Thursday, October 2, 2008

முத்தம் தருவது உடலுக்குக் கேடு

ஹலோ... உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? எனக்கு அழகான பொண்ணுங்களைக் கண்டாலே பிடிக்காது.அது ஏன்னு எனக்கும் தெரியலை.அதுக்கு முன்னாடி நான் எங்க இருக்கேன்னு சொல்லிடுறென்.நான் இருக்கிறது இந்தோர்ல.இந்தோரைப் பத்திக் குறிப்பிட்டுச் சொல்லணும்னா, இது ஒரு தொழில் வளமுள்ள ஒரு நகரம்.(இப்படியே போனா நியூஸ் ரீல் ஆயிடும்.மேட்டருக்கு வருவோம்)இங்க பொண்ணுங்கதான் இன்னொரு சிறப்பு.இங்க இருக்கிற பொண்ணுங்களை ரெண்டு வகையாப் பிரிக்கலாம்.முதல் வகை அழகானவங்க. ரெண்டாவது வகை ரொம்ப அழகானவங்க. முன்னயே சொன்ன மாதிரி எனக்கு அழகான பொண்ணுங்களைப் பிடிக்காததுனால, ரொம்ப அழகான பொண்ணுங்களைப் பார்க்குறதுக்காகவே 'மங்கள்சிட்டி'ன்ற புண்ணியதலத்துக்கு தினமும் ஈவினிங் விசிட் பண்ணுவேன்.இத்தலத்தை 'ஷாப்பிங் மால்'ன்னு தெளிவா, தமிழ்ல சொன்னாப் புரியும்ன்னு நினைக்கிறேன்.இங்க பொருள் வாங்குறதெல்லாம் நம்ம பழக்கமில்லை.ஏன்னா அதெல்லாம் வாங்குனா காசு குடுக்கணுமாம்.அதனால சிம்பிளா ஒரு வசதியான இடத்துல உட்கார்ந்துகிட்டோ, நின்னுகிட்டோ வேடிக்கை பார்த்துட்டிருப்போம்.(என்ன பன்மை வந்துடுச்சேன்னு பார்க்குறீங்களா..நம்ம ஃப்ரெண்டு ஒருத்தர் கூடச் சேர்ந்துட்டாரு). நான் அக்கறையா ஒரு தூரத்துப் பச்சையைப் பார்த்துட்டிருக்கப்ப, ராஜா (அட..புது கேரக்டரெல்லாம் கிடையாது.ஃப்ரெண்டோட பேருதான்)'உனக்கு ஃபோன்'னு அவன் மொபைலக் குடுத்தான்..


'சரி'ன்னு ஃபோனை வாங்கி அவன்( (ராகவன் எ ரெமோ)கிட்ட‌ பேசினேன்.

'சித்தப்பு..எனக்கு சௌத் இந்தியன் மிஸ் இருக்க இடம் தெரியும் 'ன்னு சொன்னான்.
ஃபிகர் கடந்து விட்ட கடுப்பில்,'அடேய்.. சௌத் இந்தியன் மிஸ் எல்லாம் பிட்டர். இந்தோர் மிஸ்தான் பெட்டர்' ன்னேன். 'அட பட்டரு...நான் சொன்னது சௌத் இந்தியன் மெஸ்ஸை. சோறு அன்லிமிட்டெட் ஆஃபர். வந்தா வா...'ன்னுட்டு காலை கட் பண்ணிட்டான்."சோறு கண்ட இடம் சொர்க்கம்"ன்னு சும்மாவா சொன்னாங்க. பொண்ணப் பார்த்தா, வழக்கம் போல பன்னத் தின்னுட்டு, தண்ணியைக் குடிக்க வேண்டியதுதான்னு ஒரு எச்சரிக்கை உணர்வோட மறுபடியும் ரெமோவுக்குக் கால் பண்ணேன். 'நண்பா... பழி வாங்குறதெல்லாம் அப்புறம் இருக்கட்டும். இப்போ மெஸ் எங்க இருக்கு சொல்லு ராஜா'ன்னு தாஜா பண்ண ஆரம்பிச்சதுல, பயபுள்ள உருகி வழி சொல்ல ஆரம்பிச்சான். 'இப்போ எங்க இருக்க..? மங்கள்சிட்டியிலயா... சரி அப்படியே ரோட்டக் கிராஸ் பண்ணி,இந்தப் பக்கம் ரெண்டு எட்டு எடுத்து வச்சேன்னா, ஒரு சந்து வரும் அதுல உள்ள நுழஞ்சு அப்டியே ,இப்டி வந்தேன்னா...' சொல்லிக்கிட்டே போனவன இடைமறிச்சு,'அடேய் வென்ரு, ஃபோன்ல பேசும் போது
கைய‌,கால நீட்டிலாம் வழி சொல்லக்கூடாது. ஒழுங்கா சொல்லு'ன்னேன்.ஒருவழியா வழிசொல்லும் படலம் முடிஞ்சு,நாங்க நடக்க ஆரம்பிச்சாச்சு.ஸ்பாட்டை நெருங்குறதுக்கு முன்னாடி உறுதி செஞ்சுக்கிறதுக்காக மறுபடியும் அவனைக் கூப்பிட்டு, நாங்க இருக்க இடத்தைச் சொன்னேன். 'அப்படியே நேரா வந்தா, இங்க ஒரு எலக்ட்ரிசிட்டி கம்பம் இருக்கும். பக்கத்துல நான் நிக்கிறேன்'ன்னான். 'நீ இருக்கிற உசரத்துக்கு ,கம்பம் பக்கத்துல நிக்காத. எவனாவது தப்பா நினைச்சுக்கிட்டு உன்மேல டுட்டோரியல் சென்டரு,கம்ப்யூட்டர் சென்டரு நோட்டீஸெல்லாம் ஒட்டிறப் போறானுங்க'ன்னு நான் முடிக்கிறதுக்குள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.


