அண்ணே... வணக்கம் நான் ஒரு ராஜா ரசிகன். யாருடைய பிளாக்குக்கு போனாலும் புரொஃபைல் ல நான் முதல்ல பார்க்குற விஷயம் ஃபேவரைட் மியூசிக் தான். அங்க ராஜாவோட பேரைப் பார்த்தா, உடனே மனசுக்குள்ள ஒரு விசில் சத்தம் கேட்கும். அட இவரு நம்மாளு அப்டின்னு... அது நட்பு,காதல் எல்லாத்துக்கும் மேல ஒரு புனிதமான உறவு. அந்த உறவின் இழையூட்டம்தான் இளையராஜா என்கிற இசை.அ(தை)வரைப் பற்றிப் பேசத் தெரியாட்டியும் உணரத் தெரியும்.
ஆனா கடந்த இரு வாரங்கள்ல நம்ம தமிழ்மணத்துல அவரை விமர்சிக்கும் முறையில் இரு பதிவுகள் வந்தது.அதைப் படிக்க ஆரம்பிச்ச உடனே கோபம் வந்தது.ஆனா பின்னூட்டங்களைப் படிச்சவுடனே மனசு லேசாயிடுச்சு.உதாரணம்... நம்ம பரிசல்காரரோட பின்னூட்டம்.(புகழனோட பதிவுல)
பரிசல்காரன் said... அன்பு நண்பரே...
அவர் இசையால் அடைந்த இன்பங்களுக்காக என்ன செய்து நம்மால் அவருக்கு நன்றிக்கடன் செலுத்தமுடியும்?
குறைந்தபட்சம் இதுபோன்று ச்சின்னத்தனமாய் அவர் பெயரை இழுக்காமலிருந்தாலே போதுமே?
கொஞ்சம் கோபமாகத்தான் இந்தப் பதிவைத் திறந்தேன். ஆனால், பின்னூட்டங்களைப் பார்த்து நெகிழ்ந்தேன்!
ராஜா ராஜாதான்!
அப்புறம் சர்வேசனோட பதிவு ஒண்ணு. அதைப் படிச்சவுடனே பின்னூட்டம் போடலாம்ன்னு நினைச்சேன். ஆனா தாறுமாறா சில பின்னூட்டம் வரவும், சரி இங்க வேணாம்ன்னு விட்டுட்டேன். அதில ராஜநடராஜன் சொல்லிருக்காரு..
"1.ராஜா கொஞ்சம் உபகரணங்களை அடக்கி வாசிச்சு வைரமுத்துவின் வார்த்தைகளுக்கு கொஞ்சம் உயிர்கொடுத்திருந்தார்ன்னா நம்க்கெல்லாம் இன்னும் அழகான பாடல்கள் கிடைத்திருக்கும்."
எந்தப் பாட்டில ராஜா ,வைரமுத்து வரியை அமுக்கி இருக்காரு?ராஜா,எம்.எஸ்.வி யைத் தவிர எல்லா இசைஅமைப்பாளர்களும்கவிஞர்களின் வரிகளை மூச்சுத் திணறச் செய்வதில் வல்லவர்கள்.(ரகுமான்,யுவன்,இமான்...)வித்யாசாகர் சற்று விதிவிலக்கு. ராஜாவின் பாடல்கள் ஹிட் ஆனதற்கு மற்றொரு முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் பாடல் வரிகள்,அதனை அனைவரின் வாயிலும் எளிதாக நுழையும்படி போட்ட மெட்டு.(நினைவெல்லாம் நித்யா,காதல் ஓவியம்,முதல் மரியாதை இன்னும் பலப்பல).அவரே ஒரு நல்ல பாடல் ஆசிரியர் என்பது வேறு விஷயம்.
அதில் தேவையே இல்லாத, துளிக்கூட சம்பந்தமே இல்லாத (புருனோ கூறியது) போன்ற பின்னூட்டங்களை தெளிவாக ஒதுக்கித் தள்ளி விடலாம். மற்ற பின்னூட்டங்களில் ஒன்றிரண்டிற்கு ஏற்ப எனது கருத்து அல்லது எனது பதிலை இங்கு பதிவிட விழைகிறேன்.
அதில் தேவையே இல்லாத, துளிக்கூட சம்பந்தமே இல்லாத (புருனோ கூறியது) போன்ற பின்னூட்டங்களை தெளிவாக ஒதுக்கித் தள்ளி விடலாம். மற்ற பின்னூட்டங்களில் ஒன்றிரண்டிற்கு ஏற்ப எனது கருத்து அல்லது எனது பதிலை இங்கு பதிவிட விழைகிறேன்.
