Saturday, August 30, 2008

ஆனந்த விகடனும்,அட்டைப்பட அழகியும் பின்னே ஞானும்...












ஆனந்த விகடன் படிக்கும் பழக்கம் பள்ளி இறுதியாண்டு படிக்கும் காலத்தில் தொடங்கியது.அப்பொழுது திரைப்பட இயக்குனர் அதியமான் எழுதிய 'சொர்ணமுகி' தொடர்கதை வெளிவந்துகொண்டிருந்தது.(இணையாக திரைப்படமாகவும் எடுத்துக்கொண்டிருந்தார்கள்). அதைப் படிக்கத்தொடங்கிய நான் பின் ஆனந்தவிகடனுக்கே அடிமையாக மாறுமளவு ஆகிவிட்டேன்.(தமிழ்மணம் படிக்க ஆரம்பித்தபின் அந்த ஈர்ப்பு பெருமளவு குறைந்து விட்டது).
ஆனந்தவிகடனில் எனக்குப் பிடித்தது ஜோக்ஸ். பிறகு திரைவிமர்சனங்கள், வெளியாகும் கதைகளின் ஓவியங்கள் (ம.செ, மாருதி, அரஸ்) மற்றும் அழகிகளின் ஓரளவு நாகரிகமான ,தெளிவான புகைப்படங்கள்.(தற்போது குமுதத்திற்கும்,விகடனுக்கும் வித்தியாசம் காண முடியாத அளவிற்கு படங்கள் வெளியாகின்றன.) அப்படி வந்த ஒரு அட்டைப்பட அழகி(எனக்கு அழகியாகத் தெரிந்தாள்)தான் இவள். பெயர் தெரியவில்லை.ஆனால் பார்த்தவுடன் கண்ணைப் பறித்தாள். கைகளைப்பரபரக்கச் செய்தாள் படமாகத் தீட்டுவதற்கு.

அதுநாள் வரை பேனா அல்லது பென்சிலில் மட்டுமே படம் வரைவது வழக்கம். வண்ணங்கள் தொடுவது வெகு அரிதுதான். அப்படியான‌ ஒரு அரிதான ஓவியம்தான்(எனக்கு மட்டும்) இது. போஸ்டர் கலரில் வரைந்தேன்.முடித்தபின் எனக்கு 90 சதவீதம் திருப்தி தந்த படங்களில் இதுவும் ஒன்று. வழக்கம் போல் குறை,நிறைகளைத் தெரிவிக்கவும்...


44 comments:

  1. கண்கள் அழகு.. உதடுகள் மட்டும் கொஞ்சம் சரியாக வரவில்லை என்றுத் தோன்றுகிறது.. ஆனாலும் அருமையான ஓவியம்..

    ReplyDelete
  2. ரொம்ப அழகா வரைந்திருக்கீங்க. என்ன உதடுகளை கொஞ்சம் மெருகூட்டியிருக்கலாம்

    ReplyDelete
  3. Loved those eyebrows, eyelashses & the eyes... they speak a lot..

    ReplyDelete
  4. தமிழ்ப்பறவை அண்ணா.நீங்களும் உங்கள் கணணியும் சுகம்தானே!நானும் அப்படியே.இனி நான் நிச்சயம் ஒத்துக்கொள்ளத்தான் வேணும்.
    தமிழ்ப்பறவை அண்ணா அவர்களால் அழகாக ஓவியம் தீட்ட முடியும் என்று.2-3 ஓவியங்கள் பார்த்துவிட்டேனே!வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அண்ணா.

    இந்த ஓவியத்தின் கண்கள் அசத்தல்.கதை பேசும் கண்கள்.
    கண்ணுக்கும் உதட்டுக்கும்... அதேபோலக் கூந்தலுக்கும் சம்பந்தமில்லை மாதிரி
    இருக்கு எனக்கு.
    ஒன்றையொன்று விலத்தி நிற்கிறது.

    ReplyDelete
  5. நல்லா வரைஞ்சு இருக்கீங்கன்னுதான் சொல்ல முடியுது.

    ஆனா..... அழகான பெண்ணாக இல்லை.

    எங்கியோ எதோ சரியா வரலை(-:

    ReplyDelete
  6. அழகான முயற்சிக்குப் பாராட்டுக்கள். வண்ணக் கலவைகள் நன்றாக இருக்கிறது. மாருதி அவர்களின் ஓவியங்களின் சாயல் தெரிகிறது. உதடுகளைக் கொஞ்சம் இன்னும் மெருகூட்டியிருக்கலாமோ ?

