Monday, June 29, 2009

வா... காத்திருக்க நேரமில்லை....

 

        கிணுகிணுவென முணுமுணுத்த செல்ஃபோனின் சிவப்புப்பொத்தானை, அரைகுறைப்பார்வையிலேயே இனங்கண்டு அழுத்தி அலாரத்தின் வாயை அடக்கினான்.மறுபடிக் கண்களை மூடி, முடியாமல் போன கனவின் சுகத்தினைத்  தொடர முனைந்தான்.தோல்வியுடன் தூக்கத்தைத் தொடர்கையில் மறுபடி ஒரு இனிய இடைஞ்சல் வந்தது குறுந்தகவல் நுழைவொலியுடன். ஒரு நொடி யோசித்துப் பின் உள்ளுக்குள் குறுகுறுப்பு ஏற்படுவதை உணர்ந்து, போர்வையுடன் உறக்கத்தையும் உதறித்தள்ளினான்.செல்ஃபோனைக் கையிலெடுத்து மெஸேஜைப் படிப்பதற்குள் அது செல்லஃபோனாகியிருந்தது.
         ‘4 days over.3 more days left for dream. now get up and go to c ur 1st wife.good morning dear'
  நோக்கியாவின் மானிட்டரில் கல்வெட்டுக்களாய்த் தெரிந்த எழுத்துக்களைக் கோர்த்த விரல்களுக்குச் சொந்தக்காரி சுஹாசினி.இவனுக்கு சுஹா.ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் இவனுக்கு...இவன் பேரைச் சொல்லவே இல்லையே..?!
             வன் கார்த்திகேயன்.கால் செஞ்சுரி அடிக்க இன்னும் நாலு மாசம் காத்திருக்கணும்.சுஹா சொன்னமாதிரி இவனோட முதல் கல்யாணம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில ,ஒரு பன்னாட்டு நிறுவனத்தோட நடந்தது. சில ஆயிரங்கள்ல கிரெடிட்டான சம்பளம்,இவனோட ஸ்மார்ட்னெஸ்னால ஓரிரு வருஷங்களிலேயே பல ஆயிரங்களா மாறிடுச்சு.மாசத்துக்கு ஒரு பீரும்,வாரத்துக்கு 4 சிகரெட்டும் பிடிக்கிறவங்க, நல்ல பையனுங்கன்னு நீங்க நினைச்சீங்கன்னா, இவனையும் தாராளமா நல்ல பையன்னு சொல்லிக்கலாம். வேலையில இருந்த சாதுர்யம், பெண்களுடன் பழகுவதில் இல்லாததால் பல பெண்கள் நல்ல நண்பனை இழந்துட்டாங்க.சராசரி உயரம்,நிறம்,மேலுதட்டில் மேல்பகுதியை மட்டும் மறைக்கும் மீசை(டேய்...மீசையைக் கொஞ்சம் டிரிம் பண்ணுடா..கூச்சமா இருக்கு’....கூடல் பொழுது கட்டளைகளைக்கூட சட்டை செய்ய வைத்தது மீசைமேல் இவன் கொண்டிருந்த ஆசை),அலுவலக நேரத்தில் மட்டும் இன் -ஷர்ட்,ஷூ சகிதத் தோற்றம்,மற்ற நேரங்களில் கேஷூவல்ஸ்,செமி ரிம்லெஸ் கண்ணாடி(ஸ்டைலுக்கு அல்ல).இது போதும் இவனுக்கு.

          ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் இவனுக்கு ,சுஹாசினி பி.காம்மோட (22ஐத் தொடும் வயது,இடையுரசும் கூந்தல்,பாலுமகேந்திரா பட ஹீரோயின்கள் போல திராவிட நிறம்,நல்ல களை,இவனளவு உயரம்,இவனை விட அதிக வாய்) திருமணம் ஆச்சு.தூரத்துச் சொந்தம்தான். மஞ்சள் கயிற்றின் மகிமையால் தொட்டுக்கொள்ளும் சொந்தமாயிற்று.முதலிரவில் இருவரும் அறிமுக உரை நிகழ்த்தியதிலேயே பொழுது விடிந்து விட்டிருந்தது.ஒன்றிரண்டு முத்தங்களில் முற்றுப்போனது உரை.நாளையும் இரவு வருமென உறுதியாகத் தெரிந்த காரணத்தால் உறங்கிவிட்டனர்.தொடர்ந்த ஓரிரு வாரங்கள் இரவில் பகலையும், பகலில் இரவையும் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.கொண்டாடினார்கள்.

