Sunday, December 6, 2009

பா...இந்திப்படம்...இளையராஜா...சிறுபார்வை

‘my paa is good'


'I dont know God, but i know my paa only'


'Paa is like an umbrella, protects us from rain and heat'


             தெல்லாம் ‘பா’ படம் ஓடுற ஆட்லேப்ஸ் வளாகத்தின் ஒற்றை போர்டில் ஒட்டப்பட்ட சின்னச்சின்ன ஸ்லிப்புகளில் வாண்டுகள் கிறுக்கியது.அவர்களின் உயரமே உள்ள போர்டில் எழுதியிருந்தவைகளில் 90 சதம் உண்மையாகவும் இருக்கலாம்.அல்லது கூடவே அப்பா இருப்பதால் பயந்து கொண்டு நல்ல விதமாக எழுதியிருக்கலாம் அல்லது ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில்கூட எழுதி இருக்கலாம்.’பா’ படத்துக்குக் குழந்தைகளின் ஆதரவைக் கூட்ட இதுவும் ஒரு விளம்பர உத்தி.


   என்கிட்ட கேட்டிருந்தா என்ன எழுதியிருப்பேன்னு யோசிச்சுப் பார்த்தேன்.சின்ன வயசுல ‘அப்பா நல்லவர்’ன்னு தமிழ்ல எழுதி இருப்பேன்.இப்போ என்ன தோணுதுன்னு தெரியலை... யோசிச்சுப் பார்த்தேன். சிறுவயது அப்பா பிரம்மாண்டம் இப்போது மேலும் விஸ்வரூபமாகி நெஞ்சினை முட்டிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.அதையெல்லாம் எழுத முடியுமான்னு தோணலை. உங்களை எழுதச் சொன்னா என்ன எழுதுவீங்கன்னு தெரியாது.அதே ஒன்றை ‘ப்ரோஜேரியா’ எனும் அரிய நோய் வந்து, தந்தை யார் எனத் தெரியாமல்,13 வயதிலேயே வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கும் ’ஆரோ’விடம் கேட்டால்...அதுதான் ‘பா’. இரண்டரை மணி நேர உணர்ச்சிகள்...


   ‘ஆரோ’ன்னா...??


இதே கேள்வியை அவனை முதல் முதலாப் பார்க்கிற அவன் தாத்தா கேட்பாரு.


‘ஆரோன்னா ?’


‘A U R O'- இது ஆரோ.


‘ஓ. அப்ப ‘ஆரோ’ன்னா ஆரோபிந்தோ(அரவிந்தரா)...?’


‘இல்ல... ‘ஆரோ’ன்னா ‘ஆரோ’. அவ்வளவுதான்’- ஆஸ்பத்திரிப் படுக்கையில் இருந்தவாறே ஆரோவின் பதில்.


இதுதான் ஆரோ. 



   ‘ப்ரொஜேரியா’-முதலிலேயே மருத்துவர் விளக்கிவிடுகிறார். குழந்தைகளுக்கு வரும் வியாதி.தன்னைவிட  ஐந்து மடங்கு வயதாய்த் தோன்றும் உடல்,மூளையோ இயல்பு நிலை.13,14 வயதுகளைத் தாண்டுவதே கடினம்.உலகத்தில் இது நாற்பது,ஐம்பது பேர்களுக்குத்தான் இருக்கிறது. அதில் ஒருவன் தான் நமது ‘ஆரோ’. ஆரோவாக அமிதாப்.அடையாளம் தெரியாத அளவு மேக்கப்.துருத்திக் கொண்டு தெரியவில்லை.அபாரம். மேக்கப்ல உருவம் மாறலாம்.உயரம் எப்படிக் குறைவாகும்...?அந்த வேலையை பி.சி.ஸ்ரீராமோட விசேஷ லென்ஸ் பாத்துக்கிடுச்சு.


