பத்தாம் வகுப்போ, அதற்கு மேல்பட்ட வகுப்பில் வந்த கதைகளான, கி.ரா.வின் 'கதவு', தி.ஜானகிராமனின் 'முள்முடி'இனும் சில கதைகள் இன்னும் என் நினைவில் படங்களாய் இருக்கிறது. அதிலும் 'முள்முடி' கதையில் வரும் ஆசிரியர் அனுகூலசாமியின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் நெகிழ்வைத் தந்த ஒன்று. இந்தப் பள்ளிப் படிப்புக்காலங்களில் எல்லாரையும் போல லயன் காமிக்ஸ் பைத்தியம் என்னையும் ஆட்டுவித்தது. லக்கிலுக் தான் என்னோட ஃபாவரைட் ஹீரோ. மற்றபடி செவ்விந்தியர் கதைகள்,ஜேம்ஸ்பான்ட், மாடஸ்டி, இரும்புக்கை ஆர்ச்சி, தினத்தந்தி ஞாயிறுமலரில் வரும் 'மான்டிரக்' என எல்லாமும் பிடிக்கும். எங்கள் வீட்டில் புத்தகம் எல்லாம் வாங்கித்தரமாட்டார்கள். எல்லாம் பக்கத்து வீடுகளில் வாங்கும் ஓ.சிதான். சிறுவர்மலர்,பூந்தளிர், அம்புலிமாமா,பேசும்படம், மய்யம்(கமல் ரசிகர்மன்ற வெளியீடு) என படித்தது எல்லாம் ஓ.சிதான்.பூந்தளிரில் வரும் 'வேட்டைக்கார வேம்பு', காக்கை காளியா, முட்டாள் வேலைக்காரன்(பெயர் நினைவிலில்லை.) கதாபாத்திரங்களும் அவற்றின் சித்திரங்களும் பசுமரத்தாணி இன்றும்.
இந்தக் கலவையான படிப்புச் சூழலில் ,பள்ளியில் நடக்கும் பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டிகளில் கலந்துகொள்வேன். அதற்காக எங்கள் ஊரில் அமைந்திருக்கும் கிளை நூலகம் செல்ல ஆரம்பித்தேன். அங்குதான் விகடனும், குமுதமும் அறிமுகம். நூலகத்தில் படித்த புத்தகங்களுள் என்னால் மறக்க இயலாத, இன்னுமொருமுறை படிக்க ஏங்கிய புத்தகம் 'உமர்கய்யாமின் வாழ்க்கை வரலாறு' ஒரு கவிஞராக மட்டுமே அவரை அறிந்திருந்த எனக்கு, அவர் ஒரு வானியல் வல்லுநர் என்பதும் வாழ்வின் கடைசி நேரத்தில்தான் காத்ல் தோல்வியால் கவிதை எழுதிப் பிரபலமானார் என்பதும் புதிதாக இருந்தது. இப்போது கூட எங்கள் ஊர் நூலகம் சென்றால் என்னையும் அறியாமல் நான் தேடும் புத்தகம் அதுதான். பின் நாவல்கள். எல்லாவித நாவல்கள் படித்தாலும் எனது ஃபாவரைட் சுபா மற்றும் பி.கே.பி தான். ராஜேஷ்குமார் நாவல்கள் கரு நன்றாக் இருந்தாலும், மிகவும் சைவமாகவும், முடிவு 'சப்'பென்றும் இருக்கும்.ஆனால் சுபா நாவல்கள் ஒருவித விறுவிறுப்பையும், நரேன் வைஜ் உரையாடல்கள் சுவாரஸ்யத்தையும் தந்தது. சுபாவின் இன்னொரு துப்பறியும் கேரக்டரான செல்வாவின் கதைகள் நகைச்சுவையாக இருக்கும். செல்வாவும், அஸிஸ்டெண்ட் முருகேஷனும் அவனது அத்தைகளும், ஆட்டோ டிரைவர் டெல்லியும் அவனது 'மிஸ்டர். லாரி, மிஸ்டர். டேபிள்' போன்ற மரியாதையான டயலாக்குகளும் எனது ஃபேவரைட். பி.கே.பி.யின் பரத் சுசீலா ஜோடி விளையாட்டுக்கள் , சுசீலாவின் டீஷர்ட் வாசகங்கள் வாசிப்பை இன்னும் சுவாரஸ்யமாக்கியது அந்தப் பதின்ம வயதுகளில்.
