Tuesday, June 2, 2009

இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்

என்னை இன்னமும் தாலாட்டிக் கொண்டிருக்கும் இன்னொரு அன்னை. என் இதய அறைகளில் ஆக்ஸிஜனை அனுமதிக்க மறுக்கும் அறைகள் கூட காற்றில் கலந்திருக்கும் உன் இசையைத்தான் பூச்செண்டோடு வரவேற்கின்றன.நீ தொட்டுப் போட்ட மெட்டுக்களில்தான் எத்தனை எத்தனை குட்டி உலகங்கள் எனக்குள் திறந்தன.பெண்ணைக் காதலித்ததில்லை. உன் பாடல் கேட்கையில் காதலிப்பவனை விடவும் அதிக அவஸ்தையை உணர்ந்திருக்கிறேன்.என் கண்களின் சுரப்பிகளைத் தூண்ட உன் வயலினின் ஓரிரு மீட்டல்களே போதுமானது.உன் குழலும்,தபேலாவும் கட்டிவிட்ட சிறகுகளில்தான் கால வெளியெங்கும் மிதக்கிறேன்.உன் ஸ்வர எழுத்துக்களில் நகரத்து இறுக்கமும் தெரியும், கிராமத்துத் தெருக்களும் விரியும்.உனக்கென்ன ஆயிரம் சாமி உண்டு...ஆசிரமம் உண்டு...தியானமுண்டு....உன்னை எண்ணும் எனக்கு இவை எல்லாமாய் நீயுண்டு... உன் பரவெளிப் பேரானந்தம் அங்கே...என் பேரானந்தம் உன்னிசையில் இங்கே....இன்று ஜூன் 2ம் நாள், இசைக்குப் பிறந்தநாள்...செவிகள் நல்லிசைக்குத் திறந்தநாள்...வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் என்றால் அரசியல் கோஷமாகிவிடும், இச்சிறு பதிவில் உனக்காகச் சில வார்த்தைகளை மட்டுமே என்னால் கோர்க்க  முடிந்தது.

இசையோடு இணைவோம்.....

பி.கு: தாமத வாழ்த்திற்கு மன்னிக்கவும்.
ஓவியம் மீள்பதிவுதான்.

29 comments:

  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி குடுகுடுப்பையாரே...

    ReplyDelete
  2. மிகமிக எளிமையான ஆனால் அழுத்தமான வாழ்த்துகளைத் இளையராஜாவுக்கு தெரிவித்துள்ளீர்கள்.! சிறப்பான பதிவு.

    ReplyDelete
  3. எனது ஓவியக்களை பதிவிடத்தூண்டும் ஒரே பதிவர் நீங்கள்.. நேரமின்மையால் முடியவில்லை.
    விரைவில் போட்டிக்குவருவேன். ஜாக்கிரதை.!

    ReplyDelete
  4. அன்பு தமிழ்ப்பறவை...

    நன்றாக இருக்கின்றன. ஓவியருக்கு கவிமனம் அதிகமாகிக் கொன்டே வருகின்றது. பத்தியில் இருக்கும் உணர்ச்சிகளை விட, வார்த்தைகள் பிடித்திருக்கின்றன.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ///உனக்கென்ன ஆயிரம் சாமி உண்டு...ஆசிரமம் உண்டு...தியானமுண்டு....உன்னை எண்ணும் எனக்கு இவை எல்லாமாய் நீயுண்டு... உன் பரவெளிப் பேரானந்தம் அங்கே...என் பேரானந்தம் உன்னிசையில் இங்கே.///

    கவிதை சொல்லும் வரிகள். படமும் சிறப்பு; பதிவும் சிறப்பு.

    இசைஞானியோடு சேர்த்து தங்களுக்கும் வாழ்த்துகள். நன்றி

    ReplyDelete
  6. ராகதேவன் ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. // ஆதிமூலகிருஷ்ணன் கூறியது...

    விரைவில் போட்டிக்குவருவேன். ஜாக்கிரதை.! //

    இதை கன்னாபின்னாவென எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. ராஜாவுக்கு வாழ்த்துகள்..

