Monday, October 20, 2008

ஒரு கணக்கு நோட்டும்,சில காதல் தீர்வுகளும்...


நீ விட்டு சென்ற
வாசத்தில் வசமிழந்து 
வகுப்பறையில்
நான் மட்டும் ...

விழிகளில் இடறியது
கதறும்
குழந்தையாய் உனது
கணக்கு நோட்டு ..
தாவி எடுத்தேன்
தாள்களை புரட்டினேன்



முதல் பக்கத்திலேயே
முத்திரைக்கவிதையாய்,
தாளுக்கும் வலிக்காத எழுத்துக்களில்
உனது பெயர்...



பிள்ளையார் துணையுடன்
துவக்குகிறாய் பாடத்தை
'உ' போட்டு...
பிழையின்றிப் படிக்கிறேன்
அதையும்
உருப்போட்டு...



அல்ஜீப்ராவும்,
அபிலியன் குலமும்
அம்புலிமாமாவை
அடையாளமும் காட்ட
புரியாத தேற்றங்கள்
புதிதான தோற்றங்களில்


வாசலில் நிழலாட,
வைத்த‌ க‌ண் இட‌ம் மாற‌
குயில் உந்தன்
குரல் தான் ...

என்ன பார்வை

எனது நோட்ஸ் ஆஃப் லெஸனில்..?
ஆயிர‌ம் வழியல்
அடியேன் முகத்தில் ..
"ஸாரி.. டீச்ச‌ர்..
வெட்கத்தை மறைத்து
வெளிநடப்பு செய்தேன் ..
வேகமாக ...





கவிதைக்குறிப்பு:
கருவான கவிதைக்கு உருத் தந்த நண்பர் விஷ்ணுவுக்கு நன்றிகள்.

ஓவியக்குறிப்பு:
ஓவியர் ம.செ..இந்த மாதிரி மொக்கைக்கெல்லாம் படம் போட மாட்டேன்னுட்டதால, அவர் பாணியில் நானே போட்டுக்கொண்ட ஓவியம்...இல்லை இல்லை 'காப்பி'யம் இது.

36 comments:

  1. தமிழ்பறவை அண்ணா,முதன் முதலான உங்கள் கவிதைப் பிரசவத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.கவிதை வரிகள் கட்டுச் செட்டாக அழகாகவே அமைந்திருக்கிறன.இரண்டு மூன்று தடவைகளின் பின்பே கவிதை புரியும்படியாக இருக்கிறது.அதுதான் கவிதையின் தன்மை என்பார்கள்.
    இன்னும் எழுதுங்கள்.உங்களால் கவிதை எழுத முடியும்.
    எழுதிவிட்டீர்களே!கவிதைக்கான ஓவியம் மிக அழகு.நீங்கள் வரைந்ததுதானே?எனக்குப் புரிந்த மட்டில் கவிதை....டீச்சரைக் காதலிக்கும் மாணவனின் மனநிலைதானே?

    ReplyDelete
  2. வாங்க ஹேமா...
    //இரண்டு மூன்று தடவைகளின் பின்பே கவிதை புரியும்படியாக இருக்கிற//
    நான் எளிதாக இருக்குமென்று யோசித்தேன்.
    //.நீங்கள் வரைந்ததுதானே?//
    ஆம்...இதுவும் எனது கீறல்தான்.
    //.டீச்சரைக் காதலிக்கும் மாணவனின் மனநிலைதானே//
    சந்தேகமே இல்லை.அதுதான். அதற்காகத்தான் லேபிளில் 'கைக்கிளை' என்று கொடுத்திருக்கிறேனே...

    ReplyDelete
  3. வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி முரளிகண்ணன் சார்...

    ReplyDelete
  4. ஓவியம் சூப்பருங்கண்ணா...

    கவிதைதான் பிரில..

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு தலைவா. ரசித்து ஓவியம் தீட்டியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி அதிஷா...
    //கவித பிரில//
    மன்னிக்கவும் அடுத்த முறை புரியும்படி எழுதுகிறேன்.(என்னது கவிதையே எழுதக் கூடாதா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

    ReplyDelete
  7. வாங்க கடையம் ஆனந்த்.. வாழ்த்துக்கு நன்றி...
    //நல்லாயிருக்கு தலைவா. ரசித்து ஓவியம் தீட்டியிருக்கிறீர்கள்.//
    முதலில் ரசிகன்(ம.செ. ஓவியங்களின்),பின்புதான் தீட்டினேன்...

    ReplyDelete
  8. நல்ல கவிதை, கலக்குங்க

    ReplyDelete
  9. நன்றி குடுகுடுப்பையாரே...

    ReplyDelete
  10. நண்பரே ..வணக்கம் ....

    ஓவியம் மிக அருமை ..
    விரல் தூரிகையில் விளையாடுகிறீர்கள் ..மிக அருமையாக இருக்கிறது ...

