Saturday, January 2, 2010

ஐம்பதாவது பதிவு...தமிழ்மண விருதுத் தேர்வு...அவதார்...இன்ன பிற...

    சென்ற வருடப் புத்தாண்டு ரெயில் பயணத்திலேயே கழிந்ததால் வருட முதல் நாளே குளிக்க முடியாமல் போய்விட்டது. இவ்வருடம் அவ்வாறு அமையவில்லை.வீட்டிலேயேதான் இருந்தேன். நண்பர்கள் புடைசூழ இரவு சிறப்பு சிக்கன் விருந்து( நாங்களே தயாரித்தது) மற்றும் இதர திரவ சைட் டிஷ்களுடன் கோலாகலமாகப் போனது.சென்ற வருடம் எதுவும் புத்தாண்டு சபதம் போடவில்லை. அதைத் தொடர்வதே சுகமெனப் பட்டதால் இவ்வருடமும் நோ ரெசொல்யூசன். வேறெங்கும் வெளியில் செல்ல வில்லை.தொலைக்காட்சிகளிலேயே விதவிதமான பெயர்களில் அரைகுறை மான்கள்,மயில்கள் ஆடியதையே பார்க்க நேர்ந்துவிட்டது. அதைவிடக் கொடுமை குழந்தைகள் நடனநிகழ்ச்சியில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்களும், அதற்கு அவர்கள் கொடுக்கும் விரக தாப முக,உடலசைவுகளும்தான்.இதையெல்லாம் பார்த்துட்டு ‘தம்பி’ மாதவன் மாதிரித்தான் கத்தினேன். ‘இப்ப என்ன செய்ய?’ முடிப்பதற்குள் தெறித்து வந்தது நண்பர்களின் பதில் ‘*******’

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

     2008ம் ஆண்டு மத்தியில் ஏதோ பொழுதுபோக்காக ஆரம்பித்த பதிவெழுதும் பழக்கம் ஒன்றரை ஆண்டு கடந்தும் அதே நிலையில் இருப்பது மகிழ்வே. எதைப் பதிவெழுதுவது என்று சிந்திப்பதை விட எதை எல்லாம் எழுதக்கூடாது என்று சிந்தித்ததால், வெகு வெகு நாட்களுக்குப் பிறகு இந்த ஐம்பதாவது பதிவு வந்துவிட்டது.அதுக்காக எழுதிய 50 பதிவுகளும் உருப்படியானதா என்றெல்லாம் கேட்கக் கூடாது.எனது அளவுகோல், என்னை ஒரு வாசகன் என்ற நிலையிலேயே பிடித்து வைத்திருப்பதால் இதுவே தொடரட்டும் என விட்டுவிடுகிறேன்.இதுவரை ஊக்கம் தந்து உதவிய அனைவருக்கும் நன்றிகளை இத்தருணத்தில் தந்துவிடுகிறேன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

   ந்தாண்டு தமிழ்மண விருதுகளுக்குக் கொஞ்சம் போட்டி குறைந்த ‘ஓவியம்/ஒளிப்படம்’ பிரிவுகளுக்கு நான் பரிந்துரை செய்த ‘ரமணர் கோட்டோவியம்’ இடுகை முதல்  கட்ட பதிவர் வாக்கெடுப்பில் தேர்வாகி டாப் டென்னில் வந்துள்ளது. வாக்களித்த அனைவருக்கும் நன்றி.பார்க்காததால் வாக்களிக்காமல் போனவர்களுக்கும் நன்றிகள்.
   இரண்டாவது கட்ட வாக்கெடுப்பிலும் தங்கள் ஜனநாயகக் கடமையைத் தவறாமல் செய்யுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.(ஜனநாயகக் கடமையா...அப்படின்னா என்ன என்று கேட்பவர்களின் ப்ளாக் ஹேக் செய்யப் படுவதாக...)அதற்கான விபரங்கள் இங்கே...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

   நேற்றே போகலாம் எனத் திட்டமிட்டும், ஷோ டைம் சரிவர அமையாததால் இன்றுதான் போக முடிந்தது ‘ அவதார்’ படத்துக்கு. எல்லோரும் முப்பரிமாணத்தில் அனுபவித்துப் பார்க்க, என்னால் ஒரு பரிமாணம் குறைவாகத்தான் பார்க்க முடிந்தது. ஆம். இந்தோரில் எந்த ஒரு தியேட்டரிலும் 3D முறையில் திரையிடவில்லை.எல்லா ‘நவ்விக்களும்’ ‘ஹை,ஹை’ என்று ஹிந்தியில்தான் பேசிக் கொல்கிறார்கள்.கதை முன்பே தெரியுமென்பதால் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. தமிழ், தெலுங்கு ஆக்‌ஷன், செண்டிமெண்டுகளுக்குச் சற்றும் சளைத்ததில்லை இக்கதையும். ஆனால் திரையில் பார்த்த அனுபவம்..பரமசுகம்.இதெல்லாம் நிஜமா இல்லை CG யா...’நவி’க்களாக வருபவர்கள் மனிதர்களா இல்லை அனிமேஷன் ஆ...இப்படிப் பல ’ஆ’க்களால் வாய் பிளந்து கொண்டது எல்லாம் படம் முடிந்து வெளியில் வருகையில்தான். படம் பார்க்கையில் எதுவுமே தோன்றவில்லை.ஒருவித மாயாலோகத்தில் இருப்பது போன்ற உணர்வுதான்.மிஸ் பண்ணிவிடாதீர்கள். தியேட்டரில் மட்டுமே பார்க்கவும்.படம் முடிந்து வருகையில் நண்பன் சொன்னான்,’ செமப் படம்டா. எனக்கே வாலு முளைச்சு சுத்துறமாதிரி ஒரு ஃபீலிங்’ என்று.அடுத்தவன் முடித்து வைத்தான்,’இதென்னமோ நீ புதுசாச் சொல்ற’ என்று.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

  ந்த மாதிரி கண்டது, கழியது எழுதினா அதுக்கு சரவண பவன் மெனுலிஸ்ட்ல இருக்கிற மாதிரி ஏதாச்சும் பேர் வைக்கணுமாமே..அதெல்லாம் இதே ஃப்ளேவர்ல மாசத்துக்கு ஒண்ணு,ரெண்டு  எழுதுறவங்களுக்கு... நாமதான் அடுத்த கண்டது, கழியது 100வது பதிவாத்தான் போடப் போறோம்.2011க்குள்ள ஒரு பேரு சிக்கிடாது. பார்ப்போம்.

  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

20 comments:

  1. வாழ்த்துகள் சகா..

    என்னுடைய இரண்டு பதிவும் வந்திருக்கு.. ஆனா இனிமேல்தான் போட்டியே.. வாசகர்களும் களத்தில் இறங்குவதால் பல அதிர்ச்சி காத்திருக்குன்னு நினைக்கிறேன்..

    பேருதானே? நம்ம ராசா how to name itன்னு பேரு வச்சாரு... நீங்க என்ன பேரு வைக்கலாம்னோ, என்னத்த சொல்லன்னோ வைங்களேன்.. :)))

    ReplyDelete
  2. கார்க்கி கூறியது...

    //என்னத்த சொல்லன்னோ வைங்களேன்.. :)))//

    சூப்பர்ங்க.இதே வைங்க தமிழ்ப்பறவை.

    பதிவு சுவராஸ்யமா நல்லா இருக்கு.

    ReplyDelete
  3. நான் காமெடி சானல்கள் மட்டும்தான் பார்க்கிறேன் தமிழ்ல்ல.

    50க்கு வாழ்த்துக்கள். :)

    முதல் கட்டத்தில் ஜனநாயகக் கடமை ஆற்றத் தவறிட்டேன். இம்முறை ஆற்றிடறேன்.

    எனக்கும் 'கனகதாரா'வுக்கும் எப்பவுமே ஒத்துவராது என்பதால் இனிமேல் தான் அவதார் பார்க்கணும். :)

    பேரா? ஹிஹி.

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு. தமிழ்மண விருதுப் பட்டியலில் தேர்வானதற்கு வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  5. 50க்கு வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  6. அண்ணா நிறைவான வாழ்த்துக்கள் 50 வயசுக்கும் ,தமிழ்மண வாக்கெடுப்பில் வெற்றிக்கும் ,புத்தாணடுக்கும்
    ...க்கும்...எல்லாத்துக்கும்.

