Sunday, November 16, 2008

நினைவில் நின்ற புத்தகங்கள்- இரண்டாம் பாகம்

                சென்ற பதிவின் தொடர்ச்சி இது. முதல் பதிவை ப் படிக்காவிடினும் பரவாயில்லை.அப்படியொன்றும் கெட்டுப்போய் விடாது.
கல்லூரி சென்றபின் படிப்பார்வம் குறைந்துவிட்டது என்பது கசப்பான உண்மை.இளங்கலை முடித்தபின் வேலைக்குப் போராட்டம்.வேலை கிடைத்தபின் நல்ல வேலைக்குப் போராட்டம். இத்தகைய காலங்களில் எனக்கு ஆறுதலாயிருந்தது விகடன் மட்டுமே.அதன்மூலம்தான் என்னால் ஓரளவிற்கு பிற எழுத்தாளர்களைப் பற்றி அறிய முடிந்தது. என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டுமென மனப்பட்டியல் போட முடிந்தது. பின்பு முதுநிலை படிப்பின் போது ஓரளவிற்கு புத்தகங்கள் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. பின் வேலை கிடைத்து வட இந்தியா வந்தபின் மறுபடியும் வாய்ப்புக் குறைந்துவிட்டது. இருந்தும் தமிழ் இணையத்தின் மூலம் என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். படிக்க வேண்டிய, வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் நீண்டுகொண்டே வருகிறது. இத்தோடு முன்னுரையை நிறுத்தி விடுகிறேன். இதுவரை படித்த புத்தகங்களின் நினைவு அலையில் சற்றுக் கால் இல்லையில்லை விரல்நுனியாவது நனைப்போம்.  
துளசிதளம்,மீண்டும் துளசி: பள்ளி இறுதி நாட்களில் படித்தது. எண்டமூரி வீரேந்திரநாத் தெலுங்கில் எழுதி, சுசீலா கனகதுர்காவினால் மொழிபெயர்க்கப் பட்டது. நான் எப்போது ப‌டித்தாலும் ஒவ்வொரு முறையும் விறுவிறுப்போடிருக்கும்.  


ஜெயகாந்தன் சிறுகதைகள்: கல்லூரியில் படிக்கையில் நண்பனொருவன் படிக்கக் கொடுத்தது. இதில் படித்த சிறுகதைகளின் வரிகள் பல, என் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் செயலாற்ற, செயலற்றுப் போக உதவி இருக்கின்றது. இதில் மனதில் நின்ற சிறுகதைகள்:‍  
1.சிலுவை: கன்னியாஸ்திரீயாக விரும்பிய இளம்பெண்ணில் வேர் விட்ட‌ பருவக்காதல் நினைப்பும், அதன் விளைவும். முடிவு 'நச்'.  
2.அக்னிப்பிரவேசம்: ஒரு திரைப்படம் பார்த்த உணர்வை எழுத்துக்களில் ஏற்படுத்தியது. இக்கதை பற்றி அளவுக்கதிகமாக அலசி ஆராயப் பட்டதால் விட்டுவிடுவோம். 3.இருளைத் தேடி: 'நிர்வாணம் தான் அழகு. காட்டிலுள்ள் மான், மயில்களுக்கு உடை அணிவித்தால் நன்றாக இருக்குமா...?ஏன் மனிதன் மட்டும்.?' விபச்சாரத் தொழிலை விடுத்து வேறு வேலை தேடுபவள், தோழியின் ஆலோசனைப் படி அவளின் தொழிலான, ஓவியர்களுக்கு நிர்வாண மாடலாக இருக்க அரைகுறையாகச் சம்மதித்துப் பின் ஓவியக் களத்தில் அனைவரின் முன் வெளிச்சத்தில் நிர்வாணமாய் இருப்பதை விட இருளில் விபச்சாரியாய் இருப்பது மேல் என மறுபடியும் செல்கிறாள் இருளைத்தேடி. 4.குருபீடம்: சோம்பேறியைத் திருத்த குருவே, சிஷ்யனாய் மாறி இறுதியில் யார் குருவென உணரவைத்த கதை.  
'ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது', 'புதுச் செருப்பு கடிக்கும்' இன்னும் பல பெயர் மறந்த, கதை மறக்காத கதைகள். அடித்தரப்பு மக்களின் வாழ்க்கையை 'கேன்டிட் கேமரா' போல் எடுத்துச் சொன்னவை ஜெயகாந்தனின் எழுத்துக்கள்.