"அவர் ஆன்மிகம் பக்கம் திரும்பியதும் ஒரு காரணம். இந்த நாட்களில் நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார்."
பரிசல்காரனின் இந்தக் கருத்து ஒத்துக்கொள்ளும்படி உள்ளது. இதே ராஜா, இன்றைக்கு ஒரு சராசரி மனிதர்கள் போல் இருந்தால் இன்னும் இளமையான இசையைக் கொடுப்பார் என்பது 100% உறுதி. ஆனால் அவரது இசையில் இளமைத்துள்ளலை விட ஒரு இசைஞான முதிர்ச்சி (அயர்ச்சி அல்ல) வெளிப்படுகிறது.
பரிசல்காரனின் இந்தக் கருத்து ஒத்துக்கொள்ளும்படி உள்ளது. இதே ராஜா, இன்றைக்கு ஒரு சராசரி மனிதர்கள் போல் இருந்தால் இன்னும் இளமையான இசையைக் கொடுப்பார் என்பது 100% உறுதி. ஆனால் அவரது இசையில் இளமைத்துள்ளலை விட ஒரு இசைஞான முதிர்ச்சி (அயர்ச்சி அல்ல) வெளிப்படுகிறது.
"வைரமுத்துவோடு மீண்டும் கைகோர்க்கலாம், வைரமுத்துவுக்கு ராஜா தேவையில்லை, ராஜாவுக்கும் வைரமுத்து தேவை இல்லை, ஆனால் இந்த சிறப்பான கூட்டணி ஆட்சி ரசிக மகாஜனங்களுக்கு தேவை."
கானா பிரபா கூறிய வரவேற்கத்தக்க கருத்து. இப்போ 'தனம்' படத்துல கூட ஒரு பாட்டு வரும் 'தனம்,தனம்'ன்னு. வாலி சும்மா ஏனோதானோன்னு கிறுக்கி இருப்பார்.ஆனால் ராஜாவின் தனிப்பட்ட உரிமைகளில் நாம் தலையிட முடியாது.
"படங்களில் எது மிஸ்ஸிங்? நல்ல படம்? அவரது ஈகோவிற்கு தீனி போடும் டைரக்டர்?"_சர்வேசன் கூற்று. மிக முக்கியமான கருத்து இதுதான். நல்ல படம் அமையலை.(நான் கடவுள் அப்படி இருக்காது என நம்பலாம்.) ஆனா சமீப காலங்களில் ராஜா நல்ல பாடல்களைக் கொடுத்துக் கொண்டுதான் வருகிறார். மலையாளத்தில் சத்தியன் அந்திக்காடு படங்களில் நல்ல,நல்ல மெலோடிகள் புதிதாகக் கொடுத்து வருகிறார். சமீபத்தில்தான் ராஜாவின் மலையாளப் பாடல்கள் கேட்டேன். தெலுங்கில் கூட கடந்த வாரம் 'மல்லிப்புவு' படப்பாடல்கள் வெளியிடப்பட்டது.(இன்னும் கேட்கவில்லை).
கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி 'கண்களும் கவி பாடுதே'ன்னு ஒரு படத்துக்கு ராஜாதான் இசை. படம் வந்துதா,வரலையா இல்ல வருமான்னு தெரியலை. ஆனா அந்தப் படத்துல வரும் இந்தப் பாட்டு ராஜாவும்,மஞ்சரியும் பாடுனது. கேட்டுப் பார்த்துட்டு சொல்லுங்க...'கண்களும் கவி பாடுதே'_மாலைநிலா...
அப்புறம் ரொம்ப சமீபத்தில வெளியான 'தனம்' படத்துல இருந்து ஒரு பாடல் பவதாரிணி பாடுனது.'ஒரு நாள் ஒரு கனவு' படத்துல வரும் 'காற்றினிலே வரும் கீதமே' பாடல் வரிசையில் இன்னுமொரு எளிய, இனிய,மனதை அள்ளும் பாடல்.(வரிகள் விஷாலி கண்ணதாசன்)
இதே படத்துல வர்ற இன்னொரு பாடல் ராஜா பாடுனது.
இங்க நான் பாடல்களை விமர்சிக்க வரவில்லை. இன்னும் இளையராஜா அருமையான பாடல்கள் கொடுப்பார் என நம்புவோம். ஆனால் ஒன்று, அவை நம்மை(ராஜா ரசிகர்கள்) மகிழ்விப்பது போல் அனைவரையும் ஈர்க்கும் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் ராஜாவின் வரிகளில் சொன்னால் "நான் பாப்கார்ன் தர முடியாது. சாப்பாடுதான் தருவேன். ஆனா பாப்கார்ன் ஏன் அதிகம் விக்குதுன்னு கேட்காதீங்க. அது வேற விஷயம்." நமக்கு தேவை இல்லாதது.
இறுதியாக...கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி 'கண்களும் கவி பாடுதே'ன்னு ஒரு படத்துக்கு ராஜாதான் இசை. படம் வந்துதா,வரலையா இல்ல வருமான்னு தெரியலை. ஆனா அந்தப் படத்துல வரும் இந்தப் பாட்டு ராஜாவும்,மஞ்சரியும் பாடுனது. கேட்டுப் பார்த்துட்டு சொல்லுங்க...'கண்களும் கவி பாடுதே'_மாலைநிலா...
அப்புறம் ரொம்ப சமீபத்தில வெளியான 'தனம்' படத்துல இருந்து ஒரு பாடல் பவதாரிணி பாடுனது.'ஒரு நாள் ஒரு கனவு' படத்துல வரும் 'காற்றினிலே வரும் கீதமே' பாடல் வரிசையில் இன்னுமொரு எளிய, இனிய,மனதை அள்ளும் பாடல்.(வரிகள் விஷாலி கண்ணதாசன்)
இதே படத்துல வர்ற இன்னொரு பாடல் ராஜா பாடுனது.
இங்க நான் பாடல்களை விமர்சிக்க வரவில்லை. இன்னும் இளையராஜா அருமையான பாடல்கள் கொடுப்பார் என நம்புவோம். ஆனால் ஒன்று, அவை நம்மை(ராஜா ரசிகர்கள்) மகிழ்விப்பது போல் அனைவரையும் ஈர்க்கும் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் ராஜாவின் வரிகளில் சொன்னால் "நான் பாப்கார்ன் தர முடியாது. சாப்பாடுதான் தருவேன். ஆனா பாப்கார்ன் ஏன் அதிகம் விக்குதுன்னு கேட்காதீங்க. அது வேற விஷயம்." நமக்கு தேவை இல்லாதது.
இளையராஜாவை எங்கும் தேட வேண்டாம். நல்ல இசையைத் தேடிக் கேட்டால் அங்கு கட்டாயம் ராஜா இருப்பார்...
வருகைக்கு நன்றி ஹேமா. 'மது' படத்தில் 'கேட்கவில்லையா' பாடல்தானே.
ReplyDeleteபலமுறை கேட்டிருக்கிறேன்.நல்ல பாடல். இப்படி பல பாடல்கள் தேவையற்ற படங்களில் இடம் பெற்று பலரின் கவனிப்புக்குள்ளாவதில்லை.
என்ன சொல்லிப் பாடுவதோ_ என் மன வானில்
கொஞ்சம் திற,கொஞ்சம் திற_ஒரு நாள் ஒரு கனவு
வெண்ணிலவின் பேரை மாற்றவா_ரமணா (படத்தில் இடம் பெற வில்லை)
அந்த நாள் ஞாபகம்_அது ஒரு கனாக்காலம்.
பூ பூத்தது_மும்பை எக்ஸ்பிரஸ்.
இவள் யாரோ வான்விட்டு_ராஜாவின் பார்வையிலே.
காதல் கவிதை படத்தில் அனைத்துப் பாடல்களும்...
இன்னும் பல பட்டியலிடலாம் கேட்பாரற்றுப் போன அருமையான கானங்களை...
கானா பிரபா,அனானி,வடுவூர்குமார்,ஹேமா மன்னிக்கவும்.. வார்ப்புரு மாற்றத்தில் உங்கள் பின்னூட்டங்கள் தற்போது என் நெஞ்சில் மட்டுமே சேமிக்கப் பட்டுள்ளது.(மென் நகலாக).
ReplyDeleteதல
ReplyDelete"இளைய"ராசாவையும் உங்கள் கையால் வரைந்து அதை நான் ரசிக்கும் வாய்ப்பைப் கொடுங்களேன்.
thanks for visiting prabaa... i will try to draw yuvan also....
ReplyDeleteகலக்கல் அண்ணே, இளையவர் இசை இல்லண்ணா நமக்கு தூக்கமே வராதுண்ணே, என் பதிவில் ஒரு லின்க் இருக்கு டவுன்லோட் பண்ணி கேளுங்க.
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி குடுகுடுப்பையாரே... கண்டிப்பா கேட்டுப் பார்க்கிறேன்....
ReplyDeleteதல போல வருமா...?!
//நல்லா இருக்குங்க. கேக்காட்டியும் முத்தம் கொடுக்கிற காலத்தில கேட்டும் கொடுக்காத நீங்க ரொம்ப நல்லவரு//
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
வாங்க பிரபா அண்ணாச்சி....
ReplyDeleteஅருமையான பதிவு தமிழ்ப்பறவை.
ReplyDeleteவருகைக்கு நன்றி முரளிகண்ணன்... உங்களை,கானா பிரபா மாதிரி பெரிய ஆளுங்க இங்க வர்றதே எனக்கு மகிழ்ச்சி....
ReplyDelete"அண்ணே... வணக்கம் நான் ஒரு ராஜா ரசிகன். யாருடைய பிளாக்குக்கு போனாலும் புரொஃபைல் ல நான் முதல்ல பார்க்குற விஷயம் ஃபேவரைட் மியூசிக் தான். அங்க ராஜாவோட பேரைப் பார்த்தா, உடனே மனசுக்குள்ள ஒரு விசில் சத்தம் கேட்கும். அட இவரு நம்மாளு அப்டின்னு... அது நட்பு,காதல் எல்லாத்துக்கும் மேல ஒரு புனிதமான உறவு"
ReplyDeleteNeengaluma ?
வாங்க இனியா முதல் வருகைக்கு....நானும்தான் அந்த ஜோதியில் இருக்கிறேன்...
ReplyDeleteஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. யார் என்ன சொன்னாலும் எழுதிக்கிழித்தாலும் ராஜாவின் புகழ் தமிழ் சினிமா இருக்கும் வரை மறையாது.
ReplyDeleteவாங்க அத்திரி... அப்படிப்போடுங்க...
ReplyDeleteப்ரொஃபைல் ஃபோட்டோல இருக்க குட்டீஸ் க்யூட்டா இருக்கு... யாருங்க.. உங்க குழந்தைகளா...?
என்னோட பையன், என் தம்பி பொண்ணு.
ReplyDeleteஇளை(சை)யராஜாவின் இசையை கேட்கும் புண்ணியம் பெற்ற ஆத்மாகளில் நானும் ஒருவன்... அவர் தமிழகத்தின் சொத்து.. ௧௯௭௦ களில் தமிழகத்தை ஆக்கிரமித்திருந்த இந்தியை விரட்டிய தனி மனித போராளி அவர்...
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி குலமங்கலம் பாக்யா...
ReplyDelete//ஆக்கிரமித்திருந்த இந்தியை விரட்டிய தனி மனித போராளி அவர்..//
அருமையாகச் சொன்னீர்கள்.
மிக அருமையான ஓவியம் ..நண்பரே ..
ReplyDeleteதத்ரூபமாக இருக்கிறது
இசை மேதை ..இளைய ராஜா அவர்களின் ரசிகர்களில் நானும் ஒருவன் ..
அவரது பாடல்கள் எனக்கு மிக பிடிக்கும் ..அவரது மெல்லிசை பாடல்களுக்கு
நான் அடிமை என்றும் ..
பிரியமுடன்
விஷ்ணு
//மிக அருமையான ஓவியம் ..நண்பரே ..
ReplyDeleteதத்ரூபமாக இருக்கிறது//
நன்றி நண்பரே...
//அவரது மெல்லிசை பாடல்களுக்கு
நான் அடிமை என்றும் ..//
என்றும் என்றென்றும்....
பொறுமையாக அனைத்து இடுகைகளையும் படித்து கருத்து தந்தமைக்கும், மேலும் சிறப்பாக அளிக்க ஊக்கம் தந்தமைக்கும் நன்றி விஷ்ணு...
வருகை நாடும்
தமிழ்ப்பறவை...
//
ReplyDeleteஇளையராஜாவை எங்கும் தேட வேண்டாம். நல்ல இசையைத் தேடிக் கேட்டால் அங்கு கட்டாயம் ராஜா இருப்பார்...
//
நிச்சயம் இருப்பார்.. :) ரொம்பவும் உணர்ந்து எழுதியிருக்கீங்க.. வாழ்த்துகள்..
முதல் வருகைக்கு நன்றி மார்கன்...