    சகா, என்னடா பாண்டு பாட்ட கேட்டிங்களா?

    ReplyDelete
  9. அண்ணே ஓவியம் சூப்பரு.எழுத்தும் வாழ்த்தும் சூப்பர்.

    நம்ம ஆளப் பத்தி எழுதி அதப் படிக்கும்போது ராஜாபார்வையின் சோலோ வயலின் பின்னணியில்.

    கொஞ்ச நேரத்து முன்னாடிதான்
    படம்: தம்பி பொண்டாட்டி பாட்டு:
    உன் எண்ணம் எங்கே பாடியவர்:உமா ரமணன் கேட்டேன்

    காதல் பொங்கும் இசை.

    ReplyDelete
  10. நீ தொட்டுப் போட்ட மெட்டுக்களில்தான் எத்தனை எத்தனை குட்டி உலகங்கள் எனக்குள் திறந்தன.

    கண்டிப்பாக தமிழ்பறவை

    இசைஞானியின் இன்னிசைக்கு மயங்காத மனமும் உண்டா

    ReplyDelete
  11. உங்களின் வாழ்த்துரையை மிக மிக அழகாய் தெரிவித்தமைக்கு உங்களுக்கு
    வாழ்த்துக்கள்

    ரசித்தேன்.....

    அழகிய பதிவு

    ReplyDelete
  12. @ஆதிமூலகிருஷ்ணன்...
    வாழ்த்துக்கு நன்றி ஆதி..
    //விரைவில் போட்டிக்குவருவேன். ஜாக்கிரதை.!//
    வாங்க தலை..வாழ்த்தி வரவேற்கிறேன்.

    @வசந்த்...
    நன்றி வசந்த்...

    @கபீரன்பன்...
    குருவே வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    @மகேஷ்...
    நன்றி..பதிவிட நினைவூட்டியதற்கும்...

    @கார்க்கி...
    வாங்க சகா... ஆஃபிஸ் முடிஞ்சு வீடு வந்ததும், சிஸ்டம் ஆன் பண்ணவுடனேயே கேட்கிறது ‘வால்மீகி’ பாடல்கள்தான். எல்லாப் பாட்டும் நல்லாருக்கு...
    ‘என்னடா பாண்டி’ சென்னை பாஷையின் ‘ராஜ’ கம்பீரக் குரலில் களைகட்டுகிறது..’கூட வருவியா’-பாடல் கேட்டு முடிந்த பின்னும் அரைமணி நேரம் நம்முடன் கூட வரும் பாடல்.. இதர பாடல்களைப் பற்றியெல்லாம் தனிப் பதிவிட எண்ணம் சகா.. கட்டாயம் கேட்டுப் பாருங்க...

    @ரவிஷங்கர்...

    வாழ்த்துக்களுக்கு நன்றி சார்...
    ‘தம்பி பொண்டாட்டி’ பாடல் கேட்டிருக்கலாம். மறந்து விட்டது. கேட்டு விட்டுச் சொல்கிறேன் சார்.. உமா ரமணன்+இளையராஜா பாடல்களைப் பற்றியும் பதிவிடும் எண்ணமுள்ளது....பார்க்கலாம்...


    @ சக்தி....

    வாழ்த்துக்களுக்கு(ராஜாவுக்கும், எனக்கும்) நன்றி சக்தி...

    முக்கி முக்கிப் பதிவு போட்டா புரியலைன்றீங்க.. பத்தே நிமிஷத்துல பதிவு போட்டா எல்லோரும் நல்லாருக்குன்னு உசுப்பேத்தி விடுறீங்க...
    ‘என்னடா பறவை என்னா பண்ணப் போறா..’(இது எனக்குச் சொன்னேன்...)

    ReplyDelete
  13. சுகமான சங்கீதத்தை வாழ்த்தும் போது, தாமதமாகச் சொன்னதால் என்ன?
    ராஜா ராஜா தான்!
    இளைய ராஜாவுக்கும், பதிவில் வாழ்த்தி, நாங்களும் அதில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. ஓவியம் அருமையாக இருக்கிறது. சிறப்பானது...