        நல்ல அரசியல்வாதியாக (முரண்...??!!) நினைக்கும் பணக்காரர் அமோல்(அபிஷேக்) , கேம்பிரிட்ஜில் படிக்கையில்,வித்யா(வித்யா பாலன்)வுடன் காதல்,கொஞ்சம் முற்றிப் போய் குழந்தை உருவாகிவிடுகிறது.இப்போதைய குழந்தை தனது அரசியல் வாழ்க்கையைப் பாதிக்கும் என அபிஷேக் அதைக் கலைக்கச் சொல்ல, வித்யா(கைனகாலஜிஸ்ட்) மறுத்து, உன் வழியில் தென்படாது எங்கள் சுவடுகள் என விலகிவிடுகிறார். இவையனைத்தும் இரண்டு நிமிட ‘முடி முடி ‘ பாடலிலேயே முடிந்துவிடுகிறது.இளையராஜாவும்,பி.சி.யும் கலந்த ஒரு இளமைக் காக்டெயில் இந்தப் பாடல்.


            புரொஜேரியா குழந்தையாக ஆரோ.அவனைப் பார்த்த ஒரு பெண், வித்யாவிடம் கேட்க, ‘மில்லியன் குரோம்சோம்ல ஒரு சின்ன இடமாற்றத்துல இப்படி ஆயிடும். ரொம்ப லக்கி இல்ல...’ எனச் சிரித்தவாறு கூறுகையில்,பேஸ்தடித்துப் போய்விடுகிறார் கேட்டவர்.


           இவ்வளவு பில்டப் இருக்கே... இதுக்கப்புறம் கர்ச்சீப்பைக் கையில் வச்சுக்கிட்டுதான் படம் பார்க்கணுமான்னு கேட்கறீங்களா...?அந்தக் கேள்வியை அடிச்சு தூள் பண்ணிடுறான் ஆரோ.கிரியேட்டிவிட்டி,குறும்புத்தனம்,பாசம்,எடக்குமடக்குக் கேள்விகள் இவைதான் அவன் சொத்து.


       ரு பள்ளிவிழாவில் அவனை அமோல் எம்.பி. பார்க்க, பின் மீடியா வெளிச்சம் ஆரோ மேல் பாய்கிறது. அதை விரும்பாத ஆரோ,அமோலுக்கு மெயிலனுப்ப, துளிர்விட ஆரம்பிக்கிறது புதிய உறவு.அதன்பின் ஆரோவுக்கு அமோல்தான் தன் அப்பா எனத் தெரியவந்து, தன் பெற்றோரை ஒன்று சேர்த்து வைப்பதுதான் கதை.


        இதுதான் கதை என்றாலும் சொன்னவிதம் மழையில் கழுவிவிட்ட தார்ச்சாலை போல பளிச்.பள்ளியில் ஆரோவின் குறும்புத்தனம்,தன்னை நோக்கி வரும் சிறுமியைக் கண்டதும் ‘எஸ்’ஸாகிவிடும் உஷார்,பாட்டியை ‘பம்’ என்று செல்லப் பேர் வைத்துக் கிண்டல் செய்வது,எம். பியுடன் ராஷ்டிரபதி பவன் பார்க்கச் சென்றதாக நண்பர்களிடம் பீலா விடுவதும், குட்டு உடைந்தவுடன் வழிவதும் எனக் கிடைக்கிற கேப்பிலெல்லாம் சிக்ஸர்தான். கேட்கும் கேள்விகள், சொல்லும் பதில்கள் எல்லாமே ‘நச்’...


   அமோல்: உன் பெற்றோர் என்ன பண்றாங்க...
  
   ஆரோ    : they are preparing kids. but i dont want promotion.


   இதைவிட ஆஸ்பத்திரியில் ஆரோவிடம் அனுதாபம் காட்டுவதாகப் பேசும் அவன் தாத்தாவிடம்(பரேஷ் ராவல்), இவன் அளிக்கும் பதில் சரியான நெத்தியடி.


ஆரோ மட்டுமல்ல. படத்தில் அனைவரின் வசனமுமே கலக்கல்தான்.திருமணம் வேண்டாமென மறுக்கும் அமோலிடம் அவன் அப்பா சந்தேகத்துடன் கேட்கும் கேள்வி ‘ஆர் யு  கே (gay) ?'.


  ஆரோ விலகிச்சென்றாலும், நெருங்கி நெருங்கி வரும் சிறுமி அழகான தேர்வு... பின் அவள் ‘ஸாரி’ கேட்பதும் மிக அழகு. அதற்கான காரணமும் சரியான திருப்பம்.