சித்திரப்பாவை: அகிலனின் படைப்பு. கதைநாயகன் ஓவியனாய் இருந்ததால் அதிக ஆர்வமெடுத்துப் படித்தேன். கொஞ்சம் பழையபடம் பார்த்த உணர்வு,.  


பஞ்சும், பசியும்: தொ.மு.சி. ரகுநாதன் படைப்பு. இதுவும் பழைய தமிழ்ப்படம் பார்த்த அலுப்பூட்டும் உணர்வைத்தான் கொடுத்தது. கம்யூனிஸ்ட் போராட்டம் கலந்திருந்தது. மனதில் ஒட்டவில்லை.  


மெர்க்குரிப்பூக்கள், இரும்புக் குதிரைகள்: எம்.ஐ.டி யில் படித்துக் கொண்டிருந்த போது பிரேக் பற்றிப் பாடமெடுத்த எனது ஆசிரியர் சொல்லிக் கேள்விப்பட்டுதான் 'இரும்புக் குதிரைகள்' படித்தேன்.(அவர் மலையாளி.ஆனால் அவர் தமிழ்,ஆங்கில இலக்கியத்தில் ஆர்வமிக்கவர். நன்கு படமும் வரைவார். துறை சார் அறிவிலும் அவர் மாஸ்டர்.) எனக்கு முடிவைத் தவிர, நாவல் நன்கு பிடித்திருந்தது.இதைப் பற்றி நண்பர் வசந்தகுமாரின் இப்பதிவிலும், பின்னூட்டத்திலும் படித்துக் கொள்ளுங்கள்.
'மெர்க்குரிப் பூக்கள்' இப்போதும் அடிக்கடி வாசிக்கிற புத்தகம். கணேசன், கோபாலன், சாவித்திரி,சியாமளி,சங்கரன், இன்ஸ்பெக்டர் பெருமாள், ஃபாக்டரி முதலாளி இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும்(நல்லவரோ, கெட்டவரோ) செதுக்கி இருப்பார். இன்றும் எங்காவது 'வீடு' எனும் வார்த்தை படிக்கையில், இந்நாவலில் வரும் "வீடென்று எதைச் சொல்லுவீர்" கவிதை நினைவுக்கு வரும். இதை விடுத்து பாலகுமாரனின் 'பூந்தோட்டம்' இன்னும் சில பெயர் மறந்த நாவல்கள். பாலகுமாரனின் எழுத்துநடை எனக்கு இன்னும் விருப்பம். அது ஒரு சுகானுபவம்.

சே குவேராவின் 'மோட்டார் சைக்கிள் பயணக் குறிப்புகள்': அடிக்கடி வாசிக்கும் மற்றுமொரு புத்தகம். அவ்வளவு வேலையிலும் அவர் நாட்குறிப்பு எழுதி இருக்கிறார் அதுவும் இலக்கியவாதி போல். மனிதர்களை மதித்த அவரின் பண்பு என்னைக் கவர்ந்தது. இதுபற்றிப் பிறிதொரு தனிப் பதிவே போடலாம்.  


துணையெழுத்து: எஸ்.ராமகிருஷ்ணின் எழுத்து இதயத்திற்கு அருகாமையில் கண்காட்சி நடத்தும் வல்லமை பெற்றவை. பல மனிதர்கள், பல கதைகள். எதைப் படித்தாலும், நாம் நினைத்து ,நம்மால் எழுத்தில் கொண்டுவரமுடியாமல் விடப் பட்ட கணங்களை அழகாக வெளிப்படுத்துவார். எனது இப்போதைய ஃபேவரைட் இவர்தான். 'கதாவிலாசம்' படித்திருக்கிறேன்.


