Friday, October 17, 2014

இந்த நாள் இது இனிய நாள்...

18 அக்டோபர் 2012.
                           தனிக்cotஉ ராஜாவா சுத்திட்டு இருந்தவன், சாந்தலட்சுமிங்கிற அப்பாவிக்குத் தாலி கட்டி, தனக்குத்தானே வேலிபோட்டுக்கிட்ட நாள்.போன வருசமே எழுதிருக்கவேண்டிய விசயம், அப்போதான் வெண்ணிலா பொறந்து,பொரண்டுட்டு இருந்ததால ,டயப்பர் மாத்தவே டைம் பத்தல.அதனால ரெண்டுவருசத்துக்கும் சேர்த்து இப்ப எழுதவேண்டியதாப் போச்சு.
                        பாத்துப் பாத்து லவ் பண்ணிக் கட்டியிருந்தாலும்('அப்டியே பண்ணிட்டாலும்' நு அடைப்புக்குறிக்குள் போட்டு காமெடி பண்ணுவது கிளிஷே ஆகிவிடுமென்பதால் போடவில்லை) , இவ்ளோ பொருத்தமான பொண்ணு கிடைச்சிருக்காது.
                      அவங்க வாரியார் பேத்தி, நான் பெரியார் பேரன். அங்க கந்தசஷ்டி கவசம், சைவம்,தகிக்கும் சென்னை; இங்க ராஜா பாட்டு,அசைவம், பெங்குளுரு. ஏட்டிக்கிப் போட்டிதான் அதிகம்.
அம்மிணியை நான் மொதல்ல ஃபோட்டோல பாத்ததே ஆர்குட்லதான். இங்க ஆர்க்குட்டு,ப்ளாக்குநு பலப்பல ரவுண்ட் அடிச்சிட்டு டிவிட்டர்ல இருக்கேன்.எல்லாமே ஏறுக்குமாறா இருந்ததால, வேறவழியே இல்லாம, அன்பை மட்டும் பொதுவாப் பரிமாறிக்கவேண்டியிருந்தது.பின்ன....அதானங்க வாழ்க்கை...
                      ஆக்சுவலி, ஒரு டீச்சர் பொண்ணத்தான் நான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சிருந்தேன்.ஸ்கூல் படிக்கிறப்போ பசங்களுக்கு ஃபர்ஸ்ட் கிரஷ் டீச்சர்தானே....அப்புறம் அழியாதகோலங்கள் ஷோபா...இப்டிப் பல கற்பனைகள். ஆனா அமைஞ்சது சாஃப்ட்வேர் அம்மிணி.அவங்களுக்கு தெரிஞ்ச ஜாவா வேற. எனக்குத் தெரிஞ்ச ஜாவா வேற(நான் ஆட்டோமொபைல்). ஆனா கல்யாணத்துக்கப்புறம் மனைவி டீச்சர்தான்னு புரிஞ்சிக்கிட்டேன்.
அவங்க வீட்டைப்பத்தி ஹிஸ்டரி பாடம் எடுக்கும்போதெல்லாம் , கடைசிபெஞ்ச் ஸ்டுடண்ட் மாதிரிக் கவனிப்பேன்.
                  ரெண்டுவருசம் போனதே தெரியல.இப்ப வெண்ணிலாவுக்கு ஒருவயசாயிடுச்சு...வெண்ணிலா, அம்மா வயிற்றில் இருந்த காலங்கள்,என்றைக்கும் மறக்க இயலாது. அவ்ளோ ஜாக்கிரதையாப் பாத்துக்கிட்டா.உணவுக்கட்டுப்பாடு, தூக்கமில்லாமை, கை கால் உளைச்சல் நு ரெண்டு வரில நான் எழுதிட்டுப் போயிடுவேன். அதன் உண்மையான அர்த்தம் அவளுக்குத்தான் தெரியும்.க்ரேட்....!!!!
                 ஏழு அல்லது எட்டாவது மாசங்கள்ல அரைமணிநேரத்துக்கு மேல வயித்துல கொஞ்சம் அசைவு இல்லேன்னாலும், வெளியே சொல்லமுடியாத கலவரம் உண்டாயிடும் அவளுக்கு. அந்த டைம்ல ஃபோன் பண்ணினா, அமைதியா இருப்பா.கொஞ்சங்கொஞ்சமா பேச்சுக்கொடுத்து, பாப்பா ஆடலைனு தெரிஞ்சுப்பேன்.எனக்கும் பயம் இருக்கும்.இருந்தாலும் 'ஒன்னும் இல்லம்மா.தூங்கிட்ருப்பாடா'நு சமாளிப்பேன். அந்த சமயங்கள்ல பக்கத்துல இருக்க கோயிலுக்குப் போயிடுவா. கோயில்மணிச் சத்தத்துல 'களுக்'நு துள்ளுவா வெண்ணிலா.அப்பத்தான் நிம்மதியே வரும் அவளுக்கு. 'சித்திரையில் நிலாச்சோறு' படத்துல 'கல்லால செஞ்சுவச்ச' பாட்டு போட்டா, வயித்துக்குள்ளயே ஆடுவா வெண்ணிலா.....

                   பாத்துப்பாத்து பத்திரமா வளர்த்தெடுத்துட்டு இருக்கோம் வெண்ணிலாவை.எங்களை எப்பவும் பிஸியா வச்சிருக்கா வெண்ணிலா...இந்த ஸ்கெட்ச் பண்ணி கிஃப்ட் கொடுக்கக் கூட வீட்ல டைம் கிடைக்கல(சர்ப்ரைஸ்க்காக)...நேத்துதான் வெளிய ஒரு காஃபி டே யில் வரைந்து ரெடிமேட் ஃபிரேமில் போட்டுக் கொடுத்தேன். எனக்கு ரெடிமேட் ட்ரெஸ் கிடைச்சது ......