    ரோவின் அம்மாவாக வித்யா பாலன். அமிதாப்புக்கு அடுத்து ஸ்கோர் செய்வது இவர்தான்.கண்களிலேயே உணர்ச்சிகளைக் காட்டிவிடுகிறார்.காதல்,கோபம், பாசம் அனைத்திலும் இவரின் முகம் காற்றிலாடும் தீபம் போல அழகாகப் பிரதிபலித்திருக்கிறது.(special credits to p.c.sriram)



   அபிசேக்தான் ‘பா’.நேர்மையான அரசியல் வாதி,பாசமிகு அப்பா.’நீட்டலும், மழித்தலும் வேண்டாம்’ என்பது போல் அளவான நடிப்பு.


  ண்மையான ஹீரோ டைரக்டர் பால்கிதான். அசத்தியிருக்கிறார்.இது இரண்டாவது படம்தான்(’சீனிகம்’ முதல் படம். பார்த்துவிடுங்கள்).சீரியல் போன்ற ஒரு கதையை, இரண்டரை மணி நேரத்தில் கொடுப்பதற்கு இவரது முந்தைய விளம்பர உலகம் கை கொடுத்திருக்கிறது.


   இளையராஜா...படம் எது, இசை எது என நம்மைப் பிரித்துப் பார்க்க முடியாதவாறு கட்டிப் போடுகிறார். அவருக்குப் பாடல்கள் கூட கதையின் தன்மையைச் சொல்லும் பின்னணி இசைதான்.க்ளைமேக்ஸ் இல் வசனங்கள் இல்லை. இசைதான் பேசியது.பாடல்களில் ஒரு இளமைத்துள்ளல். ‘முடிமுடி’ மற்றும் அதன் வெர்ஷன்களான ‘கலி உதி’,’உதி உதி’அட்டகாசம். ‘சங்கத்தில் பாடாத கவிதை’ இங்கு ‘கும்சும்கும்’ ஆக நீட்டாக ரீபெர்த் ஆகி இருக்கிறது. படத்தில் ஒரு நிமிடம் வருவதுதான் குறை. ‘ஹிச்கி ஹிச்கி’ -சரியான இடத்தில் வருகிறது.தீம் மியூசிக் ஏற்கெனவே பிரபலம் ஆகிவிட்டது.(தமிழில் வந்த ‘அது ஒரு கனாக் காலம்’ படத்தில் வரும் ‘காட்டுவழி’ பாடல்).வயலின், கீ போர்டு இரண்டில் இருந்தும் அனாயசமாக வழியவிட்டிருக்கிறார் இசையருவியை.


   பி.சி.ஸ்ரீராம்-க்ளீன்...படம் முழுவதும் ஒருவித ஃப்ரெஷ்னெஸ் தெரிகிறது.கேமரா லென்ஸை இவர் விபூதி போட்டுக் கழுவிட்டு படமெடுப்பாரோ...?
   எடிட்டிங்- கனகச்சிதம்.
படம் முடிகையில் தொண்டை அடைத்துவிடுகிறது. இது ஒரு புது அனுபவம்.

           

21 comments:

  1. அருமையான விமர்சனம் தலைவரே . . படம் பார்க்க வேண்டும் என்கிற வெறியில் இருக்கும் என்னை உங்கள் விமர்சனம் அதை அதிகமாக உசுப்பி விடுகிறது.

    ReplyDelete
  2. ஆகா, பார்த்தாச்சா, உங்கள் பார்வை சிறப்பாக இருக்கு

    ReplyDelete
  3. அழுகாச்சி படமா இருக்கும்னு நெனச்சேன். நல்லா இருக்கும் போல?

    ReplyDelete
  4. yeenuga raaja sir music nalla illainnu romba periya pathivaru pottu irukkaru avaroda alla kai ellam vera avaru vimarisanithirrku apparbattavarnnu kodi pudikkraanga. Sollunga sir Raja sir music thoola enna andha pathivarukku mooku udayum illaya?

