Monday, July 4, 2011

கழுவி ஊற்றியது...

   இரு தினங்களுக்கு முன் ஒரு பூ படம் வாட்டர்கலரில் முயற்சித்தேன்.அழகான ரோஸ் நிறத்தில் பச்சைப் பின்னணியில், முக்கால்வாசி வந்தபின் தெரிந்தது, சரியில்லையென. வாட்டர்கலர் பேப்பரில் செய்தது(20 x 15cm). ஒரு பேப்பரே 10 ரூபாய் வரும். வண்ணங்கள் நிறைத்திருந்த பேலட்டைப் பார்த்தேன். பயன்படுத்திய ரோஸ் நிறம் போக, இரு பச்சை நிறமும், பிரவுன், புளூ நிறமும் மிச்சமிருந்தது. பேப்பரையும், பேலட் வண்ணங்களையும் வீணாக்க வேண்டாமென அதன் பின்புறம் இன்னொரு படம் வரைய முடிவெடுத்தேன். கூகிள் இமேஜஸில் ‘Green' எனத் தேடியதில் வந்து விழுந்த படங்களில் இதுவும் ஒன்று. இதில் வெளிச்சம் வரும் வழி பிடித்திருந்தது. ரொம்ப ஃப்ரீயாக வரைய ஆரம்பித்தேன். wet in wet முறையில் ஆரம்பித்து,(ஒரு வண்ணத்தை மிக நீர்மமாக அடித்துவிட்டு அது காய்வதற்குள் அடுத்த வண்ணத்தை அதில் சேர்ப்பது). பின் காயவிட்டு அடுத்த, அதற்கடுத்த லேயர்கள் எனச் செய்தேன்.இதுபோல் முயற்சிப்பது முதல்தடவை. பரவாயில்லை.


20x15cm, green, watercolor, watercolorpaper

5 comments:

  1. வசப்பட்ட பச்சைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்லாயிருக்குய்யா ;))

    ReplyDelete
  3. @சே.குமார்...
    தொடர் வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி நண்பரே...

    @இராஜராஜேஸ்வரி...
    வாழ்த்துக்கு நன்றி மேடம்...

    ReplyDelete
  4. @கோபிநாத்...
    நன்றி மாப்பி...!

    @சுகிர்தா....
    நன்றி சுகிர்தா...!

    ReplyDelete