Thursday, September 22, 2011

நக்மாவும் சிக்மாவும்

         நக்மாவைப் பத்திமட்டுமே தெரிஞ்ச என்னை மாதிரி ஆளுங்களுக்காக சிக்மாவைப் பத்தியும் சொல்லிக் குடுத்தாங்க போனவாரம்.ஒன்பதரைக்கு ஆரம்பிச்ச ட்ரைனிங் ஆறு மணிக்குத்தான் முடிஞ்சது.ஒரு நா, ரெண்டு நா இல்ல அஞ்சுநாளக்கி.அதுல அண்ணன் கொஞ்சம் அஃபீசியலான பெர்சனல் வேல இருந்ததால ரெண்டுநாளக் கபளீகரம் பண்ணிட்டேன்.

         ட்ரைனர் அமெரிக்கக்காரர். நம்ம நாட்டாமைக கைல எப்பவும் சொம்பு வச்சிருக்க மாதிரி இவர் கைல ஒரு பெரிய கப்போஃபிளாஸ்க்(பெரிய கப்பு மாதிரியும், சின்ன ஃப்ளாஸ்க் மாதிரியும் இருந்ததால இந்தப் பேர் வச்சேன்) எப்பவுமே வச்சிட்டிருந்தார்.அதுக்குள்ள காபிதான் இருக்குன்னு அவர் முன்னாடியே சொல்லிட்டதால, என்னோட விபரீதக் கற்பனையெல்லாம் ஓரங்கட்டிட்டேன். பத்து நிமிஷத்துக்கொரு தடவை அந்த கப்போஃப்ளாஸ்க்குக்கு முத்தம் கொடுத்துட்டே இருந்தாரு.(அட அதுக்குள்ள எவ்வளவுதான் குடிச்சாரோ தெரியலை).


        இதுக்கு முன்னாடி எனக்கு சிக்மாவைப் பத்தித் தெரிஞ்சது எல்லாம் ஒரு பெரிய மய... இல்லை பெரிய மலை....அதாங்க BELL CURVE தான்.அதையே கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சு, உள்ள பூந்து வூடுகட்டி அடிக்க ஆரம்பிச்சாரு.ஒருச்சாமி, ரெண்டுச்சாமி,மூணுச்சாமி......ஆறுச்சாமி மாதிரி... ஆறு சிக்மா (SIX SIGMA) தான் குறிக்கோள். அதை அடைஞ்சிட்டோம்னா வீடு பேறு அடைஞ்சிடு.... இல்ல நல்ல குவாலிட்டியான ப்ராடக்ட் கொடுக்கலாமாம். எனக்கு இதில் அவ்வளவாக நம்பிக்கை இருந்ததில்லை.ட்ரைனிங் கலந்துக்கிட்ட பிறகு கொஞ்சம் தெளிவாயிருந்தேன்.(கொசுறு: இதுல பயிற்சியெடுத்துக்கிட்டா ஓடு, செங்கல் எதுவும் ஒடைக்காமயே ப்ளாக்பெல்ட் வாங்கிடலாமாம், அரசியல்வாதிங்க டாக்டராகுற மாதிரி)

    நாம எப்பவும் உக்காந்துருக்கது கடைசி பெஞ்சுலதான். அப்பத்தான் ஏர்டெல்காரன் ஃபோன் பண்ணி காலர்ட்யூன் செட் பண்றதுக்குக் கூப்பிட்டாக்கூட ஈஸியா எழுந்து போயி டீ, காபி, டிபன் சாப்பிட வசதியாயிருக்கும்.(சாப்பிட்டு வந்ததும் கொஞ்சம் அசதியாவுமிருக்கும்).இதுக்கு முன்னாடி GD&T ட்ரைனிங்ல எல்லாம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரேக் வரும். இவரு என்னடான்னா காலையில ஆரம்பிச்சா,மதியம் ஒரு மணி ஆனாக்கூட ப்ரேக் விடமாட்டேங்குறாரு. அதனால பதினொரு மணிக்கு எவனாச்சும் ‘ப்ரேக்’னு ஆரம்பிப்பான். இவரும் நம்ம ஊர் மினிபஸ் கிளம்புறமாதிரி ‘ப்ரேக்’,’ப்ரேக்’னு  சொல்லிக்கிட்டே ஒரு அரைமணிநேரங்கழிச்சு ப்ரேக் தருவாரு. பத்துநிமிஷம்தான்.


