Wednesday, August 31, 2011

புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா...!

நண்பனும், கொலீக்குமாகிய கார்த்திக்குக்கு நாளை கோவையில் திருமணம்.அதற்காக இருநாட்களுக்கு முன் ஆரம்பித்த தம்பதிகள் உருவப்படம் முழுமையடையவில்லை. வேறு வழியில்லை. முன்னரே மணப்பெண் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவனின் உருவப்படம் மட்டும் அவசரத்தில் வரையமுடிந்தது இன்று.
ஊர்ல இருக்கவங்களுக்கெல்லாம் ஜோடி ஃபோட்டோ வரைஞ்சுகொடுத்தா, சீக்கிரம் எனக்கு திருமணமாகும்னு உட்டாலக்கடி சித்தர் சொல்லியதை ஏதோ ஒரு ஓலைச்சீடியில் பார்த்த ஞாபகம்... நல்லதே நடக்கும் :)

     இனிய நண்பனுக்கு மணநாள் வாழ்த்துக்கள்...!

Friday, August 26, 2011

இளையராஜாவுடன் எனது ஓய்வுநேரம்-loose water color attempt

  ஒரு பெரிய படம் சமீபத்துலதான் முடிச்சேன். அடுத்த பெரிய படம் ஆரம்பிச்சாச்சு. பென்சில் ஒர்க்குன்னா ரொம்ப அதிக நேரம் எடுக்கும். அதையே பண்ணிக்கொண்டிருந்தால் எப்படி?
   பென்சில் ஜாம்மர்ஸில் , வாட்டர்கலரை  லூசாகப் பயன்படுத்தி வரையச் சொல்லி பயிற்சி வந்தது. நான்கைந்து நாட்களாக அரித்துக் கொண்டிருந்தது. லேண்ட்ஸ்கேப்பை விட போர்ட்ரெய்ட்தான் ஈசி. அதுவும் பிரபலமான ஒருவர் என்றால் இன்னும் ஆர்வமாக இருக்கும். நம்ம பரிசோதனை முயற்சிகளுக்கு இருக்கவே இருக்கார் இளையராஜா...
வாட்டர்கலர் கண்ட்ரோல் பண்றது கஷ்டம். அதோட ஃப்லோவை கண்ட்ரோல் இல்லாம வரையறதுதான் சோதனை. அது இன்னும் கஷ்டம். ப்ளான்னிங் முக்கியம்.வெள்ளை நிறம் பயன்படுத்தக்கூடாது என்பதால் முதலிலேயே அதற்கான இடம் விட்டுவிட வேண்டும். மனதிற்குள்ளேயே எங்கு டார்க், எங்கு ஒயிட் என முடிவுசெய்துவிட்டு, முடிந்தால் பென்சிலில் சிறு மார்க்குகள் இட்டுவிடவேண்டும்.
பென்சில் ஒர்க்+ திட்டமிடல் அரைமணி நேரம் ஆனது.
அதன்பின் பெயிண்டிங் 20 நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டது. இந்த முறையில் உருவப்படம் வரைய வேண்டுமென்பது நெடுநாள் ஆசை.
அவ்வளவு திருப்தி தரவில்லை எனினும் முயற்சி ஓகேதான்...
பார்த்தமைக்கும், ரசித்தமைக்கும் நன்றிகள்...

இன்னும் ஒருவருக்கு நன்றி சொல்லவேண்டும். அது ரவிஷங்கர் சார்தான். அவரின் சமீபத்திய பதிவான ‘இளையராஜாவின் ட்ரம்பெட்’ பதிவின் பாடல்கள் பின்புலமாக ஒலிக்க உருவான ஓவியம் இது...
நன்றி சார்...!நன்றி இளையராஜா சார்!


