Sunday, July 4, 2010

மீண்டும் மீண்டும் நான்...

      தூசி படிந்த இந்தோர் வாழ்க்கையில் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஓடியதே தெரியவில்லை. காலைகள் கச்சோரி, சமோசாவிலும், மற்றையப் பொழுதுகள் சுட்ட ரொட்டிகளிலுமே தீர்ந்திருந்தன.சுடுவதில் சென்னையை மிஞ்சக்கூடிய வெயிலும் ,நடுக்குவதில் டெல்லியை நெருங்கும் குளிருமாய்க் கழிந்து விட்டிருந்தன பருவங்கள்.கட்டிடங்களும், கார்களும் மேட்டுத்தன்மையைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தன. சிறப்புப் பொருளாதார மண்டலமிருப்பதால், தலைநகரான போபாலை விடவும் கவர்ச்சி காட்டிக் கொண்டிருந்தவள் இந்தோர்தான்.


       இங்கு அதிகம் ஊர் சுற்றிப் பார்க்காவிட்டாலும் , என்னைச் சுற்றிப் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். பான் பீடா மற்றும் பானிபூரிக் கடைகளால் இந்தோரின் தெருக்கள் கலகலப்பாகவே இருந்தன.எல்லா நகரங்களும் பெயர் நீக்கிப் பார்த்தால் ஒன்றுதான் என்பது போல இங்கும் மக்களின் வாங்கும் வசதிகளும், அதற்கு ஈடு கொடுக்கும் அம்பானி,பிர்லாக்களின் ஷாப்பிங் மால்களும் அதிகம். ஆங்காங்கே புராதனப் பறை சாற்றும் கோட்டைகளுக்கும் பஞ்சமில்லை. நம்மூர் டி.நகர் போல  ‘ராஜ்வாடா’ எனும் ஏரியா உண்டு.எல்லாம் குறைவுதான் போக்குவரத்து நெரிசலைத் தவிர. சாலைகளில் நால்வர் பயணிக்கும் பைக்குகள் போக்குவரத்து விதிகளுக்குப் போக்குக் காட்டிச் சென்று கொண்டிருக்கும்.பேருந்து வசதிகளில் வடக்கு, தெற்கை விட பத்து மடங்கு குறைவுதான்.மாருதி ஆம்னிக்கள்தான் இந்தோரின் ஷேர் ஆட்டோக்கள். அசராமல் ஆட்களைத் திணித்துக் கொண்டு உடல் பிதுங்கப் பறந்து கொண்டிருக்கும். ஆட்டோக்காரர்கள் எல்லோரும் அநியாயத்துக்கு நல்லவர்கள்.பேரம் பேசிப் பழகவேண்டியதில்லை. மண்ணெண்ணை,கேஸ் உபயோகத்தால், நம் பர்ஸ் மெலியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

           தீபாவளி, பொங்கல் கூட கொண்டாடிப் பழக்கமில்லாத நான், தாண்டியாக்கள் பார்த்து நவராத்திரிகளும், வண்ணம் பூசி ஹோலிக்களும் கொண்டாட  ஆரம்பித்திருந்தேன். அலங்கார வளைவுகள், அதிகப்படியான போஸ்டர்கள் இல்லாத அமைதியான தேர்தல்கள் பார்த்தேன். ஏழே கால் மணிக்கு முகூர்த்தம் வைத்து பொங்கல்,இட்லி,கேசரி+காபியுடன் கல்யாணங்களுக்குப் போய் வந்த எனக்கு, 40,50 வகை உணவுகளுடன், டீ.ஆர் படம் போல செட்டுப் போட்ட இரவுக் கல்யாணங்கள் பழக ஆரம்பித்திருந்தது.(அப்போ ஃபர்ஸ்ட் பகல்தான் கொண்டாடுவாங்களா...???)

     இன்னும் சொல்லாமல் விட்டது யுவதிகள். எல்லோருக்கும் அப்படியொரு தேஜஸ்.ஆனால் அழகைப் பாதுகாக்கிறேன் பேர்வழி என்று பெரிய கைக்குட்டை ஒன்றால் முகத்தைச் சுற்றி மூடி விடுகிறார்கள், படைப்பின் உண்மைக் காரணம் அறியாமல். சரி மன்னித்து விடுவோம்.