     ஒரு தடவை பேப்பர்க்ளிப்பைக் காட்டி இத வேற எப்டில்லாம் உபயோகப்படுத்தலாம்னு வர்ற ஐடியாக்களைச் சொல்லச் சொன்னாரு. ரெண்டுநிமிஷம்தான் டைம்.எனக்கு வந்தது அரசின் கு.க திட்டம் போல ரெண்டே ரெண்டு. ஒண்ணு, அத ஹேர்கிளிப்பா(எவ்ளோ ரொமாண்டிக்கான ஆளு நானு) யூஸ் பண்ணலாம், இன்னொண்ணு, அத நேராக்கி, ஹோட்டல்ல பில் சொருகுற கம்பி மாதிரி யூஸ் பண்ணலாம்(காரியத்துல கண்ணு). அதுக்கு மேல ம்ஹூம். நம்ம கூட்டத்துல ஒருத்தர் எந்திருச்சாரு. பன்னெண்டு ஐடியா கொடுத்தாரு.(உபதகவல்:அவருக்கு போன வருஷமே ஐடியாமணி என நான் பெயர் வைத்து,என் நண்பர்களுக்குள் அவரைக் குறிக்கும்போதெல்லாம் ‘மணி’ எனத்தான் சொல்லிக்கொள்வோம்).ஒண்ணுமில்ல...நான் கொடுத்த ரெண்டாவது ஐடியாவை மட்டும் அவர் பிரிச்சு மேஞ்சிருக்காரு. பேப்பர்க்ளிப்பை கம்பி மாதிரி நீட்டி அதுக்கப்புறம், பேப்பர் குத்தலாம்,காது கொடயலாம், பல்லு குத்தலாம்,முதுகு சொறியலாம் ரேஞ்சுக்குக் கொடுத்தாரு.ஐடியாமணின்னு நான் வச்ச பேரு சரிதானே....

நாம ப்ராபளம் சால்வ் பண்றதுக்கே நாலைஞ்சு வழிகள் சொன்னாரு. ஒண்ணு நார்மல் பிரெய்ன் ஸ்டோர்ம், இன்னொண்ணு, ரிவர்ஸ்னு ஏதோ சொன்னாரு மறந்துடுச்சு, இன்னும் ரெண்டு பேரு சொன்னாருங்கோ.தமிழ்லன்னா ஈஸியா ஞாபகம் வச்சிருப்பேன். அவர் அமெரிக்கர் வேற, இடுப்புல சப் டைட்டில் இல்லாமப் பேசுறதால குத்துமதிப்பா அவதார் படம் பாக்குற எஃபக்ட்லதான் இருந்தேன். அவர் கொடுத்த ஒரு ப்ராப்ளம் ,’ஸ்பீடோ மீட்டர் இல்லாம வண்டில வேகம் எப்டிக் கண்டுபிடிக்கிறதுங்கிறது’. ஆக்சுவலா நோக்கம் என்னன்னா, சொல்யூசன் பத்திக் கவலைப்படக்கூடாது. ஐடியா ஜெனரேட் பண்றதுதான் முக்கியம். இப்ப எல்லோருமே கிட்டத்தட்ட ஐடியாமணி ரேஞ்சுக்குப் போயிட்டோம்.அரைமணி நேரங்கழிச்சு ஒவ்வொரு டீமும் ஐடியா கொடுத்தது.
      -ஹேண்டில்பார்ல ஒரு குச்சி ஆடுற மாதிரி ஃபிக்ஸ் பண்ணிக்கணும், அது எவ்வளவு நேரம் ஆடுது...அப்டின்னு கால்மணி நேரம் ஒரு ஐடியா...