    ReplyDelete
  5. சகா, பாடல்களை கேட்டு வட இந்தியர்கள் சிரிக்கிறார்களாம். அவ்வளவு கேனைத்தனமா இருக்காம். இல்லையென்று நிரூபித்தால் ஒரு தமிழ் எழுத்தாளர் எழுதுவதை நிறுத்தி தமிழுக்கு சேவை செய்வாராம். கொஞ்சம் ப்ரூஃப் செய்ய முடியுமே என்று பாருங்களேன் :)))

    ReplyDelete
  6. ரொம்ப‌ அழ‌கா எழுதியிருக்கீங்க‌ ஸார்.. "கேமரா லென்ஸை இவர் விபூதி போட்டுக் கழுவிட்டு படமெடுப்பாரோ...?" சூப்ப‌ர்.

    -Toto
    www.pixmonk.com

    ReplyDelete
  7. அருமையான விமர்சனம் . i feel the same way after watching the movie. படம் முழுவதும் வசனம் அருமை.

    திரு கார்க்கி நான் இந்த படத்தை பார்த்தது தற்போது நான் வந்திருக்கும் வட இந்தியாவில் தான் (gwalior) . இங்கே அனைவரும் பாடல்களை மிகவும் ரசித்தனர் . படம் முடிந்தவுடன் என்னிடமிருந்து பாடல்களை தனது mobile போனுக்கு transfer வேறு செய்து கொண்டனர். முக்கியமாக பா theme அனைவரிடமும் மிகவும் பிரபலம் ஆகி விட்டது இங்கே . யார் சொன்னது பாடல்கள் பிடிக்கவில்லை என்று ?

    ReplyDelete
  8. //இவ்வளவு பில்டப் இருக்கே... இதுக்கப்புறம் கர்ச்சீப்பைக் கையில் வச்சுக்கிட்டுதான் படம் பார்க்கணுமான்னு கேட்கறீங்களா...?அந்தக் கேள்வியை அடிச்சு தூள் பண்ணிடுறான் ஆரோ.கிரியேட்டிவிட்டி,குறும்புத்தனம்,பாசம்,எடக்குமடக்குக் கேள்விகள் இவைதான் அவன் சொத்து.//

    சரிதான்.இங்குதான் வித்தியாசமா யோசிக்கணும்.அனுதாபம் வராமல்.

    உங்கள் விமர்சனம் பார்க்கத்
    தூண்டுகிறது.

    ReplyDelete
  9. ராஜா எப்போதும் ராஜா தான்..,

    ReplyDelete
  10. பாக்கணும்னு நினைச்சி லிஸ்ட்ல இருக்குற படம். எப்ப ரிலீஸாச்சு.. சொல்லவேயில்ல.. விளம்பரமே இல்லையப்பா.!

    ReplyDelete
  11. @Romeoboy...

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரோமியோபாய். ‘பா’ர்த்துவிடுங்கள்.

    @கானாபிரபா..
    வாங்க தல..வாழ்த்துக்கு நன்றி...

    @மகேஷ்...
    அழுகாச்சி படமெல்லாம் இல்லை. மிஸ் பண்ணிராதே.

    @பெயரில்லா...
    வருகைக்கு நன்றி பெயரில்லா.
    அந்தாளைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு.அவர் மத்ததெல்லாம் உருப்படியாச் சொல்லி, இதை மட்டும் குறை சொன்னா, என்னான்னு பார்க்கலாம்.மஞ்சள் காமாலை கண்ணுக்கு எல்லாமே மஞ்சளாதான் தெரியும். அதுவும் எழுத்தே மஞ்சளா எழுதுறவருக்கு வேறெப்படித் தெரியும்...?!