ஒருவழியா இடத்தைக் கண்டுபிடிச்சு, சம்பவம் நடந்த இடத்திற்குப் போனோம்.(தலைப்பை மறந்துட்டீங்களா..?) SICA (South Indian Cultural Association) அப்படீன்ற அமைப்பு நடத்துறதுதான் இந்த மெஸ். நம்ம சௌத் இந்தியன் டிஷஸெல்லாமே கிடைக்கும்,கொஞ்சம் காஸ்ட்லி. அதுவா முக்கியம்.(சோறே சொர்க்கம்).இங்க மேனேஜர் மட்டும் தமிழ் ஆளு(தூத்துக்குடி ஏரியா) அதனால தமிழ் கொஞ்சம் தேங்காயெண்ணை வாசத்தோடு இருக்கும். வேலை பார்க்குற, சமைக்கிற, பரிமாறுற எல்லாரும் வட இந்தியர்களே. இங்க சாப்பிட வர்றவங்க சரிபாதி பேருதான் (தமிழ் மற்றும் ஆந்திரம்). மீதி எல்லாரும் கிண்ணத்துல முக்கி,முக்கி சாம்பார் குடிக்க வர்ற 'ஹம் ஆப்கே கெயின்கோன் ஃபாமிலி'தான். அதனால யாரையுமே பாத்த உடனே அடையாளம் கண்டுபிடிச்சு தமிழ்ன்னா உடனே மொக்கை போட ஆரம்பிச்சுருவோம். திராவிட நிறத்தில இருந்தா தமிழ்ன்னு உடனே தெரிஞ்சுரும். கொஞ்சம் கலராவோ,ஆனால் மீசையுடனோ இருந்தா லைட்டா டவுட் வரும் தமிழா, ஆந்திராவான்னு. ஆனா அது அவ‌ர் எதை முதல்ல சாப்பிடுறார்ங்கிறதப் பார்த்தவுடனே தெரிஞ்சுடும். ஊறுகாயைத் தொட்டா ஆந்திரா. அப்பளம் கேட்டா தமிழ்நாடுன்னு. சாப்பிட்டுக்கிட்டிருக்கும் போது தமிழ் தெரியாத ஆள்ங்க வந்தா எங்களுக்குள்ளேயே தமிழ்ல கமெண்ட் பண்ணி சிரிச்சிப்போம். முடிஞ்சளவுக்கு ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்து, முழுக்க,முழுக்கத் தமிழ்லேயே பேசிப்போம்.(வட இந்திய அம்மணிகள் முள் கரண்டியால் தோசை சாப்பிடும் அழகே அழகு).


