Friday, April 9, 2010

விரல்வழிக் கசியும் துளிகள்...1

        இயந்திரத் தனமான வாழ்க்கையில் எப்போதும் சிறுசிறு இளைப்பாறுதல்கள் கிடைத்துக் கொண்டுதானிருக்கின்றது. அதனைக் கவனிப்பவர்கள் ரசிக்கிறார்கள். பயணங்களைத் தூங்கிக் கழிப்பவர்களும் உண்டு. எக்கனாமிக் டைம்ஸில் குறையும் பங்கு மதிப்பிற்காகத் தொலைப்பவர்களும் உண்டு.சில்லறையின் ஞாபகத்தில் சிதறவிடாத மனங்களும்,சிறு குழந்தையின் சிரிப்பில் சிதறிய கணங்களும் கொண்டவர்களும் உண்டு,எதிர்த் திசையில் பயணிக்கும் மர நிழல்களில் தேங்குபவர்களும் உண்டு.கம்பியில் சாய்ந்து அல்ஜீப்ராவை மனனம் செய்யும் சிறு பெண்ணின் பச்சை ரிப்பனில் பால்யத்தைக் கண்டடைந்தவர்களும் உண்டு.


   ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு பாடலை இயற்கை முணுமுணுத்துக் கொண்டுதானிருக்கிறது.அம்மாவின் தாலாட்டாகவோ, தமிழய்யா விளக்கிய ‘கொங்குதேர் வாழ்க்கை’யாகவோ,அப்பா மிதிக்கும் சைக்கிளோசையாகவோ,தட்டச்சு பயிலச் செல்கையில் வீட்டைக் கடக்கும் ஜெயமீனாவின் கொலுசொலி சேர்ந்த செருப்போசையாகவோ அவரவர் அனுபவங்களுக்கேற்ப காதில் ஒலிக்கலாம்.அப்படிக் கடந்த தருணங்களின் சுவை, இப்போது எட்டாத் தேனாய் கனவில் மட்டுமே ருசிக்க முடியும்.

    அப்படியொரு தேனின் சுவை மிச்சங்களை மீட்டெடுக்கும் ஒரு பாடல்தான் இது. ராஜாவின் விரல்வழிக் கசிந்த துளிகள் இசை வெள்ளமாய் மூழ்கடிக்கின்றது.பாண்ட்ஸ் பவுடரை அப்பிய பருவ ம்ங்கையாய் பனிப்புகையினூடே முகம் காட்டும் மலைப்பாதையும், அபாயம் காட்டினும் ஆச்சரியம் கூட்டும் கொண்டை ஊசி வளைவுகளும், ஆளிருக்கும் சமயத்தில் கூட யாவருமறியா வண்ணம் சீண்டிப் போகும் புது மனைவியின் கொஞ்சலை மிஞ்சும் சிறு தூறல் துளிகளும், நம் காலசைவில் வேகம் கூட்டும் வாகனமும் இன்னும் மொழிக்குள்ளும், விழிக்குள்ளும் அடங்காத காட்டு வாசனையும் கூடவே இந்தப் பாடலும்....


    

19 comments:

  1. எனக்கும் பிடித்த பாடல் :)

    தலைவி ஸ்ரேயா கோஷல் பாடிய பாட்டு :)

    ReplyDelete
  2. பாட்டிற்கேற்ற பதிவு.அற்புதமான பாட்டு.”செந்தாழம் பூவில்” போல் இது ஒரு மென்மையான டைப்.

    பாட்டை வீடியோவுடன் கேட்டால் இனிமை கூடுகிறது.

    நல்ல குரல் வளம் ஷ்ரேயாஆனால் அம்மணி உச்சரிப்புதான் நெருடல்.

    ReplyDelete
  3. வாங்க தமிழ்ப்பறவை,

    ரொம்ப நாளைக்குப் பிறகு நீங்கள் அருமையான பாடலுடன்...

    நல்ல பாடல்... அடிக்கடி எழுதுங்கள்.

    ReplyDelete
  4. @ஆனந்த்...

    வாங்க ஆனந்த்... நன்றி...

    @ஆயில்ஸ்...
    வாங்க தலை...நமக்குப் பிடித்த பாடல்னு சொல்லுங்க...

    @தமிழினி...
    நன்றி...

    ReplyDelete
  5. @கோபிநாத்...
    நன்றி கோபி அண்ணே...

    @ரவிஷங்கர்...
    நன்றி சார்...வீடியோ பொருத்தம்தான்... எனக்கு அம்மணியின் உச்சரிப்பை விடக் குரலின் இனிமையிலேயே மயங்கி விடுகிறேன்...

    @சே.குமார்....
    நன்றி நண்பரே... அவ்வப்போது எழுதுகிறேன்...

    ReplyDelete
  6. ரொம்ப நல்ல பாடல். எனக்கும் கூட இது ஆல் டைம் பேவரைட்!

    ReplyDelete
  7. நன்றி சுகிர்தா... முதல் வருகைக்கும், கருத்திற்கும்...

    ReplyDelete
  8. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  9. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  10. தமிழ்பறவை சார், உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

    ReplyDelete
  11. வருகைக்கும், நற்செய்திக்கும் நன்றி ஸ்டார்ஜன்...

    ReplyDelete
  12. நன்றி ஆதிமூலகிருஷ்ணன்...

    ReplyDelete
  13. //பாண்ட்ஸ் பவுடரை அப்பிய பருவ ம்ங்கையாய் பனிப்புகையினூடே முகம் காட்டும் மலைப்பாதையும், அபாயம் காட்டினும் ஆச்சரியம் கூட்டும் கொண்டை ஊசி வளைவுகளும், ஆளிருக்கும் சமயத்தில் கூட யாவருமறியா வண்ணம் சீண்டிப் போகும் புது மனைவியின் கொஞ்சலை மிஞ்சும் சிறு தூறல் துளிகளும், நம் காலசைவில் வேகம் கூட்டும் வாகனமும் இன்னும் மொழிக்குள்ளும், விழிக்குள்ளும் அடங்காத காட்டு வாசனையும் கூடவே இந்தப் பாடலும்....//...கவிதையா எழுதி இருக்கிங்க.

    உண்மையிலேயே அழகான பாடல் இது !

    ReplyDelete
  14. நன்றி ப்ரியா... முதல் வருகைக்கும், ரசிப்புக்கும்...

    ReplyDelete
  15. :))))

    இப்பதான் பார்த்தேன் சகா..

    ReplyDelete
  16. த‌மிழ் பற‌வை,

    அடிக்க‌டி எழுதுங்க‌

    ReplyDelete