Thursday, August 25, 2011

’வலசை’யில் எனது ஓவியம்

புதிய தமிழ் இலக்கியச் சிற்றிதழான ‘வலசை’யில் வெளிவந்த எனது ஓவியம் இது. ஜோஸ் சரமோகாவின் ‘Blindness'  நாவல் அறிமுகத்துக்காக, நண்பர் வி.பாலகுமார் மொழிபெயர்த்திருந்த பகுதியில் வந்திருக்கிறது.
வாய்ப்பளித்த நேமிக்கும், காபாவுக்கும் நன்றிகள்...!
இப்போதுதான் படிக்க ஆரம்பித்துள்ளேன். விரைவில் படித்துமுடித்துவிட்டு எழுதுகிறேன். நன்றி....!

  முதல்தடவையாக அச்சு ஊடகத்தில் எனது ஓவியம் வந்ததில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்...!

Wednesday, August 24, 2011

வட இந்தியத் தம்பதிகள்-உருவப்படம்

வெகுநாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த நண்பனுக்காக...
இந்தோரில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது என்னுடன் வேலை பார்த்தவன். இருவரும் ஒரே பாஸின் கீழ் வேலை பார்த்தோம். இவன் அங்கு சீனியர் என்பதால் ஸ்டேண்டர்ட்ஸ், வழிமுறைகள் இன்னும் பல உதவிகள் செய்தவன்.இப்படம் அவனுக்குத் திருப்தி தந்ததா தெரியவில்லை...:(
இப்படம் கொஞ்சம் பெரிய அளவில் செய்தது. A2 size (59x42 cm).. my favorite 8B steadler pencil....
என் ஸ்கேனரில் ஸ்கேன் செய்ய இயலாததால், என் மொபைல் கேமராவில் படமெடுத்துப் போட்டுள்ளேன். மிகக் கஷ்டப்பட்டு செய்த உடைகள், முடி இன்னும்பல நுணுக்கமான டீட்டெய்லிங் வேலைகளை இதில் உங்களால் பார்க்கமுடியாது என்பது என் வருத்தம். :(
இருந்தும் உங்கள் பார்வைக்கு.... பார்வைக்கும், ரசிப்புக்கும் நன்றிகள்...!

Tuesday, August 23, 2011

வாருங்கள் வரையலாம்...ஓவிய ஆர்வம் உள்ளவர்களுக்கு....

