‘மாயக்கண்ணாடி’யில் முகம் தொலைத்த சேரனின் அடுத்த படம் ‘பொக்கிஷம்’. படத்தின் கதையைப் பற்றிக் கேள்விப்பட்ட வகையில் இது இன்னொரு ‘ஞாபகக் கையெழுத்து’ போல் தோன்றுகிறது.(ஆட்டோகிராஃப்). 70-80 காலகட்டங்களில் இருந்த காதலையும், கடிதத்தூதையும் சொல்ல வருகிறார்.
இசையமைத்திருப்பவர்கள் சபேஷ்-முரளி. இவர்கள் ஏற்கனவே சேரனுடன் இணைந்து கொடுத்த படம் ‘தவமாய்த் தவமிருந்து’.
சேரனுக்கு இயக்குனர் என்ற முறையில் இசையமைப்பாளரின் வண்ணத்தை, அவர் விருப்பத்திற்கேற்றார்போல மாற்றிக்கொள்ளும் திறம் உண்டு என்பதை தனது முந்தைய படங்களில் நிரூபித்திருக்கிறார்(இளையராஜாவைத் தவிர).எந்த இசையமைப்பாளரையும் அவர்களின் இயல்பு மறக்க வைத்து, கதைக்கேற்றார்போல பாடல்கள் வாங்கிவிடுவார்.(தேவா,பரத்வாஜ்,சபேஷ்-முரளி)
அந்த வகையில் ‘பொக்கிஷம்’ பாடல்கள் ஒரு இசைப் பொக்கிஷமே. இது வரை வந்த சேரன் படத்துப் பாடல்களில் ‘பொக்கிஷம்’ உச்சமெனலாம். வழக்கம்போல் ஒரு நாயக அறிமுகப் பாடல்,ஒரு டூயட், ஒரு குத்துப்பாடல் என்ற பழைய பல்லவியைப் பாடாமல், கதையின் போக்கில் உரசிச் செல்லும் அல்லது கதையை நகர்த்திச் செல்லும் விதமாக பாடல்களை உபயோகிக்க எண்ணி உருவாக்கியிருக்கிறார் எனலாம்.
மொத்தம் பதினோரு பாடல்கள். இரண்டு பாடல்கள் மட்டும்தான் தமிழ்த் திரைஇசை இலக்கணப்படி நான்கு (அ) ஐந்து நிமிடங்களைக் கடக்கும் முழுப்பாடல்களெனலாம். அவையுங்கூட வழக்கமான ஒரு பல்லவி, இரு சரணம் என அமையாது, கவிதைக்கு இசை அமைத்ததுபோல் தெரிகிறது.
எல்லாப் பாடல்களுமே யுகபாரதியின் பேனா பிரசவித்தவைதான்.
’hi da' 'hi di','pujju' போன்ற SMS வார்த்தைகள் இல்லாத நாளில் காதலர்கள் எப்படி மடலை ஆரம்பித்திருப்பார்கள் என நடத்தப் பட்ட சிறு கவிதைப் பட்டிமன்றம்தான் ‘நிலா நீ வானம் காற்று’எனத் தொடங்கும் இப்பாடல். -சின்மயி,விஜய் ஏசுதாஸின் குரலில் மனதை வலம் வருகிறது.பாடலில் ‘அன்புள்ள படவா’வில் சின்மயியின் சிணுங்கல் ‘சிலீர்’.இப்பாடலுக்கான பின்னிசை இதமான தென்றல்.
’அழகு முகம்’,’கனவு சிலசமயம்’,’சிறு புன்னகை’,’உலகம் நினைவிலில்லை’. இப்பாடல்கள் அனைத்தும் ஒரே மெட்டிலமைந்த குறும்பாக்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சூழலுக்கேற்ப இருக்கிறது.முதல் மூன்று பாடல்களைத் தனியாகவும்,இறுதிப்பாடலை மஹதி(அழகுக்கிளி..:-p)யுடனும் பாடியிருப்பவர் பிரசன்னா(’அதிரடி சிங்கர்’ முசுடு நடுவர்). பயணம், சோகம், முதல் காதல் பார்வை,காதல் என ஒவ்வொரு உணர்வுக்கேற்ப இசையும், வரிகளும், பிரசன்னாவின் குரல் பங்களிப்புமென நான்குமே நல்லிசைப் பாடல்கள்.
