Tuesday, December 8, 2009

பிடிக்குது...பிடிக்கலை...

       தமிழ் வலையுலகில் பெரும்பாலும் அனைவராலும் எழுதப்பட்ட பிடித்த,பிடிக்காத 10 தொடர்விளையாட்டுக்கு ஷக்திப்ரபா அழைத்திருந்தார்கள்.அவர்கள் அழைப்பினை ஏற்று இப்பதிவு....

1.எழுத்தாளர்
பிடித்தவர் :எஸ்.இராமகிருஷ்ணன்
பிடிக்காதவர் :ராஜேஷ்குமார்

2.கவிஞர்
பிடித்தவர் :முகுந்த் நாகராஜன்

பிடிக்காதவர் :புரியாமல் எழுதுபவர்கள் எல்லாரும்

3.இயக்குனர்
பிடித்தவர் : பாலா
பிடிக்காதவர் :ஷங்கர்

4.குணம்
பிடித்தது :அன்பை வழங்குதல்

பிடிக்காதது :அதிகாரம் செய்தல்,பொய்மை பாராட்டுவது

5.நடிகை
பிடித்தவர் : பாவனா, 
பிடிக்காதவர் : ஸ்ரேயா

6.இசையமைப்பாளர்
பிடித்தவர் :இளையராஜா
பிடிக்காதவர் :ஏ.ஆர்.ரகுமான்

7. ஓவியர்
பிடித்தவர் :மாருதி
பிடிக்காதவர் :அரஸ்

8. பதிவர்
பிடித்தவர் :எனது வலைப்பூவின் வலது கீழ் மூலையில் இருக்கும் பட்டியலில் இருப்பவர்கள்,இன்னும் பலரைச் சேர்க்கவில்லை...அவர்களும்

பிடிக்காதவர் :.......................................................................(மூன்று பெயர்கள் எழுதியிருந்தேன்... எடுத்துவிட்டேன்)

9.பயணம்
பிடித்தது: அலுவலகம் டூ வீடு (பேருந்தில்)
பிடிக்காதது: வீடு டூ அலுவலகம்(பேருந்தில்)

10.வலையுலகில்
பிடித்தது: பின்னூட்டமிடுவது
பிடிக்காதது: பதிவிடுவது

 நன்றி: பதிவுக்கு டெம்ப்ளேட் கொடுத்து உதவிய அண்ணன் ஆதிமூலகிருஷ்ணன்

25 comments:

  1. உங்கள் விருப்பப் பட்டியலை மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. பதிவிடுவது பிடிக்காதுன்னு கலாய்ச்சிட்டீங்க பார்த்தீங்களா!!!!

    ReplyDelete
  3. அண்ணா என்னை மாதிரியே நீங்க.
    உங்களுக்கும் ஸ்ரேயா பிடிக்கல.
    அதேபோல வேலை முடிஞ்சு விட்டுக்கு வரத்தான் பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  4. பிடிக்காதவர் :புரியாமல் எழுதுபவர்கள் எல்லாரும்]]

    அவரை(களை)யா சொல்லுதீக ;)

    ReplyDelete
  5. ரஹ்மானைப் பிடிக்கலையா? இல்ல அவர் இசையைப் பிடிக்கலையா?

    ஏன் அண்ணே ?

    ReplyDelete
  6. பிடிச்சுது பிடிக்கல.

    ReplyDelete
  7. 8 நம்பர் கேள்விக்கு 1 நம்பர் பதில்தான்... எனக்கு உங்ககிட்ட பிடிச்சிருக்கு!!

    ReplyDelete
  8. அந்த மூணு பேரு யாரு சகா?

    ஒருத்தர தமிழ வாழவைப்பவரு..? இன்னொருவர் புக் போட்ட புண்ணியவானா?

    ReplyDelete
  9. ரஹ்மான் பிடிக்காதா???