சம்பவம் நடந்த அன்னிக்கு நான்,ராஜா,ரெமோ மூணு பேரும் சாப்பிட ஆரம்பிச்சுட்டோம். அப்போதான் அந்த நாலு பேரு ஒரு இரண்டரை வயசுக் குழந்தையோட உள்ள வந்தாங்க.ரெண்டு தம்பதிகள். அதுல ஒருத்தர் நல்லா உயரமா,குறுந்தாடியோட இருந்தார். இரண்டு பெண்களுமே பளீரெனத் தெரிந்தனர்.வட இந்திய உடையில் இருந்ததால், அவர்கள் அனைவருமே வட இந்தியர்கள் என ஒரு மினி பொதுக்குழு போட்டு முடிவு பண்ணிட்டோம்.அப்போதான் ராஜா சொன்னான்,'மச்சான்..எனக்கு டவுட்டாத்தான் இருக்கு. கொஞ்சம் அமுக்கி வாசிப்போம்'னு.சரினு மெதுவான குரலில் கிசுகிசுக்க ஆரம்பித்த வேளையில ,குறுந்தாடிக்காரர் தன் மகளிடம் 'அப்பளம் சாப்பிடு'ன்னு சொன்ன உடனே நாங்க உஷாராயிட்டோம். அப்புறம்தான் தெரிஞ்சது வந்தவங்கள்ள, குழந்தையோட வந்திருந்த தம்பதிகள் தமிழ்நாடுன்னு.


அவங்க தமிழ்நாடுன்னு தெரிஞ்சப்புறம்,கமெண்ட்டை நிறுத்திட்டு எப்படி அவங்ககிட்ட பேச்சை ஆரம்பிக்கிறதுன்னு நெனச்சுட்டிருந்தோம்.வழக்கம்போல எங்களுக்குள்ளேயெ தமிழ்ல கொஞ்சம் சத்தமா பேச ஆரம்பிச்சோம்.எல்லோரையும் போலவே அந்தக் குறுந்தாடிக்காரரும் எங்களைப் பார்த்து 'எங்க வேலை பார்க்குறீங்க'ன்னு விசாரிக்க ஆரம்பிச்சார்.அதைப் பிக்கப் பண்ணிட்டு, சகஜமாப் பேச ஆரம்பிச்சோம்.இடையிடையே குழந்தையுடன் விளையாடிக்கிட்டே நாங்க எங்க டின்னர முடிச்சோம்.அப்படியே அவங்ககிட்ட சொல்லிட்டுக் கிளம்பினோம்.எனக்கு முன்னாடி ராஜாவும், ரெமோவும் பில்லுக்குப் பணம் கொடுக்கப் போயிட்டாங்க.நான் குழந்தைக்கு டாட்டா காமிச்சுட்டே ,கிளம்பி கதவுக்கிட்டப் போகையில, அவங்க அப்பா குழந்தைகிட்ட,'மாமாவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடு'ன்னாரு.நானும் திரும்பி நின்னேன். பாப்பாவும் ஒரு பறக்கும் முத்தம் குடுத்துச்சு. பதிலுக்கு நானும் ஒண்ணு குடுத்துட்டு திரும்பப் புறப்படுறப்போ,'அங்கிள்...' பாப்பாவின் குரல் கேட்டு நின்னு திரும்பிப் பார்த்தேன்.பாப்பா சிரிச்சுக்கிட்டே................'அங்கிள்... மம்மிக்கு கிஸ்...?'ன்னு போட்டது ஒருபோடு.

அப்போதான் எனக்குக் கண்ணக் கட்டுச்சு.ஒரு வினாடி செயலிழந்து,அப்புறம் உடனே சுதாரிச்சுட்டேன்.இதுக்கப்புறம் அவங்க இருந்த ஏரியா பக்கமே பார்க்காம விறுவிறுன்னு நடையைக் கட்ட ஆரம்பிச்சேன்.பாப்பாவின் (அ)நியாயமான திடீர்க் கோரிக்கையில் அமைதியான இடம் ஓரிரு நிமிடங்களுக்குப் பின்னாடி இரு பெண்களின் 'கலீர்'ச் சிரிப்புடன் தொடர்ந்த (முத்தம் குறித்த)கேலிப்பேச்சினால் நார்மலானது.பாப்பாவுக்கு முத்தம் குடுக்கச் சொன்ன அவங்க அப்பாவோட முகத்தை என்னால கற்பனை கூடப் பண்ணிப்பார்க்க முடியல.

இப்போ சொல்லுங்க... ஏதோ அறியாத்தனமா அந்தக் குழந்தை கேட்டதுக்காக முத்தம் குடுத்துருந்தா என் உடலுக்குத்தானே கேடு.....

