Friday, May 8, 2009

சுயமிழந்த சொற்கள்

முன் பின்னாய் முறை மாற்றி
மேல் கீழாய் வளைத்திழுத்து
கை திருகி,காலொடித்து
முடிவிலி சதுரத்தில்
திணிக்கப்பட்ட
சுயமிழந்த சொற்களின்
மௌன அலறலில்
புரிய ஆரம்பிக்கலாம்
கவிதையொன்று...

26 comments:

  1. அப்படி இல்லாமலேயே புரிகிறது இந்தக் கவிதை :)

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி சேரல்...
    //இந்தக் கவிதை :)
    //
    ஹி..ஹி... கவிஞரே ஒத்துக்கிட்டீங்க இத கவிதைன்னு...
    நன்றி...

    ReplyDelete
  3. அடப் போங்கப்பா...
    எவ்ளோ கஷ்டப் பட்டு எழுதிருக்கேன்.. புரிஞ்சிடுச்சின்னு சொல்றப்போ எவ்ளோ ஃபீல் ஆகுது தெர்மா மன்சு...
    நாளைக்கு முடிந்தால் இன்னைக்கே அடுத்த கவிதை ரிலீஸ்ஸ்

    ReplyDelete
  4. நான் முதன்முதலா வருகின்றேன் உங்கள் பதவிற்கு, கவிதை ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. அய்யோ அம்மா.. காப்பாத்துங்க...

    என்ன ஆச்சு சகா? உடம்ப பார்த்துக்கோங்க..

    நான் உங்க உடம்பத்தான் சொன்னேன்..

    ReplyDelete
  6. அச்சச்சோ இவ்வ்ளோ கஷ்டப் பட்டாதான் கவிதை புரியுமா???
    அன்புடன் அருணா

    ReplyDelete
  7. எப்படிங்க இந்தமாதிரியெல்லாம்....
    கலக்கல்!!!

    ReplyDelete
  8. நல்லாத்தான் இருக்கு தமிழ்ப்பறவை. கார்ககியைப் பத்தி கவலைப்படாதீங்க. படமும் பொருத்தம்.

    அனுஜன்யா

    ReplyDelete
  9. @ஆ.முத்துராமலிங்கம்
    முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி முத்துராமலிங்கம்.


    @கார்க்கி
    //அய்யோ அம்மா.. காப்பாத்துங்க...
    //
    இப்படித்தான் சகா இந்தக் கவிதை(..?) எழுதறப்போ ,கவிதையும் கதறுச்சு. விடுவோமா..புடிச்சுப் போட்டுட்டோம்ல.கவிதையைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே சகா...


    @அருணா மேடம்
    வாங்க மேடம்.. நன்றி...படிக்கிற உங்களுக்கே இவ்வளவு கஷ்டம்னா, கவிதைக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கும் .. அதைத்தான் சொல்ல வந்தேன்..


    @ஆதவன்...
    //எப்படிங்க இந்தமாதிரியெல்லாம்....
    கலக்கல்!!!//
    இதை நான் எப்படி எடுத்துக்கிறாதுன்னே தெரியலை. எனினும் நீங்களே சொல்லிடீங்க . நன்றி...



    @அனுஜன்யா

    வாங்க அனுஜன்யா சார். அழைப்பை மதித்து வந்து கருத்துப் பகிர்வுக்கு நன்றி.
    ‘நல்லாத்தானிருக்கு’ ந்னு சொல்ற அளவுக்கு கவிதை அமைந்ததில் மகிழ்வு.
    ஓவியத்தையும் கவனித்துக் கருத்திட்டமைக்கு சிறப்பு நன்றி சார்.

    ReplyDelete
  10. //நல்லாத்தான் இருக்கு தமிழ்ப்பறவை. கார்ககியைப் பத்தி கவலைப்படாதீங்க//

    அதானே... ஒருத்தன கெடுக்கறுதுன்னா உங்களுக்கு அவ்ளோ இஷ்டமாச்சே...