        தற்குமேல் தொடர்ந்தால், தலைதீபாவளிக்கு விடுமுறை எடுக்க முடியாதென்பதால் இரு வாரம் கழித்து அலுவலகம் செல்ல ஆரம்பித்தான்.முதல் நாள் நரகம், அடுத்த நாள் உபநரகம். பின் சாலரி ஸ்லிப்பை மனதுக்குள் நினைத்துக் கொண்டும், ரிஸஷன் நேர நெருக்கடியை உணர்ந்தும் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.முன்பெல்லாம் 5 மணிக்கு ஆஃபீஸ் முடிந்தாலும், வேலையில் பெண்டிங் வைக்க விரும்பாமல் 8 மணி வரை இருந்து முடித்துவிட்டுப் போவான். இப்பொழுது 4.55க்கெல்லாம் செல்ஃபோனில் அலாரம் வைத்து, கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்கிறான்.

     காஃபி,முத்தம்,மல்லிகைப்பூ இட்லி,அப்பப்போ உப்பு கம்மியா சட்னி,இன்னும் கொஞ்சம் வேக வேண்டிய தோசைகள்,’அதுக்குள்ள கிளம்பணுமாசிணுங்கல்கள்,பைக் சாவி வாங்குகையில் உரசும் விரல்கள் எனக் காலைகள் கழிந்தன. சரவண பவன்,சத்யம்,பீச்,பானிபூரிக்கடை,வேறு வழியில்லாமல் கோயில்கள்,அவளின் சினேகிதிகள் வீடுகள் என மாலைகளும் கழிந்து கொண்டிருந்தன. பெற்றோர்கள் இவனுடன் இருந்தாலும் இவனின் வழிகளில் அவர்கள் வேகத்தடை எதுவும் விதிப்பதில்லை.நாட்கள் ஐஸ்கிரீமைப் போல இனிமையாகக் கரைந்துகொண்டிருந்தது. அவ்வப்போது சின்னச்சின்ன சண்டைகளும் ஹைக்கூக்களாய் முளைத்தன.அதுவும் இல்லையென்றால் தாத்தா சொல்லிவிட்டுப்போன ஊடல் காமத்திற்கின்பம்குறளுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுமே...?!