    ReplyDelete
  12. @கார்க்கி...
    வாங்க சகா...அந்தாளை வந்து இங்க படம் பார்க்கச் சொல்லணும்.எல்லாரும் ரசிக்கிறார்கள்... பாடல்களுக்கு எவரும் எழுந்து வெளியில் செல்ல வில்லை.எஃப்.எம் களில் ‘முடிமுடி’ தால் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
    படம் நல்லா நகைச்சுவையா இருக்கறதால சிரிச்சு ரசிக்கிறாங்க. எவனாச்சும் இசைக்குச் சிரிப்பானா...?(அதிலயும் சிரிக்க வச்சவரு ராஜாதான். கரகாட்டக்காரன் காமெடி தீம்). இந்தாளு எழுதுறத நிறுத்திட்டா உலக இலக்கியமே அழிஞ்சிடுமா என்ன? அவருக்குப் பிடிச்சா ஏத்துவாரு இல்ல மொத்தமா தூத்துவாரு.. இப்போ மிஷ்கின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்துட்டுப் போனதுனால, ‘நந்தலாலா’ வை விட நல்ல படமே கிடையாதுன்றாரு. அதுல இளையராஜா இசை சர்வதேசத் தரம்ன்னு சொல்லியிருக்காரு. படம் வர்றதுக்குள்ள மிஷ்கினோட சண்டை போட்டுட்டா, படம் வந்தபிறகு வேற மாதிரி எழுதுவாரு...
    ‘குமுதம்’ சொன்னது சரிதான்...
    நீங்க படம் பாருங்க சகா... ’பா’ பாடல்கள் கேட்டீங்களா?

    ReplyDelete
  13. @Toto...
    வாங்க டோடோ..முதல் வருகைக்க்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    @ROBOT,...

    வருகைக்கும், தகவலுக்கும் நன்றி ரோபோ...

    @கே.ரவிஷங்கர்...
    நன்றி ரவிசார்... தியேட்டர்ல படம் பார்த்துடுங்க இசைக்காக மட்டும். அப்புறம் சிடியில சப்-டைட்டிலோட பார்த்துக்கலாம். (சீனிகம் பார்த்தீங்களா சார்.. இல்லேன்னா பார்த்துவிடுங்கள்... 2ண்ட் பாதி கொஞ்சம் சொதப்பல். முதல் பாதி அட்டகாசமாக இருக்கும்..)


    @பேனாமூடி...
    சரியாச் சொன்னீங்க பாஸ்.. நன்றி...

    @ஆதிமூலகிருஷ்ணன்...
    வருகைக்கு நன்றி ஆதி.எங்கேயெல்லாம் நல்ல விளம்பரம். தமிழ்நாட்டில் எப்படி எனத் தெரியவில்லை. போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்...

    ReplyDelete
  14. நல்லா எழுதியிருக்கீங்க தல. வர வீக் என்ட் போகணும். :)

    ReplyDelete
  15. நன்றி கார்த்திக்.. பார்த்து விட்டு வந்து சொல்லுங்கள்...

    ReplyDelete
  16. எந்த அலட்டலும் இல்லாத நல்ல விளம்பரம். படம் பார்க்க தூண்டியது.. குட்.

    ReplyDelete
  17. விளம்பரம் அல்ல விமர்சனம்.. திருத்தி படியுங்கள்.

    ReplyDelete
  18. /பாக்கணும்னு நினைச்சி லிஸ்ட்ல இருக்குற படம். எப்ப ரிலீஸாச்சு.. சொல்லவேயில்ல.. விளம்பரமே இல்லையப்பா.!
    //

    ரிலீஸசாகி நாலு நாள் ஆயிடுச்சு.. அப்பப்ப பேப்பர் பாருங்கப்பு

    ReplyDelete
  19. தல....பார்த்துட்டிங்களா..;)

    எனக்கு நாளைக்கு தான் கிடைச்சிருக்கு...போயிடுவோம் ;))

    ReplyDelete
  20. தல..

    Paa Premiere Show

    http://www.tubetamil.com/view_video.php?viewkey=7c00398f53e90a3714bd

    ;)

    ReplyDelete
  21. @மயில்...

    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி. நான் எதிர்பார்த்ததும் அதுதான்.. கதையைச் சொல்லாமல், கொஞ்சமாக எனது ரசனைகளை மட்டும் சாம்பிளாகச் சொல்ல எண்ணினேன்.

    @கேபிள் சங்கர்...
    வருகைக்கு நன்றி தலைவரே...

    @கோபிநாத்...
    வாங்க தல, லேட்டா வர்றீங்க... சீக்கிரம் பாருங்க...வருகைக்கும்,நல்ல இணைப்பு கொடுத்ததற்கும் நன்றி தல..

    ReplyDelete