     ஆ...ஊன்னா கூட்டம் கூட்டமாக் கெளம்பிடுறானுங்கய்யா... ஞாயிற்றுக்கிழமை வந்துட்டா முதல் வேலை வெளிய கிளம்புறதுதான். என்ன மாதிரி ஒரு சோம்பேறியைப் பார்க்கவே முடியாது.ஷாப்பிங் பிடிக்காது, ஊர் சுத்தப் பிடிக்காது, கோயிலுக்குப் போகப் பிடிக்காது, கூட்டமா இருக்கதால பண்டிகை நாட்கள்ல ஊருக்குப் போகக் கூடப் பிடிக்காது. ஆனாலும் என்ன பெரிய வேலை இருந்தாலும், எனது ஞாயிறுகள் பெங்களூரை எக்ஸ்புளோர் பண்ணக் கிளம்பிவிடுகின்றன. ஒரே காரணம் பென்சில்ஜாம் மீட்டிங்க்தான்.பெங்களூரில் இருக்கும் ஒவ்வொருவிதமான ஆர்டிஸ்டுகளும், (என்னை மாதிரி ஜூனியர் ஆர்டிஸ்டுகளும்தாங்க), பார்க்லயோ, ஏரியிலயோ, மியூசியத்துலயோ, காலைல 9 மணிக்குக் கூட ஆரம்பிச்சிடுவோம்...(நான் எப்பவும் 11 மணிக்குத்தான் போவேன் :)  ). யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. வந்தவுடன் பேப்பரோ, ஸ்கெட்ச் புக்கோ எடுத்து அவரவர் வேலையை ஆரம்பித்துவிடுவர். நான் நான்கு மாதங்களாகத்தான் ரெகுலராகச் சென்று வருகிறேன். ஒவ்வொருத்தரோட எக்ஸ்பீரியன்ஸ், அவங்க ஸ்டைல் எல்லாம் பகிர்ந்துக்குவாங்க. அரட்டை, காஃபி, சிகரெட் எல்லாம் உண்டு. நல்ல டிப்ஸ் கிடைக்கும்.
   பென்சில் ஜாம்மர்ஸோட மெயின் எய்ம், மரபு சார்ந்த ஓவிய வகைகள்தான். இதனை ஒழுங்காகப் பயிற்சியெடுத்தால், அப்ஸ்ட்ராக்ட் வகைகள் எளிதில் கைகூடும் என்பதும், எளிதாக இருக்கிறது என முதலிலேயே அப்ஸ்ட்ராக்ட் வகைகள் செய்வது சரியல்ல என்பதுவும் எண்ணங்கள்....
இங்க வரைய பெரிய ஆர்டிஸ்டாக இருக்கணும்னு அவசியமில்லை. பென்சிலும், பேப்பரும் இருந்தால்கூடப் போதும்....
இன்னொரு விஷயம், இங்கு ஆயில், அக்ரிலிக் வகையறாக்கள் அதிகம் விரும்பப் படுவதில்லை. அது எளிது என்பது எண்ணம். இருப்பதிலேயே, சவாலானதாகக் கருதப்படும் வாட்டர்கலர்தான் இங்கு எப்போதும் லைம்லைட். 8 மணி நேரம் உக்கார்ந்து உக்கார்ந்து டீட்டெயில்டா பென்சில் ஸ்கெட்ச் பண்ணாக்கூட , ‘just like that' நு போய்ட்டே இருப்பாங்க.... அரைமணி நேரத்துல அழகா water washes பண்ணியிருந்தா உச்சி மோந்துடுவாங்க....
 பெங்களூர்ல ஆரம்பிச்ச இந்த க்ளப், டெல்லியிலயும் இருக்கு. புனே, ஹைதராபாத்ல அப்பப்போ நடக்கும். போன வாரம் சென்னைல கூட ஒரு பொண்ணு இனிஷியேட் பண்ணிருக்கு. ஆனா யாரும் போகலைன்னு நினைக்கிறேன். இதைப் படிக்கிற சென்னை மக்கள்ஸ் அவங்களோ, இல்லை அவங்க நண்பர்களுக்கோ இதைப் பரிந்துரை செய்யுங்கள் அவர்களும் வளரட்டும், பென்சில் ஜாம்மர்ஸூம் வளரட்டும்....

நான் 6 மாசத்துக்கு முன்னாடி எப்பவோ வலையேத்துன படங்களையும், இப்ப சுடச்சுட போடுற படங்களையும் பார்த்தா, என் விரலின் நீட்டம் புரியும் :)

இது ஒரு விளம்பரப் பதிவல்ல. ஒரு பகிர்வு... பகிரவேண்டும் எனத்தோன்றினால் நீங்களும் ரீஷேர் செய்யுங்கள்...
குறிப்பு: பென்சில் ஜாம்மர்ஸில் இணையக் கட்டணம் இல்லை. இது ஒரு ஓவியத் தன்னார்வு வளர்ப்பு மையம்...
வாருங்கள் வரையலாம்.....


www.penciljammers.com

 




Saturday, August 20, 2011

நீஈஈஈஈண்ட நாள் வேலையிலிருக்கும் படம்...

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு பெரிய ட்ராயிங் போர்ட் வாங்கிய பிறகு ஆரம்பித்த படம்.90 சதம் முடித்தபின் தெரிந்தது...உடலுக்கும், கால்களுக்கும் விகித அளவு சரியில்லையென. பிறகு கால்களை வெட்டி, மறுபடியும் ஒட்ட ஆரம்பித்தேன். வீடு மாற்றும் போது போர்டிலிருந்து, உடைந்த கால்களிலேயே தாவி ஃபைலுக்குள் ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டது. இப்போதிருக்கும் கமிட்மெண்ட்டுகளில்(நண்பர்களுக்கானது) இன்னும் இரண்டு மாதங்களுக்கு இதை எடுக்க முடியாது. அதனால் முடிவுறாத நிலையிலேயே போஸ்ட் செய்கிறேன்...ரொம்ப விரும்பி ஆரம்பிச்சுச் செய்த படம்...:(

