Sunday, August 7, 2011

அல்சூர் ஏரி-07-08-11-பெங்களூர்

   என்ன க்ளைமேட்யா இன்னைக்கு...! காலையில வண்டில போறப்பவே தூக்கம் சொக்குது. அதைக் கட்டுப்படுத்திட்டு அல்சூர் லேக் போனேன்.அந்த ஏரி பேரும் அல்சூர் லேக்.ஏரியா பேரும் அல்சூர் லேக்.இன்னைக்கு பென்சில் ஜாம் ஏரியைச் சுற்றியிருக்கும் பூங்காவில்தான். அங்க போகலாம்னு ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரித்தேன், ‘அல்சூர் லேக் எங்க இருக்கு?’,  “இதான் சார்”..’இல்லங்க..அல்சூர் லேக்கேதான் போகணும்’... கொஞ்சம் முறைத்தபடி,’இதான்’ என்றவரிடம்....கொஞ்சம் கெஞ்சும் தோரணையில், ‘மே லேக் அந்தர் சே ஜானா ச்சாஹியே’ன்னு குச் குச் இந்தி மே போல்தியா...கை, காலெல்லாம் ஆட்டி வேறு காண்பித்ததில், ஒரு வழிகாட்டினார்... நன்றி...

  ஒரு வழியாக உள்ளே சென்றால் ஏகப்பட்ட அதிர்ச்சிகள்... பார்க்கிங் ஃபீஸ் இல்லை.இது இன்ப அதிர்ச்சி. நுழைவுக் கட்டணம் இல்லை.இரண்டாவது இன்ப அதிர்ச்சி.அவ்வளவே...அடுத்து எல்லாம் துன்ப அதிர்ச்சிகள்தான்...
காலையிலேயே அப்படியொரு குளிர்காற்று.20 கிமீ வண்டியில் போனது எல்லாம் சேர்ந்து கொண்டு,இயற்கை உபாதை நம்பர் ஒன்றைத் தூண்டிவிட்டது. சரி போகலாம்னு கழிவறை தேடினால், பூட்டி வச்சிருக்கானுங்க...அப்புறம் வெளிய வந்து எதிர்த்தாற்போல ‘ரெட்கிராஸ்’ மருத்துவமனை சென்று கழித்துவிட்டு வந்தேன்.அதை முடிச்சாத்தான,அடுத்தடுத்த வேலைகளை ஃப்ரீயா பார்க்கலாம்...:)

    எவ்வாரமும் இல்லாத அளவு இன்று அதிகமான பென்சில்ஜாம்மர்ஸ்.நிறைய புதியவர்கள்.அறிமுகம் செய்துகொள்வதற்கே அரைமணிநேரமாயிற்று. அதுக்கப்புறம் எல்லார் பேரும் மறந்துடுச்சு(பொண்ணுங்க பேர்கூட மறந்துடுச்சுன்னா பாருங்களேன்...) அடிக்கடி பென்சில், பால்பாயிண்ட் பென் மட்டும் ஸ்கெட்ச் செய்வதால் இம்முறை வாட்டர்கலரைக் கையாள முடிவு செய்தேன்...
  கம்ஃபர்டபிள் ஜோன்ல சுகமா இருக்கிறதைவிட, அன்கம்பர்டபிள் ஜோன்ல இஷ்டப்பட்டு கஷ்டப்படலாம்னு ஒரு மகான்(நான் தான்) சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு வரைய ஆரம்பிச்சேன்.
  பத்து நிமிசத்துக்கொரு தரம் வானிலை மாறுது. நான் பார்க்கும் மரங்கள், அடிக்கடி அனைத்துப் பச்சைகளையும் காட்டிக் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது.
  புதுசா ஒரு பிரஷ் நேத்துத்தான் வாங்கினேன். இம்போர்ட்டட் பிரஷ்( இந்திய பிரஷ்கள், உயிரினங்களின் முடி கொண்டு தயாரிக்கப்படாமல், சிந்தெடிக் இழையால் தயாரிக்கப்படுவதால், அவற்றின் தரம், ரிலையபிளிட்டி குறைவு. இம்போர்ட்டட் பிரஷ் என்பதால், அவற்றின் நீர் கொள்ளும் அளவும், நிறமிகள் பிடிக்கும் தன்மையும் அதிகம்).ஒரு பிரஷ் விலை மட்டும் ரூ 500 ஒன்லி...

   இந்த ஒரு பிரஷை வச்சே கீழே இருக்க முழுப்படமும் 95 சதம் முடித்தேன். பெரிய ’ஏரி’யா முதற்கொண்டு, சிறிய இடம் வரை இதை அழகாக உபயோகப்படுத்தலாம். இன்றைய படம் ஒரு பயிற்சி மாதிரிதான்.பிரஷைக் கையாள்வதற்கு அட்டகாசமாக இருந்தது. படம் வரைய ரொம்ப ‘தின்’ நா இருக்க ஹேண்ட்மேட் ஷீட் எடுத்தது என் தவறு. இல்லையேல் நன்றாக வந்திருக்கும். அடிக்கிற காத்தில், அம்மி முதல் ஆண்டி வரை பறக்கையில் நான் வைத்திருக்கும் ஷீட் எம்மாத்திரம். க்ளிப்பும் எடுத்துப்போகவில்லை. இதைச் சமாளிப்பதற்கே நேரம் சரியாகிவிட்டது.
  தண்ணீர் ஊற்றிவைக்க சின்ன டப்பா எடுத்துப்போகவில்லை. அங்கு இருக்கும் கேண்டீனில் ஒரு பிளாஸ்டிக் கப் கொடுப்பான்னா, அது மட்டும் முடியாது. எண்ணிக்கை இருக்குதுங்கிறான். சரி ஒரு காஃபி வாங்கிட்டு, அதைக் கழுவி அப்புறம் அதை உபயோகித்தேன்.

    முடிவு திருப்தி தராவிட்டாலும், முயற்சியளவில் திருப்தியளித்த படம்...
ஊர் சுற்றிவிட்டு, மழையின் முதல்துளியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.பார்வைக்கும், ரசிப்புக்கும் நன்றிகள்....
    

2 comments:

  1. நல்லா வந்திருக்கு படம். கணக்கற்ற தடவைகள் தாண்டிச் சென்றிருந்தாலும் அல்சூர் ஏரி போனதில்லை. படமெடுக்க என்றே போகணும் என நினைச்சுட்டே இருக்கேன்:)!

    ஆம் இன்று சரியான குளிர்.

    ReplyDelete
  2. நன்றி மேடம்....
    நீங்களும் பெங்களூரா? சந்தோஷம்...!
    ஏரி நல்லா இருக்கு மேடம். படமெடுத்துப் போடுங்க....!

    ReplyDelete