Tuesday, August 23, 2011

வாருங்கள் வரையலாம்...ஓவிய ஆர்வம் உள்ளவர்களுக்கு....

     ஆ...ஊன்னா கூட்டம் கூட்டமாக் கெளம்பிடுறானுங்கய்யா... ஞாயிற்றுக்கிழமை வந்துட்டா முதல் வேலை வெளிய கிளம்புறதுதான். என்ன மாதிரி ஒரு சோம்பேறியைப் பார்க்கவே முடியாது.ஷாப்பிங் பிடிக்காது, ஊர் சுத்தப் பிடிக்காது, கோயிலுக்குப் போகப் பிடிக்காது, கூட்டமா இருக்கதால பண்டிகை நாட்கள்ல ஊருக்குப் போகக் கூடப் பிடிக்காது. ஆனாலும் என்ன பெரிய வேலை இருந்தாலும், எனது ஞாயிறுகள் பெங்களூரை எக்ஸ்புளோர் பண்ணக் கிளம்பிவிடுகின்றன. ஒரே காரணம் பென்சில்ஜாம் மீட்டிங்க்தான்.பெங்களூரில் இருக்கும் ஒவ்வொருவிதமான ஆர்டிஸ்டுகளும், (என்னை மாதிரி ஜூனியர் ஆர்டிஸ்டுகளும்தாங்க), பார்க்லயோ, ஏரியிலயோ, மியூசியத்துலயோ, காலைல 9 மணிக்குக் கூட ஆரம்பிச்சிடுவோம்...(நான் எப்பவும் 11 மணிக்குத்தான் போவேன் :)  ). யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. வந்தவுடன் பேப்பரோ, ஸ்கெட்ச் புக்கோ எடுத்து அவரவர் வேலையை ஆரம்பித்துவிடுவர். நான் நான்கு மாதங்களாகத்தான் ரெகுலராகச் சென்று வருகிறேன். ஒவ்வொருத்தரோட எக்ஸ்பீரியன்ஸ், அவங்க ஸ்டைல் எல்லாம் பகிர்ந்துக்குவாங்க. அரட்டை, காஃபி, சிகரெட் எல்லாம் உண்டு. நல்ல டிப்ஸ் கிடைக்கும்.
   பென்சில் ஜாம்மர்ஸோட மெயின் எய்ம், மரபு சார்ந்த ஓவிய வகைகள்தான். இதனை ஒழுங்காகப் பயிற்சியெடுத்தால், அப்ஸ்ட்ராக்ட் வகைகள் எளிதில் கைகூடும் என்பதும், எளிதாக இருக்கிறது என முதலிலேயே அப்ஸ்ட்ராக்ட் வகைகள் செய்வது சரியல்ல என்பதுவும் எண்ணங்கள்....
இங்க வரைய பெரிய ஆர்டிஸ்டாக இருக்கணும்னு அவசியமில்லை. பென்சிலும், பேப்பரும் இருந்தால்கூடப் போதும்....
இன்னொரு விஷயம், இங்கு ஆயில், அக்ரிலிக் வகையறாக்கள் அதிகம் விரும்பப் படுவதில்லை. அது எளிது என்பது எண்ணம். இருப்பதிலேயே, சவாலானதாகக் கருதப்படும் வாட்டர்கலர்தான் இங்கு எப்போதும் லைம்லைட். 8 மணி நேரம் உக்கார்ந்து உக்கார்ந்து டீட்டெயில்டா பென்சில் ஸ்கெட்ச் பண்ணாக்கூட , ‘just like that' நு போய்ட்டே இருப்பாங்க.... அரைமணி நேரத்துல அழகா water washes பண்ணியிருந்தா உச்சி மோந்துடுவாங்க....
 பெங்களூர்ல ஆரம்பிச்ச இந்த க்ளப், டெல்லியிலயும் இருக்கு. புனே, ஹைதராபாத்ல அப்பப்போ நடக்கும். போன வாரம் சென்னைல கூட ஒரு பொண்ணு இனிஷியேட் பண்ணிருக்கு. ஆனா யாரும் போகலைன்னு நினைக்கிறேன். இதைப் படிக்கிற சென்னை மக்கள்ஸ் அவங்களோ, இல்லை அவங்க நண்பர்களுக்கோ இதைப் பரிந்துரை செய்யுங்கள் அவர்களும் வளரட்டும், பென்சில் ஜாம்மர்ஸூம் வளரட்டும்....

நான் 6 மாசத்துக்கு முன்னாடி எப்பவோ வலையேத்துன படங்களையும், இப்ப சுடச்சுட போடுற படங்களையும் பார்த்தா, என் விரலின் நீட்டம் புரியும் :)

இது ஒரு விளம்பரப் பதிவல்ல. ஒரு பகிர்வு... பகிரவேண்டும் எனத்தோன்றினால் நீங்களும் ரீஷேர் செய்யுங்கள்...
குறிப்பு: பென்சில் ஜாம்மர்ஸில் இணையக் கட்டணம் இல்லை. இது ஒரு ஓவியத் தன்னார்வு வளர்ப்பு மையம்...
வாருங்கள் வரையலாம்.....


www.penciljammers.com

 




2 comments:

  1. நல்லா செய்யுங்க நண்பா, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. @D.Martin...
    மிக்க நன்றி சார்,,,!

    ReplyDelete