Thursday, January 14, 2010

புவி ஆராய்தல்...-உரையாடல் கவிதைப் போட்டிக்காக

உலக வரைபடத்தில் கடலுக்கு நீலம்
கூட்டிக் கொண்டிருந்த லச்சுவிடம் கேட்டேன்
என்னை மாதிரி எஞ்சினியராகப் போகிறாயா என
பென்சிலை தாடையில் தட்டி யோசித்துச்
சொன்னாள் பூமி ஆராய்ச்சி பண்ணப் போவதாக
என்னவெல்லாம் செய்வாய் கேட்பது எளிதுதானே
இன்னும் எளிதாகப் பதில் வந்தது
வீடு, காடு,மலை,ஆறு,கடல்,மீனு,கிணறு,
சிங்கம், கரடி,யானை,கிருஷ்ணா,சோறு,நிலா,
வானம்,சூரியன்,பார்பி பொம்மை,டிவி
இன்னும் பலவற்றைக் கையசைவில்
காட்டி ஆராயப் போவதாகச் சொன்னாள்
நிலா,சூரியன் எல்லாம் பூமியில் இல்லையே
பிறகெப்படி பூமியில் வந்தது கர்வக் கேள்வியுதிர்த்தேன்
பென்சிலால் என் தலையில் தட்டியவாறு
உனக்குத் தெரிந்த பூமி அவ்வளவுதான்
சொல்லிவிட்டு ஆராயத் தொடங்கினாள்
அவளது பூமியை...

குறிப்பு: உரையாடல் அமைப்பின் கவிதைப் போட்டிக்காக எழுதப் பட்டது

28 comments:

  1. அவரவர் எண்ணங்களில் அவரவர் உலகங்கள்..அருமை..

    ReplyDelete
  2. சொல்ல வந்திருக்கும் கருத்து வளமை. வாழ்த்துக்கள் போட்டியில் வெற்றி வாகை சூட!!!.....

    ReplyDelete
  3. excelent barani!

    வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. கடைசி பந்தில் சிக்ஸரா?(கடைசி நொடியில் பங்கேற்பு)

    நல்லா இருக்குங்க.குழந்தைப்பற்றி கவிதைகள் எழுதுவதுப் பிடிக்குமோ?
    இன்னும் கூட மெருகேற்றலாமோ?

    //என்னவெல்லாம் செய்வாய் கேட்பது எளிதுதானே
    இன்னும் எளிதாகப் பதில் வந்தது//

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. நன்றாக இருக்கிறது

    வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  6. ரொம்ப பிடிச்சிருக்கு சார்

    ReplyDelete
  7. @கயல்விழி நடனம்...
    வாழ்த்துக்களுக்கு நன்றி கயல்விழி...

    @குட்டிப்பையா...
    முதல் வருகைக்கும், ரசித்தமைக்கும் நன்றி குட்டிப்பையா...

    @காவிரிக்கரையோன் MJV...

    ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே...

    @இரா.வசந்தகுமார்...
    நன்றி தலைவரே...

    ReplyDelete
  8. பா.ராஜாராம்...
    வாங்கண்ணே... வாழ்த்தியதில் பெருமகிழ்வடைகிறேன்...

    @கே.ரவிஷங்கர்...
    நன்றி ரவி சார்...
    அடிச்சுப் பார்த்தேன். சிக்ஸர் எல்லாம் போகலை.. பந்து காலுக்குக் கீழேயே விழுந்துடுச்சி...
    //குழந்தைப்பற்றி கவிதைகள் எழுதுவதுப் பிடிக்குமோ?//
    நிறையப் பிடிக்கும். எனக்கு நேர்ந்த அனுபவங்களை மட்டும் சொல்கிறேன்.எல்லோருக்கும் அது கவிதையாகத் தெரிகிறதோ இல்லையோ எனக்குக் கவிதையாகத் தெரிகிறது சார்...
    நீங்கள் குறிப்பிட்டுச் சொன்ன வரிகளை எழுதுகையில் நான் மிக ரசித்தேன்.
    //இன்னும் கூட மெருகேற்றலாமோ?//
    கண்டிப்பாக...ஆனால் நேரமில்லை எனக்கு...நேற்றுவரை ரொம்ப பிஸி...

    @திகழ்...
    வருகைக்கும், ரசித்து வாழ்த்தியமைக்கும் நன்றி திகழ்...

    @மண்குதிரை...
    வாங்க கவிஞரே,,, உங்களுக்குக் கவிதை பிடித்திருந்ததில் மிக மகிழ்ச்சி...நன்றி,,,

    ReplyDelete
  9. அண்ணா...சொன்ன விஷயம் எளிதாயிருக்கு.
    வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. @சே.குமார்...
    நன்றி நண்பரே...

    @ஹேமா...
    நன்றி ஹேமா...ஏதோ என்னால முடிஞ்சதைச் சொன்னேன். வாழ்த்துக்களுக்கு நன்றி ஹேமா...

    ReplyDelete
  11. வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  12. கவிதை முடியும் போது இடறி விழுகிறது மனது...வெற்றிபெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. கவிதை பிராமாதம் தமிழ்ப்பறவை.... குழந்தைகளின் உலகம் தான் எத்தனை விசாலமானது.... வெற்றி பெற வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  14. @S.A. நவாஸூதீன்...
    வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே...

    @மகேஷ்...
    நன்றி மகேஷ்....

    @கமலேஷ்...
    முதல் வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி கமலேஷ்...

    @ராம்குமார்-அமுதன்...
    ரசித்தமைக்கு நன்றி நண்பரே....

    ReplyDelete
  15. என்னை மாதிரி எஞ்சினியராகப் போகிறாயா...

    ennai kettu irunthal vendamena solli irupen..

    ReplyDelete
  16. நன்றி சக்தியின் மனம்...
    நன்றி ஜெகநாதன்,,,

    ReplyDelete
  17. வெற்றி பெற வாழ்த்துகள்.


    நேரம்கிடைக்கும்போது எந்தளங்களைப்பார்வையிடவும்.

    ReplyDelete
  18. அடங்கொன்னியா..

    நல்லா வந்திருக்கு சகா..

    ஆனா வரிகள் மடக்கும் கலை இன்னும் பிடிபடவில்லை என நினைக்கிரேன். கவிதையின் உருவம்(?) இல்லை என்பது போல் காட்சியளிக்கிறது :)))

    ReplyDelete
  19. நல்லாயிருக்குங்க... வாழ்த்துக்கள்.

    -
    DREAMER

    ReplyDelete
  20. மனம் கனக்கிறது..... இந்த உலகத்தில் நாம் இழந்தவை கொஞ்சம் இல்லை...

    ReplyDelete