        ந்தோரில் இருந்த காலங்களில் பல விஷயங்களில் மாறி இருந்தேன் கஷ்டப்பட்டு.ஆறு மணிக்கு முன் எழுந்தேன்.ஒரு மணிக்கெல்லாம் படுக்க ஆரம்பித்தேன். காஃபி மறந்தேன்( நல்ல காஃபி கிடைப்பதில்லை). H2O வை நினைவூட்டினாலும் டீ குடித்தேன்.பன்னீர் சாப்பிடப் பழகினேன்.அருவிகளில் நனைந்தேன். ட்ரெக்கிங் செய்தேன்.இப்படிப் பல தேன்கள். பல இனித்தன. சில கசந்தன.


                
     ஆட்டோமொபைல் உதிரிப் பாக தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்கு இருந்தேன்.நிறையக் கற்றுக் கொண்டேன்.வேலை பார்ப்பது, வேலை பார்ப்பது போல நடிப்பது என அனைத்துமடங்கும். எக்செல் ஷீட் முதற் கொண்டு, எஞ்சின் அசெம்பிளிங் வரை செய்யும் நிர்பந்தங்களும் ஏற்பட்டன.ஆறு நாளும் வேலை.ஆறாம் நாள் வேலை வந்தால் ஏழாம் நாளும் வர வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே ஊருக்கு வரமுடியும். அதுவும் குருவி போல் சேர்த்த விடுப்புகளை ஒரே நேரத்தில் எடுத்து வருவேன். கடைசியில் அது யானை வாய்ப்பட்ட அவலாக மாறிவிட்டிருக்கும்.



இன்னும் எத்தனையோ விஷயங்கள் விழி நுழைந்தது, செவி புகுந்தது, இதயத்தில் இறங்கியது, இப்போதைக்கு இது போதும் இந்தோரைப் பற்றி...


             ஓவர் டூ பெங்களூர்....

    டந்த மே மாதத்தின் இறுதி நாட்களில், ஒரு சுபயோக சுபதினத்தில் பெங்களூர் வந்தடைந்தேன்.இங்கு வேலை கிடைத்திருக்கிறது. இனி அடிக்கடி ப்ளாக் அப்டேட் செய்யப் படும் என எச்சரிக்கை விடுத்துக் கொள்கிறேன்...

24 comments:

  1. பங்கலூரு உங்களை அன்புடன் வரவேற்கிறது.(பரணி குமார் பேகனே பாரோ?)

    இந்தோரின் வானம் வசப்படவில்லை? உங்கள் கட்டுரையில் மெலிதான சோகம் இழையோடுகிறது.வசப்படாத வானம் நினைவை விட்டு அகலாது.

    //ஆனால் அழகைப் பாதுகாக்கிறேன் பேர்வழி என்று பெரிய கைக்குட்டை ஒன்றால் முகத்தைச் சுற்றி மூடி விடுகிறார்கள், படைப்பின் //

    வா...வெண்ணிலா உன்னைத் தானே பாடுகின்றேன்...

    ஸ்வாகதம் டு பிளாக் also.

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு சார்.

    தொடர்ந்து எழுதப்போவதாக எச்சரிக்கை விடுத்திருப்பது மகிழ்வளிக்கிறது.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வாங்கோ வாங்கோ...திரும்பவும் வந்தாச்சு தமிழ்ப்பறவை அண்ணா.
    சுகம்தானே !
    இனிப் பதிவுகள் அடிக்கடி வரைந்த படங்களோடு வரும்.
    சந்தோஷம்.

    ReplyDelete
  4. யோவ் மாப்பி...ஊரை விட்டு ஊரு வந்துட்டேன் அப்படிங்கிறதை கூட இம்புட்டு அழகாக சொல்லக்கூடிய மனுஷன் நீதான்ய்யா..;))

    கலக்குற போ ;)

    ReplyDelete
  5. நற்செய்தி, வருக, வாழ்த்துகள்.

    இந்தோர் குறிப்புகள் அழகு. பெரும்பான்மையான வட இந்திய நகரங்கள் பார்ப்பதற்கும் கூட ஒன்று போலவே தோன்றுகின்றன.

    ReplyDelete
  6. @இரா. வசந்த குமார்...

    நன்றி பாஸ்

    @மகேஷ்:ரசிகன்
    நன்றி தம்பி...

    @சுகிர்தா...

    நன்றி சுகிர்தா...

    ReplyDelete
  7. @ரவிஷங்கர்...
    நன்றி சார்...
    \//இந்தோரின் வானம் வசப்படவில்லை? உங்கள் கட்டுரையில் மெலிதான சோகம் இழையோடுகிறது//
    \
    தெரிந்துவிட்டதா..? மூடி மறைத்துத்தானே எழுதினேன்..வெளியேறிவிட்டதே...