ரெஃபரென்ஸ் படம்: உறுபசி நாவலின் அட்டை...
8B and 6B in cartridge

Thursday, August 18, 2011

கண்களால் பொறுக்கியவை-ஊருக்குப் போனதும் வந்ததும்

  முதல்நாள் மழை கெடுத்ததால், ரத்தான பயணம், வெள்ளியன்று 12.08.11 தொடங்கியது...ஒயிட்ஃபீல்டு டூ சாந்திநகர்(ஆட்டோ),பெங்களூர்-சேலம், சேலம்-கரூர்,கரூர்-திண்டுக்கல், திண்டுக்கல்-தேனி...
பெண்டை நிமிர்த்திவிட்டது பயணம்.
போரடிக்காமல் இருந்ததற்குக் காரணம் கீழ்க்காணும் ஸ்கெட்சஸ்..
ரிடர்ன் ஜர்னி 15.08.11 இரவு திண்டுக்கல் டூ பெங்களூர் ட்ரைன்...பகல்லயே எனக்குப் பசுமாடு தெரியாது, இருட்டுல எருமை  மாடா தெரியும்... அதான் ஃபுல் டீட்டெயில்டா வரையமுடியலை ரயில்வே ஸ்டேஷனை...
எல்லா குவிக் ஸ்கெட்சஸ் பயணத்தின் போதும், காத்திருப்பின் போதும் போட்டது. கமெண்டுகள் இப்போதுதான் போட்டேன்...
பார்த்தமைக்கும், ரசித்தமைக்கும் நன்றிகள்...










Sunday, August 7, 2011

ஃபோட்டோன்னா இப்டியா மிரளும் குழந்தை??!!

   ட்விட்டர் நண்பர் @பிளிறல் என்னும் பாலாவின் ஃபேஸ்புக்கில் இப்படத்தைப் பார்த்ததிலிருந்து ஒரு அரிப்பு.இதனை ஸ்கெட்ச் செய்துவிட வேண்டுமென,
போனவாரம், அவர் வீட்டுக்கு அவரையும், அவர் மகள் யாழினியையும் பார்க்கலாமென, நானும், அண்ணன் TBCD உம் திட்டமிட்டோம். ஞாயிறு சந்திப்பு என முடிவானது. வெள்ளியன்று திடீரெனத் தோன்றிய யோசனை, ஏன் அவரும், அவர் மகளும் இருக்கும் ஃபோட்டாவை வரைந்து ஃப்ரேம் பண்ணித் தரலாமேவெனெ. போன வெள்ளி இரவு, சனி இரவு எவ்வளவு முயன்றும் முடிக்கமுடியவில்லை. வெறுங்கையோடு போய் விருந்து சாப்பிட்டு விட்டு வந்தேன். ஒருவாரம் கழித்து இன்று இரண்டு மணிநேரம் செலவழித்து படத்தை ஓரளவுக்கு பூர்த்தி செய்தபின்தான் சாப்பிட்டதே செரித்தது எனலாம்.
பாலா இதில் கொஞ்சம் ஒல்லியாக வரைந்துவிட்டேன்.:) ஆனால் நான் முக்கியமாக நினைத்தது, இருவரின் எக்ஸ்பிரஸன்ஸ்தான்...பாலாவின் ஃபோட்டோவுக்கான சிரிப்பும், கேமராவைப் பார்த்து ‘என்னவோ ‘ எனச் சற்றே மிரளும் யாழினியின் எக்ஸ்பிரஸனும்தான்... அதை முக்கியமாகப் பதிவாக்க நினைத்தேன். பரவாயில்லை. ஓரளவுக்குக் கொண்டுவந்துவிட்டேன் என நினைக்கிறேன்....
இப்படத்தில் எனது சிரமங்கள்....முதலாவது ஒரே போர்ட்ரெய்ட்டில் இரண்டு முகங்கள்... இரண்டாவது வழக்கமாக வரைவதைவிடப் பெரியசைஸ் A2 size( 59x42 cm) ...easel இல் வைத்து வரைகையில், கை, தோள் வலி பின்னிவிட்டது.
பென்சிலும் கரைந்துவிட்டது... முடிவில் பார்க்கையில் ஒரு சிறு திருப்தி...
பார்வைக்கும், ரசிப்புக்கும் நன்றி...
பெரிய சைஸ் என்பதால், ஸ்கேன் செய்ய முடியவில்லை. என் மொபைல்கேமராவில் படமெடுத்துப் போட்டிருக்கிறேன்.மன்னிக்கவும்....
8b and EE steadler pencil....