    ReplyDelete
  7. தலைமுடிக்கு மேலே தெரியும் பேப்பரை 'க்ராப்' செய்திருக்கலாம். மற்றபடி மிக அருமை.!

    ReplyDelete
  8. அண்ணா,ஒரு ஆலோசனை தரவா!இதே ஓவியத்தை வைத்துக்கொண்டு இன்னும் திருத்திப் பாருங்களேன்!

    ReplyDelete
  9. சூர்யா,ராம்,யாத்ரிகன்,தாமிரா முதல் முறை எனது பக்கம் எட்டிப்பார்த்ததுக்காக இவ்வார பூச்செண்டு உங்களுக்குத்தான்...
    //உதடுகள் மட்டும் கொஞ்சம் சரியாக வரவில்லை என்றுத் தோன்றுகிறது//‍சூர்யா...

    எனக்கு வரைந்து முடித்தபோது தோன்றவில்லை. இப்போது தோன்றுகிறது.பண்ணி இருக்கலாம். அது பழைய படம்தான். தற்பொழுது ஓரளவிற்குத் தேறிவிட்டேன்.

    //தலைமுடிக்கு மேலே தெரியும் பேப்பரை 'க்ராப்' செய்திருக்கலாம். மற்றபடி மிக அருமை.!

    //‍ தாமிரா

    பேப்பரை 'க்ராப்' செய்ய முயற்சித்தால் ,சிகை அலங்காரமும் சற்று'கட்' ஆகி விடுகிறது. (அவள்) ஆசையாய் வளர்த்த கூந்தலை வெட்ட மனமில்லாததால் விட்டுவிட்டேன். கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி தாமிரா..ராமின் வாழ்த்துக்கு நன்றி...
    //Loved those eyebrows, eyelashses & the eyes... they speak a lot//
    என‌க்கும் மிகப் பிடித்திருந்தது. இப்படத்திற்கு முதலில் 'கண்களும் கவி பாடுதே' அல்லது 'கண்களும் கதை பேசுதே' என தலைப்பிடலாம் என நினைத்தேன்..
    ஆனால் ஒரு விளம்பரத்திற்காக இப்படித் தலைப்பிட வேண்டியதாயிற்று.

    ReplyDelete
  10. அ.உ.ரி.ர.ம. தலைவி ராப்பிற்கு நன்றிகள்...
    மறுபடியும் வருகை புரிந்த துளசி டீச்சருக்கு நன்றிகள்..
    //நல்லா வரைஞ்சு இருக்கீங்கன்னுதான் சொல்ல முடியுது.

    ஆனா..... அழகான பெண்ணாக இல்லை.

    எங்கியோ எதோ சரியா வரலை(‍://
    மொத்தமாப் பார்த்தப்போ 'சம்திங் மிஸ்ஸிங்' தோன்றுகிறதல்லவா...? ஆனா அவ எனக்கு அழகாத் தெரிஞ்சதுனால அப்போ விட்டுட்டேன்.அடுத்த முறை நல்ல அழகி படம் காட்டுகிறேன் டீச்சர்...

    ReplyDelete
  11. அவ்வப்போது வந்தாலும் அன்பாய் ஊக்குவிக்கும் ரிஷானுக்கு நன்றிகள்..
    //அழகான முயற்சிக்குப் பாராட்டுக்கள். வண்ணக் கலவைகள் நன்றாக இருக்கிறது. மாருதி அவர்களின் ஓவியங்களின் சாயல் தெரிகிறது. உதடுகளைக் கொஞ்சம் இன்னும் மெருகூட்டியிருக்கலாமோ ?//
    என்னைப் பாராட்டுவதற்காக மாருதி அவர்களுடன் ஒப்பிடாதீர்கள்...
    அவர் மலை;நான் மடு.
    அவர் சிலை;நான் சிறுகல்.
    எனக்கு மாருதியின் ஓவியங்கள் என்றால் உயிர்.'வாஷ் ட்ராயிங்'கில் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.
    அவர்தான் என் மானசீகக்குரு.(அவரின் கொழுகொழு ஓவியக்கதாநாயகிகள் எனது கனவு தேவதைகள்.)
    அவர் போல் வண்ணப்படம் வரைய ஆசை.