செம்பருத்தி: தி.ஜானகிராமனைப் பற்றிக் கேள்விப் படாத காலத்திலேயே மூன்று, நான்கு முறைகள் இப்புத்தகத்தைப் படித்திருக்கிறேன். கதையும், சம்பவங்களும் நினைவிருக்கும் அளவுக்கு, கதாபாத்திரப் பெயர்கள் நினைவிலில்லை. என்னை மிகவும் கவர்ந்த நாவல். மறுபடியும் படிக்க ஆசை. 'மோகமுள்' இன்னும் படிக்கவில்லை. இதுவரை நான் படித்த எல்லாமே ஒருவித ஒழுங்கில்லாமல் கிடைத்ததை எல்லாம் படித்து வந்திருக்கிறேன். 
இப்பதிவில் நிறைய விடுபட்டுள்ளது எனினும் இதற்கு மேல் பதிவைத் தொடர எனக்கு விருப்பமில்லை.  
இத்தொடர் பதிவைத் தொடர நான் அழைப்பது  
1.ரவி ஷங்கர்   
2. தர்ஷினி 
3.குடுகுடுப்பையார்  


ஆள விடுங்கப்பா... பதிவு போட்டு முடிக்கிறதுக்குள்ள ஷ் அப்பா... ஓவரா கண்ணக் கட்டுதே...

31 comments:

  1. இவ்ளோ புத்தகங்களை எப்படித்தான் படிச்சிங்களோ?

    முதல் பாகத்தில் உள்ள ஏதோ ஒன்று மிஸ்ஸிங்

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி அத்திரி...
    எல்லாம் காலப்போக்குல படிச்சதுதான்.
    //முதல் பாகத்தில் உள்ள ஏதோ ஒன்று மிஸ்ஸிங் //
    கண்டிப்பாக ஒத்துக் கொள்ள வேண்டும். பதிவு ஒரு இலக்கில்லாமல் போய் விட்டது. நிறைய யோசித்து எதை எழுதுவது,எதை விடுவது எனத் தெரியாமல் திணறி விட்டேன்.அடுத்த பதிவில் சரி செய்து கொள்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அத்திரி...

    ReplyDelete
  3. தமிழ்பறவை அண்ணா நீங்க நிறையப் படிச்சிருக்கிங்க.தெரிவு செய்த அருமையான நாவல்கள்.நான் படிக்கத் தேடிய நேரம் எனக்குக் கிடைக்கவில்லை.வாழ்வில நான் தவறவிட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று.

    சரி....அதெப்பிடி நீங்க புத்தகம் படிச்சு மாட்டிக்கிட்டதையெல்லம் சொல்லாம விடுவிங்க?சீக்கிரமா சொல்லுங்க.நானும் பாத்திட்டு சிரிக்கணும்.

    ReplyDelete
  4. உங்களுக்கு புத்தகம் வசிக்கும் பழக்கம் உள்ளது என்று எனக்கு நன்கு தெரியும் ஆனால் இவ்வளவு புத்தகம் வசிக்க எங்கே உங்களுக்கு நேரம் கிடைத்தது . உறக்கம் போக அமர்ந்து படித்திருந்தாலும் ,ஐயோ என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை , எப்படியோ இத்தனை புத்தகங்கள் உள்ளன என்பதாவது என்னக்கு தெரிய செய்தமைக்கு நன்றி

    ReplyDelete
  5. //தமிழ்பறவை அண்ணா நீங்க நிறையப் படிச்சிருக்கிங்க.தெரிவு செய்த அருமையான நாவல்கள்.//
    இல்லை ஹேமா... நிறையப் படிக்கலை.அரைகுறையாப் படிச்சிருக்கேன்.
    //அதெப்பிடி நீங்க புத்தகம் படிச்சு மாட்டிக்கிட்டதையெல்லம் சொல்லாம விடுவிங்க?//
    நான் மாட்டிக்கிறமாதிரியெல்லாம் புத்தகம் படிக்கலை. எங்க வீட்டுல எனக்கு முழுச்சுதந்திரம் உண்டு. படிப்பிலயும் அவங்களுக்குத் தேவையான மார்க் வாங்கினதுனால ஒண்ணும் கண்டுக்கலை.

    ReplyDelete
  6. //ஆனால் இவ்வளவு புத்தகம் வசிக்க எங்கே உங்களுக்கு நேரம் கிடைத்தது . உறக்கம் போக அமர்ந்து படித்திருந்தாலும் ,ஐயோ என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை ,//
    இதெல்லாம் வேலை இல்லாதப்போ படிச்சது தம்பி... இப்போ இன்னும் படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருக்கு.

