Saturday, July 2, 2011

நான் என்பது நீயல்லவோ....

     பென்சில் ஸ்கெட்ச்சிங்கில் ஓவராக ஷேட் கொடுத்துப் பழகிவிட்டது. பால்பாயிண்ட் பென்னில் போர்ட்ரெய்ட் வரையும் போது அதுபோலவே லைட்டாக ஷேட் கொடுத்து, டார்க்காக்குவது தொடர்கிறது. சமீபத்தில் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு வருகிறேன். கட்டிடங்கள் வரைகையில் கோடுகளுக்கும், க்ராஸ் ஹேட்சிங் லைன்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பழகிவருகிறேன். அதே பாணியில் இந்தப் படத்தையும் செய்துபார்த்தேன். மறுபடியும் உன் மூஞ்சிதானான்னு திட்டுறது தெரியுது. நட்பு ரீதியில் வரையச் சொன்ன நண்பர்களின் முகங்களை விட்டுவிட்டு இதை வரைந்திருக்கிறேன், ’கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனைல வய்யி’ன்ற கதையான்னு நினைக்கலாம்....
என்னங்க பண்றது. அதெல்லாம் நல்லா பெர்ஃபெக்டா வரையணும்னு நினைச்சே தள்ளிப் போயிடுது.இந்த மாசத்துக்குள்ள ரெண்டு கமிட்மெண்ட் முடிச்சே ஆகணும்னு நினைச்சிருக்கேன். அதுல ஒண்ணு தம்பதிகள்.(ஓப்பன்ஸ்டேட்மெண்ட் விட்டா, பண்ணிடலாம்னு எண்ணம்தான்) :)

         சுத்தமாக வரையவே மூடு இல்லாத சமயத்தில், இதை வரைய ஆரம்பித்தேன். பென்சில் ஜாம்மர் நண்பர் முரளியின் புகைப்படக் கைவண்ணம்தான் என்னை வரையத் தூண்டியது.
 

      இன்னுமொரு சிறப்பு... இது நான் புதிதாக வாங்கிய CANON PIXMA MP258 ஆல் இன் ஒன் (ப்ரிண்ட், ஸ்கேன், காப்பியர்) மூலம் ஸ்கேன் செய்து தரமாகத் தரவேற்றப் பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன்....:)

 
   ஸ்கேன்னர் வாங்க நெட்டில் தேடிப்பார்த்தால் உருப்படியான விலைவிபரம் கிடைக்கவில்லை. டோல் ஃப்ரீ நம்பர் ஃபோன் செய்து பார்த்தாலும் தேறவில்லை.எனக்கு ஸ்கேன்னர், ப்ரிண்டர் ஸ்பெசிஃபிகேஷன் பத்தி எதுவும் தெரியாது. என் பாஸிடம் கேட்டேன்.(அவர் ஆஃபீஸில் டெக்னிக்கல் விஷயங்களைவிட வீட்டு விஷயம், ஷாப்பிங்விடயங்களை அதிகம் பேசுவதில் ஆர்வமுள்ளவர் :) ). அவரி ஆலோசனை ‘நேரா SP road (நம்மூர் ரிச்சி ஸ்ட்ரீட் மாதிரி). அங்க போய் மூணு நாலு கடைல விலை விசாரி. கம்மியாச் சொல்ற இடத்துல வாங்கிடு”. இதையே பாலமந்திரமா எடுத்துட்டு, நேரா எஸ்பி ரோட் போனேன். ஒரு சைடுதான் பார்க்கிங் போல. நுழைஞ்ச உடன் ஒரு ஹெச் பி ப்ராடக்ட் கடை இருந்தது. வண்டியை ஆப்போசிட் சைட்ல பார்க் பண்ணிட்டு விலை விசாரிச்சேன். HP 1050 விலை 3150+ டாக்ஸ் நு சொன்னான். சரி இன்னும் அடுத்த கடைகள் கேட்கலாம்னு போனேன். ஏறக்குறைய எல்லாக் கடையிலயும் அதே ரேட்டுதான் சொன்னாங்க.(50 ரூபாய் கூடக் குறைய). சரி இங்க எங்க விசாரிச்சு வாங்கினாலும் 100 200 தான் சேமிக்கமுடியும். இதுக்கு முதக் கேட்ட கடையிலயே போய் வாங்கலாம்னு போனா, வண்டியைக் காணோம்.5 செக்கண்டுக்குள்ள மனசுக்குள்ள இருந்த ‘பொல்லாதவன்’ தனுஷ் வெளிய வர ஆரம்பிச்சான். ஏன்னா இந்த வண்டி(பேஸ்ஸன் ப்ரோ) வாங்கினதுக்கப்புறம்தான் என்கிட்ட சில விஷயங்கள் வந்து சேர்ந்தது(டேங்க் பேக், சீட் கவர், இண்டிகேட்டர் பஸ்ஸர் இப்டின்னு லிஸ்டு போகும்). நான் ரொம்பக் கொடூரமா மாறுறதுக்குள்ள பக்கத்துல இருந்தவர், ‘உன் வண்டி அந்தா போகுது’ன்னு சொன்னாரு... போய்ப் பார்த்தா, Recovery van ல என் வண்டியும் பல்லக்குல ஏறின மாதிரி நின்னுக்கிட்டு இருந்துச்சு. அந்த வேன்ல இருந்த ஒருத்தன்கிட்ட பேசிப்பார்த்து 500 ரூபாயை, 250 ஆக் குறைச்சு டீலை முடிச்சிட்டு வண்டியை எடுத்துட்டு வந்தேன்.(பார்க்கிங்க்ல தரையில நிக்கிற வண்டியை எடுக்கவே எனக்கு 5 நிமிஷம் ஆகும். பாவிங்க இவிங்க அசால்ட்ட 5 செக்கண்ட்ல வண்டியை வேன்ல இருந்து இறக்கிக் கொடுத்துட்டாய்ங்க.க்ராதகர்கள்)

