Saturday, June 20, 2009

புராதன ஓவியம்

5

     எப்பவோ வரைந்த படம். கறுப்பு பால்பாயிண்ட் பென்னில் வரைய ஆரம்பித்தேன். முடிக்குமுன் மை தீர்ந்து விட்டதால்,சிவப்புப் பென்னில் ஓவியத்தை முடித்தேன். அப்படியே இங்கேயும்…

      ஓவியர் ராமுவின் ஓவியம் இது.இவரை நினைத்தாலே தினமணிகதிர்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. இவரின் கதாபாத்திரங்கள் நடுத்தர வர்க்கத்தைப் பிரதிபலிப்பார்கள். இவரின் ஓவியங்களில் கட்டைப்பிரேமிட்ட கண்ணாடி அணிந்த அப்பாவும், பெண்களுக்கு இவர் இடும் தாராளக் குங்குமமும் இன்னும் நினைவிலிருக்கிறது. தற்போது இவரின் ஓவியங்களை அதிகம் காணமுடிவதில்லை.

பி.கு: இப்பதிவு ஒரு சோதனைப் பதிவு. விண்டோஸ் லைவ் எடிட்டரில் எழுதி, அப்படியே பதிவிட்டது. பிளாக்கருக்குள் நுழைய வேண்டியதில்லை.சந்துக்குள் விளையாடும் கிரிக்கெட் போல, பிளாக்கரில் பதிவினை எழுதுவதைவிட , கிரவுண்டில் விளையாடுவது போல் இங்கு சற்று வசதி அதிகம்போல் தோன்றுகிறது. புதுப்பொண்டாட்டி சகவாசம். போகப்போகப் பார்க்கலாம். இது பற்றிய விபரங்களுக்கு நண்பர் எழிலின் பக்கம் சென்று வாருங்கள்.

20 comments:

  1. i too use live writer. but sometimes fotos will not be get uploaded properly..

    about photo, nice.. one doubt ..will ask in fone :))))))

    ReplyDelete
  2. ஓல்டு இஸ் கோல்ட்.அந்த கால ராமு,
    வர்ணம்,மாயா(ஒல்டு டைப்),ஜெ..
    அது ஒரு கனா காலம்.படங்களைப் பார்த்து கதைப் படிப்போம்.

    ஜெயின் கணேஷ் வசந்த் எப்பவும் இளமை.

    //விண்டோஸ் லைவ் எடிட்டரில் எழுதி, அப்படியே பதிவிட்டது.//
    சோதித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  3. /விண்டோஸ் லைவ் எடிட்டரில் எழுதி, அப்படியே பதிவிட்டது.//

    நன்றி.டெளன்லோடு செய்துவிட்டேன்.

    ReplyDelete
  4. அழகான ஓவியம் தமிழ்.. பாராட்டுகள்.

    ReplyDelete
  5. நவீன கவிஞரின் ஓவியமும் அருமை..!

    ReplyDelete
  6. @தமிழினி...
    வந்து அழைத்தமைக்கு நன்றி...

    @கார்க்கி...
    வாங்க சகா..நான் ஒரு படம்தான் அப்லோடு பண்ணியதால பிரச்சினை இல்லை. நீங்க டீ.ஆர் படத்தினை அப்லோடு பண்ணியதால் லைவ் ரைட்டர் முரண்டு பண்ணியிருக்கலாம்.
    நான் நேற்றிலிருந்து உங்கள் நம்பருக்கு முயற்சிக்கையில் தோல்விதான்.

    @ரவிஷங்கர்...

    வாங்க ரவி சார்...நீங்க சொன்ன பட்டியல்ல வர்ணம் படங்கள் பார்த்ததில்லை. மாயாவின் ஓவியங்கள் என்னைக் கவரவில்லை என்பது உண்மை.ஜெ.. பத்தி சொன்னா...ஹி..ஹி.. நல்லா ரசிப்பேன்.
    விண்டோஸ் லைவ் ரைட்டரில் பதிவிட்டு விட்டீர்களென நினைக்கிறேன்...

    @வெண்பூ...
    நெடுநாள் கழித்து உங்கள் வருகை மகிழ்வளிக்கிறது வெண்பூ... நன்றி...

    @சுபா...
    முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.. வெகுவாக ரசித்தீர்களோ..?! இரு முறை பாராட்டியிருக்கிறீர்கள்..நன்றி...

    @வசந்த்...
    நன்றி...