    ReplyDelete
  7. நிறைவாக பண்ணியிருக்கிறீர்கள் தமிழ்பறவை.. வலைப்பூவையும் நன்கு அழகுபடுத்தியுள்ளீர்கள்..

    ReplyDelete
  8. நீங்க நெறய படிச்சிருக்கீங்க, நானும் என் பதிவை போடுறேன். ஆனா அதுல குறிப்பிட்ட புத்தகமெல்லாம் இருக்குமான்னு தெரியல.

    ReplyDelete
  9. அறிமுகமில்லாத பல புத்தகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது உங்கள் எழுத்து! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாங்க குடுகுடுப்பையாரே....
    பதிவைப் போடுங்க முதல்ல....


    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வீரசுந்தர்...

    ReplyDelete
  11. ஆழ்ந்த வாசிப்பனுபவம். நீங்க எம்.ஐ.டியா? பெரிய ஆளுங்க போல..

    ReplyDelete
  12. வாங்க கார்க்கி...
    உங்க வாசிப்புக்கு முன்னால இது கம்மிதான்.

    ReplyDelete
  13. யம்மாடியோவ்:-)
    எப்படிங்க இவ்ளோ புத்தகங்கள் படீச்சிங்க..

    ReplyDelete
  14. மன்னிக்கனும், அந்த blog-‍ல‌ பெயிண்டிங் அண்ட் க்ராஃப்ட் ஒன்லி.
    நீங்க சொன்னதால உங்க பின்னூட்டதிலேயே புக் பத்தி எழுதிடரேன்(ரொம்ப கம்மிதாங்க.......)
    ஆனால் ஒரு வாரம் ஆகும்.. பரவாயில்லையாங்க?
    வம்புல மாட்டிவிடனனும் எத்தன நாளா யோசிச்சிட்டுருந்தீங்க...

    ReplyDelete
  15. அப்புறம்... நீங்க வரைந்த படத்தை print out எடுத்து நான் வ‌ரைந்த்திருக்கிரேன்.... totaly differrence-ஆ இருக்கும்.
    நான் ஒண்ணு வரய அது ஒரு மாதிரி வந்திடுச்சு...

    ReplyDelete
  16. நல்ல பதிவு நண்பரே ...
    மிக அருமையாக நல்ல பல புத்தகங்களை அறிமுகம் செய்திருக்குறீர்கள் ...
    நீங்கள் வாசித்த பல புத்தகங்கள் எனக்கும் மிக பிடித்தவை ...அதிலும் ஜெயகாந்தனின்
    அனைத்து படைப்புகளும் எனக்கு பிடிக்கும் ...

    தொடரட்டும் உங்கள் சேவை ...

    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete
  17. //தமிழ்ப்பறவை கூறியது... பாலகுமாரனின் எழுத்துநடை எனக்கு இன்னும் விருப்பம். அது ஒரு சுகானுபவம்.//

    எனக்கும் இவரது எழுத்து நடை மிக பிடிக்கும் நண்பரே ..

    ReplyDelete
  18. முதல் பதிவை படித்து விட்டு வரலாம் என தான் நினைத்தேன் ..இதை படிக்க தொடங்கி ..அப்படியே தொடர்ந்து விட்டேன் ..அவ்வளவு அருமையாக சொல்லி இருக்குறீர்கள் ...இனி முதல் பதிவை பார்க்கிறேன் ....
    ( கொஞ்ச நாட்கள் வலைப்பக்கம் அருகில் வர இயலாமல் போய் விட்டது ..தவறாக எடுக்க வேண்டாம் )

    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete
  19. தாங்கள் வந்ததுமே என் வலைப்பூவில் வாசம் ஏறுகிறது நண்பரே...
    //கொஞ்ச நாட்கள் வலைப்பக்கம் அருகில் வர இயலாமல் போய் விட்டது //
    அதற்கென்ன இப்போதுதான் இரு கவிதைகளுடன் வந்திருக்கிறீர்களெ...