    ReplyDelete
  10. I know you are a fan of IR, but it doesn't mean that you should dislike someone. ARR gave new dimension to indian music and you accept it or not, no one will be able to reach the height of ARR in india(incl IR). In fact, he is the one who revolutionized music in india. dont think that ppl who listens to ARR dont have knowledge/taste on music. There were only two ppl, I highly admired in my school days.. 1. Sachin 2. ARR. I was crazy listening to his songs in scooldays.

    any reason for that answer?. pls dont write nonsense to get attention of someone...

    as you know, i have great respect for IR and i enjoy listening to his songs.. In terms of talent, IR >>> ARR. I dont want to compare two legends...lets enjoy their work

    ReplyDelete
  11. @செ.சரவணக்குமார்...
    நன்றி சரவணா..முதல் வருகை(..?)க்கும், வாழ்த்துக்கும்....

    @காவிரிக்கரையோன் MJV...
    நன்றி... உண்மையைச் சொன்னேன்.. பதிவிடணும்னா மூளைக்கு நிறைய வேலை கொடுக்கணும்.அதான்...

    @ஹேமா...
    நன்றி ஹேமா...ஸ்ரேயா உவ்வே...

    @நட்புடன் ஜமால்...
    வருகைக்கு நன்றி ஜமால்...கண்டிப்பா அவர் இல்லை.. அவர் அப்பப்ப இங்க வருவாரு.. நீங்களா எதுவும் மூட்டி விட்டுடாதீங்க...அவர் எழுதுறது 50 சதவீதம் புரியுதுல்ல...

    @கலையரசன்...
    வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி கலையரசன்...

    @

    ReplyDelete
  12. @கார்க்கி...
    வாங்க சகா... அவங்க இல்லை..
    நீங்க சொன்ன முதலாமவரை நான் பதிவராகவே(எழுத்தாளராக) வே கருதவில்லை...
    இரண்டாமர் எனக்குப் பிடிக்கும்...நான் அவரின் ஃபாலோயரும் கூட...
    இந்த மூன்று பேர் வெறும் பதிவர்கள்தான்... தனி மெயிலில் சொல்கிறேன்...

    @ ரவிஷங்கர்...
    //பிடிச்சுது பிடிக்கல.//
    என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியலை சார்...
    எஅன்க்குப் பிடிச்சதெல்லாம் உங்களுக்குப் பிடிக்கலைன்னு எடுத்துக்கலாமா...
    இல்லை இதுவரை எனது பதிவுகள் பிடிச்சது, இப்போ பிடிக்கலைன்னு எடுத்துக்கலாமா... குழம்பிப் போயிருக்கிறேன். தெளிவுபடுத்தவும் சார்... நன்றி,,,

    ReplyDelete
  13. @மகேஷ் & கார்த்திக் & கோசி...

    ரகுமானை எதை வச்சு உங்களுக்குப் பிடிச்சிருக்கு.. அவர் இசையை வைத்துத்தானே....உங்களுக்கு அவர் இசை பிடித்திருக்கிறது. எனக்குப் பிடிக்கவில்லை..அதற்காக அவர் இசை நன்றாக இல்லை என அர்த்தமில்லை...
    மகேஷ் உனக்குப் pizza பிடிக்கும். எனக்கு இட்லி பிடிக்கும். அதற்காக எனக்கு pizzaa பிடிக்கவில்லை என்று பொருள் இல்லை.. அது என் வயிற்றுக்கு ஒத்துக்காது...உலகில் அனைவருக்கும் அது பிடிக்குமென்பதால் எனக்கும் அது பிடித்ததாகிவிடாது.எனது ரசனையை பின் தங்கியதாக நினைத்தாலும் நினைக்கலாம்.. அது என் தவறு இல்லை...
    இதே ரசனையை ஏன் யாரும் ராஜேஷ்குமார்,ஸ்ரேயா விசயத்தில் கேட்கவில்லை...
    தமிழ் நாவல் உலகில் ராஜேஷ்குமார் ஆயிரம் தாண்டியவர்.. அவருக்கு ராமகிருஷ்ணனை விடப் பன்மடங்கு ரசிகர்கள்...ராமகிருஷ்ணனின் கதைகளை தொலைக்காட்சித் தொடராக எடுத்தால் DDயில் மட்டுமே ஸ்லாட் கிடைக்கும்.. ஆனால் ராஜேஷ்குமாரின் கதைகளுக்கு, சன், கலைஞர் தொலைக்காட்சியில் பிரைம்டைமில் ஸ்லாட் கிடைக்கும்.ஆனால் எனக்குப் பிடித்தது ராமகிருஷ்ணன்...