இரண்டாவது பாகம் ஓரிரு நாட்களில்...
ennakkum "kathavu" nanraga nyabagam irrukku(romba sogama irukkum).... mulmudi storiya konjam sollunga nybagam vandhudum...
ReplyDeleteaama "raja vandhirukirar..."
"sevazhai" ithellam nybagam illayana ungallukku...
rajesh kumarin navalkalum subavin navalgalum niraya padithu viten..
ReplyDeletepattukottai prabhaghar pidikkum aanaal 5(or)6 padithirrupen...
ennaikkume ennoda favourite sujathathan
avoroda nylaan kayiru, karaiyellam shenbagapoo, meendum jino, en inniya yiyandira, padavikkaga, ithellam romba pidikkum.. kanayaazhi padichittu irruken romba nalla irrukku....
very nice introduction.
ReplyDeleteடீன் ஏஜ் வயசுக்குள்ள இத்தனை புத்தக வாசிப்பா?.
ReplyDeleteஇரண்டாம் பாகத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன்.
இரண்டாம் பாகத்திற்கு ஏன் இரு நாள் இடைவெளி
பழைய நினைவுகளை அசை போடவா????????????????
தர்ஷினி...
ReplyDelete//mulmudi storiya konjam sollunga nybagam vandhuduம்...//
'முள்முடி' யில் ஆசிரியர் அனுகூலசாமி பணி ஓய்வு பெற்று, பள்ளியில் நடைபெற்ற பிரம்மாண்டமான பாராட்டு விழாவில் கவுரவிக்கப் பட்டு வீட்டுக்கு வருவார். அவர் பணிக்காலத்தில் எந்த மாணவனையும் அடித்துக் கண்டித்ததில்லை. அன்பால்தான் திருத்துவார். வீட்டில் சேரில் சாய்ந்துகொண்டு தனது பணிக்காலத்தையும் ஊரார் கொடுத்த மரியாதையையும், பள்ளியில் நடைபெற்ற விழாவையும் எண்ணிப் பெருமிதத்துடன் இருப்பார். அவ்வேளையில் வீட்டு வாசலில் ஒரு தாய் தன் மகனுடன் கண்ணீருடன் வந்து நிற்பார். ஏனென்று விசாரித்ததில், ஓரிரு வாரங்களுக்கு முன் அப்பையன் , பக்கத்து மாணவனின் பொருள் திருடியத்ற்காக, அவனுடன் யாரும் சேர வேண்டாமென்று கூறி இருப்பார். இவரின் வாக்குக்குக் கட்டுப்பட்டு யாரும் அப்பையனுடன் பேசவில்லை. ஆசிரியரின் வழியனுப்பு விழாவுக்கு பணம் வசூலிக்கையில் கூட அப்பையனிடம் காசு கேட்காமல் ஒதுக்கி இருப்பார்கள்.
இதனால் மனமுடைந்த அப்பையன் மன்னிப்புக் கேட்டு, தன் தாயுடன் காசு கொடுக்க வீட்டுக்கு வந்திருப்பான். இதைக் கேட்டதும் அனுகூலசாமிக்கு தான் கொடுத்த சிறு தண்டனையால், ஒரு சிறுவனும்,தாயும் இவ்வளவு பாதிக்கப் பட்டு விட்டார்களே என்ற குற்ற உணர்ச்சியில் அதுவரை கிரீடம் போல் அவர் நினைத்த பெருமித நினைப்பு, இப்போது 'முள்முடி' போல் உறுத்துவதை உணர்வார். போதுமா...?
//"raja vandhirukirar..."
"sevazhai" இட்//
கேள்விப்பட்டது போல் உள்ளது. சற்று நினைவூட்டுங்களேன்...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தர்ஷினி, ஆனந்த், அத்திரி அவர்களே...
ReplyDelete//இரண்டாம் பாகத்திற்கு ஏன் இரு நாள் இடைவெளி
//
ஆம்... ஏனோதானோவென்று எழுதிவிடக் கூடாதல்லவா...? ஒன்று படிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்.. இல்லை அவர்களது நினைவுகளையாவது கிளறிவிட வேண்டும்...முதல் வகை கடினமென்பதால், இரண்டாவது வகையைத் தேர்ந்தெடுத்து, யோசித்துப் பதிவிடுகிறேன்.
நாளை போட்டு விடுவேன்...மன்னிக்கவும்...
mulmudi ippa nyabagam vanthiruchu,
ReplyDeletethanks,
ரொம்ப ஷார்டா சொல்லிரேன்.... நீளமா எழுத வராது...