    ReplyDelete
  12. வாங்கோ ஹேமா..க‌ணினி தேறிவிட்ட‌து.. ஒருவ‌ழியாய் என‌க்கும் ஓவிய‌ம் தீட்ட‌முடியும் என‌ ஒத்துக்கொண்ட‌துக்கு ந‌ன்றிக‌ள் ப‌ல‌..
    //கண்ணுக்கும் உதட்டுக்கும்... அதேபோலக் கூந்தலுக்கும் சம்பந்தமில்லை மாதிரி
    இருக்கு எனக்கு.
    ஒன்றையொன்று விலத்தி நிற்கிறது.
    //
    ஆழ்ந்து ர‌சித்த‌மைக்கு ந‌ன்றி. என‌க்கு அவ்வாறு தோன்ற‌வில்லை. ஒரு முப்ப‌ரிமாண‌த்தோற்ற‌த்திற்காக‌ முயற்சித்திருப்பேன் என‌ எண்ணுகிறேன்.
    ஆனால் கண்ணுக்கு மேல்புற‌ம் முன்நெற்றிப் ப‌குதி, முன்நெற்றியும்,தலைமுடியும் சேரும் ப‌குதிக‌ள் ச‌ரியான‌ ஃபினிஷிங் இல்லாம‌ல் தோன்றுகிற‌து. ச‌ரி செய்திருக்க‌லாம்...

    //இதே ஓவியத்தை வைத்துக்கொண்டு இன்னும் திருத்திப் பாருங்களேன்!//
    ம‌ன்னிக்க‌வும் ச‌கோத‌ரி. கார‌ண‌ங்க‌ள் உள்ள‌ன‌. முத‌லில் இது இலேசான, சாதார‌ண‌த்தாளில் வ‌ரைந்த‌து.(எங்க‌ அம்மாவோட‌ கோல‌ நோட்டை எடுத்து அலங்கோல‌ம் ப‌ண்ணிய‌து).
    அடுத்த‌ கார‌ணம் இப்ப‌ட‌ம் வ‌ரைந்து ஏழு வ‌ருட‌ங்க‌ள் முடிந்துவிட்ட‌து. ம‌றுபடியும் அதில் திருத்தினால், மூல‌ப்ப‌ட‌ம் கெட்டு விடுமோ என‌ப் ப‌ய‌ம்.
    (நான் போஸ்ட‌ர் க‌ல‌ரை விட்டு வ‌ருட‌ங்க‌ள் ஆகி விட்ட‌து.)அத‌ன் பின் கறுப்பு அ சிவ‌ப்பு பால்பாயிண்ட் பென்னில்தான் வ‌ரைந்துகொண்டிருக்கிறேன்.
    த‌ற்பொழுது ச‌மீப‌த்தில் ஆயில் பேஸ்ட‌ல் கிரேயான் கொண்டு ப‌ழ‌கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் வெகு ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ளை வ‌லையேற்றுவேன் உங்கள் ஆதரவில். ந‌ம்பிக்கை இருக்கிற‌து.ஆலோச‌னையைச் செய‌ல்ப‌டுத்தாத‌ற்கு ம‌ன்னிக்க‌வும் ச‌கோத‌ரி...

    ReplyDelete
  13. சூடான இடுகையில் வரச்செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி...
    அதற்காக இப்படித்தலைப்பு வைத்ததற்காக 'இவ்வாரக்குட்டு' எனக்கே எனக்கு...

    ReplyDelete
  14. இப்பத்தான் நிறைய வசதிகள் வந்துருச்சே கணினி, போட்டோ காப்பி அது இதுன்னு.

    இதே படத்தை காப்பி பண்ணிக்கிட்டு, இங்கே நம்ம மக்கள்ஸ் சொன்னதை ஒவ்வொன்னா செஞ்சு பார்த்துட்டு எப்படி வருதுன்னு போட்டுக் காமிங்க.

    கட்டுன வீட்டுக்குப் பழுதுசொல்ல நாங்க எல்லாம் எப்பவும் ரெடி:-))))

    ReplyDelete
  15. அடிக்கடி வரையுங்க தமிழ்பறவை...

    ReplyDelete
  16. பாராட்டுக்கள் தொடர்ந்து முயற்சி செய்யுங்க...!