    பாவனா நடித்து ஒரு படம் கூட தமிழில் நன்றாக ஓடவில்லை.. அவருக்கு மார்க்கெட்டே இல்லை.ஸ்ரேயா நடித்த(?) படங்கள் சூப்பர்ஹிட்... தமிழ்த் திரையின் ஆஸ்கார் போன்ற ‘சூப்பர்ஸ்டாரி’டம் ஜோடி சேர்ந்திருக்கிறார். நம்பர் ஒன் நடிகை... எனக்குப் பிடிக்கவில்லை...

    எனக்கு ரகுமானைப் பிடிக்கவில்லை எனச் சொல்லக்காரணம் இசையில் உலகத்தரமிருக்கிறது.. நான் நினைத்த நேட்டிவிட்டி இல்லை.(இது ராஜேஷ்குமார்,ஸ்ரேயா வகையறாக்களுக்கும் பொருந்தும்).

    ரகுமானின் பாடல்களில் பத்தைத் தாண்டி எதுவும் என் காதுகளைத்தாண்டவில்லை.கேட்பேன் ரசிப்பேன்... அப்போது மட்டும்...

    இன்னொரு முக்கியமான விஷயம்... இதுதான் பதிலின் சாரம்,..எனது காதுகள் இன்னும் ரகுமான் இசைக்கு tune ஆகவில்லை. அல்லது நான் இசையில் ஞானசூன்யம்.. இவ்வாறு வைத்துக் கொள்ளலாம்...

    டியர் கோசி...
    //pls dont write nonsense to get attention of someone...
    //
    எனக்கு அட்டென்ஷன் வேண்டுமெனில் இந்தப் பதிலைக் கூட ’ராஜா வெர்சஸ் ரகுமான்’ என்று தலைப்பிட்டு பதிவிட்டு இருக்கலாம்.இந்த இரண்டு பேரில் ஒருவரின் பெயரைத் தலைப்பில் வைத்தாலே ஹிட்ஸ் எகிறிவிடும்..(குறைந்தது 1000 ஹிட்ஸ்)...இதுபோல பதிவிட்டு எனது பதிவின் எண்ணிக்கையைய்யும் கூட்டிக் கொள்ளத் தெரியும்...
    எனக்கு இப்போ கிடைக்கிற அட்டென்ஷனே போதும்...
    இந்தப் பதிவு என் ரசனை மட்டுமே...
    choose the best answer type...
    அதனால் நீங்கள் ,எனது நலம் விரும்பிகள் கேட்டதால் மட்டுமே இந்த விரிவான விடை...

    ReplyDelete
  14. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!

    ReplyDelete
  15. mokkai , nalla irundhadhu..
    how r u ? I hope u doing good in blogging .. ur arts are too good..hows indore & frenz?

    I think u ve my two books..?! can u send it to me ...to my address(i wil send it in mail..)

    ReplyDelete
  16. //@ ரவிஷங்கர்...
    //பிடிச்சுது பிடிக்கல.//
    என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியலை சார்...
    எஅன்க்குப் பிடிச்சதெல்லாம் உங்களுக்குப் பிடிக்கலைன்னு எடுத்துக்கலாமா...
    இல்லை இதுவரை எனது பதிவுகள் பிடிச்சது, இப்போ பிடிக்கலைன்னு எடுத்துக்கலாமா... குழம்பிப் போயிருக்கிறேன். தெளிவுபடுத்தவும் சார்... நன்றி,,,//

    ஏங்க இதுக்கெல்லாம் குழம்புறீங்க.
    சும்மா போட்டேங்க.மனசனுக்கு பிடிச்சும் பிடிக்காமலும் இருக்கலாங்க.
    உங்க இஷ்டம்ங்க. நல்லா இருக்கு
    தமிழ்ப்பறவை.

    ReplyDelete
  17. // பிளாகர் தமிழ்ப்பறவை கூறியது...

    @மகேஷ் & கார்த்திக் & கோசி...