    ReplyDelete
  20. \\துளசிதளம்,மீண்டும் துளசி: பள்ளி இறுதி நாட்களில் படித்தது. எண்டமூரி வீரேந்திரநாத் தெலுங்கில் எழுதி, சுசீலா கனகதுர்காவினால் மொழிபெயர்க்கப் பட்டது. நான் எப்போது ப‌டித்தாலும் ஒவ்வொரு முறையும் விறுவிறுப்போடிருக்கும். \\
    காசனோவா' 99 படித்துள்ளீர்களா?? அருமையான, அட்டகாசமான கதை. அதே போல, 'பந்தம் பவித்ரம்' என்ற கதையும். எண்டமூரியின் மாற்ற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும்.

    ReplyDelete
  21. வாங்க அரவிந்த்...
    நீங்கள் சொன்ன புத்தகங்கள் படித்ததில்லை. நூல் அறிமுகத்திற்கு நன்றி.இனி தேடிப் பார்த்துப் படித்துப் பார்க்கிறேன்.
    என்டமூரியின் 'நாலாவது தூண்' படித்திருக்கிறேன். இன்னுமொரு குடும்ப நாவல் (பெயர் மற்ந்து விட்டது. தலைப்பில் 'பறவைகள்' எனும் வார்த்தை வருமென நினைக்கிறேன்.)

    ReplyDelete
  22. ஆஹா.. இந்த பதிவுல என்னை தாண்டி போய்ட்டீங்க.. துளசிதளம் தவிர்த்து வேற எதையுமே படிச்சதில்லை.. அட போங்கப்பா.. இனிமே இந்த தொடர்ல யார் எழுதுனாலும் நான் படிக்கப் போறதில்ல.. :)))

    ReplyDelete
  23. வாங்க வெண்பூ...
    //ஆஹா.. இந்த பதிவுல என்னை தாண்டி போய்ட்டீங்க.. //
    தாண்டிப் போயிரல.. நான் இந்தப் புத்தகங்கள் படிச்ச போது நீங்க, நான் படிக்காத வேற புத்தகங்கள் படிச்சிருப்பீங்க...
    உங்க அனுபவங்களையும் எழுதுங்க வெண்பூ சார்....

    ReplyDelete
  24. முக்கியமா சொல்ல மறந்துடேன், நம்பூதிரி,தேவதை, சூனியம்,பாம்பு கதைகள்லாம் படிசிருக்கேன்.. ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.
    புறாணக்கதைகளும் நிறைய படிதிருக்கிறேன் பெயர்கள்தான் ஞாபகம் இல்லை...
    //ஆள விடுங்கப்பா... பதிவு போட்டு முடிக்கிறதுக்குள்ள ஷ் அப்பா... ஓவரா கண்ணக் கட்டுதே... //
    repeatu....

    ReplyDelete
  25. சின்ன வயசுலலாம் புக்ஸ் படிக்கற பழக்கம் இல்ல.7,8 வது படிக்கும் போதுதான் காமிக்ஸ், அம்புலிமாமா, ராணி முத்து இப்படி கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சது....
    +1,+2 படிக்கும் போது அம்மா, லக்ஷ்மி, ரமணிசந்திரன், அனுராதா ரமணன், காஞ்சனா ஜெயதிலகர் இதெல்லாம் படிப்பாங்க.. (இதெல்லாம் அம்மா படிக்கதுக்கு முன்னாடியே நான் படிசுடுவேன்... பாடப்புத்தகம் படிக்கறனோ இல்லயோ ..அதெல்லாம் வேற விஷயம்)
    +1 +2படிக்கும் போது oliver twist ... செவ்வாழையும் மறக்கமுடியாது.
    முடிச்சபிறகு எந்த புக் கெடச்சாலும் படிப்பேன்....
    அப்பபடிச்சதுதான் சுஜாதா... ராஜேஷ்குமார்...சுபா..(க்ரைம் நாவல்ங்க மட்டும் மொத்ததையும் முடிசுட்டுதான் வைப்பேன்)...அப்பறம் ஒ.ஹென்றி யோட "கடைசி இலை" ... சுஜாதாவோட " என் இனிய இயந்திரா, மீன்டும் ஜினோ, கரையெல்லாம் ஷென்பகப்பூ, நைலான் கயிறு, பேர் நியாபகம் இல்லாத‌ சில புக்ஸ்..
    பட்டுகோட்டை பிரபாகரோட‌ ஒரு சில புத்தகம்..
    பிற நாவல்ங்க மட்டும் 200 300 படிச்சிருப்பேன்....
    விவேகானந்த்தரோட "ராஜயோகம், பக்தியோகம்" பிறகு காமராஜரோட சுயவரலாறு...
    ending tommorrow...

