Sunday, July 11, 2010

மதராசப் பட்டினம் - மூன்று பார்வைகள்

  1.கடந்த ஓரிரு மாதங்களாகவே சென்னை என்னைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கிறது. காலப்பயணி வீட்டிலிருந்த நூலகத்தில் நான் எடுத்து வந்த புத்தகத்திலிருந்து தொடர ஆரம்பித்தது சென்னை. மே மாத மழை நாளில் அவரது வீட்டிற்குச் சென்ற போது அவர் எழுதிய ’கிளிமுற்றம்’ சிறுகதைத் தொகுப்பையும், பிரபஞ்சன் எழுதிய ‘வானம் வசப்படும்’நாவலையும் எடுத்து வந்தேன். பஸ் ஜன்னலின் வழியே, பேண்ட்டை நனைத்த மழையின் அத்துமீறலையும் பொருட்படுத்தாமல் படிக்க ஆரம்பித்தேன்.கி.பி. 1740 களில், புதுச்சேரியின் கவர்னராக இருந்த ஃப்ரெஞ்சு துரை துய்ப்ளெக்ஸிடம், துபாஷ் ஆக அதிகாரத்திலிருந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகள் அடங்கியதுதான் இந்த நாவல்.இது தினமணிகதிரில் தொடராக வந்த சமயம் ,அரை டவுசரோடு படித்திருக்கிறேன். அக்காலத்தை நினைவூட்டும் வகையிலும், ப்ளாக் பேரே அதுவாக அமைந்துவிட்ட படியாலும் ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்தேன்.அந்த காலகட்டத்தில் புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிமுறையும், அவர்கள் தங்களுக்குப் போட்டியாக வந்த ஆங்கிலேயர்களை எதிர்க்கும் முகமாக சென்னையைக் கைப்பற்றப் போராடியதும், பின்னாளில் ஹீரோவாக விளங்கிய ‘ராபர்ட் க்ளைவ்’ இதில் துக்கடா பாத்திரத்தில் இண்ட்ரோ ஆவதும், போகிறபோக்கில் சென்னையைப் பற்றியும் தொட்டுவிட்டுச் சென்றது நாவல்.


  2.டுத்த தற்செயல் நிகழ்ந்தது எழுத்தாளரான எஸ்.ராமகிருஷணனின் ‘யாமம்’ நாவல் வாங்கியது.இதில் மைய இழையாக இரவும், அதனூடே பின்னப்பட்ட நான்கு கதைகளுமாக இருந்தது.கதை நிகழும் களமாக அன்றைய ‘மதராப் பட்டணமும்’ அதன் சுற்றுப் புற ஊர்களும் காட்டப் படுகின்றது.(அவையெல்லாம் இன்று ‘ஒருங்கிணைந்த சென்னை’ ஆகிவிட்டது). இரவின் புதிரையும், வாசனையையும் ஒத்த ‘யாமம்’ என்னும் அத்தர் ஒரு குறியீடாகக் காட்டப் படுகிறது. உடலெங்கும் மெல்லிய பூக்களாய்க் காமம் பூக்கச்செய்யும் வல்லமை படைத்த யாமமானது, கதைகளினூடே தெரிந்தும், தெரியாமலும் விரவி மனிதர்களையும், மனங்களையும் அசைத்துப் பார்க்கிறது. மீர்சாகிப் பேட்டையில் ‘யாமம்’ தயாரிக்கும் அப்துல் கரீம், அல்லிக்கேணியில்(திருவல்லிக்கேணி) வசிக்கும் நில அளவையாளர் பத்ரகிரி, லண்டனில் கணித மேற்படிப்புக்குச் செல்லும் அவன் தம்பி திருச்சிற்றம்பலம், பங்காளிச் சண்டையில் சொத்துக்களை இழக்கும் நிலையிலிருக்கும் வாழ்ந்து கெட்ட கோமான் கிருஷ்ணப்ப கரையாளர் எனக் கதா பாத்திரங்களின் வாழ்க்கையின் பின்னே அன்றைய மதராப் பட்டிணத்தையும் நிழல் ஓவியமாக்கியிருக்கிறார் எஸ்.ரா.