    ரகுமானை எதை வச்சு உங்களுக்குப் பிடிச்சிருக்கு.. அவர் இசையை வைத்துத்தானே....உங்களுக்கு அவர் இசை பிடித்திருக்கிறது. எனக்குப் பிடிக்கவில்லை..அதற்காக அவர் இசை நன்றாக இல்லை என அர்த்தமில்லை...
    மகேஷ் உனக்குப் pizza பிடிக்கும். எனக்கு இட்லி பிடிக்கும். அதற்காக எனக்கு pizzaa பிடிக்கவில்லை என்று பொருள் இல்லை.. அது என் வயிற்றுக்கு ஒத்துக்காது...உலகில் அனைவருக்கும் அது பிடிக்குமென்பதால் எனக்கும் அது பிடித்ததாகிவிடாது.எனது ரசனையை பின் தங்கியதாக நினைத்தாலும் நினைக்கலாம்.. அது என் தவறு இல்லை...
    இதே ரசனையை ஏன் யாரும் ராஜேஷ்குமார்,ஸ்ரேயா விசயத்தில் கேட்கவில்லை...
    தமிழ் நாவல் உலகில் ராஜேஷ்குமார் ஆயிரம் தாண்டியவர்.. அவருக்கு ராமகிருஷ்ணனை விடப் பன்மடங்கு ரசிகர்கள்...ராமகிருஷ்ணனின் கதைகளை தொலைக்காட்சித் தொடராக எடுத்தால் DDயில் மட்டுமே ஸ்லாட் கிடைக்கும்.. ஆனால் ராஜேஷ்குமாரின் கதைகளுக்கு, சன், கலைஞர் தொலைக்காட்சியில் பிரைம்டைமில் ஸ்லாட் கிடைக்கும்.ஆனால் எனக்குப் பிடித்தது ராமகிருஷ்ணன்...

    பாவனா நடித்து ஒரு படம் கூட தமிழில் நன்றாக ஓடவில்லை.. அவருக்கு மார்க்கெட்டே இல்லை.ஸ்ரேயா நடித்த(?) படங்கள் சூப்பர்ஹிட்... தமிழ்த் திரையின் ஆஸ்கார் போன்ற ‘சூப்பர்ஸ்டாரி’டம் ஜோடி சேர்ந்திருக்கிறார். நம்பர் ஒன் நடிகை... எனக்குப் பிடிக்கவில்லை...

    எனக்கு ரகுமானைப் பிடிக்கவில்லை எனச் சொல்லக்காரணம் இசையில் உலகத்தரமிருக்கிறது.. நான் நினைத்த நேட்டிவிட்டி இல்லை.(இது ராஜேஷ்குமார்,ஸ்ரேயா வகையறாக்களுக்கும் பொருந்தும்).

    ரகுமானின் பாடல்களில் பத்தைத் தாண்டி எதுவும் என் காதுகளைத்தாண்டவில்லை.கேட்பேன் ரசிப்பேன்... அப்போது மட்டும்...

    இன்னொரு முக்கியமான விஷயம்... இதுதான் பதிலின் சாரம்,..எனது காதுகள் இன்னும் ரகுமான் இசைக்கு tune ஆகவில்லை. அல்லது நான் இசையில் ஞானசூன்யம்.. இவ்வாறு வைத்துக் கொள்ளலாம்...

    டியர் கோசி...
    //pls dont write nonsense to get attention of someone...
    //
    எனக்கு அட்டென்ஷன் வேண்டுமெனில் இந்தப் பதிலைக் கூட ’ராஜா வெர்சஸ் ரகுமான்’ என்று தலைப்பிட்டு பதிவிட்டு இருக்கலாம்.இந்த இரண்டு பேரில் ஒருவரின் பெயரைத் தலைப்பில் வைத்தாலே ஹிட்ஸ் எகிறிவிடும்..(குறைந்தது 1000 ஹிட்ஸ்)...இதுபோல பதிவிட்டு எனது பதிவின் எண்ணிக்கையைய்யும் கூட்டிக் கொள்ளத் தெரியும்...
    எனக்கு இப்போ கிடைக்கிற அட்டென்ஷனே போதும்...
    இந்தப் பதிவு என் ரசனை மட்டுமே...
    choose the best answer type...
    அதனால் நீங்கள் ,எனது நலம் விரும்பிகள் கேட்டதால் மட்டுமே இந்த விரிவான விடை...////

    எவ்வளோ பெரிய பின்னோட்டம்..., பதிவ விட இது பெருசுப்பா...,

    ReplyDelete
  18. @நாடோடி இலக்கியன்...
    நன்றி நண்பரே...