ReplyDeleteilayanukku naanum or adimai enbathai perumayudan sollikkolven
ReplyDeleteavarukku eedu inai yaar
avar isaiyil naan kan kalangiya iravugal yeralam
thookkam varadha iravugalil dhukkam tholaithu thalattiyavai
avarin isai kolangal
enna solla idharkku mel
வாங்க சுரேஷ்...
ReplyDeleteஅருமையாகச் சொன்னீர்கள்...வருகைக்கு நன்றி...
"அண்ணே... வணக்கம் நான் ஒரு ராஜா ரசிகன். யாருடைய பிளாக்குக்கு போனாலும் புரொஃபைல் ல நான் முதல்ல பார்க்குற விஷயம் ஃபேவரைட் மியூசிக் தான். அங்க ராஜாவோட பேரைப் பார்த்தா, உடனே மனசுக்குள்ள ஒரு விசில் சத்தம் கேட்கும். அட இவரு நம்மாளு அப்டின்னு... அது நட்பு,காதல் எல்லாத்துக்கும் மேல ஒரு புனிதமான உறவு"
ReplyDeleteNeengaluma ?
Ada...nanum than....
இசை மேதை ..இளைய ராஜா அவர்களின் ரசிகர்களில் நானும் ஒருவன் ..
அவரது பாடல்கள் எனக்கு மிக பிடிக்கும் ..அவரது மெல்லிசை பாடல்களுக்கு
நான் அடிமை என்றும் ..
Jai Sai Ram
// இளையராஜாவை எங்கும் தேட வேண்டாம். நல்ல இசையைத் தேடிக் கேட்டால் அங்கு கட்டாயம் ராஜா இருப்பார்... //
ReplyDeleteநிதர்சனம்!
தூக்கம் வராத இரவுகளில் இசைஞானியின் இசையைக் கேட்டுப் பாருங்கள். உள்ளம் கள்வெறி கொள்ளும்!
//தூக்கம் வராத இரவுகளில் இசைஞானியின் இசையைக் கேட்டுப் பாருங்கள். உள்ளம் கள்வெறி கொள்ளும்! //
ReplyDeleteகண்டிப்பாக.. ஆனால் பாடல்களிலேயே மூழ்கிவிடுவதால் அதற்குமேலும் தூக்கம் வராது.
சென்னையில் சூரியன் பண்பலையின் இரவு ஒலிபரப்பில் வரும் ராஜாவின் பாடல்கள் இனிமை அணிவகுப்பு...
அருமையான பதிவு..சென்ற ஆண்டு(2009) ராஜா ரசிகர்களுக்கு ஒரு மிகச் சிறந்த ஆண்டு..எவ்வளவு படங்கள்!எவ்வளவு பாடல்கள்!!'நனவனு' என்ற கன்னடப் படத்தில் வந்த 'மொதலனே பாரி.' பாடலைக் கேட்டு இருக்கிறீர்களா ?கீரவாணி நம்மை அப்படியே சூழ்ந்து எங்கோ தூக்கிக் கொண்டு போகும்..
ReplyDeleteஅவர் இசை மட்டும் இல்லாவிடில் எனது வாழ்விற்கு பொருளே இல்லை..
இன்னும் நிறைய எழுதுங்கள் அவரைப் பற்றி!
நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி ராஜ் சார்...
ReplyDeleteஉங்களைப் போன்றவர்கள் வருகை எனக்கு மகிழ்வளிக்கிறது..
இந்தி,மலையாள, தெலுங்குகளில் ராஜகீதங்கள் கேட்டிருக்கிறேன்..
கன்னடத்தில் இன்னும் கேட்கவில்லை ஒன்றிரண்டைத்தவிர.. அடுத்த முயற்சி கன்னடப் பாடல்கள் சேகரிப்புதான்...
கேட்டுப் பார்க்கிறேன்...
நான் குறிப்பிடும் பாடல் என்னிடம் உள்ளது..தங்களுக்கு அனுப்பலாமா?மின் அஞ்சல் முகவரியைக் கூறவும்..
ReplyDelete@ராஜ்...
ReplyDeleteமிக மகிழ்கிறேன்.. தயவு செய்து பாடலை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.. மின்னஞ்சல் இதோ
thamizhparavai@gmail.com
//இளையராஜாவை எங்கும் தேட வேண்டாம். நல்ல இசையைத் தேடிக் கேட்டால் அங்கு கட்டாயம் ராஜா இருப்பார்...//
ReplyDeleteஉண்மையான வார்த்தைகள்.