    போன வருஷம் குளிச்சதுக்கு அப்புறம் இந்த வருஷம்தானா குளிச்சீங்க.அதான் அண்ணைக்கு என்னமோ மணக்குதுன்னு நான் இங்க தேடிக்கிட்டு இருந்தேன்....!

    ReplyDelete
  7. @கார்க்கி...
    நன்றி சகா...உங்களுக்கும் வாழ்த்துக்கள்..
    பேரு நல்லா இருக்கு சகா..எனக்கு ‘ஹௌ டூ நேம் இட்’ ஏ பிடிச்சிருக்கு. அதையே வைக்கலாம்னு இருக்கேன். நன்றி...

    @ரவிஷங்கர்...
    நன்றி ரவி சார்...

    @கார்த்திக்...
    //நான் காமெடி சானல்கள் மட்டும்தான் பார்க்கிறேன் தமிழ்ல்ல.//
    சன்,ஜெயா டிவிக்களோட நியூஸ் சேனல்ஸா...??
    3டியில் அவதார் பார்ப்பதுதான் உத்தமம்...

    @சரவணகுமார்...
    நன்றி நண்பரே...

    @குசும்பன்...
    நன்றி குசும்பரே...

    @ஹேமா...
    //50 வயசுக்கும்//
    வயசா.. அவ்வ்வ்வ்
    வாழ்த்துக்கு நன்றி ஹேமா...

    ReplyDelete
  8. //3டியில் அவதார் பார்ப்பதுதான்//

    சரியா சொன்னிங்க பறவை. மாண்வர்கள் யாராவது திருடித்தான் இந்த படத்த பார்க்கனும்ன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டு, அப்பா பாக்கெட்டுல ஆட்டைய போட்டுட போறனக்க.. :)))

    நான் கோவை மக்களை சொல்ல சாமீயோவ்..

    ReplyDelete
  9. நல்ல flow பரணி..(பரணிதானே? அனு அவர் தளத்தில் இப்படி விளித்ததாக நினைவு..)

    ஏன் நீங்க அடிக்கடி எழுதுறது இல்லைன்னு கோபம்கூட வருது..

    :-)

    ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்!

    தமிழ்மணத்துக்கு வாழ்த்துக்கள்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்!(திரவ சைட் டிஷ்சிற்கும் சேர்த்து...)

    ReplyDelete
  10. கார்க்கி கூறியது...
    சரியா சொன்னிங்க பறவை. மாண்வர்கள் யாராவது திருடித்தான் இந்த படத்த பார்க்கனும்ன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டு, அப்பா பாக்கெட்டுல ஆட்டைய போட்டுட போறனக்க.. :)))//

    இதை எங்க அழகு பாஷையில் 'கடி' என்று சொல்லுவோம். உங்களுதுல 'மொக்கை'. :)))

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்.
    இந்த post-குதான் இவ்வளவு build up-a

    ReplyDelete
  12. @கார்க்கி...
    ஏதோ தெரியாமச் சொல்லிட்டேன் சகா...

    @பா.ராஜாராம்....
    வாங்கண்ணே... பரணியேதான்... சரியாச் சொன்னீங்க... நன்றி,....உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்ண்ணே...
    ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையிலும்,... :-)முயல்கிறேன்...

    @கார்த்திக்...
    நீ ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்னு தெரியும் கார்த்திக்...

    @புதுகைத் தென்றல்...
    முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...

    @கோசி/...

    ஹி....ஹி....ஹி....ஹி....

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் தல ;)))

    ReplyDelete
  14. அரைசதத்திற்கு வாழ்த்துக்கள் தல!

    ReplyDelete
  15. தமிழ்மண விருது பெற வாழ்த்துகள் இனிய நண்பரே.

    ராஜாராம் சார் சொல்வதை நானும் மறுக்கா கூவிக்கிறேன்.நிறைய எழுதுங்கோ.

    ReplyDelete
  16. பாஸ் நிறைய எழுதுங்க.

    தமிழ்மண விருது பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. @வால்பையன்....
    நன்றி நண்பரே...

    @நாடோடி இலக்கியன்...
    நன்றி நண்பரே...

    @அக்பர்...
    நன்றி நண்பரே...

    ReplyDelete
  18. நல்லா இருக்கு.

    தமிழ்மண விருது பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  19. நன்றிகள் சே.குமார்...

    ReplyDelete