    -ஸ்பீடோ மீட்டர் இருக்க இடத்தை ஆஷ்ட்ரேவா யூஸ் பண்ணலாம்னு  ஒரு ஐடியா...யோவ் முதல்ல ஸ்பீடோ மீட்டருக்கு ரீப்ளேஸ்மெண்ட் ஐடியாவைச் சொல்லுய்யான்னு சொல்லிட்டாரு ட்ரைனர்.ஆஸ்காரை அவங்ககிட்ட இருந்து பிடிங்கிட்ட ஃபீலிங்க்ல அமைதியாச்சு டீம்

   -வண்டிச் சக்கரத்துல ஒரு மேக்னடிக் வீல் பண்ணனும்(அதான் ஏற்கெனவே வச்சிருக்காங்களேய்யா....)அதுல இருந்து டேஷ்போர்டுக்கு வயர் இழுக்காம, சிக்னலை ட்ரான்ஸ்ஃபர் பண்ணி ஒரு ஈசியூ வச்சின்னு ரொம்ப எலக்ட்ரானிக்ஸா போயிட்டிருந்தது ஒரு டீமோட ஐடியா...
    இன்னும் ரெண்டு டீம் கொடுத்த ஐடியா டெக்னிக்கலாவும், சாத்தியப்படக்கூடிய வகையிலும் இருந்தது.

     ஆனா எல்லோருக்கும் பிடிச்ச ஒரு சூப்பர் ஐடியாவும் ஒரு டீம் கொடுத்துச்சு.
அவங்களோட ஐடியா,’ வண்டியை எடுத்துக்கிட்டு, ஸ்பீடோ மீட்டர் இல்லாம நேரா ஸ்பீடா மாரத்தள்ளி வரைக்கும் போகணும்.’ அப்புறம், ‘போலீஸ்காரர், வண்டி ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரோட வண்டியோட ஸ்பீட்  எழுதித் தருவாரு’....
  இதுவும் நல்ல ஐடியாதானே...
 

        நல்ல ட்ரைனிங்க்தான்.இப்ப எல்லாம் மறந்துடுச்சி . மறுபடியும் மெட்டீரியல்ஸ் ரெஃப்ரஷ் பண்ணனும். அப்ளை பண்ணிப்பார்த்தாத்தான் இன்னும் பலன் கிடைக்கும்....


   

6 comments:

  1. கார்டூன்ஸ் அருமை...
    நக்மாவும் சிக்மாவும் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  2. நல்ல வர்ணனை. அமேரிக்காவில் எல்லோரும் காலையில் காபி கப்போடா தான் அலைவார்கள். மதியம் ஆனால் அது கோக்கு அல்லது பெப்சி கப்பா மாறிடும். இந்த அளவுக்கு சக்கரையை உள்ள தள்ளினா நமக்கெல்லாம் நாற்பது வயசுலேயே சக்கரை வியாதி காரண்டி.
    படங்களும் நன்றாக உள்ளன.

    ReplyDelete
  3. நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க.சிறப்பா வந்திருக்கு.

    ReplyDelete
  4. நன்றி சே.குமார்....
    //நக்மாவும் சிக்மாவும் நல்லாயிருக்கு//
    இதில் இலக்கணப்பிழை உள்ளது...
    நக்மா நல்லாயிருந்தது....என வந்திருக்க வேண்டும்...:)

    மீனாட்சிசுந்தரம்...
    நன்றி சார்....வருகைக்கும், வாழ்த்துக்கும்...

    ReplyDelete
  5. கே.ரவிஷங்கர்...
    மிக்கநன்றி சார்.... ரொம்ப நாள் கழிச்சு கொஞ்சம் நகைச்சுவை ட்ரை பண்ணேன்... நன்றி சார்...!

    ReplyDelete