    @சே.குமார்...

    நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு,,.

    @செ.ச்ரவணகுமார்...

    நன்றி நண்பரே...உங்கள் பதிவுகளை நிறைய மிஸ் செய்துவிட்டேன். வருகிறேன்..

    ReplyDelete
  8. @ஹேமா...

    நன்றி ஹேமா..சுகம்தான்...

    @கோபிநாத்...

    நன்றி மாப்பி...ஆதரவுக்கு...

    @ஆதிமூலகிருஷ்ணன்...
    நன்றி ஆதி...இந்தோரைப் பற்றி மிகச் சுருக்கமாகத்தான் சொன்னேன்(அதனால்தான் அழகு என்கிறீர்கள் போலும்)..

    ReplyDelete
  9. புது வேலைக்கு வாழ்த்துக‌ள் த‌மிழ்..

    ReplyDelete
  10. Welcome back... good post..

    >>இனி அடிக்கடி ப்ளாக் அப்டேட் செய்யப் படும் என எச்சரிக்கை விடுத்துக் கொள்கிறேன்...

    எங்க போனாலும் உங்க கொல வெறி அடங்கமாட்டதே :-)

    ReplyDelete
  11. அனுஜன்யா தளத்திற்கு வந்துட்டனோ, எனும் படியான ஒரு மாயை பரணி. அவ்வளவு சடுகுடு ஓட்டம்., எழுத்தில்.

    வாங்க, வாங்க!

    இனி, அடிக்கடி பார்க்கலாம் என்பதுதான் மொத்த சந்தோசமும்.

    ReplyDelete
  12. @கார்க்கி...

    வாங்க சகா.. உங்களுக்குத்தான் ரொம்ப லேட்டாத் தெரியுது போல...ஹி..ஹி...

    @வெண்பூ...
    வாங்க வெண்பூ...வெகுநாள் கழித்து உங்கள் வாசம் வருகிறது.. நன்றி...

    ReplyDelete
  13. @கோசி...
    நன்றிடா...

    @பா.ராஜாராம்...

    நன்றி பாரா சார். வர்றதே கொஞ்சப்பேருதான் அதையும் ஓய்ச்சுப் புடுவீங்க போல...ஹி..ஹி..

    ReplyDelete
  14. ஜெகநாதன் காலடி said

    பறவை பல தேசங்களைக் கடந்து திரிவதுதானே!நளினமான நடையும் நகைச்சுவையும் அருமை! இந்தோர் யாத்திரை பகல் போல தகிப்பாக உணர்கிறேன். யுவதிகள் பற்றி இன்னும் விளக்கமாக எழுதியிருக்கலாம். துணியால் மறைக்க முடியாத அழகு இருக்கிறதே, தெரியாதா?
    வாழ்த்துக்கள் பரணி!!
    All the best!

    ReplyDelete
  15. //இந்தோர் யாத்திரை பகல் போல தகிப்பாக உணர்கிறேன்//
    sariya sonneengka..

    //துணியால் மறைக்க முடியாத அழகு இருக்கிறதே, தெரியாதா?
    //hi...hi....antha aLavukku viparam paththalaingov...

    நன்றி ஜெகன்...

    ReplyDelete
  16. அங்கே இருக்குற வரைக்கும் இதெல்லாம் ஒன்னும் சொல்லல... பெங்களூர் வந்ததும் ஒரே பீலிங்க்ஸ் ?????

    ReplyDelete
  17. @கயல்விழி நடனம்...
    கருத்திற்கு நன்றி மேடம்...
    //அங்கே இருக்குற வரைக்கும் இதெல்லாம் ஒன்னும் சொல்லல... பெங்களூர் வந்ததும் ஒரே பீலிங்க்ஸ் ?????

    //

    ஆமா..அங்க நிறையப் பதிவு பண்ண மறந்துட்டேன்... அந்தத் தப்பை இங்கயும் பண்ணக்கூடாது. பெங்களூரும், நானும் இனி அடிக்கடிப் பதிவுகளில் வருவோம். வரலாறு முக்கியம் அமைச்சரே...

    ReplyDelete
  18. அன்பின் தமிழ்ப்பறவை

    வருக வருக பெங்களூருக்கு
    தருக தருக படைப்புகளை

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  19. வந்திருந்து வாழ்த்திய வலைச்சர வாத்தியாருக்கு நன்றிகள்...

    ReplyDelete