    கவிதை பற்றி ...
    இன்று தான் உங்கள் வலை தளம் வர முடிந்தது ...மன்னிக்கவும் ...
    உதவி என எனது பெயரை போட்டிருக்குறீர்கள் ..
    நான் என்ன உதவி செய்து விட்டேன் ...
    நீங்கள் எழுதியதை
    பத்திகளாக்கியது மட்டுமே நான் செய்தது ..
    இதற்கு எனது பெயரையும்
    குறிப்பிட வேண்டுமா ?..

    உங்கள் மனதை என்னவென்று சொல்வது ...

    ReplyDelete
  11. நண்பரே
    காதலாக கவிதை தொடங்கி
    கடைசியில் சிரிப்பில்
    முடித்திருக்குறீர்கள் ..
    நன்றாக இருக்கிறது ...

    உங்களுக்கு
    நல்ல கற்பனை வளம் இருக்கிறது ..
    உங்களால் மிக அருமையாக கவிதைகள் படைக்க முடியும் ..
    தொடர்ந்து எழுதுங்கள் ..
    உங்கள் முதல் கவிக்குழந்தை மிக அழகு ...

    அன்புடன்
    என்றும் இனிய
    தோழனாக ..
    விஷ்ணு

    ReplyDelete
  12. நண்பரே,

    ஓவியம் அருமை ."கோழி கூவுது" விஜி சாயல்.கோழி கூவுது" விஜி தெரியுமா ? நான் அந்த தலைமுறையை சேர்ந்தவன் .

    கவிதை? பப்பி லவ் அல்லது டெட்டி பியரை கட்டிக்கொண்டு எழுதிய கவிதைகள் ?

    எந்த சைட் சந்தில் நுழைந்தாலும் கவிதையாலேயே சாத்துகிறார்கள்.

    அருண் ஓவிய தளத்தில் உங்கள் வருகையை பார்த்தேன். அங்கும் போய் ம.செ படத்திற்கு ஒரு கவிதையை போட்டு விட்டேன் . மேடம் பதில் காணோம் .

    ReplyDelete
  13. வாங்க விஷ்ணு...
    நீங்க இங்க வந்துதான் கவிதை படிக்கணுமா என்ன...?
    நாம் பேச வேண்டியதைத் தனியாகப் பேசிக் கொள்ளலாம் பிறகு...

    ReplyDelete
  14. முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி ரவிசங்கர் சார்...
    //ஓவியம் அருமை ."கோழி கூவுது" விஜி சாயல்.கோழி கூவுது" விஜி தெரியுமா ? நான் அந்த தலைமுறையை சேர்ந்தவன் .
    //
    நானும் கிட்டத்தட்ட அந்தத் தலைமுறையின் பின்பகுதியைச் சேர்ந்தவன் தான்.
    //கவிதை? பப்பி லவ் அல்லது டெட்டி பியரை கட்டிக்கொண்டு எழுதிய கவிதைகள் ?

    எந்த சைட் சந்தில் நுழைந்தாலும் கவிதையாலேயே சாத்துகிறார்கள்.//

    அதுதான் லேபிளில் 'கைக்கிளை' என்று கொடுத்திருந்தேன்.கவிதை பிடிக்கலைன்னா எனக்கு நாலு சாத்து சாத்துங்க முகவரி தர்றேன்.ஏதோ என் பங்குக்கு கவிதையைச் சாத்தணும்னு எழுத முயற்சி பண்ணினேன்...

    ReplyDelete
  15. "கைக்கிளை" அல்ல.கைக்கிளை ஒரு தலை காமம். இது பொருந்தாக் காமம் ”பெருந்திணை”.இங்கு டீச்சர் -மாணவன் காதல். சரியா?

    ReplyDelete
  16. வாங்க ரவிசங்கர்...
    நான் சொல்ல வந்தது 'ஒருதலைக் காதல்'தான்.டீச்சரின் பணி கணிதப் பாடம் எடுப்பதுதான். மாணவன் தான் கணிதப்பாடத்தை விடவும் ,மற்ற பாடத்தை விரைவில் கற்றுக்கொண்டு விட்டு ஏங்கி நிற்கிறான் என்பதைக் காட்ட வந்தேன்.இதற்கு 'கைக்கிளை'தான் சரியாக இருக்குமென நினைக்கிறேன்.
    'முதல் மரியாதை' படத்தில் வருவது போல் இருவரும் காதலித்திருந்தால் 'பெருந்திணை' வரும் என்பது அடியேனின் தாழ்மையான எண்ணம்.
    இப்பொழுது கூட கூகுளில் ரெஃபெர் செய்து கொண்டிருக்கிறேன்.ஆராய்ச்சி முடியவும் சொல்கிறேன்...
    சரியா எனச் சொல்லுங்கள்....

    ReplyDelete
  17. ரவிஷங்கர் சொல்வதே சரி தமிழ்பறவை...