அல்சூர் ஏரி-07-08-11-பெங்களூர்

   என்ன க்ளைமேட்யா இன்னைக்கு...! காலையில வண்டில போறப்பவே தூக்கம் சொக்குது. அதைக் கட்டுப்படுத்திட்டு அல்சூர் லேக் போனேன்.அந்த ஏரி பேரும் அல்சூர் லேக்.ஏரியா பேரும் அல்சூர் லேக்.இன்னைக்கு பென்சில் ஜாம் ஏரியைச் சுற்றியிருக்கும் பூங்காவில்தான். அங்க போகலாம்னு ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரித்தேன், ‘அல்சூர் லேக் எங்க இருக்கு?’,  “இதான் சார்”..’இல்லங்க..அல்சூர் லேக்கேதான் போகணும்’... கொஞ்சம் முறைத்தபடி,’இதான்’ என்றவரிடம்....கொஞ்சம் கெஞ்சும் தோரணையில், ‘மே லேக் அந்தர் சே ஜானா ச்சாஹியே’ன்னு குச் குச் இந்தி மே போல்தியா...கை, காலெல்லாம் ஆட்டி வேறு காண்பித்ததில், ஒரு வழிகாட்டினார்... நன்றி...

  ஒரு வழியாக உள்ளே சென்றால் ஏகப்பட்ட அதிர்ச்சிகள்... பார்க்கிங் ஃபீஸ் இல்லை.இது இன்ப அதிர்ச்சி. நுழைவுக் கட்டணம் இல்லை.இரண்டாவது இன்ப அதிர்ச்சி.அவ்வளவே...அடுத்து எல்லாம் துன்ப அதிர்ச்சிகள்தான்...
காலையிலேயே அப்படியொரு குளிர்காற்று.20 கிமீ வண்டியில் போனது எல்லாம் சேர்ந்து கொண்டு,இயற்கை உபாதை நம்பர் ஒன்றைத் தூண்டிவிட்டது. சரி போகலாம்னு கழிவறை தேடினால், பூட்டி வச்சிருக்கானுங்க...அப்புறம் வெளிய வந்து எதிர்த்தாற்போல ‘ரெட்கிராஸ்’ மருத்துவமனை சென்று கழித்துவிட்டு வந்தேன்.அதை முடிச்சாத்தான,அடுத்தடுத்த வேலைகளை ஃப்ரீயா பார்க்கலாம்...:)

    எவ்வாரமும் இல்லாத அளவு இன்று அதிகமான பென்சில்ஜாம்மர்ஸ்.நிறைய புதியவர்கள்.அறிமுகம் செய்துகொள்வதற்கே அரைமணிநேரமாயிற்று. அதுக்கப்புறம் எல்லார் பேரும் மறந்துடுச்சு(பொண்ணுங்க பேர்கூட மறந்துடுச்சுன்னா பாருங்களேன்...) அடிக்கடி பென்சில், பால்பாயிண்ட் பென் மட்டும் ஸ்கெட்ச் செய்வதால் இம்முறை வாட்டர்கலரைக் கையாள முடிவு செய்தேன்...
  கம்ஃபர்டபிள் ஜோன்ல சுகமா இருக்கிறதைவிட, அன்கம்பர்டபிள் ஜோன்ல இஷ்டப்பட்டு கஷ்டப்படலாம்னு ஒரு மகான்(நான் தான்) சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு வரைய ஆரம்பிச்சேன்.
  பத்து நிமிசத்துக்கொரு தரம் வானிலை மாறுது. நான் பார்க்கும் மரங்கள், அடிக்கடி அனைத்துப் பச்சைகளையும் காட்டிக் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது.
  புதுசா ஒரு பிரஷ் நேத்துத்தான் வாங்கினேன். இம்போர்ட்டட் பிரஷ்( இந்திய பிரஷ்கள், உயிரினங்களின் முடி கொண்டு தயாரிக்கப்படாமல், சிந்தெடிக் இழையால் தயாரிக்கப்படுவதால், அவற்றின் தரம், ரிலையபிளிட்டி குறைவு. இம்போர்ட்டட் பிரஷ் என்பதால், அவற்றின் நீர் கொள்ளும் அளவும், நிறமிகள் பிடிக்கும் தன்மையும் அதிகம்).ஒரு பிரஷ் விலை மட்டும் ரூ 500 ஒன்லி...