   பெருவிழாவாகச் சென்றுகொண்டிருந்த இவன் வாழ்க்கையில் ஒரு திருவிழா திடுக்கிடவைத்தது. அது சுஹாசினியின் ஊர்க்கோயில் திருவிழா.பங்காளிச் சண்டையில் பத்து வருடங்களாக நடைபெறாமல் இருந்த விழா, இவன் நேரத்துக்கு ஏதோ ஒரு வெற்றிலை மெல்லும்,சந்தனம் பூசிய நெஞ்சில் துண்டு போர்த்திய வேலையில்லாத நாட்டாமையால் சமாதானம் பேசப் பட்டு நடக்க ஆரம்பித்துவிட்டது.இவனுக்கு அழைப்பு இருந்தும், அலுவலக அப்ரெய்ஸல் நேர ஆப்புகளால் போகமுடியவில்லை.இதைவிட்டால் ப்ரொமோஷனுக்கு இன்னும் ஆறுமாதம் தேவுடு காக்க வேண்டுமென்பதால், சுஹாவை மட்டும் அனுப்பி வைக்க முடிவெடுத்து விட்டான்.அவளுக்கும் ஊருக்குச் செல்ல விருப்பமில்லைதான். ஆனால் தொண்ணூறைத் தாண்டிய அவளது ஆயா, திருவிழாவைப் பேத்தியுடன் பார்த்துவிட்டு வைகுண்டம் டைரக்ட் ஃப்ளைட் பிடித்துச் செல்லவிருப்பதாக ஆசைப்பட்டதால்(ஆசையில மண்ணள்ளிப் போட..’-சபிக்கத்தான் முடிந்தது) சுஹாசினி ஊருக்குச் செல்ல வேண்டியதாயிற்று.அழைத்துப்போக அவளது அப்பா, தம்பியுடன் வந்திருந்தார்.மாமனாரை மனதிற்குள் வைய நினைத்தாலும், அவளை பெற்று வளர்த்த ஒரே காரணத்துக்காகச் சகித்துக் கொண்டான்.கோயம்பேடு பஸ் நிலையத்தில் வழியனுப்பச் சென்ற இவனைப் பார்க்கையில் கசாப்புக்கடைக்குச் செல்லும் ஆடு போல் தோன்றியது அவளுக்கு.பேருந்து கிளம்பும்முன் அவள், அப்பாவை தோசை வாங்க அனுப்பி விட்டாள். தம்பியிடம் வாந்தி வர மாதிரி இருக்கு. மாத்திரை வாங்கி வாஎன்றாள்.இவன் பதறியடித்து வாங்கப் போகையில்,ஒரு முறை முறைத்துவிட்டு,’இல்லங்க அவன் வாங்கிட்டு வந்துருவான்என தம்பியை அனுப்பி வைத்தாள். அவன் கிளம்பிப்போய், அவன் தலை மறைந்த உடன் கார்த்தி, காதைக்கொடுஎன இரகசியம் பேசும்சாக்கில் இவன் கன்னத்தில் முத்தமொன்று வைத்துவிட்டாள்.சோகத்திலும், சுகமான அவளின் இதழ் ஒத்தடங்களில் திகைத்துப் போனவனுக்கு பதில் மரியாதை செய்யக்கூடத் தோன்றவில்லை.அதற்குள் இரு கரடிகளும் வந்து விட்டிருந்தனர்.
   ‘மாப்ளே, கன்னத்துல என்ன ஒட்டியிருக்குஎனக்கேட்க நினைத்தவர், பின் சூழலைப் புரிந்துவிட்டு,’மாப்ளை உடம்பைப் பாத்துக்குங்கஎன மாற்றிச் சொல்லிவிட்டுச் சென்றார்.

     சில சமயம் வாழ்க்கை கூட சினிமேடிக்கா இருக்கும். இல்லேன்னா, பஸ் கிளம்புறப்போ எஃப்.எம்மில் ஏதோ ஒரு கணேஷ், தன்னோட சேராமப் போன மூணாவது காதலிக்காக கஷ்டப்பட்டு டெடிகேட் செஞ்ச இதயம் போகுதேபாட்டு கேட்டிருக்குமா..?! ரொம்ப ஃபீலிங்கோட வீட்டை நோக்கிப் போனான்.

    ‘நல்வரவுசொன்ன கால்மிதியைக் கடுப்புடன் மிதித்தான்.இவன் முகம் பார்த்தே, அமைதியாக அவர்கள் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டனர் பெற்றோர்.அவர்களுக்குத் தெரியாததா என்ன?!
  காற்றில் பறந்த செய்தித்தாள்களின் படபடக்கும் சத்தம் கேட்டது.
‘கார்த்தி... காலையில் பேப்பர் வந்ததும் படிக்கிறேனோ இல்லையோ, எடுத்து ஆசைதீர மோந்து பார்த்துடுவேன். காலையின் ஃப்ரெஷ்னெஸ்ஸ அதுல ஈஸியாத் தெரிஞ்சுக்கலாம்.’
 இப்போது எடுத்து நுகர்ந்து பார்த்ததில் வாசம் போய்விட்டிருந்தது.

 தண்ணீர் குடிக்க ஃபிரிஜைத் திறந்தான்.
’கார்த்தி...அடிக்கிற வெயிலுக்கு பேசாம ஃப்ரீஸர்ல போய் உட்காந்துக்கலாம்ன்னு தோணுது’
‘சரி நானும் வந்துடுறேன்.சிம்லாவுக்கு போன எஃபெக்ட்ல ஹனிமூன் நடத்திடலாம்’
‘நீ வேணாம். வந்தா ஃப்ரீஸர்ல சூடு ஏறிடும்...’
குடித்த தண்ணீர் தாகம்தான் சேர்த்தது.

 டந்த சில வாரங்களாக வீட்டில் லேப்டாப்பை ஓப்பன் செய்ததே இல்லை. இன்று ஓப்பன் செய்தான்.யூசர் நேம்,பாஸ்வேர்டு இரண்டும் அவள்தான்.டெஸ்க்டாப் சுஹாசினியை மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தான்.ஐந்து நிமிடங்களில் ஸ்கிரீன்சேவராக வந்த இன்னொரு சுஹாசினி அதைக் கட்டம்கட்டமாகக் கலைத்துச் சென்றாள்.
   அவளில்லாத படுக்கை, இராணியில்லாப் பல்லாக்கானது.அவளுக்கு எல்லாமே நீட்டாக இருக்க வேண்டும்.ஏதோ விரிப்பானை, ஏனோதானோவென பெட்டில் விரித்து, உறை மாற்றாத தலையணைகளை அதன்மேல் கிடத்தித் தூங்கிக்கொண்டிருந்தவனை அவள்தான் மாற்றினாள்.இரசனையுடன் விரிப்பான் தேர்ந்தெடுத்து, அதற்கு மேட்ச்சாக தலையணை உறைகளை மாற்றி அழகூட்டினாள். பின் நின்றவாறு கேட்டாள். ‘நல்லா இருக்கா...?’
 ‘கொஞ்சம் நீயும் வந்து உட்காரேன்’
உட்கார்ந்தாள் சற்று ஒய்யாரமாக. ‘இப்போ அழகா, செக்ஸியா இருக்கு’ என்றான்.
அப்போது அவள் திருகிய காதினை இப்போது தடவிப்பார்த்துக் கொண்டான்.
காலைகளின் வளையல் சத்தம் இல்லை.கொலுசின் சிணுங்கல் இல்லை.அவள் மேனி சேர்ந்ததின் பின் வரும் லக்ஸ் வாசமில்லை.
   வனின் தனிமைப் பெருமூச்சுக்களில் வீட்டின் உஷ்ணம் கூடியிருந்தது.ஒரு வாரம்தானே சமாளித்து விடலாமென இருந்தவனுக்கு, வாரத்துக்கு ஏஏஏஎழு நாட்கள் எனும் உண்மை உறைக்க ஆரம்பித்தது.அதற்கு 168 மணி நேரங்கள் இருக்கின்றன என்ற உள் உண்மையும் இவனின் வேதனையை அதிகரித்து, இவனின் நாட்கள் நத்தையாக ஊற ஆரம்பித்த நான்காவது நாளின் முடிவில் வந்த எஸ்.எம்.எஸ்தான் முதல் பத்தியில் நாம் கண்டது. 
   பெரும்பகுதி நரகம் தாண்டிவிட்ட மகிழ்வில் அலுவலகம் சென்றான். உள்ளே செல்ஃபோன் எடுத்துச் செல்லக்கூடாது எனும் நிர்வாகத்தின் அறிவிப்புப் போர்டை வெறித்தவாறு உள் நுழைந்தான்.சற்று வேலைகளில் மூழ்கியபின் சுஹாவின் ஞாபகங்களின் அடர்த்தி குறையத்தான் செய்திருந்தது. எனினும் அவ்வப்போது அவளைப் பற்றிய நினைவுகள், இவன் தயாரிக்கும் எக்ஸெல் ஷீட் மற்றும் பவர்பாயிண்ட்டுகளில் பிழைகளாக மாறி மேனேஜரின் வசவுகளுக்கு இவனைத் தயார் செய்து விடும்.
   இன்னும் இரண்டு நாட்கள்தான். இன்று அலுவலகத்தில் ஒர் முக்கியக் கூட்டம். மேலாளர் இவனை நியமித்திருந்தார். ஒரு ஜாயிண்ட் வென்சர் பத்தின மீட்டிங். இவன் பேசினால் பழமாக்கிவிடுவான் என நிர்வாகத்திற்குத் தெரியும். இதனை முடித்தால் இவனின் பேஸிக் ஸ்கோர் கார்டில் பச்சைநிறங்கள் அதிகமாகி இவனின் பதவி உயர்வினைக் கையில் கோர்த்துவிட்டுப் போய்விடும். அதற்கான கோப்புகளில் மூழ்கி, தேவையான பாயிண்ட் முத்துக்களை எடுத்துக் கொண்டிருந்தவனுக்கு , அவுட்லுக்கில் மெயில் வந்ததாக கணினியின் ஓரத்தில் மெசஞ்சர் சொல்லிச் சென்றான். அனுப்பியது அவன் கல்லூரி நண்பன். ஃபார்வர்ட் மெயில்தான். எப்போதும் லேட்டாகப் படிப்பவன், இன்று ரிலாக்ஸூக்காக அதைத் திறந்தான்.
   பிசினஸ் பத்தியும், வாழ்க்கை பத்தியும் புத்தகம் எழுதுற சி.ஈ.ஓக்கள்ல் ஏதோ ஒரு ஆளு சொன்ன வாசகம் வந்திருந்தது.
    “உன் கையில் 5 பந்துகள் இருக்கு. குடும்பம்,படிப்பு,வேலை, நண்பர்கள்,சமுதாய நட்பு. இதுல ‘வேலை’ன்றது இரப்பர் பந்து மாதிரி. எப்படிப்போட்டாலும் மேலெழும்பி வரும். மற்ற பந்துகள் கண்ணாடிகளாலானது. போட்டா ஸ்கிராட்சோ,கீறலோ, ஏன் உடைந்து போகக் கூடச் சாத்தியங்கள் இருக்கு”
     மற்ற நாட்களில் பத்தோடு பதினொன்றாகப் போக வேண்டிய இது மாதிரி மெயில், இன்று ஏனோ அவனுக்குள் ஒரு அதிர்வையும், உள்ளொளியையும் கொடுத்தது.

      நேராக மேனேஜர் அறைக்குச் சென்றான்.ஏற்கெனவே எழுதி வைத்திருந்த லீவ் லெட்டரை அவரிடம் நீட்டியவாறு சொன்னான்,” உடம்பு சரியில்லை. ரெண்டு நாள் கழிச்சு வர்றேன்.”
    ‘என்னாச்சு உடம்புக்கு. .? ஏன் ரெண்டு நாள் லீவ்?’ -மேனேஜரின் கேள்விகளைஅவன் சாத்திவிட்டுப் போயிருந்த கதவுதான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.அதற்குள் அவனின் பைக் கோயம்பேடை நோக்கி விரைந்தது.
  மேனேஜர் லீவ் லெட்டரை எடுத்துப் படித்தார். காரணம் என்னும் இடத்திற்கு எதிராக ‘பசலை’ என்றிருந்தது. குழம்பியவாறே தலையைச் சொறிந்து கொண்டிருந்தார்.   


                                      *****************************************************************************************
பி.கு: நண்பர் இரா. வசந்தகுமார் மற்றும் கே.ரவிஷங்கர் சார் இருவரின் அன்புத் தொல்லையில் அவசரமாக எழுதிய கதை இது. போற்றலும், தூற்றலும் மேற்கண்டவர்களுக்கே...:-)

27 comments:

  1. கிளுகிளுப்பா இருக்கு...!

    ReplyDelete
  2. வாவ்...சூப்பர்...நிஜமா வேற எதுவும் சொல்ல தோணல எனக்கு இப்போ....ஹ்ம்ம்....கொடுத்து வச்ச பொண்ணு.....