    அவர் தினமும் இசையின் வழியே பிறந்து கொண்டுதானே இருக்கிறார்.... இளையராஜாவைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் என் மனதில் பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான் எனும் பாடல் ஓடிக் கொண்டிருக்கிறது!!!

    ரசிகன், வெறியன் என்று சொல்லிவிடமுடியாது.. இது அதைத்தாண்டிய உணர்வு

    ReplyDelete
  15. @யாழினி அத்தன்...
    வாழ்த்துக்கு நன்றி தோழரே...

    @கிருஷ்ணமூர்த்தி...
    முதல் வருகைக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி சார்...

    @ஆதவா...
    வாங்க ஆதவன்...
    //அவர் தினமும் இசையின் வழியே பிறந்து கொண்டுதானே இருக்கிறார்...//
    அருமையாகச் சொன்னீர்கள்...
    அவர் வழியே தினமும் இசை பிறந்து கொண்டுதானே இருக்கிறது...
    //ரசிகன், வெறியன் என்று சொல்லிவிடமுடியாது.. இது அதைத்தாண்டிய உணர்வு//
    புனிதமானது. நிஜம்...நன்றி ஆதவா....

    ReplyDelete
  16. நகுலனின் வரிகளுக்கு ஒரு வரி சேர்த்து உங்கள் வலையின் இடது மூலையில் இட்டிருப்பதை இப்போதுதான் படித்தேன்...
    எதையும் நிரூபிக்கத் தேவையில்லை; சும்மாயிரு என்று சேரல் சொன்னதையும் கொஞ்சம் முன்புதான் படித்தேன்..
    ............ மூன்றாவது பின்னூட்டம் இட்டுவிட்டேன் :)

    ReplyDelete
  17. ரசித்தேன்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. அன்பு தமிழ்ப்பறவை...

    ஆச்சரியமா இருக்கின்றது! எங்கேயாவது இளையராஜா பற்றி பதிவு இருந்து அதைப் படித்துப் பார்த்தால், அங்கே உங்களது ஒரு பின்னூட்டம் சிலாகிக்கின்றது. எப்படி, யாராவது எழுதினாலே உங்களுக்கு எங்காவது வாசம் அடித்து, ஏதாவது நரம்பு புரளுமா..?

    இப்படி ஒரு ரசிகரா..!!! Remarkable...!!!

    ReplyDelete
  19. வாருங்கள் கடையம் ஆனந்த்... வருஅகைக்கு நன்றி...

    என்னங்க வசந்த் இப்படிச் சொல்லீட்டீங்க...
    அதைப் பத்தி நாம தனியாப் பேசலாம்...
    நன்றி...

    ReplyDelete
  20. வாங்க அரசியல் தீர்க்கதரிசி வண்ணத்துப் பூச்சியாரே...நல்வரவு...

    ReplyDelete
  21. அருமை இசைமேதைக்கு பிறந்தநாள் பரிசு உங்கள் வாழ்த்து!

    ReplyDelete
  22. தல

    எப்படியோ மிஸ் ஆயிட்டுது உங்க பதிவு,
    நம்ம பாஸுக்கு காலம் கடந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. ஓவியமும், பதிவும் அருமை...
    லேட்டா வந்ததற்கு மன்னிக்கவும்
    :)

    ReplyDelete
  24. நன்றி தர்ஷினி..
    இதென்ன ஸ்கூலா ...லேட்டா வந்தா மன்னிக்க... மன்னிக்கிறவன் மனுசன். மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுசன்(உபயம்: விருமாண்டி கமல்)

    ReplyDelete
  25. தல..

    நம்மக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா தல...

    கவிதை பாடியிருக்கீங்க...;))

    இசை தெய்வத்துக்கு என்னோட வணக்கங்கள் ;)

    ReplyDelete
  26. @கோபிநாத்...
    வாங்க நண்பரே...
    //நம்மக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா தல...//
    அதனாலென்ன இப்போ வந்துட்டீங்களே...உங்க பிறந்த நாளன்று இங்கு வந்தது சிறப்பு வருகையாகிவிட்டதே...வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete