த.மு.எ.ச. இன்னும் தமிழகத்தின் கிராம,சிறு நகர்ப்புறங்களில் 'கலை இரவு' நடத்தி வருகிறார்கள்.(தற்பொழுது நிலவரம் தெரியவில்லை). 'த.மு.எ.ச(தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) கலை இரவு' என்பது தற்போது துபாயிலும்,சிங்கையிலும்,சில சமயங்களில் தமிழக முதல்வர் முன்னிலையிலும் நடக்கும் அரைகுறை ஆடை அணிவகுப்பு அல்ல.இந்தக் கலைவிழாவை நடத்துபவர்கள் செங்கொடி தோழர்கள்.கம்யூனிஸ்ட்டுகளுக்கிடையே பல கொள்கை,பல குழப்பங்கள் நிலவி வந்தாலும் அவர்களின் கலை ஆர்வம் அலாதியானது.திராவிடக்கட்சிகள் தமிழுக்கு உயிர் ஊட்டினேன் என்று சொல்வது போன்ற போலி பாசாங்கெல்லாம் இங்கில்லை. இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து,விடியற்காலை நான்கு,ஐந்து மணி வரை நடக்கும் இவ்விழாவில் புகழ்பெற்ற பேச்சாளர் மட்டுமின்றி,சிறு,சிறு வளரும் கலைஞர்களும் பங்கெடுத்து பட்டையைக் கிளப்புவர். இதைவிட முக்கியமானது அங்கு அரங்கேறுவது முழுக்க,முழுக்க கிராமிய,தமிழ் மண் மணம் கமழும் கலைநிகழ்ச்சிகள்தான். மருந்துக்குக்கூட சினிமாப்பாடல் கிடையாது. ஆனாலும் விடிய,விடிய கூட்டம் கலையாமல் இருக்கும்.அவ்வப்போது அரசியல் நையாண்டிகளுக்கும் குறைவிருக்காது.
இதையெல்லாம் விட என்னைக் கவர்ந்தது அவர்களின் விளம்பரப் பதாகைகள்தான்.(தற்போது போல் ஓவியர்களின் வயிற்றிலடித்த டிஜிட்டல் ஃப்ளெக்ஸ் பேனர்கள் அப்போது கிடையாது).சிறு,சிறு எளிய அருமையான கிராமியக் காட்சிகளை,கிராம மக்களை கண்முன் நிறுத்துவது போல் விளம்பர ஓவியங்கள் ஊரெங்கும் ஆக்கிரமித்திருக்கும்.சாலையில் செல்லும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் (ஷகீலா படங்கள் கூட அப்படித்தான் என நீங்கள் கேட்கலாம். அதற்கு நான் பொறுப்பல்ல). அப்படிப் பார்த்த என் மனதில் பதிந்த ஒரு படம் உள்ளூர் நாளிதழில் வந்தது.பார்த்தவுடன் பரிதாபம் தூண்டும் ஒரு முதியவரின் தோற்றம்தான் அது.அப்பருவத்தில் கண்ணில் பட்டவையெல்லாம் கிறுக்குவது வழக்கம்.ஆனால் இது கருத்தையே கவர்ந்த படம்.விடுவேனா..?
முழுக்க,முழுக்க கறுப்பு பால் பாயிண்ட் பேனாவால் வரைந்ததால் ஆங்காங்கே சில சில தீற்றல்கள் இருக்கும். வழக்கம் போல் குறைகள் அல்லது ஏதேனும் நிறைகள் தென்பட்டால் தெரியப்படுத்தவும்.
. நாளைமுதல் விடுமுறையில் தமிழகம் செல்லவிருப்பதால் இன்னும் பத்து,பதினைந்து நாள்களுக்கு பதிவோ, யாருக்கும் பின்னூட்டமோ போட்டு தொல்லை தரமாட்டேன் என்பதை மகிழ்வுடன், மனதிற்குள் சங்கடத்துடனும் அறிவித்துக்கொள்கிறேன்:-) :-) :-((((
டிஸ்கி: தலைப்பு ச்சும்மா லுலலாயி....
:-)
ReplyDeleteசுகமாகப் போய் வாங்க தமிழ்ப்பறவை அண்ணா.சீக்கிரமா வந்திடுங்க.
ReplyDeleteநீங்க சொன்ன விஷயம் புரில.ஆனா அந்த வயோதிபரின் படம் இயல்பாய் தத்ரூபமாய் இருக்கு.ம்ம்ம்....இப்பிடி எல்லாம் உங்களுக்குக் கீறத் தெரியுமா?நம்பத்தான் முடிலண்ணா!
