Tuesday, November 16, 2010

இரவு-தொலைந்ததும், கிடைத்ததும்

    இத்தனை நாட்களாய் ட்விட்டர், ஃபேஸ்புக், பஸ்ஸில் எழுதிய டிவீட்டுகள். என்னைப் பொறுத்தவரை கசப்பான ஸ்வீட்டுகள். இரவில் எழுதிய இரவைப் பற்றி எழுதிய அனைத்தையும் தொகுத்திருக்கிறேன்.மற்றபடி உங்கள் விருப்பம். 

இரவின் கால்களில் இருக்கும் எண்ணற்ற நகங்களின் உராய்தல் முதலில் சுகத்தையும் முடிவில் ஆறா ரணத்தையும் தருகிறது #இரவின் பிடியில்

**************************************************************************

இரவின் எல்லை தெரிந்தாலும் கை நீட்ட நீட்ட இன்னும் தூரமாவர்தேன்? #இரவும் நானும்

***************************************************************************

ஊர் உறங்கும் வேளையில் விடியலைச் செய்து கொண்டிருந்தது இருள். #இருளின் ரகசியம்

***************************************************************************

எவ்வளவுதான் விழிப்பாய் இருந்தாலும் நித்திரை தொலையும் இரவுகளை மட்டும் முன்பே கண்டுகொள்ள முடிவதில்லை#இரவின் பிடியில்

***************************************************************************

என்னை விழுங்கும் இரவா, கண்ணை விழுங்கும் உறக்கமா?இப்போதைக்குப் பறிகொடுக்கிறேன் எதையாவது#இரவின் பிடியில்

***************************************************************************

மாலைகளின் ரம்மியத்தைக் கவர்ந்து கொள்வதற்கே கருப்பு அங்கியுடன் பதுங்கி நிற்கிறது இரவு # மாலை மயக்கம்

****************************************************************************

ஒவ்வொரு நாளின் முடிவிலும் சேகரமாகும் வெறுமைகளின் நிறம் இருளை விடவும் கருமையானது#இரவின் பிடியில்

****************************************************************************

இரவிடம் ஏதோ சொல்வதற்காக, வெளியே நாய் குரைத்துக் கொண்டிருக்கிறது.உள்ளே நான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.#இரவும், நானும்

****************************************************************************

நிலவு தின்ற இரவின் பசி மலைப்பாம்புடையதைப் போலடங்கினால் நான் தப்பித்துக் கொள்வேன்# இரவின் பிடியில்

****************************************************************************

ஊடலில் முகம் திருப்பிக் கூந்தல் காட்டும் இன்றைய நிலவும் அழகுதான்#இரவும், நிலவும் #அமாவாசை

****************************************************************************

சாமியாடுபவரைக் கண்டு அம்மாபின் ஒளியும் குழந்தையாய்ப் போர்த்திக் கொள்கிறேன்.ஆடட்டும் இரவு #இரவின் பிடியில்

****************************************************************************

இரவுகளை வித்தியாசப் படுத்துவது அளவில் கூடும் கவலைகள் மட்டுமே #இரவின் பிடியில்

****************************************************************************

சிதறிக் கிடக்கும் கரு வண்ணத்தில் என் தூக்கத்தையும் சேர்த்துக் குழைக்கிறேன்.இன்னும் இருளட்டும் இரவு #இனிய இரவு

****************************************************************************

இரவின் ரகசியக் கண்ணிகளுக்குள் என் தூக்கமும் சிக்கிக் கொள்ளட்டும். #இனிய இரவு

****************************************************************************

இரவுகள் ஆடும் பரமபதத்தில் இன்றாவது பாம்புகள் கொத்தாமலிருக்கட்டும் என்னை...#புலம்பல்கள்

*****************************************************************************
  
13 comments:

  1. அண்ணா...இரவின் தருணங்கள் சில சமயங்களின் கசந்தாலும் அந்தப் பேரமைதி தரும் சுகமே அலாதிதான் !

    ReplyDelete
  2. அனத்தும் அருமை சார்,

    ”எவ்வளவுதான் விழிப்பாய் இருந்தாலும் நித்திரை தொலையும் இரவுகளை மட்டும் முன்பே கண்டுகொள்ள முடிவதில்லை#இரவின் பிடியில்”

    அழகாக பதிவு செய்துள்ளீர்கள்

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    நன்றி
    நட்புடன்
    மாணவன்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று.நன்று.

    ReplyDelete
  4. எவ்வளவுதான் விழிப்பாய் இருந்தாலும் நித்திரை தொலையும் இரவுகளை மட்டும் முன்பே கண்டுகொள்ள முடிவதில்லை

    சொல்ல வார்த்தையில்லை தமிழ் பறவை

    ReplyDelete
  5. இரவில் தொலைந்ததால் அழகான வரிகள் கிடைத்தது ரசித்தேன் நண்பா

    ReplyDelete
  6. ரசித்தேன்...(நம்பு மாப்பி ;)

    ReplyDelete
  7. @கார்த்திக்...
    ட்விட்டர் கார்த்திக்தானா நீஙக..முதல் வரவுக்கும், ரசிப்புக்கும் நன்றி...

    @ஹேமா...
    ஹேமா எவ்வாறு உள்ளீர்கள்? இணையவிடுப்பு முடிந்ததா?
    //அந்தப் பேரமைதி தரும் சுகமே அலாதிதான் !//
    அதே...அதே... நன்றி...

    ReplyDelete
  8. @மாணவன்...
    நன்றி மாணவன் வருகைக்கும், வாழ்த்திற்கும்...

    @கே.ரவிஷங்கர்...
    நன்றி ரவி சார்... நீங்க சொன்ன அதேதான். வேறு வேறு வார்த்தைகளில் மாற்றியிருக்கிறேன்...

    ReplyDelete
  9. @சே.குமார்...

    நன்றி நண்பரே ரசிப்புக்கு...

    @சக்தி...
    வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி சக்தி...

    ReplyDelete
  10. @கானாப்ரபா...
    தலை வாங்க தல.. எப்டி இருக்கீங்க... இரவுன்னு பேரப் பார்த்தவுடனே வந்துட்டீங்களா... நன்றி...

    @கோபிநாத்...
    வாய்யா மாப்பி இப்டி சொன்னா எப்டி.கற்பூரம் கொளுத்தி சத்தியம் பண்ணிச் சொல்லு நம்புறேன்...:)

    தமிழ்மணம், இண்டலியில் வாக்கிட்ட நண்பர்களுக்கும் நன்றிகள்... :)

    ReplyDelete
  11. சில ட்விட்டுகள் ரசனை.
    .
    .
    .

    சில அப்படி இல்லாமல் அர்த்தமற்றைவை போல தோன்றுகிறது.

    ReplyDelete
  12. நன்றி ஆதிமூலகிருஷ்ணன்...

    ReplyDelete