       ப்துல் கரீமின் கனவில் அவரது குடும்ப ஃபக்கீர் வந்து பேசுவது போல ஆரம்பித்து, லண்டனில் டச்சுக்காரர்கள் குறுமிளகின் விலையை ஏற்றியதால், தாங்களே இந்தியாவில் நேரடி வணிகம் செய்ய பிரிட்டிசார் எண்ணிச் செயல்படுதலும், வந்த பிரிட்டிஷார் ஷாஜகான் மகளுக்கு ஏற்பட்ட தீக்காயத்தைக் குணப்படுத்தி, நன்மதிப்பை வணிகமாக்கியதும், உள்நாட்டு போர்களின் போது பயன்படுவதற்காக, மதராப் பட்டிணத்தில் மேப் தயாரிக்கும் நில அளவைகளில் ஈடுபடுவதும் என நிகழ்வுகள் தனியாகச் சொல்லப் படாமல், கதைகளின் போக்கிலேயே பின்புலமாகச் சொல்லப் படுகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் உதாரணங்கள் வசீகரிக்கும் வார்த்தைகளால் வாசிப்பைத் தூண்டினாலும், சில இடங்களில் அதுவே ஓவர்டோஸ் போலவும் தோன்றுகிறது.ஒவ்வொரு கதையும், ஒரு முடிவைக் கொண்டிருந்தாலும், அங்கே சொல்லப் படாத இன்னொரு கதையும் ஆரம்பமாகிறது.மதராப் பட்டிணம் பற்றிச் சொல்லப்பட்டவைகளும், ஆங்காங்கு அதன் நிகழ்வுகளைக் கதையோடே பிணைத்திருக்கிறது. நல்ல வாசிப்பனுபவம் தந்த ஒரு நாவல் ‘யாமம்’.

    3.இதன் தொடர்ச்சியாகவோ, தொடர்ச்சியில்லாமலோ நேற்று ‘மதராசப் பட்டினம்’ படம் பார்க்க நேர்ந்தது. வயதான பிரிட்டிஷ் மூதாட்டியிடமிருந்து தொடங்கும் கதை 1940 களில் இருந்த சென்னையாக விரிகிறது. ‘மதராசப் பட்டினத்தின் தேம்ஸ்’ எனக் கூவத்தைக் காட்டுவதிலிருந்து , அன்றைய செண்ட்ரல் ஸ்டேஷன், ஸ்பென்சர் ப்ளாசா எனக் கதையின் பின்னணியாகச் சென்னையைக் காட்டித் தொடர்கிறது படம்.முதல் பாதியில் வரும் பிரிட்டிஷ் பெண் ஏமி(மெழுகுச் சிலை போல இருக்கிறார்.நடிக்கவும் செய்கிறார்), இந்திய சலவைத் தொழிலாளி பரிதியின் காதல் சுவாரஸ்யம்.மறைந்த நடிகர் வி.எம்.சி.ஹனீஃபாவின் பண்பட்ட நகைச்சுவை நடிப்பும் பெரும்பலம். பாடல்களில் தனித்துத் தெரிந்த ஜி,.வி.பிரகாஷ்குமாருக்கு, பின்னணி இசையில் A,B,C தவிர வேறெதுவும் தெரியவில்லை.(ஒரு தடவை ‘சிறைச்சாலை’ படத்தைப் போட்டுப் பார்த்திருக்கலாம்). அவரைச் சொல்லியும் ஒன்றுமில்லை. இரண்டாம்பாதியில் படம் தொங்கிவிடுகிறது. முதல் பாதியில் கொஞ்சம் பின்னாடி தூக்கிப் போட்டு, இரண்டாம்பாதியில் கத்தரிக்கு வேலை கொடுத்திருந்தால் படம் க்ளாஸிக்காக இருந்திருக்கும். ஆர்ட் டைரக்டர் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவரும் ,இயக்குனர் விஜய்க்கு நல்ல வேலை செய்து இருக்கிறார்கள். மதராசப் பட்டினம்-அதிகம் எதிர்பார்க்காமல் ஒரு தடவை பார்த்துவிட்டு வரலாம்.