    ReplyDelete
  26. பதிவாகூட போட்டிருக்கலாம். ஆனா என்ன பண்றது..என்னோட ப்ளாக்ல " paintings மட்டும் இருக்கட்டும்னு நினைத்தேன். ஆனா சமையல் குறிப்புகளும் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்..இன்னும் முடிவு பண்ணல..(என்ன பண்றது எல்லாரும் சமையல் நல்லா இருக்குன்னு புகழ்ந்துதள்ளிறாங்க..! நம்புங்கப்பா..plz)

    சின்ன வயசுல படிசதெல்லாம் அந்தளவுக்கு நியாபகம் இல்ல..
    P.G.முடிச்சபிறகு,இப்ப ஒரு வருடமாகத்தான் "கல்கியோட பொன்னியின் செல்வன்"இதுக்கு முன்னாடி ரேடியோலத்தான் கேட்டிருந்தேன்), சுஜாதாவோட "பதவிக்காக","கனையாழி","புறனானூறு ஒர் எளிய அறிமுகம்"..மனோஜோட "புனைவின் நிழல்", லா.ச.ரா வோட "புத்ர", ஆ.மாதவனோட"கிருஷ்ணப்பருந்து", தி.ஜானகிராமனோட "அம்மா வந்தாள்","மோகமுள்","உயிர்தேன்"(மறக்க முடியாத சில புத்தகங்கள்)பிறகு "மலர் மஞ்சம்"..அசோகமித்திரனின் "சிறுகதைகள்" (150 படிச்சிருக்கேன்) சி.சு.செல்லப்பாவோட "வாடிவாசல்", படிச்சுட்டே இருக்கறது"ஜே.ஜே. சில குறிப்புகள், ஜி. நாகராஜனின் ஆக்கங்கள், சாரு நிவேதிதாவின் 0 டிகிரி,". கு.ப.ரா வோட எழுத்துக்கள் 7,8 புக்கோ இருக்கு இன்னும் ஆரம்பிக்கல.படிசதிலேயே பிடிகாதது" வா.மு.கோமு வோட கள்ளி". படிகணும்னு நெனச்சு ஆரம்பிச்சு பாதிலே வெச்சது"ஜெயமோகனோட "பின் தொடரும் நிழல்", ப.சிங்காரதின்‍ "புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால்"(எதனாலேன்னு தெரியல..)

    english நாவல்கள் எதனாலேயோ கொஞ்சம்(ரொம்பவே...!)பிடிக்கற‌து இல்ல..ஆனா படிசதுன்னு பார்த்தா" anne frankoda-"the diary of a young girl" roald dahl- "danny the champion ofthe world", john grey- men are from mars women are from venus"நாவ‌ல்ங்க தவிர ஒரளவுக்கு tony busan-how to mind map, master your memory,age broof your brain,tony and barry buzan-"The mind map book" usefulla இருக்கு..

    எனக்கு தெரிந்து இவ்வளவுதான்(அதைவிட ஞாபகம் வந்தது இவ்வளவுதான்..)
    தொடர் பதிவிற்கு அழைத்ததற்க்கு ரொம்ப நன்றிங்க...

    ReplyDelete
  27. (ச்சும்மா போட்ட படம்)‍ படத்தோட பின்னூட்டதில் போட்டுவிட்டேன்.. மன்னிக்கவும்..அதுதான் இந்த வேலை...

    ReplyDelete
  28. அங்கேயும் வெளியிட்டுவிட்டேன். இங்கும் வெளியிட்டு விட்டேன். 'ச்சும்மா போட்ட படம்' பின்னூட்டத்தை அழித்து விடவா...?

    ReplyDelete
  29. இந்த தொடர்பதிவு விரைவில்,தாமதத்திற்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  30. பரவாயில்லை குடுகுடுப்பையாரே....நேரம் கிடைக்கையில் எழுதினால் போதும்....

    ReplyDelete
  31. போட்டாச்சு, ஆனா அதிர்ச்சில ஆடிப்போயிருவீங்க.
    இதுதான் அந்த அதிர்ச்சி

    ReplyDelete