    //கவிதையைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே சகா...//

    அதான் பெரியவங்க எல்லாம் சொல்லிட்டாஙக்ளே.. நான் போய் கவிதையை பத்தியா??? ஹே ஹே ஹேய்ய்

    ReplyDelete
  11. அண்ணா, படத்துக்கு கவிதையா? இல்லை கவிதைக்கு படமா?

    எப்படி இருந்தாலும் சரி. நல்லா இருக்கு,

    // தமிழ்ப்பறவை கூறியது...
    அடப் போங்கப்பா...
    எவ்ளோ கஷ்டப் பட்டு எழுதிருக்கேன்.. புரிஞ்சிடுச்சின்னு சொல்றப்போ எவ்ளோ ஃபீல் ஆகுது தெர்மா மன்சு... //

    எனுக்கு ஒன்னியும் பிரியல நைனா! இப்ப சந்தோஷமா?

    ReplyDelete
  12. சுயமிழந்த சொற்களின்மௌன அலறலில்புரிய ஆரம்பிக்கலாம்கவிதையொன்று...

    vithyasamana kavithai nga

    ReplyDelete
  13. வித்தியாசமா, ரொம்ப நல்லா இருக்கு.. :)))

    ReplyDelete
  14. என்னமோ சொல்ல வர்ரீங்க...ஆனா என்னான்னு தான் புரியல.. :S
    வெயில் அதிகமோ???

    ReplyDelete
  15. கவிதை ரொம்ப நன்றாக இருக்கு தமிழ்பறவை...
    படமும் நன்றாக போட்டிருக்கிறீர்கள்..( நல்ல க்ரியேடிவிட்டி)

    ReplyDelete
  16. @மகேஷ்

    வருகைக்கு நன்றி மகேஷ்...கவிதைக்குத்தான் படம்.. படத்துக்குக் கவிதை இல்லை..


    @சக்தி
    வாங்க சக்தி முதல் வருகைஉக்கு நன்றி..//சுயமிழந்த சொற்களின்மௌன அலறலில்புரிய ஆரம்பிக்கலாம்கவிதையொன்று...

    vithyasamana kavithai nga

    //
    ஒத்துக்கிட்டா சரிங்க... நன்றி..



    @ஸ்ரீமதி

    அழைப்பை மதித்து வந்து வாழ்த்தியதற்கு நன்றி கவிஞரே...


    @கயல்விழி நடனம்
    என்னங்க இப்படிக் கவிழ்த்திட்டீங்க...
    //. :S//
    விதவிதமா சிரிப்பீங்க போல...
    இங்க கொஞ்சம் வெயில் அதிகம்தான்..



    @தர்ஷினி

    வாழ்த்துக்கு நன்றி தர்ஷினி..
    //படமும் நன்றாக போட்டிருக்கிறீர்கள்..( நல்ல க்ரியேடிவிட்டி)//
    கிரியேட்டிவிட்டிலாம் ஒண்ணும் இல்லை.அலுவலக ஆணிகள் குறைந்திருந்த பொழுதில்,பெயிண்ட்பிரஷில் கிறுக்கியது..


    ஆக மொத்தம் இது போன்ற கொலைவெறிக் கவிதைகளுக்குக் கூட ஆதரவு அதிகம் கிடைக்குதுன்னு தெரியுது...:-)

    ReplyDelete
  17. நீங்களுமா? நாடு தாங்குமா? எங்கேருந்துய்யா கிளம்பி வர்றீங்க..

    ReplyDelete
  18. வாங்க ஆதி சார்(அண்ணே...)
    இவ்ளோ லேட்டாவா வர்றது...அடுத்த கவிதை(..?!) ரெடி ஆயிடுச்சே...
    நீங்களாவது ஊக்குவிப்பீங்கன்னு பார்த்தா, ஊசியில குத்தீட்டுப் போறீங்க...
    இதுக்கெல்லாம் அஞ்சமாட்டேன். ஏற்கனவே ‘கொலவெறிக்கவிதை’க்கு மெஜாரிட்டி கிடைச்சுருச்சு...
    விடாது கவிதை...

