Friday, August 26, 2011

இளையராஜாவுடன் எனது ஓய்வுநேரம்-loose water color attempt

  ஒரு பெரிய படம் சமீபத்துலதான் முடிச்சேன். அடுத்த பெரிய படம் ஆரம்பிச்சாச்சு. பென்சில் ஒர்க்குன்னா ரொம்ப அதிக நேரம் எடுக்கும். அதையே பண்ணிக்கொண்டிருந்தால் எப்படி?
   பென்சில் ஜாம்மர்ஸில் , வாட்டர்கலரை  லூசாகப் பயன்படுத்தி வரையச் சொல்லி பயிற்சி வந்தது. நான்கைந்து நாட்களாக அரித்துக் கொண்டிருந்தது. லேண்ட்ஸ்கேப்பை விட போர்ட்ரெய்ட்தான் ஈசி. அதுவும் பிரபலமான ஒருவர் என்றால் இன்னும் ஆர்வமாக இருக்கும். நம்ம பரிசோதனை முயற்சிகளுக்கு இருக்கவே இருக்கார் இளையராஜா...
வாட்டர்கலர் கண்ட்ரோல் பண்றது கஷ்டம். அதோட ஃப்லோவை கண்ட்ரோல் இல்லாம வரையறதுதான் சோதனை. அது இன்னும் கஷ்டம். ப்ளான்னிங் முக்கியம்.வெள்ளை நிறம் பயன்படுத்தக்கூடாது என்பதால் முதலிலேயே அதற்கான இடம் விட்டுவிட வேண்டும். மனதிற்குள்ளேயே எங்கு டார்க், எங்கு ஒயிட் என முடிவுசெய்துவிட்டு, முடிந்தால் பென்சிலில் சிறு மார்க்குகள் இட்டுவிடவேண்டும்.
பென்சில் ஒர்க்+ திட்டமிடல் அரைமணி நேரம் ஆனது.
அதன்பின் பெயிண்டிங் 20 நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டது. இந்த முறையில் உருவப்படம் வரைய வேண்டுமென்பது நெடுநாள் ஆசை.
அவ்வளவு திருப்தி தரவில்லை எனினும் முயற்சி ஓகேதான்...
பார்த்தமைக்கும், ரசித்தமைக்கும் நன்றிகள்...

இன்னும் ஒருவருக்கு நன்றி சொல்லவேண்டும். அது ரவிஷங்கர் சார்தான். அவரின் சமீபத்திய பதிவான ‘இளையராஜாவின் ட்ரம்பெட்’ பதிவின் பாடல்கள் பின்புலமாக ஒலிக்க உருவான ஓவியம் இது...
நன்றி சார்...!நன்றி இளையராஜா சார்!


5 comments:

  1. \\நம்ம பரிசோதனை முயற்சிகளுக்கு இருக்கவே இருக்கார் இளையராஜா...\\

    தெய்வத்தை விட்ட நமக்கு யாரு இருக்கா பரிசோதனை பண்ண...;-)) நீ கலக்கு மாப்பி ;-)

    நல்ல முயற்சி ;-) வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  2. நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமை பரணி!
    நலமா?

    ReplyDelete
  4. @கோபிநாத்...
    நன்றி மாப்பி...!

    @சே.குமார்...
    மிக்க நன்றி தோழரே...!

    ReplyDelete
  5. @ஜெகநாதன்...
    நண்பரே நன்றி...!ஆளையே காண முடிவதில்லை. புது அலுவலகத்தில் ஆணிகள் அதிகமோ...???

    ReplyDelete