பி.கு.1:அந்தக் குறுந்தாடிக்காரர் தற்பொழுது தமிழகத்தில் வேலை கிடைத்து செட்டில் ஆகி விட்டார்.

பி.கு.2:சௌத் இந்தியன் மெஸ் சில, பல நிர்வாகக்காரணங்களால் இரு மாதங்களுக்கு முன் மூடப்பட்டுவிட்டது.

டிஸ்கி: தயவுசெய்து பி.கு.1 க் காரணம் ,இப்பதிவில் சொல்லப்பட்ட நிகழ்வுதான் என நீங்களாகக் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.


42 comments:

  1. படித்தேன்

    சிரித்தேன்..

    ரசித்தேன்..
    ஒரு சின்ன ரிக்வெஸ்ட் :

    ஃபான்ட் சைஸ் இன்னும் பெரிதாக இருந்தால் படிப்பதற்கு வசதியாக இருக்கும்..
    அநியாயத்துக்கு இவ்ளோ சின்ன எழுத்துக்களா???
    ( இப்படி இன்னும் ரெண்டு பதிவுகள் உங்களுத படிச்சா கண்ணாடி தான் நான் போடணும்)
    மாத்திடுங்க( தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்)

    ReplyDelete
  2. வாவ்....இவ்வளவு அழகா இருக்கு.தமிழ்ப்பறவை அண்ணா படத்தை ஆட்டாதீங்கன்னு சொல்றீங்க.ஆனா படம் ஆடினாதான் அழகா இருக்கு.
    மன்னிச்சுக்கோங்க.நான் ஆடவிட்டுத்தான் பாப்பேன்

    ReplyDelete
  3. thanks for coming animaa.. now i changed the font size....

    ReplyDelete
  4. vaanga sakothari.... id didnt expect ur comment on ur vacation time.
    //இவ்வளவு அழகா இருக்கு//
    i dont understand.. this comment for post or the figure...
    //ஆனா படம் ஆடினாதான் அழகா இருக்கு.
    மன்னிச்சுக்கோங்க.நான் ஆடவிட்டுத்தான் பாப்பேன்//
    athanaalathaan naan aadavida vaendamnu sonnaen. nammaaLungka ethu sonnaalum opposite a seyvaangannu theriyum

    ReplyDelete
  5. மிக நியாயமான கோரிக்கை நிறைவேற்றாததற்கு கண்டனங்கள்

    ReplyDelete
  6. welcome mangalore siva....
    என்னை அடி வாங்கி விட்டுருவீங்க போலிருக்கே....

    ReplyDelete
  7. நல்லா இருக்குங்க. கேக்காட்டியும் முத்தம் கொடுக்கிற காலத்தில கேட்டும் கொடுக்காத நீங்க ரொம்ப நல்லவரு

    ReplyDelete
  8. /நல்லா இருக்குங்க. கேக்காட்டியும் முத்தம் கொடுக்கிற காலத்தில கேட்டும் கொடுக்காத நீங்க ரொம்ப நல்லவரு//
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  9. வாங்க பிரபா அண்ணாச்சி....

    ReplyDelete
  10. ரொம்ப நல்லாருந்துச்சிங்க.. (நெறைய பேரு போட்டிக்கு வர்றாங்கப்பா..)

    ReplyDelete
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    ReplyDelete
  12. ரொம்ப நல்லாருந்துச்சிங்க.. (நெறைய பேரு போட்டிக்கு வர்றாங்கப்பா..)
    எதுக்கு முத்தம் குடுக்கிராதுக்கா...?

    ReplyDelete
  13. கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றிகள்

    ReplyDelete
  14. //எவனாவது தப்பா நினைச்சுக்கிட்டு உன்மேல டுட்டோரியல் சென்டரு,கம்ப்யூட்டர் சென்டரு நோட்டீஸெல்லாம் ஒட்டிறப் போறானுங்க'ன்னு நான் முடிக்கிறதுக்குள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
    //

    நல்லா சிரிச்சேன் சகா.. நான் கூட தலைப்ப பார்த்துட்டு பயந்துட்டேன்.. இந்தோர்ல பொண்ணுங்க அவ்ளோ அழகா???

