்செயலாக ஃபேஸ்புக்கில் நண்பர் பிரவீன்குமார் ஃபோட்டோ ஆல்பங்களும் பார்த்தேன். அதில் இப்படிச் சிரித்துக் கொண்டிருந்தாள் ஒரு குட்டி.http://www.facebook.com/photo.php?fbid=471735208851&set=a.471733383851.262494.779813851&type=1
அதையே ரெஃபரென்ஸாக எடுத்து வரைந்தேன். 6B,8B & EE pencils in cartridge paper.
கொஞ்சம் ரெஸ்ட்லஸ்ஸாகவே ஆரம்பித்தேன். பரவாயில்லை...

Thursday, July 7, 2011

இன்னொரு முயற்சி அவ்வளவே...கோடுகளில் பாவனா...

    பென்சில் ஜாம்மர்ஸோட ‘கண்’ மட்டும் வரையும் எக்ஸர்ஸைஸூக்காகத் தேடிய படம் பாவனாவினுடையது. பார்த்தவுடன், முகம் முழுவதும் வரைய முடிவெடுத்தேன். பால்பாயிண்ட் பென்னில் வரைந்தது. அது ஒரு த்ரில். எவ்வளவுதான் கவனமாக வரைந்தாலும், ஏதாவது ஒரு இடத்தில் இங்க் கொட்டிவிடக்கூடிய அபாயமுண்டு.(படத்தைப் பார்த்தால் தெரியும்.இரு முக்கிய இடங்களில் இங்க் கொட்டிவிட்டது. மூக்கின் ஓரம், கன்னத்தில்:(  ) நல்ல விஷயம் என்னன்னா, அழிக்க ரப்பர், அதைத் திரும்ப வரையுற நேரம் இதெல்லாம் தேவைப்படாது. கவனக்குவிப்பு அதிகமாகிவிடும் தியானம் போல்....
ஒர்க் இன் ப்ராஸஸில் நன்றாக இருந்தது போலிருந்தது.
தொடர் ப்ராஸஸில் எங்கோ சொதப்பிவிட்டது. விடமாட்டேன் பாவனாவை...
உங்கள் பார்வைக்கு....

Monday, July 4, 2011

கழுவி ஊற்றியது...

   இரு தினங்களுக்கு முன் ஒரு பூ படம் வாட்டர்கலரில் முயற்சித்தேன்.அழகான ரோஸ் நிறத்தில் பச்சைப் பின்னணியில், முக்கால்வாசி வந்தபின் தெரிந்தது, சரியில்லையென. வாட்டர்கலர் பேப்பரில் செய்தது(20 x 15cm). ஒரு பேப்பரே 10 ரூபாய் வரும். வண்ணங்கள் நிறைத்திருந்த பேலட்டைப் பார்த்தேன். பயன்படுத்திய ரோஸ் நிறம் போக, இரு பச்சை நிறமும், பிரவுன், புளூ நிறமும் மிச்சமிருந்தது. பேப்பரையும், பேலட் வண்ணங்களையும் வீணாக்க வேண்டாமென அதன் பின்புறம் இன்னொரு படம் வரைய முடிவெடுத்தேன். கூகிள் இமேஜஸில் ‘Green' எனத் தேடியதில் வந்து விழுந்த படங்களில் இதுவும் ஒன்று. இதில் வெளிச்சம் வரும் வழி பிடித்திருந்தது. ரொம்ப ஃப்ரீயாக வரைய ஆரம்பித்தேன். wet in wet முறையில் ஆரம்பித்து,(ஒரு வண்ணத்தை மிக நீர்மமாக அடித்துவிட்டு அது காய்வதற்குள் அடுத்த வண்ணத்தை அதில் சேர்ப்பது). பின் காயவிட்டு அடுத்த, அதற்கடுத்த லேயர்கள் எனச் செய்தேன்.இதுபோல் முயற்சிப்பது முதல்தடவை. பரவாயில்லை.


20x15cm, green, watercolor, watercolorpaper

Saturday, July 2, 2011

நான் என்பது நீயல்லவோ....

