Friday, November 19, 2010

பாடல் தேடிய கதை(கண்டிப்பாக இளையராஜா ரசிகர்களுக்கு மட்டும்)

*ஜீவா ஹோவாகிதே*
             பெங்களூரு வால்வோக்களில் பயணிக்கையில், உள்ளூர்ப் பண்பலைகளில் ஒலிபரப்பாகும் பாடல்களைக் கேட்க நேர்ந்ததுண்டு. முக்கால்வாசி ஹிந்திப் பாடல்களும், கால்வாசி கன்னடப்பாடல்களும் வரும். கன்னடப்பாடல்கள் அனைத்தும், தென்னிந்திய மொழிகளுக்குண்டான ஃப்ளேவருடனும், கரோக்கியாக மாற்றிக் கேட்டால் எல்லாம் ஒன்றே போலவும் தோன்றும்.(விஜயாண்டஹாரிஸ்தேவவித்யாயுவரகுமான்கள் இசை) போல் ஒரே டெம்ப்ளேட்டில் இருக்கும்.அதனால் கண்களை அகல விரித்துக் கொண்டும், காதுகளை இறுக்க மூடிக்கொண்டும் இருந்துவிடுவேன். ஓரிரு நாட்களுக்கு முன் ஏறிய ஒரு பேருந்தில் கேட்ட பாடல்தான் இப்பாடல்.சரணத்திற்கு அடுத்துவரும் பல்லவியைக் கேட்டவுடன் புரிந்துவிட்டது இது ராஜாவின் பாடல் என்றும், பாடிக்கொண்டிருப்பவர் கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் என்றும். ராஜ்குமாரின் குரலைக் கேட்கையில் இளகிய P.B.ஸ்ரீநிவாஸின் குரல் போலவே எனக்குப் படும்.





            மொழி தெரியாததால், வரிகளைக் கவனிக்க முடியவில்லை, ‘ஜீவ’ என்ற முதல் வார்த்தை மட்டுமே தெரிந்தது. கன்னட நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன். பாடிக் காட்டச் சொன்னார்கள்.காட்டினேன். ஏனோ அதன் பிறகு பேச்சையே குறைத்துக் கொண்டார்கள்.காதுல ஏதோ பிரச்சினை போலும் அவர்களுக்கு. வீட்டிற்கு வந்து யூ ட்யூபில் தேடிப் பார்த்தேன். “ஜீவ+ராஜ்குமார்+கன்னடா” இவையே எனது தேடலுக்கான வார்த்தைகள். கிடைத்துவிட்டது. பாடல் அந்ந்ந்ந்ந்ந்ந்ந்தக் காலத்து மரம்சுற்றும் டூயட்தான். இடையிடையே ‘ஜானி’ படத்தில் ரஜினி+ஸ்ரீதேவி ஓடிவது போல் ஸ்ல்ல்ல்ல்லோமோஷனில் ஓடுகிறார்கள்.ஹீரோயினை விட வயது அதிகம் எனினும் ராஜ்குமார் இளமையாகத் தோன்றுகிறார். இந்தப் பொல்லாப்பெல்லாம் வேண்டாம் என்பவர்கள், பாடலை ஓடவிட்டு, பிரவுசரின் பக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். செவிகள் மட்டும் கேட்டுக் கொள்ளட்டும். 80களில் வந்த ராஜ இசைதான். தமிழ்ப் பாடல் கேட்பது போல்தான் இருக்கிறது. ஆனாலும் ராஜ்குமாரின் குரலில் இன்னும் கொஞ்சம் மெருகேறி ஒலிக்கிறது பாடல். எனக்கென்னமோ இந்தப் பாடலும் என் ப்ளேலிஸ்ட்டில் சீக்கிரம் ஒட்டிக் கொள்ளுமெனத் தெரிகிறது.

   பி.கு: ரவிசார் அறியாத ஒரு பாடலைப் போட்டுவிட்டேன் என்ற திருப்தி :)

17 comments:

  1. பாடல் என்னவோ பழைய, ராஜாவின் பாடல்தான். ஆனால் வீடியோதான் பார்க்க கொடுமையாக இருக்கிறது.
    நம்மவர்கள் எவ்வளவோ பரவாயில்லை.

    ReplyDelete
  2. இன்று கேட்க முடியவில்லை... நாளை கண்டிப்பாக கேட்பேன்... ராஜா இசையில்ல....

    ReplyDelete
  3. "80களில் வந்த ராஜ இசைதான். தமிழ்ப் பாடல் கேட்பது போல்தான் இருக்கிறது"

    அருமையான பாடல்...