    ReplyDelete
  17. நிஜமா நல்லா இருக்குங்க,

    ReplyDelete
  18. //அடிக்கடி வரையுங்க தமிழ்பறவை...//
    நன்றி தமிழன்...தொடர்கிறேன்...ஊக்குவித்த‌மைக்கு நன்றி...

    //நிஜமா நல்லா இருக்குங்க,//
    முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி குடுகுடுப்பையாரே...

    ReplyDelete
  19. //இதே படத்தை காப்பி பண்ணிக்கிட்டு, இங்கே நம்ம மக்கள்ஸ் சொன்னதை ஒவ்வொன்னா செஞ்சு பார்த்துட்டு எப்படி வருதுன்னு போட்டுக் காமிங்க.//
    டீச்சர் அசைன்மெண்ட் குடுத்திட்டீங்களே... கொஞ்சம் சோம்பேறித்தனப் பட்டேன்..அதைத் தொட ஆரம்பிச்சா புதுப் பதிவிடுவதும், பின்னூட்டமிடுவதும் குறையுமே என்று பார்த்தேன்...
    //கட்டுன வீட்டுக்குப் பழுதுசொல்ல நாங்க எல்லாம் எப்பவும் ரெடி:-))))
    //
    பழுது பார்த்துடலாம் டீச்சர்...நன்றி...

    ReplyDelete
  20. அருமை. இது எப்போது வரைந்தது 2001 லா ??

    ReplyDelete
  21. கலக்கல் படம் தல, நம்ம ராசாவையும் வரைந்து வைக்கலாமே?

    ReplyDelete
  22. vaanga prabaa.. Aalaik kaanomennu ninaichaen. vaazhthukku nanri...
    //நம்ம ராசாவையும் வரைந்து வைக்கலாமே?
    //
    already i put in my post..
    praba please go to this link..
    http://thamizhparavai.blogspot.com/2008_08_06_archive.html
    two more our raja drawings i presented to my college friends...
    next im planning to draw new raja drawing in colour...it will release soon...

    ReplyDelete
  23. உங்கள் படம் நன்றாக இருக்கிறது. அதில் சில பல குறைகள் தெரிந்தாலும், பல வருடங்களுக்கு முன் வரையபட்டிருப்பதால் அந்த படத்தில் உள்ள நேர்த்தியான் முயற்சிக்கு என் பாராட்டுகள்.

    என்னுடய குறும்படமான “ஆக்ஸிடெண்ட்” பார்த்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்

    http://cablesankar.blogspot.com/2008/08/blog-post_7014.html

    அல்லது http://www.shortfilmindia.net/ShortAccident.html அது தவிர அதில் இருக்கும் நிதர்சனம்,மெளனமே ஆகிய குறும்படங்கள் நான் இயக்கியதுதான்.

    ReplyDelete
  24. படம் நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  25. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கடையம் ஆனந்த்...

    ReplyDelete
  26. நல்ல முயற்ச்சி.... என்னால் வரையவெல்லாம் முடியாது. நான் வரைந்த மிகப் பெரிய ஓவியம் என்னவென்றால்... Draw a straight line! அம்புடுத்தேன்..

    ReplyDelete
  27. வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி விஜய்...

    ReplyDelete
  28. ஓவியம் நன்றாக இருக்கிறது பரணி அவர்களே ..
    கண்கள் மிக அழகு ... நீங்கள் கொடுத்திருக்கும் shadows ..பார்க்கும் போது மாருதி அவர்கள் வரையும் அதே சாயல் தெரிகிறது ..
    மொத்தத்தில் ஓவியம் அருமை ..

    வாழ்த்துக்கள் நிறைய வரையுங்கள் ..

    அன்புடன்
    என்றும் இனிய தோழன்
    விஷ்ணு

    ReplyDelete
  29. //தமிழ்ப்பறவை கூறியது...
    maaruthi comparisonlaam koncham over//

    அவரது ஓவியங்களில் ..மூக்கு இப்படி இருக்காது ..(அவர் எப்போதும் கொஞ்சம் உருண்ட அல்லது வட்ட வடிவத்தில் )வரைவார் ..
    ஆனால் இந்த உங்கள் ஓவியத்தில் அப்படி இல்லை மற்றபடி கண்கள் எல்லாம் அதே போலவே..எனக்கு தெரிகிறது


    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete
  30. வருகைக்கும் ,உளமார்ந்த வாழ்த்துக்கும் நன்றி முரளிகண்ணன்...