   இந்த ஒரு பிரஷை வச்சே கீழே இருக்க முழுப்படமும் 95 சதம் முடித்தேன். பெரிய ’ஏரி’யா முதற்கொண்டு, சிறிய இடம் வரை இதை அழகாக உபயோகப்படுத்தலாம். இன்றைய படம் ஒரு பயிற்சி மாதிரிதான்.பிரஷைக் கையாள்வதற்கு அட்டகாசமாக இருந்தது. படம் வரைய ரொம்ப ‘தின்’ நா இருக்க ஹேண்ட்மேட் ஷீட் எடுத்தது என் தவறு. இல்லையேல் நன்றாக வந்திருக்கும். அடிக்கிற காத்தில், அம்மி முதல் ஆண்டி வரை பறக்கையில் நான் வைத்திருக்கும் ஷீட் எம்மாத்திரம். க்ளிப்பும் எடுத்துப்போகவில்லை. இதைச் சமாளிப்பதற்கே நேரம் சரியாகிவிட்டது.
  தண்ணீர் ஊற்றிவைக்க சின்ன டப்பா எடுத்துப்போகவில்லை. அங்கு இருக்கும் கேண்டீனில் ஒரு பிளாஸ்டிக் கப் கொடுப்பான்னா, அது மட்டும் முடியாது. எண்ணிக்கை இருக்குதுங்கிறான். சரி ஒரு காஃபி வாங்கிட்டு, அதைக் கழுவி அப்புறம் அதை உபயோகித்தேன்.

    முடிவு திருப்தி தராவிட்டாலும், முயற்சியளவில் திருப்தியளித்த படம்...
ஊர் சுற்றிவிட்டு, மழையின் முதல்துளியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.பார்வைக்கும், ரசிப்புக்கும் நன்றிகள்....
    

Thursday, August 4, 2011

நண்பேன்டா....ரசிகேன்டா...

    கடந்த ஒரு வருடமாக என்னுடன் அலுவலகத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருப்பவன் என் நண்பன் சுரேஷ்...(என் மொக்கைகளைச் சகித்துக் கொண்டிருப்பவன்) எனது ஓவியங்களுக்கு நல்ல ரசிகன். மிகச் சரியாக கிரிட்டிசைஸ் பண்ணுவான். தேவைப்படும் நேரங்களில் என்கரேஜூம் செய்வான்.சமீப காலமாக ‘நீ கலைஞன்டா’ எனப் பாராட்டுகிறான்(இல்லை கலாய்க்கிறான்)....

    நீண்ட நாட்களாக அவனது உருவப்படம் வரைந்துதரச்சொல்லியிருந்தான். இரு நாட்களுக்கு முன் வீட்டில் சிறுவிருந்து வைத்தேன். விருந்தின் முடிவில் அவனை அமரவைத்து, லைவ்வாக பேசிக் ஸ்கெட்ச் செய்தேன் ஐந்து நிமிடத்தில். பின் இன்று ஃபோட்டோவை வைத்துப் படத்தை மெருகேற்றினேன். 8B and EE steadler pencils in cartridge paper. சற்றுப் பெரிய படம்தான்...திருப்தி யில்லை. அடுத்த முறை இன்னும் சிறப்பாகச் செய்துவிடலாம்...
இன்னொரு பெரிய போர்ட்ரெய்ட் 80 சதம் முடிந்து பெண்டிங்கில் ஒருவாரமாகக் கிடக்கிறது. இந்த வீகெண்டில் முடிக்க வேண்டும்...
size : A2(59 x 42 cm)