    ReplyDelete
  3. அடி தூள்... கதையின் ஃப்ளோ அருமையாக இருந்தாலும் கதையே இன்னும் வரலையே எப்படி முடிப்பாரோன்னு நினைச்சிட்டே வந்து முடிவ படைச்ச உடனே ஆச்சரியம்..

    ரவிஷங்கருக்கும் வசந்தகுமாருக்கும் நன்றி..

    //சில சமயம் வாழ்க்கை கூட சினிமேடிக்கா இருக்கும். இல்லேன்னா, பஸ் கிளம்புறப்போ எஃப்.எம்மில் ஏதோ ஒரு கணேஷ், தன்னோட சேராமப் போன மூணாவது காதலிக்காக கஷ்டப்பட்டு டெடிகேட் செஞ்ச ‘இதயம் போகுதே’ பாட்டு கேட்டிருக்குமா..?!//

    :)))

    ReplyDelete
  4. தல நன்றி.நம்ம ராஜா பாட்டோடத் தலைப்பு.கவிதைத் தனமான தலைப்பு.
    கதைக்கும் பொருந்துகிற்து.

    கதை நல்லாருக்கு.சங்க காலப் ”பசலை”யை கிரிக்கெட்டில் ரிவர்ஸ் சுவீப் (reverse sweep)மாதிரி ரிவர்சில் சொல்லி இருக்கிறீர்கள்.

    சூப்பர்.அற்புதமான அட்டகாசமான புது உத்தி.

    கதையின் நடை ஐஸ்கீரிம்.மெலிதான நகைச்ச்வை அங்குமிங்கும்

    ஐஸ்கிரிமின் நடு்நடுவில்...தா நெடி?

    கதையை சுருக்கி கச்சிதமாக்கலாம்.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அண்ணா கதை பட்டாசா இருக்கு! செம ரொமாண்டிக்! என்னென்னவோ ஞாபகத்துக்கு வருது....:)

    ReplyDelete
  6. அலுவலக வேலை,இணையக்கோளாறு போன்ற காரணங்களால் உடன் பதிலளிக்க இயலவில்லை.மன்னிக்கவும்.பதிவையே வலைத்தளத்தில் ஏற்றமுடியாமல் இருந்த நிலையில், பதிவேற்றியும் அதனை போட்டிக்கான திரட்டியில் சேர்த்தும் உதவிய நண்பர் வசந்தகுமாருக்கு ஸ்பெஷல் தேங்ஸ்...

    ReplyDelete
  7. @இரா.வசந்தகுமார்...
    நன்றி. என்னது கிளுகிளுப்பா இருக்கா...?அப்போ உங்களோட ’களிப்பேருவகை(A)’ (http://kaalapayani.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%20(A)).பதிவுகளெல்லாம்...??!!(எப்படிப் பின்னூட்டத்தில் லிங்க் கொடுப்பது தெரியவில்லை ..:-( )

    @கயல்விழி நடனம்...
    நன்றி.
    //நிஜமா வேற எதுவும் சொல்ல தோணல எனக்கு இப்போ..//
    அப்போ நாளைக்கு வேறமாதிரிச் சொல்லுவீங்களா...?! :-)

    @கார்க்கி...
    நன்றி சகா...
    //கதையே இன்னும் வரலையே எப்படி முடிப்பாரோன்னு நினைச்சிட்டே//
    நானும் அப்படி நினைச்சுக்கிட்டு எழுதிட்டுருக்கப்ப தான் அந்த ‘பசலை’யே நினைவுக்கு வந்தது.இருந்தும் கதை இல்லாத உணர்வுதான்..சரி பண்ணிக்கலாம்...

