ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் நினைத்துக் கொள்வேன், அம்மாவைப் படம் வரைய வேண்டுமென்று. இந்தமுறை நல்ல வாய்ப்பு கிட்டியது.
அம்மா மட்டுமல்ல, அத்தை, அப்பா, சகோதரர் மகன் என அனைவரையும் லைவ் ஸ்கெட்ச் செய்துவிட்டேன். லைக்னெஸ்ஸூம் நன்றாக வந்திருந்தது.
அனைவரையும் டிவி பார்க்கச் சொல்லிவிட்டு வரைந்தேன். ஃபைனல் டச் இன்றுதான் கொடுக்க முடிந்தது...
அம்மா
அம்மா மட்டுமல்ல, அத்தை, அப்பா, சகோதரர் மகன் என அனைவரையும் லைவ் ஸ்கெட்ச் செய்துவிட்டேன். லைக்னெஸ்ஸூம் நன்றாக வந்திருந்தது.
அனைவரையும் டிவி பார்க்கச் சொல்லிவிட்டு வரைந்தேன். ஃபைனல் டச் இன்றுதான் கொடுக்க முடிந்தது...
அம்மா
இது அப்பா...
இது அத்தை...
இது சகோதரரின் மகன்...
போஸ் கொடுக்கவைப்பதற்குள் பட்ட பாடு அப்பப்பப்பா...தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி, அவன் முழிக்கும் சமயங்களில் மட்டும், விழிகளை வரைந்துவிட்டேன். அதன்பின் மற்ற பாகங்களை வரைந்தேன்.செம க்யூட் அண்ட் நாட்டி பாய்.... மேலேயுள்ள அத்தையை வரையும் போது அவன் சொன்னது, ‘அப்பா, ஆச்சி(அவனுக்கு ஆச்சி) கன்னத்துல இருக்க புண்ணையும் வரையுங்க.” (தழும்பைச் சொல்கிறான்). மேலும் அனைவரையும் நான் டிவி பார்க்கச் சொன்னதால், அவர்கள் சற்று அசைந்தால் கூட, ‘ஆச்சி, அப்பாயி’ டிவி பாருங்க. அப்பா வரையுறாருல்ல’ என அதட்டினான்...:)
இதுவும் அவனது படம்தான். முடிக்கவில்லை. போஸை மாற்றிவிட்டான்...:(
பார்வையிட்டமைக்கு நன்றி...!
எல்லாப் படங்களும் வரைந்தது க்ரேட் 8B Steadler பென்சிலில் கார்ட்ரிட்ஜ் பேப்பரில்.ஒவ்வொரு படமும், லைவ்வாக 20 நிமிடமும், ஃபினிஷிங் டச்சுக்கு (ஆஃப்லைன்) 15 நிமிடமும் எடுத்துக் கொண்டது. தோராயமாக...
அருமை!!!
ReplyDeleteஅருமை பரணி, வாழ்க்கையை நல்லா ரசிச்சு வாழ்றீங்க. வாழ்த்துகள் :)
ReplyDeleteபரணி அண்ணா....குடும்பத்தை வரைஞ்சே அறிமுகப்படுத்திட்டீங்க.அவங்க அழகா இருக்காங்க.அதான் வரைஞ்சதும் அழகா இருக்கு !
ReplyDeleteஎல்லாமே நல்லா இருக்கு.
ReplyDeleteஎல்லாமே நல்லா இருக்கு.
ReplyDeleteபதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...
ReplyDelete@கீதா6....
ReplyDeleteமுதல்வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...
@வி.பாலகுமார்...
நன்றி பாலா...!
@ஹேமா...
ReplyDeleteவாங்கோ ஹேமா... நன்றி....!
@கே.ரவிஷங்கர்...
வாழ்த்துக்கு நன்றி சார்...!
@சே.குமார்...
நன்றி நண்பரே....!
@குடந்தை அன்புமணி...
நன்றி. கண்டிப்பாகப் பங்கெடுக்க முயற்சிக்கிறேன்...!
ஓவியங்கள் அருமை...வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
ReplyDelete