22 comments:

  1. நான் இன்னும் படம் பார்க்கல. ஆனா ஜிவியின் பாடல்கள் பிடித்தது. பிண்ணனி இசை இன்னும் அதிரடின்னு சொன்னாங்க. ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை. 1000ல் ஒருவனால் :)

    ReplyDelete
  2. ஹ்ம்ம்.. தெரியாம ஏரியா மாத்தி வந்துட்டேனோ??

    ReplyDelete
  3. நிறைய வசப்பட ஆரம்பித்துவிட்டதா?

    வானம் வசப்படும்,யாமம்,
    படிக்க்வில்லைபடிப்பதற்கு
    ஆர்வத்தைத் தூண்டுகிறீர்கள.

    மதராச பட்டினம் பார்க்க ஆவலில்லை.

    ReplyDelete
  4. வாசித்ததையும் ,பார்த்ததையும் சொல்லி ஆர்வம் தூண்டிவிடும் பதிவு.உங்கள் எழுத்தே ஆர்வம் தரும் !

    ReplyDelete
  5. வருந்துகிறேன்.

    1. //மயக்கும் எழுத்தாளரான எஸ்.ராமகிருஷணன்// இது தமிழில் இன்றுள்ள உருப்படியான எழுத்தாளர்களில் ஒருவருக்கு மதிப்புத் தருவதாக இல்லை. ஒருவேளை 'யாமம்' பற்றி எழுதியதால் 'மயக்கும்' என்னும் அடைமொழி தட்டியதோ என்னவோ, பாவம் எஸ்.ரா!

    2. உங்களுக்குத் திரைப்பட நேர்த்தியை எடைபோடத் தெரியாது என்பதை இவ்வளவு வெளுப்பித்துக் காட்ட வேண்டுமா என்ன?

    ReplyDelete
  6. //கதை நிகழும் களமாக அன்றைய ‘மதராப் பட்டணமும்’ அதன் சுற்றுப் புற ஊர்களும் காட்டப் படுகின்றது(ன).(அவையெல்லாம் இன்று ‘ஒருங்கிணைந்த சென்னை’ ஆகிவிட்டது(ன)).

    ஒருமை பன்மையையும் கொஞ்சம் சரி செய்யலாமே..?

    ReplyDelete
  7. மதராசபட்டினம் படத்தின் பின்னணியிசை நிச்சயம் ஜிவியின் கேரியரில் ஒரு மைல்ஸ்டோன்..

    ReplyDelete
  8. யாமம் குறித்த பார்வை நன்று.

    'மதராசப்பட்டிணம்'.... எல்லோரும் நன்றாகச் சொல்கிறீர்கள். பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  9. @கார்க்கி...
    வாங்க சகா...கருத்திற்கு நன்றி

    @கயல்விழி நடனம்...
    எங்க ஏரியா,உங்க ஏரியா பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லாம் நம்ம ஏரியாதான்.

    @ரவிஷங்கர்...
    நன்றி சார். வசப்படுதோ இல்லையோ, எழுத வேண்டியதுதான். 'வானம் வசப்படும்' நாவல் நீங்க படிச்சிருப்பீங்கன்னு நினைச்சேன். படிச்சுப் பாருங்க. 'மதராசப் பட்டினம்' ஒரு நல்ல முயற்சிதான்.


    @ ஹேமா....
    ஆர்வத்தைத் தூண்டியிருந்தால் நன்றி.

    ReplyDelete
  10. @ராஜசுந்தர்ராஜன்...
    வருகை, கருத்திற்கு நன்றி ஐயா.
    'மயக்கும் எழுத்தாளர்'- இப்போது உணர்கிறேன் என் தவறை. அவர் எழுத்துக்கள் என்னை வசியம் செய்திருந்தன.அதைக் குறிக்க எண்ணுகையில், சற்று மலிவான வார்த்தைப் பிரயோகம் வந்துவிட்டது. தவறாகப் பட்டிருந்தால் நீக்கி விடுகிறேன்.