    ReplyDelete
  15. வாங்க கார்க்கி...
    //இந்தோர்ல பொண்ணுங்க அவ்ளோ அழகா???//
    அதைப் பத்தி ஒரு முழு நீளளப் பதிவே போடலாம்ன்னு இருக்கேன்...
    களப்பணியில் இறங்கி இருக்கேன்.. விரைவில் எதிர்பார்க்கலாம்...
    //கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றிகள்//
    வாங்க அணிமா...
    எவ்வளவோ பண்ணிட்டோம்...
    இதைப் பண்ணமாட்டோமா....?!!!!

    ReplyDelete
  16. ஹி...ஹி...ஹி. ரொம்ப நல்லவரு நீங்க.

    ReplyDelete
  17. //ஹி...ஹி...ஹி. ரொம்ப நல்லவரு நீங்க.//
    வாங்க ஆனந்த்.. உங்களுக்காவது என்னப் பத்தித் தெரிஞ்சிருக்கே....

    ReplyDelete
  18. அன்பு தமிழ்ப்பறவை...

    அட்டகாசமாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. சிரித்தேன் ...நல்ல பதிவு ...

    ReplyDelete
  20. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி விஷ்ணு...

    ReplyDelete
  21. புன்னகைக்கு நன்றி கேபிள் சங்கர் சார்...

    ReplyDelete
  22. படித்தேன்

    சிரித்தேன்..

    ரசித்தேன்..

    repeateee

    :-)))))))))))))))))

    ReplyDelete
  23. வருகைக்கும்,சிரித்தமைக்கும் நன்றி முரளிகண்ணன்...

    ReplyDelete
  24. தமிழ்பறவை அண்ணா இன்னைக்குத்தான் இந்தப் பதிவை ஆறுதலா படிச்சேன்.நீங்க முத்தம் குடுக்கப் போய் மாட்டிக்கிட்டதுக்கு,
    முத்தம் குடுக்கிறதே உடம்புக்குக் கேடுன்னு சொல்றது ஞாயமா?

    ReplyDelete
  25. நண்பரே
    உங்களை ஒரு தொடர் பதிவிற்குஅழைத்திருக்கிறேன் மறக்காமல்.கலந்து கொள்ள
    அன்புடன்வேண்டுகிறேன் ...

    விபரங்களுக்கு
    எனது வலைத்தளம் பாருங்கள்
    இந்த அன்பு கட்டளையை தட்ட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களின்
    இனிய தோழன்
    விஷ்ணு

    ReplyDelete
  26. வாங்க ஹேமா...
    உண்மையைச் சொன்னா உலகம் நம்ப மாட்டேங்குது...
    //நண்பரே
    உங்களை ஒரு தொடர் பதிவிற்குஅழைத்திருக்கிறேன் மறக்காமல்.கலந்து கொள்ள
    அன்புடன்வேண்டுகிறேன்//
    நண்பர் விஷ்ணுவுக்கு
    தொடர் ஆட்டத்திற்கு
    அழைத்தமைக்கு நன்றி..கண்டிப்பா அடுத்த பதிவு போட்டுரலாம் தலை..

    ReplyDelete
  27. neenga mudalil koduthadhu kozhandhayoda ammakku illaya?! :)

    ReplyDelete
  28. வாங்க தர்ஷினி...குழந்தைக்கு கொடுத்ததுக்கே இந்தப்பாடாயிடுச்சு...அவங்க அம்மாவுக்குக் கொடுத்திருந்தா...'முத்தம் தருவது உடலுக்குக் கேடு'...
    தமிழ்ல பின்னூட்டலாமே... தெரியாதிருந்தால் இங்கு செல்லவும்...
    www.tamileditor.org க் இங்கு டைப்படித்து, காப்பி செய்து பின்னூட்டலாம்.

    ReplyDelete
  29. விஜயநகர்ல சாயாஜி ஓட்டலுக்கு எதிர்த்த ரோட்டுல ஒரு மாமி மெஸ் இருந்துச்சே...அது இன்னும் இருக்கா? அங்கே போயிருக்கீங்களா? ஞாயித்துக்கெழமை காலைல அங்கே பொங்கல் கெடைக்கும். கஜ்ரானா கோயில், பலாசியா, சராஃபா எல்லாம் சுத்திப் பாத்தாச்சா?

    பதிவு ஜாலியா இருந்துச்சு படிக்கறதுக்கு.