     பென்சில் ஸ்கெட்ச்சிங்கில் ஓவராக ஷேட் கொடுத்துப் பழகிவிட்டது. பால்பாயிண்ட் பென்னில் போர்ட்ரெய்ட் வரையும் போது அதுபோலவே லைட்டாக ஷேட் கொடுத்து, டார்க்காக்குவது தொடர்கிறது. சமீபத்தில் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு வருகிறேன். கட்டிடங்கள் வரைகையில் கோடுகளுக்கும், க்ராஸ் ஹேட்சிங் லைன்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பழகிவருகிறேன். அதே பாணியில் இந்தப் படத்தையும் செய்துபார்த்தேன். மறுபடியும் உன் மூஞ்சிதானான்னு திட்டுறது தெரியுது. நட்பு ரீதியில் வரையச் சொன்ன நண்பர்களின் முகங்களை விட்டுவிட்டு இதை வரைந்திருக்கிறேன், ’கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனைல வய்யி’ன்ற கதையான்னு நினைக்கலாம்....
என்னங்க பண்றது. அதெல்லாம் நல்லா பெர்ஃபெக்டா வரையணும்னு நினைச்சே தள்ளிப் போயிடுது.இந்த மாசத்துக்குள்ள ரெண்டு கமிட்மெண்ட் முடிச்சே ஆகணும்னு நினைச்சிருக்கேன். அதுல ஒண்ணு தம்பதிகள்.(ஓப்பன்ஸ்டேட்மெண்ட் விட்டா, பண்ணிடலாம்னு எண்ணம்தான்) :)

         சுத்தமாக வரையவே மூடு இல்லாத சமயத்தில், இதை வரைய ஆரம்பித்தேன். பென்சில் ஜாம்மர் நண்பர் முரளியின் புகைப்படக் கைவண்ணம்தான் என்னை வரையத் தூண்டியது.
 

      இன்னுமொரு சிறப்பு... இது நான் புதிதாக வாங்கிய CANON PIXMA MP258 ஆல் இன் ஒன் (ப்ரிண்ட், ஸ்கேன், காப்பியர்) மூலம் ஸ்கேன் செய்து தரமாகத் தரவேற்றப் பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன்....:)

 
   ஸ்கேன்னர் வாங்க நெட்டில் தேடிப்பார்த்தால் உருப்படியான விலைவிபரம் கிடைக்கவில்லை. டோல் ஃப்ரீ நம்பர் ஃபோன் செய்து பார்த்தாலும் தேறவில்லை.எனக்கு ஸ்கேன்னர், ப்ரிண்டர் ஸ்பெசிஃபிகேஷன் பத்தி எதுவும் தெரியாது. என் பாஸிடம் கேட்டேன்.(அவர் ஆஃபீஸில் டெக்னிக்கல் விஷயங்களைவிட வீட்டு விஷயம், ஷாப்பிங்விடயங்களை அதிகம் பேசுவதில் ஆர்வமுள்ளவர் :) ). அவரி ஆலோசனை ‘நேரா SP road (நம்மூர் ரிச்சி ஸ்ட்ரீட் மாதிரி). அங்க போய் மூணு நாலு கடைல விலை விசாரி. கம்மியாச் சொல்ற இடத்துல வாங்கிடு”. இதையே பாலமந்திரமா எடுத்துட்டு, நேரா எஸ்பி ரோட் போனேன். ஒரு சைடுதான் பார்க்கிங் போல. நுழைஞ்ச உடன் ஒரு ஹெச் பி ப்ராடக்ட் கடை இருந்தது. வண்டியை ஆப்போசிட் சைட்ல பார்க் பண்ணிட்டு விலை விசாரிச்சேன். HP 1050 விலை 3150+ டாக்ஸ் நு சொன்னான். சரி இன்னும் அடுத்த கடைகள் கேட்கலாம்னு போனேன். ஏறக்குறைய எல்லாக் கடையிலயும் அதே ரேட்டுதான் சொன்னாங்க.(50 ரூபாய் கூடக் குறைய). சரி இங்க எங்க விசாரிச்சு வாங்கினாலும் 100 200 தான் சேமிக்கமுடியும். இதுக்கு முதக் கேட்ட கடையிலயே போய் வாங்கலாம்னு போனா, வண்டியைக் காணோம்.5 செக்கண்டுக்குள்ள மனசுக்குள்ள இருந்த ‘பொல்லாதவன்’ தனுஷ் வெளிய வர ஆரம்பிச்சான். ஏன்னா இந்த வண்டி(பேஸ்ஸன் ப்ரோ) வாங்கினதுக்கப்புறம்தான் என்கிட்ட சில விஷயங்கள் வந்து சேர்ந்தது(டேங்க் பேக், சீட் கவர், இண்டிகேட்டர் பஸ்ஸர் இப்டின்னு லிஸ்டு போகும்). நான் ரொம்பக் கொடூரமா மாறுறதுக்குள்ள பக்கத்துல இருந்தவர், ‘உன் வண்டி அந்தா போகுது’ன்னு சொன்னாரு... போய்ப் பார்த்தா, Recovery van ல என் வண்டியும் பல்லக்குல ஏறின மாதிரி நின்னுக்கிட்டு இருந்துச்சு. அந்த வேன்ல இருந்த ஒருத்தன்கிட்ட பேசிப்பார்த்து 500 ரூபாயை, 250 ஆக் குறைச்சு டீலை முடிச்சிட்டு வண்டியை எடுத்துட்டு வந்தேன்.(பார்க்கிங்க்ல தரையில நிக்கிற வண்டியை எடுக்கவே எனக்கு 5 நிமிஷம் ஆகும். பாவிங்க இவிங்க அசால்ட்ட 5 செக்கண்ட்ல வண்டியை வேன்ல இருந்து இறக்கிக் கொடுத்துட்டாய்ங்க.க்ராதகர்கள்)