         திரும்ப அந்தக் கடைக்குப் போக முடியாது. ஏன்னா ஒன் வே. ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல அநாவசியச் செலவு பண்ணக்கூடாதுன்றது என் கொள்கை(தினம் அதை மீறிடுவேன்றது அடுத்த கொள்கை) பக்கத்துல இருந்த இன்னொரு கடையில விசாரிச்சு கிட்டத்தட்ட இதே ரேட்டுக்கு கேனான் வாங்கினேன். கடைல இருந்த பையன்கிட்ட இதை வண்டில கட்ட ஹெல்ப் பண்ணுடான்னு கேட்டேன். அவன் எடுத்துட்டு வந்தான் பாருங்க கயிறு, சின்னப்பையங்க கட்டுற அண்ணாக் கயிறு மாதிரி, அதில கட்டினான், வண்டியை ஸ்டேண்ட் விட்டு எடுக்கிறப்பவே, கேனான் சரிய ஆரம்பிச்சது. மனசுக்குள்ளயே திட்டுட்டு அதைக் கழட்டிட்டேன். நான் ஏற்கெனவே கிளம்புறப்பவே கொடி கட்டுற நைலான் கயிறு ரெண்டு வாங்கிட்டுப் போயிருந்தேன். தனி ஆளா நானே ஸ்கேன்னரை வண்டியோட சுத்திக் கட்டி, மூணு முடிச்சுப் போட்டேன்(ஹி..ஹி... எல்லாம் ஒரு ப்ராக்டிஸுக்காகத்தான்)
இருபது கிலோமீட்டர் தாங்கணும்ல....

    அடுத்து புதுக் குழப்பம். வந்த வழி ஓகே. போற வழி எப்படி??? விசாரிச்சு குத்துமதிப்பா ஓட்டிட்டுப் போனேன். பின்பாரம், வழி தெரியாமைன்னு குழப்பத்துல போனவன், சிக்னல்ல மஞ்சள் விழுந்தும்  நிக்காம க்ராஸ்பண்ணிட்டேன். கப்புன்னு புடிச்சிட்டான்யா... அங்க இரு 200 அழுதேன்.(500 ரூபாய் கொடுத்தா அழகா 200 மட்டும் எடுத்துட்டு சேஞ்ச் கொடுக்கிறான்யா போலீசு.) அதோட வழக்கம்போல அட்ரஸ் அவர்கிட்டயே கேட்டேன். குழப்பியடிக்காம வழி சொன்னாரு. வந்துட்டேன்....
ஓவர் சுய புராணமோ.... என்னங்க பண்றது...எழுதிட்டேன். இனி உங்க தலையெழுத்து....:)))))

6 comments:

  1. ரொம்பத்தான் கஸ்டப்படுறீங்க... வாழ்த்தக்கள்

    ReplyDelete
  2. படம் நல்லா வந்திருக்கு... எஃஸ்ற்ற 450 போச்சே.. பாஸ்கிட்டயா கேக்க முடியும்... சரி... எல்லாம் நன்மைக்கே...

    ReplyDelete
  3. படமெல்லாம் ஓகே.

    ஆனா உங்க ராசியான வண்டி வந்தப்புறம் நீங்கள் அடைந்த விஷயங்கள்தான் உண்மையில் அட்டகாசம். :-))))))

    ReplyDelete
  4. ஏலேய் 250+200 மொய் எழுதிட்டு அதை வேற பதிவு போடுறியாக்கும்...படத்துக்காக தப்பிச்சே நீ ;))

    ReplyDelete
  5. @விசரன்...
    நன்றி விசரன்...

    @சே.குமார்...
    நன்றி நண்பரே...எனக்கு இதுக்கு முன்னாடி எப்பவாவது 45 ரூபாய் எக்ஸ்ட்ரா கிடைச்சிருக்கும். அதான் இப்டி 450 ரூபாய் போச்சு. என் ராசி அப்படி :)

    ReplyDelete
  6. @ஆதிமூலகிருஷ்ணன்...
    வெகுநாள் கழித்து தங்கள் வருகை. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே...!


    @கோபி...
    :)))))) இதெல்லாம் ஜகஜம்...:)

    ReplyDelete