கார்த்திக்கின் குரலில் ‘அஞ்சல் பெட்டியைக் கண்டதுமே’ உற்சாக ஊற்று.ரஞ்சனியின் ‘வரும் வழியெங்கும்’, மதுபாலகிருஷ்ணனின் ‘மொழி இல்லாமலே’ இரண்டும் சோ(சு)க கானங்கள்.(பின்ன எப்படிங்க சேரன் முதுகு காட்டி அழமுடியும்...?!)
மெல்லிய சாக்ஸஃபோன் கசியலில் ஆரம்பிக்கும் ‘மூன்று நாள் ஆகுமே’ கார்த்திக்கின் குரலில் காத்திருப்பையும், காதலையும் (இரண்டும் ஒன்றுதானே..?!) கனிந்து சொல்கிறது.
‘ஓஹ்..ஓஹ்..’ விஜய்யேசுதாஸ் பாடியது.
‘ஆஜ்மொனே போலேச்சே’ என வேற்று மொழியில் ஆரம்பிக்கும் பாடல்(உஜ்ஜயினி, விஜய் ஏசுதாஸ்) போகப்போக மெலடியில் கரைந்து பின் மீண்டும் ஆரவாரத்தோடு நிறைவுறுகிறது.
பலம்: ஒரு பாடல் தவிர மற்றெல்லாப் பாடல்களிலும் தமிழும், காது கிழிக்காத இசையும் மட்டுமே உள்ளது.(இதையே ஒரு தமிழ்த் திரைப்பட ஆல்பத்தின் பலவீனமாகக் கருதுவோரும் உண்டு)
சமீபத்திய ஆல்பங்களில் அனைத்துப் பாடல்களுமே ரசிக்க வைத்தது ‘பொக்கிஷம்’ மட்டுமே.
’சேரன் - சபேஷ்-முரளி - யுகபாரதி’- நிச்சய வெற்றிக் கூட்டணி.
‘பொக்கிஷம்’- (இசைக்)காதலர்களைக் கொள்ளையடிக்கும்.
நன்றி: புகைப்பட உதவி india glitz மற்றும் இதர தளங்கள்
நல்லா இருக்கும் போல?
ReplyDeleteவாங்கிருவோம்!
நல்லா இருக்கும் போல?
ReplyDeleteவாங்கிருவோம்!
// பின்ன எப்படிங்க சேரன் முதுகு காட்டி அழமுடியும்...?!//
ReplyDelete:)))))))
வாங்க மகேஷ்.. கண்டிப்பா கேட்டுப் பாருங்க.. எல்லாப் பாடல்களுமே நல்லாருக்கு. முதல் கேட்பிலேயே பிடித்துப் போகும்..
ReplyDeleteம்ம்ம்... பார்க்கலாம்... இளையராஜா மீது எனக்கு எப்போதும் நம்பிக்கையுண்டு!
ReplyDeleteவாருங்கள் ஆதவா...
ReplyDelete//இளையராஜா மீது எனக்கு எப்போதும் நம்பிக்கையுண்டு//
எனக்கும்தான். நான் சொல்ல வந்தது என்னவெனில், ‘தேசியகீதம்’ படத்தில் நல்ல கதை இருந்தும், பாடல்கள் எனப் பார்த்தால் சுமார்தான். ‘மாயக்கண்ணாடி’ படத்தில் கதை சரியாக இல்லை, அதனால் நல்ல பாடல்கள் கூட பல நல்ல காதுகளைச் சென்றடையவில்லை(கொஞ்சம் கொஞ்சம், உலகிலே அழகி நீதான், காசு கையில் இல்லாட்டி, ஒரு மாயலோகம் பாடல்கள்). சேரன் இளையராஜாவின் பரம விசிறி.. ஏனோ கூட்டணி ஒர்க் அவுட் ஆகவில்லை.
இளையராஜாவின் ‘அழகர்மலை’ பாடல்கள் கேட்டுப் பாருங்கள். இனிமையாக இருக்கிறது.
பாடல்கள் நல்லாயிருக்கிறது. படம் எப்படி? ராமன் தேடிய சீதைக்கு பிறகு சேரன் நடிக்கும் படம்? பார்க்கலாமா?