         திரும்ப அந்தக் கடைக்குப் போக முடியாது. ஏன்னா ஒன் வே. ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல அநாவசியச் செலவு பண்ணக்கூடாதுன்றது என் கொள்கை(தினம் அதை மீறிடுவேன்றது அடுத்த கொள்கை) பக்கத்துல இருந்த இன்னொரு கடையில விசாரிச்சு கிட்டத்தட்ட இதே ரேட்டுக்கு கேனான் வாங்கினேன். கடைல இருந்த பையன்கிட்ட இதை வண்டில கட்ட ஹெல்ப் பண்ணுடான்னு கேட்டேன். அவன் எடுத்துட்டு வந்தான் பாருங்க கயிறு, சின்னப்பையங்க கட்டுற அண்ணாக் கயிறு மாதிரி, அதில கட்டினான், வண்டியை ஸ்டேண்ட் விட்டு எடுக்கிறப்பவே, கேனான் சரிய ஆரம்பிச்சது. மனசுக்குள்ளயே திட்டுட்டு அதைக் கழட்டிட்டேன். நான் ஏற்கெனவே கிளம்புறப்பவே கொடி கட்டுற நைலான் கயிறு ரெண்டு வாங்கிட்டுப் போயிருந்தேன். தனி ஆளா நானே ஸ்கேன்னரை வண்டியோட சுத்திக் கட்டி, மூணு முடிச்சுப் போட்டேன்(ஹி..ஹி... எல்லாம் ஒரு ப்ராக்டிஸுக்காகத்தான்)
இருபது கிலோமீட்டர் தாங்கணும்ல....

    அடுத்து புதுக் குழப்பம். வந்த வழி ஓகே. போற வழி எப்படி??? விசாரிச்சு குத்துமதிப்பா ஓட்டிட்டுப் போனேன். பின்பாரம், வழி தெரியாமைன்னு குழப்பத்துல போனவன், சிக்னல்ல மஞ்சள் விழுந்தும்  நிக்காம க்ராஸ்பண்ணிட்டேன். கப்புன்னு புடிச்சிட்டான்யா... அங்க இரு 200 அழுதேன்.(500 ரூபாய் கொடுத்தா அழகா 200 மட்டும் எடுத்துட்டு சேஞ்ச் கொடுக்கிறான்யா போலீசு.) அதோட வழக்கம்போல அட்ரஸ் அவர்கிட்டயே கேட்டேன். குழப்பியடிக்காம வழி சொன்னாரு. வந்துட்டேன்....
ஓவர் சுய புராணமோ.... என்னங்க பண்றது...எழுதிட்டேன். இனி உங்க தலையெழுத்து....:)))))