    அப்புறம் இன்னோரு ஐடியா வேற க்டைச்சிருக்குது பதிவு போட.. எங்கிட்ட இருக்குற படங்களையும் பதிவேத்திர வேண்டியதுதான். இதுக்குதான் போட்டி கம்மியா இருக்கும்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  18. வாங்க தாமிரா...
    //ரவிஷங்கர் சொல்வதே சரி தமிழ்பறவை...//
    இன்னும் கொஞ்சம் டவுட்டு இருக்கு...கிளியர் பண்ணிடலாம்.
    //எங்கிட்ட இருக்குற படங்களையும் பதிவேத்திர வேண்டியதுதான். இதுக்குதான் போட்டி கம்மியா இருக்கும்னு நினைக்கிறேன்.//
    தாராளமாப் போடுங்க தாமிரா....(போட்டி ஜாஸ்தியாயிடுச்சே...அவ்வ்வ்வ்)

    ReplyDelete
  19. கவிதை அழகு ...அதைவிட அழகு ம.செ.யின் காப்பியம்...நல்லா வரைஞ்சுருக்கீங்க.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  20. கவிதை அழகு ...அதைவிட அழகு ம.செ.யின் காப்பியம்...நல்லா வரைஞ்சுருக்கீங்க.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  21. வாங்க அருணா நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்து பாராட்டி இருக்கீங்க நன்றி...

    ReplyDelete
  22. oviyam ma.se varaindhamadhiriye irrukku eppadi ippadi? kavithayum romba super...
    enna kanakku vandhadhula payandhiten konjam....

    ReplyDelete
  23. enna anna glass painting-3 mattum paakama vitutingale....

    ReplyDelete
  24. நன்றி தர்ஷினி...தெரியும் தலைப்பைப்பார்த்து பார்க்காமல் போயிருப்பீர்கள் என.
    //oviyam ma.se varaindhamadhiriye irrukku eppadi ippஅடி?//
    இல்லைங்க... நான் பார்த்த ஓவியத்தில இது 85 சதவீதம்தான். ஒரிஜினல் இன்னும் சூப்பரா இருக்கும்...
    பார்த்துட்டேனே...பாருங்க கமெண்ட் போட்டிருப்பேன். மத்தபடி கிளாஸ்கலர் நான் யூஸ் பண்ணாததால, அதுல உள்ள நுணுக்கம் எனக்குத் தெரியலை.அதனால் விமர்சிக்கவில்லை. எனக்குத் தோன்றிய ஒன்று, பெண்ணின் முகத்தில், உத‌ட்டோரம் சிறிது வளைத்து புன்னகையைக்காட்டியிருக்கலாம் என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  25. மிக அருமையன ஹைகூ கவிதைகள் .
    மனம் எனது பள்ளிக்கே சென்றுவிட்டது.

    ReplyDelete
  26. பூச்சிபாண்டிNovember 9, 2008 at 2:56 AM

    மிக அருமையன ஹைகூ கவிதைகள் .
    யாதொரு சிந்தனை .

    ReplyDelete
  27. வாங்க பூச்சிப்பாண்டி,தனா...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி...
    தங்கள் வலைப்பூ வந்தேன்.

    ReplyDelete
  28. தமிழ்பறவை அண்ணா நன்றி ,
    தங்களது அருமையான வரவேற்ப்புக்கு ,
    நான் ஒன்றும் புலமையில் வலுத்தவன் அல்ல ஒட்டக்கூத்தர் போன்று.
    அப்படி இருந்திருந்தால் பிழை கண்டிருப்பேன் புகழும் முன்பு.
    நான் உங்களிடம் இருந்து இன்னும் பல கவிதைகளையும் அத்துடன் தங்களது அருமையான அந்த ஓவியத்திரனையும் பதிவுகளில் காண விரும்புகிறேன் .

    ReplyDelete
  29. அன்பு திகழ்மிளிர்...
    முதல் வருகைக்கும், முத்தாய்ப்பான வாழ்த்துக்கும் நன்றி...

    தம்பி தனா...
    இப்படிப் பொது இடத்துல போட்டு வாங்குறியேப்பா...?!
    :-) :-)

    ReplyDelete
  30. நன்றி சதங்கா.... வருகைக்கும், கருத்துக்கும்.....

    ReplyDelete
  31. டீச்சருக்கே ரூட்டா???

    படம் அருமை.

    ReplyDelete
  32. ஓர் பாலார் மட்டும் படிக்கும் பள்ளியில் இருப்பவனின் பதின்ம வயதுகளில் ஆசிரியை மேல் ஈர்ப்பு இருப்பது இயற்கைதானே சிவா...நான் ஒன்றும் தவறாகச் சொல்லி விடவில்லையே...பாலுமகேந்திராவே இத வச்சி 'அழியாத கோலங்கள்' போட்டுட்டார்....
    வாழ்த்துக்கு நன்றி சிவா...

    ReplyDelete
  33. நீங்க எதும் தவறாக சொல்லவில்லை.

    ReplyDelete