தல
ReplyDeleteநல்ல பதிவு ஒன்று போட்டு விட்டு எங்கே எஸ்கேப்பு? போட்டிக்கு வருவீங்களா இல்லையா?
//நீங்க சொன்ன விஷயம் புரில.//
ReplyDeleteஅடடா... அதெல்லாம் தமிழகத்து உள் அரசியல்.. இனி எல்லார்க்கும் புரியற மாதிரி எழுதுறேன்..
வாழ்த்துக்கு நன்றி சகோதரி...
//இப்பிடி எல்லாம் உங்களுக்குக் கீறத் தெரியுமா?நம்பத்தான் முடிலண்ணா!
//
இதை நான் பாராட்டா எடுத்துக்குறேன்...
//போட்டிக்கு வருவீங்களா இல்லையா?//
ReplyDeleteவாங்க பிரபா அண்ணாச்சி... போட்டியா...? எங்க..? எப்போ...?
தமிழ்ப்பறவை அண்ணா வந்திட்டீங்களா?சுகம்தானே நீங்களும் எல்லாரும்.களைப்பாய்...வேலையாய்இருக்கிங்க போல.இன்னமும் இடுகைகளைக் காணோமே!
ReplyDeleteஅன்பு தமிழ்ப்பறவை...
ReplyDeleteஎன் ஈ-மெயில் ஐ.டி.க்கு ஒரு டெஸ்ட் மெய்ல் அனுப்ப முடியுமா? உங்களோடு கொஞ்சம் பேச விரும்புகிறேன்.
நன்றி.
இரா.வசந்த குமார்.
vasanthfriend.raju@gmail.com
நேற்றே வந்து விட்டேன் சகோதரி.. வீட்டில்,நாட்டில் அனைவரும் சுகம்.
ReplyDeleteஆனால் எனது கணினிக்குத்தான் சுகமில்லை. ஏதோ ரெஜிஸ்ட்ரியாம்,ரெக்கவர் பண்ணவில்லை என்கிறது. அவ்வப்போது சேஃப் மோடில் மட்டுமே தற்பொழுது வேலை செய்ய முடியும். அது அவ்வளவு வேகம், வசதியாக இல்லாததால் பின்னூட்டம் கூட இட எரிச்சலாக உள்ளது.. நாளை சரி பண்ணிவிடுவேன் நண்பன் உதவியால். உங்கள் பழைய கவிதைகளைப் படித்துவிட்டேன். பின்னூட்டம் விரைவில் வெளிவரும்.
நண்பரே டெஸ்ட் மெயில் அனுப்பி விட்டேன்.வருகைக்கு நன்றி...
ReplyDeleteஅட!!
ReplyDeleteபடம் ரொம்ப அருமையா இருக்கு.
மனமார்ந்த பாராட்டுகள்.
வாங்க டீச்சர்...தங்களின் முதல் வருகைக்கும்,மனமார்ந்த வாழ்த்து(ஊக்குவிப்பு)க்கும் நன்றி.
ReplyDeleteஓவியம் அருமை நண்பரே ...
ReplyDeleteநல்ல உயிரோட்டம் இருக்கிறது இந்த ஓவியத்தில் ..
சொன்ன கருத்துக்களும் மிக இனிமை ..நண்பரே ..
வாழ்த்துக்களுடன் ..
அன்புடன்
விஷ்ணு
thanks for ur visit and comment vishnu...
ReplyDeleteஎன்னைக் கவர்ந்ததும் த மு எ சங்கத்தின் விளம்பர பலகைகள் தான் .
ReplyDeleteஆடம்பரம் இல்லாமல் மிக எளிமையாக, ஒரு ஆழமான கருத்தை கொண்டிருக்கும் . நான் ஓசூரில் பணிபுரிந்த காலங்களில் அங்கே உள்ள
காந்திசிலை அருகே வைக்கப்பட்டிருக்கும் . நன்றி தமிழ்பறவை .
எனக்கும் த மு எ சங்கத்தின் விளம்பர பலகைகள் ரொம்ப பிடிக்கும்.. ஒரு கலை இரவில், முழுக்க இருந்து ரசித்திருக்கிறேன் (சின்ன வயதில்).. நேரம் போவதே தெரியாது :)
ReplyDeleteவாங்க பிரசன்னகுமார்...எப்பவோ போட்ட பதிவை இப்போ பார்த்திருக்கீங்களே.. நன்றி....
ReplyDeleteத.மு.எ.ச. நிகழ்ச்சி நானும் ஒன்று மட்டும் பார்த்திருக்கிறேன்..மற்றபடி விளம்பரம் தூளாக இருக்கும்..