ராஜா வந்திருக்கிறார்ல (ராஜா அனாத பையனா தீபாவளி டயம்ல) இவங்க வீட்டுக்கு வருவான், இந்த பசங்களோட அம்மா இவனுக்கும் அரப்பு போட்டூ குளிக்க வைப்பாங்க.....
செவ்வாழை _ல இவங்க வளர்த்த மரத்தையே(அனு அனுவா ரசித்து வளர்த்த) கணக்கு பிள்ளை காசு கூட கொடுக்காமல் எடுத்துட்டு போயிடுவார்...
இவங்களோட பெரிய சொத்தா இருந்ததே அந்த செவ்வாழைதான்....
monday vanthu meethiyai paarkiren....
ReplyDeleteநீங்க ரொம்ப பெரிய படிப்பாளி போல இருக்கு.நானெல்லாம் குமுதம்,ஆவி,ஜூவியோட சரிங்க.
ReplyDeleteஅப்பாடி....இவ்ளோ....பெ...ரி...சாமுதல் பாகமே!ஆகட்டும் ஆகட்டும்.
ReplyDeleteதமிழ்பறவை அண்ணா, ஈழவன் அவர்கள் தனது இலக்கியமேட்டில் உங்களுக்காகத் துலாக் கீறிக் காட்டியிருக்கிறார்.போய் பாருங்களேன்.
http://kalamm2.blogspot.com/2008/11/blog-post.html
நன்றி தர்ஷினி...'ராஜா வந்திருக்கிறார்' 'செவ்வாழை' கதைகள் ஞாபகம் வந்து விட்டது.
ReplyDeleteநன்றி குடுகுடுப்பையாரே...பெரிய படிப்பாளி எல்லாம் இல்லை...'நுனிப்புல்தான்'/.,.
ஹேமா,ஈழவன் பக்கம் சென்று பார்த்தேன்.நன்றி கீறிய ஈழவனுக்கும், தகவல் அறிவித்த உங்களுக்கும்...
நல்ல இருக்கு பதிவு .
ReplyDeleteஅப்புறமா மறுமொழியிலே சேட்டிங்க. தூள்.
"வயத்தில பொறந்த பிள்ளையைக்கூட ஒரு அடியாவது எப்பாவது அடிக்காம இருக்கமாட்டாங்க. ஒரு வெசவாவது வெய்வங்க.அது கூட இங்க பேசப்படாது"
முள் முடியில் வரும் வசனம்.
தி.ஜா.வின் மாஸ்டர் பீஸ் "சண்பகப்பூ". படிங்க .பின்னிஎடுப்பார்.
வருகைக்கு நன்றி ரவிசார்.
ReplyDelete//முள் முடியில் வரும் வசனம்.//
சரியாக நினைவிலில்லை வசனங்கள்.
'சண்பகப்பூ' பற்றிய அறிமுகத்திற்கு நன்றி சார். படிக்க வேண்டிய புத்தக லிஸ்ட்டில் அதையும் சேர்த்துவிடுகிறேன்.
நண்பரே ..
ReplyDeleteமிக அதிகம் புத்தகங்கள் படித்திருக்க்றீர்கள் என தெரிந்து கொண்டேன் ..
இந்த முதல் பதிவில் ..
நானும் சிறு வயது முதல் படிக்க ஆரம்பித்தேன் ..புத்தகங்களை ...
வரலாறு நாவல்களில் ஆர்வம் அதிகரிக்க ..
சாண்டில்யன் ..கல்கி ..இவர்களின் கதைகளும் நிறையவே படித்திருக்கிறேன் ..
நல்ல பல மலரும் நினைவுகளை அசை போட வைத்தது உங்கள் பதிவு ..
தொடரட்டும் ...உங்கள் படைப்புகள் ...
வாழ்த்துக்களோடு
விஷ்ணு
நன்றி நண்பரே...
ReplyDeleteநான் இன்னும் முக்கியமான புத்தகங்களை படிக்கவே இல்லை.அது பற்றி தனியாக விவாதிப்போம்..
அப்பாடா.. இந்த தொடர்ல என்னோட வாசிப்பை ஒத்த ஒருத்தரோட பதிவு.. அப்படியே என்னோட அனுபவங்கள் தமிழ்.. நன்றி..
ReplyDeleteவாங்க வெண்பூ....
ReplyDeleteரசனைகள் ஒத்துப் போனதில் எனக்கும் மகிழ்ச்சி....
Raja vandhu irukirar a very good story, the mangamma (little girl) Rocks.....
ReplyDeleteBecause of the peoples like that, Still we are getting rain .