Saturday, November 15, 2008

ச்சும்மா...

ஸ்டிக்கர் பொட்டு
நகத்துண்டுகள் 
கிழிந்த டிக்கட்டுகள்
சாக்லெட்கவர்
தலைமுடி
நிரம்பியது பர்ஸ் 
உனது காதலைத் தவிர...  

ஐடி வேலை
ஐந்திலக்க சம்பளம் 
ஐந்தாறு கடனட்டைகள் 
ஐநூறுரூபாய் நோட்டுகள் 
நிரம்பியது பர்ஸ் 
வெயிட்டிங் லிஸ்ட்டில் 
உனது காதல்....

33 comments:

  1. "ச்சும்மா..."
    வாவ்....சூப்பரோ சூப்பர்.என்ன சொல்லன்னு வரல.
    பறவை காதலில் குளிக்கிறதோ!

    ReplyDelete
  2. //வாவ்....சூப்பரோ சூப்பர்.என்ன சொல்லன்னு வரல.//

    நல்ல வஞ்சப் புகழ்ச்சியணி ஹேமா... கவிஞரல்லவா அதுதான் தெளித்துவிட்டுப் போயிருக்கிறீர்கள்...

    //பறவை காதலில் குளிக்கிறதோ!
    //
    இங்க இருக்க குளிர்ல காலையில குளிக்கிறதுக்கே கஷ்டப்பட வேண்டியதா இருக்கு... இதுல காதலில் குளிக்கிறதுதான் அவசியமோ...?
    ஏதோ ச்சும்மா கிறுக்குனதுக்குள்ள இவ்ளோ பில்டப்பா,,,?

    ReplyDelete
  3. வருகைக்கும், நடுநிலை விமர்சனத்துக்கும் நன்றி முரளி சார்...

    ReplyDelete
  4. காதல் வானில் சிறகடித்துப் பறக்கின்றது பறவை....

    ReplyDelete
  5. என்னாச்சு திடீர்னு.. நல்லாத்தானே இருந்ததா சொல்றாய்ங்க..

    ReplyDelete
  6. //காதல் வானில் சிறகடித்துப் பறக்கின்றது பறவை.... //
    ஆஹா... கிளப்பிவிட ஆரம்பிச்சாச்சா....

    //என்னாச்சு திடீர்னு.. நல்லாத்தானே இருந்ததா சொல்றாய்ங்க.. //
    இப்பயும் நல்லாத்தான் இருக்கேன் தாமிரா...ச்சும்மா கவுஜ எழுதிப் பார்க்கலாமேன்னு முயற்சி..
    ஆனா ஒவ்வொருத்தர் ரியாக்ஷனைப் பார்த்தபின்னாடிதான், என் கவுஜயோட தாக்கம் எனக்குப் புரிஞ்சது.

    ReplyDelete
  7. சீ...சீ...இல்ல தமிழ்பறவை அண்ணா.உண்மையாவே கவிதையை சிரித்தபடி ரசித்தேன்.பாருங்கள் நீங்கள் பதிவிட்டு கொஞ்ச நேரத்தில் கவனித்தேன்.இங்கு நடு இரவு நேரம் பின்னூட்டமிட்டேன்.அவ்வளவு...
    ரசிப்பின் உச்சம்.உண்மை.

    ReplyDelete
  8. நல்லா இருக்கு.

    காதல் கி.மு. அண்ட் கி.பி?

    ReplyDelete
  9. நல்ல இருக்கு.

    காதல் கி.மு. அண்ட் கி.பி?

    ReplyDelete
  10. வாங்க ரவி சார்...
    காதல் வே.மு. அன்ட் வே.பி.
    உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருந்தேன்.

    ReplyDelete
  11. நல்லாருக்கு கவிதை

    ReplyDelete
  12. உங்களுக்காவது காத்திருப்போர் பட்டியல்.
    எனக்கெல்லாம் பட்டியலில் கூட இடம் இல்லை .

    ReplyDelete
  13. ம்ம்ம்ம்ம்ம்..... நடக்கட்டும்... நடக்கட்டும்...

    ReplyDelete
  14. வருகைக்கும், கருத்துக்கும்(...?!) நன்றி தனா, தர்ஷிணி

    ReplyDelete
  15. கவிதை ரொம்ப சூப்பர்...
    experiance- ஒட எழுதியிருக்கீங்க.....

    ReplyDelete
  16. கவிதை ஓ.கே.. ஆனா ஒண்ணு போட மறந்துட்டேன்....
    அது டிஸ்கி:
    கவிதை சொந்த அனுபவமில்லை....

    ReplyDelete
  17. step by step-ஆ explain பண்ணியிருக்காங்க....
    அப்ப nexttime சூப்பரா போட்ட்ருவீங்க....