ReplyDeleteபாடல் கேட்டு பார்த்துவிட்டு பதில் தருகிறேன் தமிழ்பறவை..
ReplyDeleteமற்றபடி விமர்சனங்கள் பாடலை கேட்க தூன்டுகிறது
வாங்க ஆனந்த்...
ReplyDeleteபடத்தைப் பற்றித் தெரியாது.படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ.. சேரன் நடிக்கிறாரோ, அழுது துடிக்கிறாரோ.. அதைப்பற்றிய கவலைகளை எல்லாம் மறந்து பாடல்கள் கேட்கலாம். அருமை.
(நானும் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பாடல்கள் கேட்டபின் ஆர்வம் அதிகமாகிவிட்டது.)
பாட்டு இன்னும் கேக்கல...சேரன் படம்ன்னா கொஞ்சம் பயம்... நம்பி கேக்கலாமோ????
ReplyDelete//காத்திருப்பையும், காதலையும் (இரண்டும் ஒன்றுதானே..?!) கனிந்து சொல்கிறது.
நிஜம்... ரசித்தேன்..
அட நான் இன்னும் கேட்கலையே.. மிஸ் பண்ணிட்டேன் சகா..
ReplyDeleteஇன்னைக்கே சிடி வாங்கனும்
@தர்ஷினி
ReplyDeleteகேட்டுப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
@கயல்விழி நடனம்
//..சேரன் படம்ன்னா கொஞ்சம் பயம்..//
எல்லோருக்கும் இருக்க மாதிரி உங்களுக்கும் ‘சேரனாக்ட்ஃபோபியா’ இருக்குன்னு நினைக்கிறேன். பட் பாடல்கள் நல்லா இருக்கு....
@கார்க்கி
சகா...நீங்கள்லாம் கண்டிப்பாக் கேட்க வேண்டிய பாடல்கள்.உடனே சீடி வாங்கிடுங்க.
/சகா...நீங்கள்லாம் கண்டிப்பாக் கேட்க வேண்டிய பாடல்கள்.உடனே சீடி வாங்கிடுங்க.//
ReplyDeleteஇதுல என்ன வில்லங்கம் இருக்கோ விவகாரம் இருக்கோ தெரியலையே
//
ReplyDeleteஇதுல என்ன வில்லங்கம் இருக்கோ விவகாரம் இருக்கோ தெரியலையே//
அப்படிலாம் ஒண்ணுமில்ல சகா... பொதுவாச் சொன்னேன்.(காதலில் உருகுறவங்க ஒரு ரகம். ‘காதல்’னாலே உருகுறவங்க இன்னொரு ரகம்)
பகிர்வுக்கு நன்றி தமிழ் !!!!
ReplyDeleteபொக்கிஷம் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.
வருகைக்கு நன்றி செய்யது சார்....
ReplyDeleteநீங்க சொன்னா சரிதான்...!!! உடனே வாங்கீறேன்.....!!!!!
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி மேடி...
ReplyDeleteகேட்டுப் பாருங்க பொக்கிஷத்தை...
தமிழ் பறவை,
ReplyDeleteவழக்கம் போல நல்ல நடை.
பாட்டுக்கள் கேடகவில்லை.
கேட்ட பிறகு சொல்கிறேன்.நெட்டில் கேட்க முடியுமா? சொல்லவும்.
வாங்க ரவிசார்... பாடல் விமர்சனத்தில் கூட எழுத்து நடையைப் பாராட்டியுள்ளீர்கள் நன்றி. நான் விமர்சனம் எழுதுவது கூட எழுத்துப் பயிற்சிக்குத்தான்..
ReplyDeleteபாடல் நேரடியாகக் கேட்பது எங்கு எனத் தெரியவில்லை.
http://www.raaga.com/
ராகாவில் கேட்கலாம். ஆனால் அங்கு ‘பொக்கிஷம்’ இல்லாதது போல் தெரிகிறது. தேடிப் பார்த்துச் சொல்கிறேன் சார்...
நான் யு ட்யூபில பார்த்தேன் ( கேட்டேன் !!!)
ReplyDeleteவாங்க ’அது ஒரு கனாக்காலம்’.
ReplyDelete