    @ரவிஷங்கர்...
    வாங்க சார்.., நீங்க சொன்ன ‘டெட்லைன்’ஐ மனதில் வச்சுக்கிட்டு சவாலா எழுதிப் பார்த்தேன்.குறைகள் இருந்தாலும் முதல் குழந்தை என்றளவில் எனக்கும் திருப்திதான்.
    //நம்ம ராஜா பாட்டோடத் தலைப்பு//
    பாடல் ஹம் பண்ணிட்டிருக்கப்பதான் இதயே தலைப்பா வச்சு கதை எழுதலாம்னு யோசிச்சேன்.தலைப்பிலிருந்துதான் கதை பிறந்ததால் அது கதைக்குப் பொருத்தமாகத்தான் இருக்கும்.
    நீங்க சொல்ற உத்தி பத்திலாம் தெரியலை சார்.
    //...தா நெடி?//
    யூ மீன் சுஜாதா...? அவர் எழுத்து அதிகம் படிச்சதில்லை. ஆனா நம்ம வலையுலகில பாதிக்கும் மேல அவர் பாதிப்புல எழுதுறதால் அவர்களைப் படிச்ச பாதிப்பு வந்திருக்கலாம், எஸ்பெஷலி முதல் கருத்துரையிட்ட நண்பரின் கதைகள்... படித்துப்பாருங்கள்...
    //கதையை சுருக்கி கச்சிதமாக்கலாம்.//
    நேரமில்லை சார். எழுதியவுடன் படித்துக்கூடப் பார்க்கவில்லை. ஆங்காங்கே பிழைகள் கூட வந்துவிட்டன. வழக்கமாக எழுத்துப்பிழைகள் அனுமதிக்க மாட்டேன். தவறிவிட்டது.
    உங்கள் ஊக்கத்திற்கு நன்றி சார்...

    @மகேஷ்...
    நன்றி மகேஷ்..
    //என்னென்னவோ ஞாபகத்துக்கு வருது....:)//
    நான் பொறுப்பல்ல...

    ReplyDelete
  8. செம கதை...தல ;))

    இப்பதான் முதல் முதலில் வரேன்...அட்டகாசமான கதை..சும்மா பின்னியிருக்கிங்க ;))

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  9. @வண்ணத்துப்பூச்சியார்...
    வாங்க வண்ணத்துப்பூச்சியண்ணே...
    வாழ்த்துக்கு நன்றி.

    @கோபிநாத்...
    வாங்க இசைத்தோழரே...இசையால்தான் என்றோ இணைந்துவிட்டோமே..வாழ்த்துக்கு நன்றி...
    ராஜா பாட்டைக்கேட்டாலே தன்னால கதை வருது...

    ReplyDelete
  10. கதை ரொம்ப அருமையாக இருக்கு பரணி(!), எது நல்லா இருக்குன்னு சொல்ல தோனலை, எல்லாமே அருமை.குறிப்பாக 'பசலை'.
    கவிதை,ஓவியம்,கதைன்னு.. கலக்குங்க கலக்குங்க.
    வெற்றி பெற எனது வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  11. @தர்ஷினி...
    வாங்க தர்ஷினி...அடிக்கடி காணாமப்போயிடுறீங்க..?!
    வாழ்த்துக்களுக்கு நன்றி...
    //கவிதை,ஓவியம்,கதைன்னு.. கலக்குங்க கலக்குங்க.//
    விடுங்க தர்ஷினி எல்லாமே வெறும் நுனிப்புல்தான்..மேய்வதில் ஆழமும் இல்லை அகலமும் இல்லை..முடிந்தவரை மொக்கையாகிவிடாமில் இருக்க முயற்சிக்கிறேன் பார்க்கலாம்...

    ReplyDelete
  12. அருமையான கதை
    நடை அழகாய் இருக்கின்றது

    ReplyDelete
  13. நோக்கியாவின் மானிட்டரில் கல்வெட்டுக்களாய்த் தெரிந்த எழுத்துக்களைக் கோர்த்த விரல்களுக்குச் சொந்தக்காரி சுஹாசினி.

    நல்ல விளக்கம்...

    ReplyDelete
  14. பெருவிழாவாகச் சென்றுகொண்டிருந்த இவன் வாழ்க்கையில் ஒரு திருவிழா திடுக்கிடவைத்தது.

    எதுகை மோனையா அசத்தறீங்க...

    ReplyDelete
  15. வருகைக்கும்,வரிக்கு,வரி ரசித்தமைக்கும் நன்றி சக்தி...

