Saturday, April 30, 2011

இளையராஜா-சலிக்கவே சலிக்காத மனிதர்....

    பதிவெழுத வந்த மூன்றாண்டுகளில் முதல்முறையாக இந்த மாதம்தான் அதிகப் பதிவு(இது இம்மாதத்தின் 9வது பதிவு) வரவேண்டுமென்பதால், ஒரு க்விக் ஸ்கெட்ச்...அதற்கு நம்ம தலைவரை விட்டா யார் இருக்காங்க...??? :)

அதனால, நான் இப்ப கத்துட்டு வர்ற Impressionism style la 6,7 நிமிடங்களுக்குள்ளாக வரைந்த படம் இது... பால்பாயிண்ட் பென்னே துணை....!
 

Friday, April 29, 2011

மீரா ஜாஸ்மின் - எனக்குப் பிடித்த நடிகை...!

     ரொம்ம்ம்ம்ம்ம்ப நாள் கழிச்சு பால்பாயிண்ட் பென்னால, ஒரு க்ளோஸ் போர்ட்ரெய்ட் சின்சியரா ட்ரை பண்ணினேன். எங்கேயோ சொதப்பிடுச்சு. இருந்தாலும் மொத்த எஃபக்ட் எனக்குப் பிடித்திருக்கிறது.

எனது கவனக் குறைவினால், இடது கன்னத்தில் பேனா மை சிறிது தேவையில்லாமல் கொட்டிவிட்டது. ம்ஹ்ம்...திருஷ்டிப்  பொட்டுன்னு வச்சிக்கலாம்...:)

   மீராவிடம் பிடித்ததே, அந்தக் குறும்புச் சிரிப்பும், கண்களும்தான்...அதைக் கொண்டு வர மிக முயற்சியெடுத்தேன். பரவாயில்லை...

’கஸ்தூரிமான்’ படத்தில் வரும், ‘கேக்கலையோ கேக்கலையோ கண்ணனது கானம்’...தினமும் காலை நான் கேட்டு ரசிக்கும் மீராவின் பாடல்...அஃப் கோர்ஸ் ராஜாவின் பாடல்தான்....

லவ்லி மீரா...

Thursday, April 28, 2011

Sunday, April 24, 2011

பழமாய் இருப்பதால் மிளகாய் இனிக்குமா?

      இன்னுமொரு நீர்வண்ண ஓவியமுயற்சி. ரெஃபரென்ஸ் படம் நெட்டில் இருந்து எடுத்தேன்...

கொஞ்சம் இல்ல அதிகமாகவே ஓவர் ஒர்க் ஆயிடுச்சு. இனிஷியல்லி வாஷஸ் நல்லா வந்தது. கடைசியில் கொஞ்சம் சொதப்பிடுச்சு,....:(

Friday, April 22, 2011

இளையராஜா-White in Black-Music messiah

      முதல்முறையாக கறுப்புத்தாளில்(வெள்ளைத்தாளில் கறுப்பு வண்ணம் பூசிக் காயவைத்தது) வெள்ளை வண்ணத்தில் வரைந்து பார்த்தேன்.இப்படம் நன்றாக வந்ததற்குக் காரணம் இளையராஜா மட்டுமே... ஐ லவ் இளையராஜா
medium-Oil colors(black & white)

Monday, April 18, 2011

Bangalore Palace in watercolor Live sketch 17-04-11-ஓவியம்

நேற்று நடந்த பென்சில் ஜாம் நிகழ்வில் எனது பங்களிப்பு....முக்கால்வாசி அங்கேயே வரைந்தது. ஃபினிஷிங் டச்சஸ் வீட்டில் வந்து கொடுத்தேன்...

Saturday, April 16, 2011

NGMA-Bangalore-31st sketch crawl-pen sketch-ஓவியம்

     உலகளாவிய 31 வது Sketch Crawl நிகழ்விற்காக நேற்று (16-04-11), பெங்களூர் பேலஸ் ரோட்டிலிருக்கும் National Gallery of Modern Art சென்றிருந்தேன். காலதாமதமாகச் சென்றதால் ஒரு படம் மட்டுமே வரைய முடிந்தது.உள்ளே சுற்றிப் பார்க்கவில்லை. வெளியே இருந்த படிக்கு, கட்டிடத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பால்பாயிண்ட் பென்னில் வரைந்து முடித்தேன். திருப்தியளித்த ஒரு படம் இது எனக்கு...

Monday, April 11, 2011

கோடுகள் கோடுகள் மற்றும் கோடுகள்-pen ஓவியம்

      இருக்கும் படத்தின் வெளிச்ச, அடர்த்தி வேறுபாடுகளை ஷேடிங் பண்ணாமல், கோடுகளின் அளவு, இடைவெளி, வளைவுகள் வைத்து வேறுபடுத்த முயற்சித்த ஓவியம் இது....


பால்பாயிண்ட் பென்னில் வரைந்தது....ரெஃப்ரென்ஸ் படம் இங்கே...

Monday, April 4, 2011

கிராமக் காட்சிகள்-Live sketches by pen

          யுகாதி விடுமுறைக்காக ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கு கிறுக்கியவைகளில் சில.


A5 sheet- Ball point pen

    இது ஊருக்கு வெளியே உள்ள நீர் வற்றிய கண்மாயில் இருக்கும் ஈஸ்வரன் கோயில்.
       என் வீட்டுக் கதவு வழியே வெளிப்பார்வைத் தோற்றம்

  முந்தைய படத்தில் உள்ள தகரக் கூரையின் கீழே (இன்னொரு கோணத்தில் வரைந்தது. மாடுகள் உள்ள கொட்டம். அவை ஓரிடத்தில் நில்லாததால், அவைகளை வரைய நினைத்துப் பின் முடிவை மாற்றிக் கொண்டேன்).

      மாடுகளின் gesture ஸைத் தனியாக வரைந்தது.
எனக்குக் கிடைத்த மாடல் (சகோதரர் மகன்). தூங்கும்போதுதான் நன்றாக வரைய முடிந்தது.
    இவர்தான் அந்த மாடல், நிமிஷத்துக்கு 10 போஸ் கொடுத்தார். அவ்வளவு சீக்கிரம் வரைய முடியலை. அதான் தூங்கிறப்ப வரைஞ்சது முந்தைய படம். :)