    ReplyDelete
  4. இப்படி காட்சி 'படுத்துகிறார்கள்' என்று எண்ணாமல், இசையை அற்புதமாக கொடுத்துக்கொண்டே தான் இருந்திருக்கிறார் :)

    ReplyDelete
  5. மாப்பி பகிர்வுக்கு நன்றி...ஆனா படத்தை....!

    ReplyDelete
  6. ராஜா இசையில் ராஜ்குமார் பாடிய "அனுராகா எனாயித்து" பாடலும் எனக்கு பிடிக்கும். தெலுங்கில் "பலபம்பட்டி பாமா வள்ளு" கேட்டுப்பாருங்கள். ராஜாவின் பிறமொழி முத்துக்கள்.

    ReplyDelete
  7. நானும் கேட்டதில்லை. ஒல்ட் இஸ் கோல்ட்.தன்னுடைய ஸ்டைல் எப்போதும் இருக்கும்.

    ReplyDelete
  8. @கக்கு-மாணிக்கம்...
    நன்றி நண்பரே ரசிப்பிற்கு...80களில் இப்படித்தான் இருக்கும் வீடியோ...:) ‘பட்டாக்கத்தி பைரவன்’ படத்தில் ஒரு அருமையான பாடல் இருக்கும்.’எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்’. அதைப் பாருங்கள். அதற்கு இது 50 மடங்கு தேவலாம்..:)

    @சே.குமார்...
    வருகைக்கும், ரசிப்பிற்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  9. @மாணவன்...
    நன்றி மாணவன் ரசிப்பிற்கு...

    @பிரசன்னா...
    அது அமுதசுரபி , விடுபவரின் விரல் பார்க்காமல் அமுதம் தருவது.

    @கோபிநாத்...
    வாய்யா... மாப்பி... கேட்டியா பாடலை. பத்து நாளா இதே பாட்டுதான் ஹம் பண்ணிக்கிட்டு இருக்கேன்...

    ReplyDelete
  10. @மீனாட்சி சுந்தரம்...
    வருகைக்கு நன்றி நண்பரே... ‘அனுராக’ கேட்டேன். இன்னும் ஒருமுறை கேட்க வேண்டும்,,,
    ‘பலப்பம்பட்டி’ என்னோட ஃபேவரைட் சாங். நினைவூட்டியதற்கு நன்றி...

    @கே.ரவிஷங்கர்...
    நன்றி சார்,..அதே...அதே...

    தமிழ்மணம், திரைமணம், இண்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  11. நான் இளைராஜாவின் தீவிர ரசிகனாகிக் கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். :)

    ReplyDelete
  12. நல்லாதான் இருக்கு..

    ReplyDelete
  13. இசைக்கு மொழியேது நண்பரே..

    ReplyDelete
  14. @கார்த்திக்... நன்றி கார்த்திக்... யாரையாவது லவ்பண்ண ஆரம்பிச்சுட்டியா? :)

    @ஹரிஸ்... ரசிப்புக்கு நன்றி ஹரிஸ்...

    @ஆதிமூல்கிருஷ்ணன்... வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  15. //யாரையாவது லவ்பண்ண ஆரம்பிச்சுட்டியா? :)

    எகொசாஇ. பிரியானு ஒரு அக்கா ஐபாடை அவள் கல்யாணத்தில் கொள்ளை அடிச்சேன். அத்தனையும் இளையராஜா பாட்டு. கேட்டுட்டு இருக்கேன்.

    ReplyDelete
  16. Raja guitar strings!!!
    ஜீவ ஹூவாகிதே,
    பாவ ஜேனாகிதே,
    பாளு ஹாளாகிதே,
    நின்ன தேடிநானு!

    வரிசையா கிட்டார் பின்னிக்கிட்டே வரும்போது, ராஜ்குமார் அவங்களைத் தூக்கிச் சுத்தும் காட்சியில், ஒட்டு மொத்த இசையும் நின்னு...
    வயலின் + டொடக் டொக் டொடக் டொக்...

    ராக தேவன்-ன்னு சும்மாச் சொல்லலை!

    ReplyDelete
  17. ராஜ்குமார் நல்லாவே பாடுறாரு! மெல்லப் பாட்டைப் பாடிக் கேட்டிருக்கேன்! இப்படி ஒரு fast beat பாட்டை ராஜ்குமார் பாடிக் கேட்பது இதுவே முதல் முறை!

    ஜானகி ஆரம்பிக்கும் போதே, ஹை பிட்ச் தான்! சும்மாக் குழையறாங்க.....வாவ்!

    ஐ லவ் யூ-ன்னும் போது யூ யூ யூ-ன்னு இழுக்குறாங்கய்யா! ஆகா!
    ஜீவ ஹூவாகிதே,
    பாவ ஜேனாகிதே,
    பாளு ஹாளாகிதே,
    நின்ன தேடிநானு!

    ReplyDelete