    ReplyDelete
  16. பந்து உவமை ஏராளமான அலுவலகக் கதைகளில் ஒன்று. பிறகு கண்ணாடிப்பந்து உடைவதற்கான சூழலாக இல்லாமல் சாதாரணமான தேவையான பிரிவைத் தாளாமல் வேலைக்கு ஒரு முக்கிய சூழலில் விடுப்பு போடுவது கொஞ்சம் சினிமாட்டிக். ஏற்கனவே பலமுறை பல இடங்களில் படித்த உணர்வைத்தரும் புது மணஜோடியின் காதல், என்னதான் முடிவில் எதிர்பாராத வார்த்தை விளையாட்டு நடத்தியுள்ளீர்கள் என்றாலும் அது இந்த இடத்தில் நச்சென பொருந்தவில்லையோ....

    என்ன ரொம்ப தாக்குகிறேனா? சில வார்த்தைகளை மாற்றினால் மேற்சொன்ன அதே விஷயங்களையே பாஸிட்டிவாகவும் கொள்ளமுடிகிறது என்னால். நிஜம்தான் நம்புங்கள்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. @நேசமித்ரன்...
    வாழ்த்துகு நன்றி கவிஞரே...

    @ஆதிமூலகிருஷ்ணன்...
    வந்திருந்து வாழ்த்தியமைக்கும், திடுக்கிடவைத்தமைக்கும் நன்றிகள்

    ReplyDelete
  18. செம்ம கலக்கல் கதை பாஸ் :))

    எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குது. அசத்திட்டீங்க.. உங்க பதிவையெல்லாம் பொறுமையா படிக்கணும் போல..

    ReplyDelete
  19. @சென்ஷி...
    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி..
    //. உங்க பதிவையெல்லாம் பொறுமையா படிக்கணும் போல..//
    அவ்ளோ மேட்டர்லாம் கிடையாது..பதிவுகள் வெகு கொஞ்சம்தான்...அது சரி எப்படி எல்லார் பதிவிலும் உங்க பின்னூட்டம் இருக்கு..??!!
    சரியான ரசிகர் நீங்கள்...

    ReplyDelete
  20. கதை பட்டாசா இருக்கு

    ReplyDelete
  21. @இயற்கை...
    முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  22. தாமதத்துக்கு மன்னிக்கவும். Nice one. It has all the ingredients. அறிவுஜீவி மாதிரி எழுதிரிக்க. But i'm not a big fan of sujatha...BTW, whats the result? got selected?

    ReplyDelete
  23. read this... pasalai kavithai :-)

    http://blog.arutperungo.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D

    ReplyDelete
  24. //“உன் கையில் 5 பந்துகள் இருக்கு. குடும்பம்,படிப்பு,வேலை, நண்பர்கள்,சமுதாய நட்பு. இதுல ‘வேலை’ன்றது இரப்பர் பந்து மாதிரி. எப்படிப்போட்டாலும் மேலெழும்பி வரும். மற்ற பந்துகள் கண்ணாடிகளாலானது. போட்டா ஸ்கிராட்சோ,கீறலோ, ஏன் உடைந்து போகக் கூடச் சாத்தியங்கள் இருக்கு”//

    அண்ணா,முழுக்கதையும் பொறுமையா வாசிச்சேன்.கதையின் கரு சிறிதுதான்.அத்தனையும் வர்ணணைகள்.அற்புதம்.அப்படியே அனுபவமோன்னு கேக்கணும்போல இருக்கு.எத்தனை கலைகள் முடியுது உங்களுக்கு.உண்மையாவே அச்த்திட்டிங்கண்ணா.நான் எப்படித் தவறவிட்டேன் இந்தப் பதிவை !

    உங்கள் நண்பர் இரா. வசந்தகுமார் மற்றும் கே.ரவிஷங்கர் இருவருக்குமே நன்றி.உங்கள் சோம்பேறித்தனத்துக்குள் இருக்கும் திறமையையும்கண்டு ஊக்கம் கொடுத்தமைக்கு.

    ReplyDelete