    ReplyDelete
  30. ஹலோ, நீங்க இந்தோர்ல இருந்தீங்களா...
    அந்த மாமி மெஸ்ல‌தாங்க டெயிலி நான் சாப்பிடறது.
    இந்த மெஸ்ஸுக்காகத்தான் நான் விஜயநகர்லயே ரூம் எடுத்தேன்.
    மத்தது எப்படியோ ஃபில்டர் காஃபி பிரமாதமா இருக்கும். தினம் 3 காஃபி சாப்பிட்டுருவேன்.
    உங்களைக் கைப்புள்ளன்னு சொன்னா மாமிக்குத் தெரியுமா?
    பலாசியா போயிருக்கேன்..கஜ்ரானா கோயில் போனதில்லை. போகணும்.
    //பதிவு ஜாலியா இருந்துச்சு படிக்கறதுக்கு//
    நன்றி வருகைக்கும், வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  31. naanum oru mess arambigalam mudivupanniten.... appuram paarunga messa pathi pesarathaye niruthiduveenga....(antha alavukku nalla samaipen pa)...thappa purinchika poringannu indha vilakkam..... :)

    ReplyDelete
  32. வந்து இந்தோர்ல ஆரம்பிங்க... மாமி மெஸ்ஸைவிட நிச்சயம் பெட்டரா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
    ஆமா அந்த குழந்தையும்,குடும்பமும் வருவாங்களா...?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  33. நன்றி அண்ணா...

    ReplyDelete
  34. அப்பாடா தமிழ்ல்ல வந்துடுச்சு கமெண்ட்... ஏற்றுக்கொள்கிறேன்...

    ReplyDelete
  35. குழந்த குட்டி எல்லாம் இல்ல....
    ஆரம்பிச்சிடலாம் சீக்கிரமே....

    ReplyDelete
  36. அட மெஸ்ஸ ஆரம்பிக்க குழந்த குட்டி எல்லாம் தேவை இல்லை....
    குக்கர் சட்டி இருந்தா போதும்...

    ReplyDelete
  37. //ஹலோ, நீங்க இந்தோர்ல இருந்தீங்களா...//

    ஆமாம்...ஐஷர்ல வேலை செஞ்சேன். நீங்க எங்கே வேலை செய்யறீங்க. ப்ரோஃபைல்ல automotiveனு போட்டிருக்கு. ஃபோர்ஸ் மோட்டர்ஸா? இல்லை ஐஷர் தானா??

    நான் அனூப் நகர்ல இருந்தேன். நான் மெஸ்ஸுக்கு எப்பவாச்சும் தான் போவேன். அதனால மாமிக்கு என்னைத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஆனா அங்கே ஐஷர்ல வேலை செய்யற ரங்கநாதன்னு ஒருத்தரு இருப்பாரு...அவரு கிட்ட மோகன்ராஜுன்னு சொல்லிப்பாருங்க. (காறித் துப்ப மாட்டாருன்னு நெனைக்கிறேன்). இந்தூர்ல இருக்கும் போது ஓங்காரேஷ்வர், உஜ்ஜைன் மகாபலேஷ்வர், மாண்டு கோட்டை இதெல்லாம் தவறாம பாத்துடுங்க. புகழ்பெற்ற சுற்றுலா தளங்கள் இதெல்லாம்.

    ReplyDelete
  38. ஐஷர்ல இருந்தீங்களா...? நான் ஆவ்டெக் ல இருக்கேன்.ஆவ்டெக் தெரியுமா?
    ரங்கநாதன் கேட்டுப் பார்க்குறேன்.
    மாண்டுகோட்டை போயிட்டு வந்தேன். அப்புறம் இன்னொரு இடம் போனேன் பேரு மறந்துடிச்சி... உஜ்ஜைன் போக ப்ளான் பண்ணிட்டிருக்கோம்.
    ஆட்டோமோடிவ்ல இருந்து இப்போ ஸாப் போயிட்டீங்களா,,,?
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  39. கட்டுரை அசத்துதுங்க!

    முத்தம் கேட்டா கொடுத்து இருக்கலாம்ல? என்னண்ணே நீங்க!

    ReplyDelete
  40. //முத்தம் கேட்டா கொடுத்து இருக்கலாம்ல? என்னண்ணே நீங்க! //
    அண்ணன் உடம்பைப் புண்ணாக்குறதுக்கே நிறையப் பேர் கிளம்பியிருக்காய்ங்க போலிருக்கு..நாமதான் பாத்து சூதானமா நடந்துக்கணும்...

    ReplyDelete