    ReplyDelete
  18. வாழ்த்துக்கு நன்றி... எனக்கும் அதைப் பார்த்தவுடன் நம்பிக்கை வந்துச்சு...
    என்ன நேரம்தான் ஒதுக்கணும்.ம்ம்ம்ம் பார்க்கலாம்.
    நீங்க அதுக்கு முன்னாடியே படம் போட்ருவீங்கன்னு நம்புறேன்....

    ReplyDelete
  19. எல்லா நேரத்திலும் பர்ஸ் நிரம்புகிறது .
    காதலை இரண்டிடமும் கச்சிதமாக வெளிப்படுதியுள்ளதற்கு .
    காதலர்களின் மனம் உங்களிடம் உங்களிடம் உள்ளது தெளிவாகிறது .
    முன்பு யார் காதல்லுக்காக ????
    பின்பு யாருடைய காதல் ???
    என்பதை சொல்லாமல் சொன்னதற்கு நன்றி

    ReplyDelete
  20. ஹலோ பறவை,

    தொடர் ஓட்டம் இப்போது வேண்டாம் மன்னித்துவிடுங்கள் .

    ReplyDelete
  21. ரவி சார்...
    தொடர் ஓட்டம் இப்போது வேண்டாம் என்றீர்கள். அப்போ எப்போவாவது போடுவீர்கள் என நம்புகிறேன்.
    இல்லாவிட்டாலும் கூட உங்கள் பதிவுகளில் நீங்கள் அவ்வப்போது பதிந்துவரும் ,நீங்கள் படித்த வரிகளே இத் தொடர்பதிவின் சிறுதுளிகளென நான் எண்ணிக் கொள்கிறேன்.

    தம்பி தனா...
    புரிந்தால் சரிதான்...

    ReplyDelete
  22. நல்ல கவிதை நண்பரே ...
    மிக அருமை ...
    எதார்த்தமாக இருக்கிறது
    கவிதை வரிகள் ...
    தொடரட்டும்
    தொடர்ந்து எழுதுங்கள் ...

    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete
  23. கடந்த காலமும் ...
    நிகழ் காலமும்
    காதலில் ...
    என எடுத்துகொள்ளலாமா நண்பரே ..

    :-)))

    ReplyDelete
  24. வாருங்கள் விஷ்ணு...
    இது ச்சும்மா போட்து கவிதைன்னு கூட லேபிள் குடுக்கலை. இதுக்கெல்லாம் விமர்சனமே தேவையில்லை..
    //கடந்த காலமும் ...
    நிகழ் காலமும்
    காதலில் ...//
    அப்படியில்லை... எல்லாக்காலமும்தான் ஆனால் கண்டிசன் வேலைக்கு முன், வேலைக்குப் பின் என எடுத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  25. நான் இந்த தலைப்பை வழிமொழிகிறேன் .
    " வேலைக்கு முன் ,வேலைக்கு பின் "
    நான் இன்னும் ஒரு தலைப்பை மும்மொழிகிறேன் .
    "மேலூர் காரன் காதல்"

    ReplyDelete
  26. தம்பி தனா...
    அது யார் 'மேலூர்காரன்'?

    ReplyDelete
  27. அடடா... அருமை.. பின்னி விட்டீர்கள்..

    \\வெயிட்டிங் லிஸ்ட்டில்
    உனது காதல்....\\

    மனசு, வலிக்குது...

    But, எப்ப confirm ஆகும்...

    ReplyDelete
  28. வாங்க அரவிந்த்...
    இதுக்கு மேல கன்ஃபர்ம் எல்லாம் ஆகாதுன்னுதான் நினைக்கிறேன்...
    வெட்டியா இருந்தப்போ ஒட்டியது காதல்...
    இவனுக்கு வேலை வந்தபின் அதற்கு வேலை இல்லை....

    ReplyDelete
  29. \\வெட்டியா இருந்தப்போ ஒட்டியது காதல்...
    இவனுக்கு வேலை வந்தபின் அதற்கு வேலை இல்லை....\\

    கவிதை.. கவிதை...

    ReplyDelete
  30. வாவ் வாவ் வாவ் சூப்பர்ப்!!!!!

    ReplyDelete
  31. வாங்க புது மாப்பிள்ளை..
    மொக்கைக் கவிதைக்கு இவ்வளோ எஃபக்டா...?!
    எனிஹவ் நன்றிகள்...

    ReplyDelete
  32. kallile kalaivannam kandavar allava naam....ungal colour vannam ungal kaivannathil serapaga thaan erunthadhu kuraigalai nengal solli vitteer..antha pennin mugathil oru yethirparpu... azhagai erunthadhu oviyam...kavithai patri oru vari ithanai pursil nerainthu erunthum kathal waitinglist konjam yosikka vaikiradhu enna seiya kalikaala kathal.........matrapadi kavithai sugamai erunthadhu...

    ReplyDelete