    @மகேஷ்...
    ம்ம்

    @தனசேகர்...

    வாங்க நண்பா.. இந்தோர் வாழ்க்கை பரவாயில்லாமல் இருக்கிறது.ஒரு புத்தகம் தான்(சித்தன் போக்கு).. மெயில் பண்ணுங்கள் முகவரியை...
    thamizhparavai@gmail.com

    @ரவி ஷங்கர்...
    நன்றி சார்...

    @பேநா மூடி...
    வாங்க நண்பா... என் பின்னூட்டத்தை விட உங்கள் பின்னூட்டம் பெரிது...

    ReplyDelete
  19. நன்றி தமிழ்ப்பறவை :D

    ஷ்ரேயா பிடிக்கவில்லை என்பதாலேயே எனக்கு இந்த பதிவு ரொம்ப பிடித்துவிட்டது :))))))))) kidding :)

    IR wow....

    arr பாவம் பிடிக்காதவர்கள் லிஸ்ட் ஆ ..ஹ்ம்ம்...

    உங்களின் பிடித்த/பிடிக்காத "பயணம்" எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அழைப்பை ஏற்று பதித்ததற்கு மிக்க நன்றி. (அதுவும் உங்களுக்கு பதிவுடுவதே பிடிக்காது என்ற போதிலும் ) :P :)))))))

    ReplyDelete
  20. நன்றி ஷக்தி...
    ஷ்ரேயா உங்களுக்கும் பிடிக்காதா...?
    அப்ப என்ன தைரியத்துல அந்தப் புள்ளய நம்பி இவ்வளவு பணம் முதலீடு பண்றாய்ங்கன்னு தெரியலையே.. :-(

    ReplyDelete
  21. மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  22. Sorry for the late reply :)

    >>இதே ரசனையை ஏன் யாரும் ராஜேஷ்குமார்,ஸ்ரேயா விசயத்தில் கேட்கவில்லை...
    I never cared about them. In my opinion, only if you care about someone, then only you can like/dislike him/her . I never bothered about Rajeshkumar/Shreya. If you had written about simran, then I would have disputed on that :-)

    >>எனக்கு ரகுமானைப் பிடிக்கவில்லை எனச் சொல்லக்காரணம் இசையில் உலகத்தரமிருக்கிறது.. நான் நினைத்த நேட்டிவிட்டி இல்லை.(இது ராஜேஷ்குமார்,ஸ்ரேயா வகையறாக்களுக்கும் பொருந்தும்).ரகுமானின் பாடல்களில் பத்தைத் தாண்டி எதுவும் என் காதுகளைத்தாண்டவில்லை.கேட்பேன் ரசிப்பேன்... அப்போது மட்டும்...
    Is this the reason, you dislike ARR? You mean, YSR/HJ/Vijay antony etc. songs have more nativity than ARR?..and you have many fav songs of those composers than ARR? :-)
    If you say, you don’t even like10 songs of ARR, that means, you need to tune your ear. If you eat only idly and never bothered about tasting pizza, then you should not say you dislike pizza. Start eating pizza few times, you will like it :-). You are conditioned to IR songs, that’s the problem. Listen to some of old magic of ARR, you will be amazed by his composition.

    ReplyDelete
  23. nativity means kirama vasanaiyaa ... appadinna kizhakku seemaiyale parkalya chii kekalayaa barani.. just kidding man
    its ur view only ..

    ReplyDelete
  24. @கடையம் ஆனந்த்...
    வருகைக்கு நன்றி...

    @கோசி & மதுரைக்காரைங்க...
    நன்றி... இத்துடன் முடித்துக் கொள்வோம்...

    ReplyDelete