    ReplyDelete
  7. அழகு...(நான் படத்தை சொன்னேன்...)

    ReplyDelete
  8. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கயல்விழிநடனம்...

    ReplyDelete
  9. ////புதுப்பொண்டாட்டி சகவாசம்///

    ஏன் அண்ணே இந்த வரி இதற்குள் நுழைந்தது???

    ReplyDelete
  10. அழகாக வரைந்திருக்கிறீர்கள்.... வர்ணங்களை உபயோகப்படுத்த நேரமில்லையா? அல்லது எளிமையாக இருக்கட்டும் என்று விட்டு விட்டீர்களா? எப்படி இருந்தாலும் நன்றாக வந்திருக்கு.

    ReplyDelete
  11. வாவ், நல்லா இருக்கு 'பரணி'. ராமு பற்றி நீங்க எழுதியது மிகச் சரி. தாரள குங்குமம், கட்டை பிரேம் கண்ணாடி .. கலக்கல்.

    அனுஜன்யா

    ReplyDelete
  12. அழகான ஓவியம் ....

    உங்கள் ஓவியத்திறமை வியக்க வைக்கின்றது....

    ReplyDelete
  13. Nice one parani. But the thing is, she looks more of giving pose to the artist than talking on the phone..but i like her than your drawing ;-) sorry to say this..

    PS : How come you always call me when my mobile is switched off

    ReplyDelete
  14. புராதனங்கறது ரேடியோ பெட்டிய பாத்தாலே தெரியுது :))

    நல்லா வந்திருக்கு வரைபடம்.

    //இப்பதிவு ஒரு சோதனைப் பதிவு. விண்டோஸ் லைவ் எடிட்டரில் எழுதி...//

    நான் ரொம்ப நாளா Scribe Fire பயன்படுத்தி வருகிறேன். இது Fire Fox plug-in. இது பற்றி தெரிந்து கொள்ளஇங்கே சுட்டவும்

    ReplyDelete
  15. @சப்ராஸ் அபூபக்கர்...
    முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா...
    //////புதுப்பொண்டாட்டி சகவாசம்///

    ஏன் அண்ணே இந்த வரி இதற்குள் நுழைந்தது???//
    ஒரு ஃப்ளோவில் வந்தது. மன்னிச்சு விட்டுருங்க.

    @தர்ஷினி...
    வாங்க தர்ஷினி நன்றி...இந்தப் படம் வரைந்த சமயம் கைவசம் வெப்பன்ஸ்(கலர்ஸ்) இல்லை.அதனால் படம் பிழைத்தது. இதில் கூட வண்ணம் கொடுத்திருக்கிறேனே...அரைமணி நேரத்திற்குள் முடித்தது...

    @அனுஜன்யா...
    வாங்க சார்.. நன்றி...நான் கவனித்ததை நீங்களும் கவனித்து இருக்கிறீர்கள்...பத்திரிக்கை ஓவியர்களைப் பற்றி ஓரிரு பதிவிடும் எண்ணம் உள்ளது..

    @சக்தி...
    வாங்க சக்தி.. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....

    @கோசி...
    //But the thing is, she looks more of giving pose to the artist than talking on the phone//
    அதை ராமு சார்கிட்டதான் கேட்கணும்..
    உனக்கு ஓவியத்தினை விட ஓவியப் பெண் பிடித்ததில் எனக்கு இன்னும் மகிழ்ச்சி...

    @இராஜலட்சுமி பக்கிரிசாமி...
    முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி இராஜலட்சுமி...

    @கபீரன்பன்...
    //புராதனங்கறது ரேடியோ பெட்டிய பாத்தாலே தெரியுது :))//
    நான் புராதனம்ன்னு சொன்னது படம் வரையப் பட்ட காலத்தைக் குறிக்க, நீங்கள் இன்னும் உள்ளே போய் ரேடியோ பெட்டியைக் குறிப்பிட்டது இன்னும் பொருத்தம். நன்றி குருவே...
    ஸ்கிரைப் ஃபைர் லிங்க் கொடுத்ததற்கு நன்றி. நான் ஃபைர்ஃபாக்ஸ்தான் அதிகம் உபயோகிப்பேன். இதுஎனக்கு உதவுமெனெ நினைக்கிறேன். பயன்படுத்திவிட்டுச் சொல்கிறேன்...

    ReplyDelete
  16. அண்ணா,எளிமையாக அழகாக இருக்கிறது உங்கள் ஓவியம்.

    ReplyDelete