    ReplyDelete
  19. தமிழ் பறவை,

    வழக்கமாக வாசிக்கப்படும் கவிதைதான்.படத்துடன் பார்க்க நல்லா இருக்கு.

    உங்களுக்குத் தெரியுமா? இந்த மாதிரி
    முதலில் முயற்ச்சித்தேன் கவிதை எழுத தொடங்கும்போது.எனக்குப் பிடிபடாமல் போய் விட்டது.காரணம் இதில் மெலிதான அங்கதத்தை நுழைப்பது கஷ்டம்.அதுதான்.

    பதிவர் ஸ்ரீமதி நிறைய எழுதுகிறார்.
    இது மாதிரி.

    லேட்டாக பின்னூட்டம் இட்டதற்கு வருந்துகிறேன்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. அழைப்பை மதித்து விட்டுப் போன பதிவுகளுக்கும் வந்து கருத்திட்டமைக்கு நன்றி ரவி சார். நீங்க் ஊரில இல்லாதப்போதான கவிதை போட்டேன். இதுல வருத்தமென்ன சார்..

    கவிதை எழுத முயன்று தோற்ற பொழுதில் தோன்றியதிது சார்.. இதில் அங்கதம் கொண்டு வரமுடியவில்லை. ஸ்ரீ மதியின் ‘கவிதையின் ஆரம்பம்’ மட்டும் படித்தேன். அதுவும் இது போன்ற ஒன்றென்றே நினைக்கிறேன்..

    வாழ்த்துக்களுக்கு நன்றி சார்...

    ReplyDelete
  21. / தமிழ்ப்பறவை கூறியது...
    அடப் போங்கப்பா...
    எவ்ளோ கஷ்டப் பட்டு எழுதிருக்கேன்.. புரிஞ்சிடுச்சின்னு சொல்றப்போ எவ்ளோ ஃபீல் ஆகுது தெர்மா மன்சு... //

    hahhahaha

    ithu ithu

    ippadi nan oru kavithai potathuke en blog kathadiduchu

    ReplyDelete
  22. //hahhahaha

    ithu ithu

    ippadi nan oru kavithai potathuke en blog kathadiduchu//
    ஒய் பிளட்.. சேம் பிளட்..
    நானும் இப்போதான் படிச்சிட்டு வந்தேன் ‘தோல்விகள்’ கவிதை தானே...
    நல்லாத்தான் இருக்கு.. அதுக்கான என் கமெண்ட்ட இங்கயே போட்டுக்குறேன்...
    நானும் எவ்வளவுதான் புதுசா எழுத ஆரம்பிச்சாலும், நீங்க சொன்ன மாதிரி
    //எங்கோ படித்தவைகளின்
    தாக்கமே எனக்குள்
    புதிதாய் புகுத்த
    முயல்கையில்//
    வந்துடுது..முயற்சிக்கிறேன், பழையதைக்கூடப் புதியதாக எழுத...

    ReplyDelete
  23. ரொம்ப நல்லா இருக்குங்க

    ReplyDelete
  24. //தமிழ்ப்பறவை கூறியது...
    // :S
    விதவிதமா சிரிப்பீங்க போல...

    அது சிரிக்கிறது இல்லீங்கோ... நான் குழப்பத்துல இருக்கேன்னு அர்த்தம்..(I am confused..)
    :D

    இங்க கொஞ்சம் வெயில் அதிகம்தான்.. --

    ஆமாம்...ஆமாம்..இப்போ தான் நம்ம ஊர்ல இருந்து திரும்பி வந்து இருக்கேன்..வெயில் கொஞ்சம் இல்ல...நிறையவே அதிகம்...

    ReplyDelete
  25. @மண்குதிரை..
    முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி மண்குதிரையாரே...

    ReplyDelete