    ReplyDelete
  31. //
    அவரது ஓவியங்களில் ..மூக்கு இப்படி இருக்காது ..(அவர் எப்போதும் கொஞ்சம் உருண்ட அல்லது வட்ட வடிவத்தில் )வரைவார் ..//
    ஆம் விஷ்ணு இவ்வோவியத்தில் நான் அட்டைப்படத்தில் உள்ளதை மட்டுமே வரைந்தேன்.மாருதிதான் எனக்கு மானசீகக் குரு.அவரின் பாணியில் நான் வரைய முயன்ற இரு ஓவியங்களை விரைவில் வலையேற்றுகிறேன்.

    ReplyDelete
  32. மாருதி சாயல் தெரிகிறது, நீங்க என்ன ப்ரொபஷனல் ஆர்ட்டிஸ்டா?

    மற்றவர்கள் சொன்ன அதே விமர்சனம்: வாய்/உதடுகளை கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்.

    ReplyDelete
  33. நீண்டநாள் வருகைக்குப் பின் வந்து வாழ்த்தி இருக்கிறீர்கள் கயல்..
    நன்றி..
    //மாருதி சாயல் தெரிகிறது, நீங்க என்ன ப்ரொபஷனல் ஆர்ட்டிஸ்டா?//
    அப்படியெல்லாம் ஆக முடியவில்லையே என வருந்தும் ஆட்டோமொபைல் என்சினியர்.அதனால் பழைய படங்களைப் பதிவேற்றி வருகிறேன்.உங்கள் தொடர் வாழ்த்துக்களில் புது ஓவியங்களையும் தற்போது உருவேற்றி வருகிறேன்.

    ReplyDelete
  34. //தமிழ்ப்பறவை கூறியது... மாருதிதான் எனக்கு மானசீகக் குரு.அவரின் பாணியில் நான் வரைய முயன்ற இரு ஓவியங்களை விரைவில் வலையேற்றுகிறேன்.//

    காண காத்திருக்கிறேன் நண்பரே ..விரைவில் கண்களுக்கு விருந்தாக்குங்கள்

    ReplyDelete
  35. கண்டிப்பா பண்ணிரலாம் தலை...

    ReplyDelete
  36. padam romba azhaga irrugu...enakku endha kuraiyum theriyala....lipsukku kooda lipliner potta mathirithan irruku...really appriciate you...
    naanum indha padatha copy pannitu varaiya poren....neenka sonna ella oviyargalum piddikkum+shyaamum romba pidikkum...

    ReplyDelete
  37. //lipsukku kooda lipliner potta mathirithan irruku...really appriciate you. //
    முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி தர்ஷினி...
    கொஞ்சம் அதிகமாகவே(உயர்வு நவிற்சிஅணியோ...?!) பாராட்டிட்டீங்க...அதுக்காக சிறப்பு நன்றி..
    ஆமாம்.. எனக்கு ஷ்யாமும் ரொம்பப் பிடிக்கும். எப்படியோ விட்டுப்போச்சு. 'பாக்யா'வில கவிஞர் பா.விஜய் எழுதின 'உடைந்த நிலாக்கள்' கவித்தொடருக்கு அவர்தானே ஓவியங்கள்.
    //naanum indha padatha copy pannitu varaiya pஒரென்//
    வாழ்த்துக்கள். வரைஞ்சுட்டு வலையேத்துங்க. பார்க்க ஆவல்.

    ReplyDelete
  38. அட்டைப் படத்தில் வந்த ஒரு புகைப்படத்தைத்தான் வரைந்துள்ளீர்கள்
    எனில் மிக அழகாக வந்துள்ளது.
    அவர் தோற்றம் அப்படியாயின் ஏனையோர் சொல்வது போல் மாற்றமோ சீரமைப்போ (உதடு,வாய்,கண்,முடி) செய்யமுடியுமா??

    ReplyDelete
  39. வருகைக்கு நன்றி யோகன் அண்ணா...
    //வர் தோற்றம் அப்படியாயின் ஏனையோர் சொல்வது போல் மாற்றமோ சீரமைப்போ (உதடு,வாய்,கண்,முடி) செய்யமுடியுமா??//
    எனக்குத் தோன்றவில்லை அண்ணா..மன்னிக்கவும்.

    ReplyDelete