    எனது திரைப்பட எடை நேர்த்தி குறித்து. இது விமர்சனம் என்பதை விட எனது பார்வை மட்டுமே ஆகும். அதைவிட முக்கியமானது, இப்பதிவு 'மதராசப்பட்டினம்' திரைப்படம் குறித்தல்ல. அதைச் சாக்கிட்டு, எனக்குப் பிடித்த இரு நல்ல புத்தகங்களை அதை அறியாதவர்கள் சிலருக்கேனும் சிறிதளவாவது அறிமுகம் செய்யும் நோக்கமாகும்.அந்நோக்கத்தை இத்திரைப்படம் வந்த வேளையில் பயன்படுத்திக் கொண்டேன். மற்றபடி இப்படத்தைப் பற்றி இந்நேரம் வலைப் போக்களில் நூற்றுக் கணக்கான 'நல்ல விமர்சன எடை நேர்த்தி' கொண்ட பதிவுகள் உள்ளன. தங்களின் நேர்மையான விமர்சனத்தை நான் ஏற்றுக் கொண்டு அடுத்துத் திரை விமர்சனம் (அல்லது திரை பற்றிய எனது பார்வையில்)எழுதுகையில் மேம்படுத்திக் கொள்ள் முயல்கிறேன்.
    நன்றி..

    ReplyDelete
  11. @வசந்த குமார்...
    வருகைக்கும், தவற்றைச் சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி. இனி வரும் பதிவுகளில் இது நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன்.

    @கேபிள் சங்கர்...
    கருத்திற்கு நன்றி சங்கர் சார். ஒப்பீனியன் டிfஅர்ஸ்.

    @செ.சரவணக்குமார்..
    வருகைக்கு நன்றி சரவணகுமார். 'யாமம்' குறித்து நேங்கள் எழுதியிருப்பதாக நினைவு. படிக்க vaeendum.

    ReplyDelete
  12. பின்னணி இசையும் நன்றாகத் தான் இருந்தது. படத்தோடு ஒட்டி, தனியாகத் தெரியாமல்...

    ReplyDelete
  13. ஆகா...பார்த்துட்டியா மாப்பி...எப்போ எங்க? ;-))

    நானும் பார்த்துட்டேன். எனக்கு படம் ஓகே மாப்பி...கடைசியில கொஞ்சம் சீன் போட்டது ஓவரு தான். பின்னனி விடு ;))) பாட்டு ஓகே ;)

    ReplyDelete
  14. 'மதராசப்பட்டிணம்'.... பார்க்கவேண்டும்.

    ஆர்வம் தூண்டிவிடும் பதிவு.

    ReplyDelete
  15. @கோபிநாத்...
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி மாப்பி. இங்கதான் பார்த்தேன் ஞாயிறன்று.

    @சே.குமார்...
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சே.குமார்

    ReplyDelete
  16. namma valai

    http://www.vayalaan.blogspot.com

    ReplyDelete
  17. வானம் வசப்படும் இன்னும் வாசிக்கவில்லை.

    ReplyDelete
  18. அன்றைய மதராசபட்டினம் பற்றி படிக்க (பெரும்பாலும் ஆங்கிலேயர் பார்வையில்) ஒரு நல்ல ஆவணம் :: http://manybooks.net/titles/barlowg2662126621-8.html

    ReplyDelete
  19. உபயோகமான இணைப்பு தந்தமைக்கு நன்றி வசந்த்...

    ReplyDelete
  20. அருமையான பதிவு... பதிவிற்கு மிக்க நன்றி..
    இசை பிரியர்கள் இந்த வலைத்தளத்தை வந்து பார்வையிடவும்

    http://maduraispb.blogspot.com/

    மதுரை அருண்

    ReplyDelete