Wednesday, September 15, 2010

இளையராஜா-இப்பவும் நான் ராஜா

இன்னொரு முறை மகிழும் வாய்ப்பெனக்கு வந்திருக்கிறது. இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.இதுநாள் வரை இல்லாத ஒன்றாக, ‘பின்னணி இசை’க்கென தனி விருது தொடங்கப்பட்டு அதன் முதல் விருதே இளையராஜாவுக்குத்தான் என்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளட்டும் அவ்விருது.’பழசிராஜா’(மலையாளம்) படத்திற்குக் கிடைத்திருக்கிறது. இதுவரை இளையராஜாவுக்கு விருது பெற்றுத்தந்த படங்கள் அனைத்தும் இசையை மையமாகக் கொண்ட படங்களே. சாகரசங்கமம்(தெலுங்கு-1984-தமிழில் ‘சலங்கை ஒலி’),சிந்து பைரவி(1986), ருத்ரவீணை(தெலுங்கு-1989-தமிழில் ‘உன்னால் முடியும் தம்பி’). ‘பழசிராஜா’வோ முற்றிலும் வரலாற்றுப் பின்னணியில் வெளிவந்த படம். இதற்கு முன்பே ‘சிறைச்சாலை’,’ஹேராம்’ படங்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ‘சேது’,’நான் கடவுள்’ இன்னும் பல படங்களின் பின்னணி இசை விருதுக்குத் தகுதியானவையே. நடுவர் குழு ஹிட்டான பாடல்களை மட்டும் கவனித்திருக்கலாம்.அல்லது ராஜாவின் பாடல்களுக்குள் இருக்கும் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளத் தெரியாமலிருந்திருக்கலாம்.இதில் இரண்டாவது வகையே அதிகம் என நினைக்கிறேன்.‘பழசிராஜா’வின் பாடல்கள் எவ்விதத்திலும் குறைந்தது இல்லை.

சங்கீதங்கள் மட்டுமல்ல ராஜாவின் மவுனம் கூடச் சிறந்த இசைதான். பாலுமகேந்திராவின் கூற்று இது:’என் படங்களில் எங்கு இசை பேச வேண்டும். எங்கு மவுனம் இசைக்க வேண்டும் என்பது என் ராஜாவுக்குத் தெரியும்.’பாலுமகேந்திராவின் ‘வீடு’ படத்தின் பின்னிசையைக் கவனியுங்கள்.


பாண்டியராஜனின் ‘ஆண்பாவம்’ படத்தின் பின்னணி இசை ரசிக்க....




இளையராஜா-மணி ரத்னம் இணைவில் உருவான ஒரு முத்து கீழே...


இப்போதைக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் ராஜாவுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்...

19 comments:

  1. Awesome..great...what a music for Veedu

    ReplyDelete
  2. மேஸ்ட்ரோவை நானும் வாழ்த்துகிறேன்.

    ஆண்பாவம்: சீதாவுக்கு சாதகமில்லாத இடங்களில் பிஜிஎம் மெதுவாக சோகத்திற்கு போகிறது.2.50 -2.56 சூப்பர் 2.57 பிறகு full of emotions.

    கிழ் வரும் வீடியோவைப் பார்க்கவும்.அதில் 0.55 -0.59.
    Maestro is king of Romantic Music.

    Ithazhil kathai
    http://www.youtube.com/watch?v=79XOqaPVrDg

    ReplyDelete
  3. அண்ணா...உங்களோடு கை கோர்த்துக்கொள்கிறேன் வாழ்த்துச் சொல்ல !

    ReplyDelete
  4. ராஜா எப்போதுமே ராஜாதான்....

    ReplyDelete
  5. அய்..

    வாழ்த்துவோம்..

    ராஜாவின் ஸ்டர் பீஸ்.. அஞ்சலி டைட்டில் மியுசிக்.. கேட்டு இருக்கிஙக்ளா?

    அப்புறம் தள்பதி.. ரீரெக்கார்டிங்ன்னா எனக்கு அதான் ஃபர்ஸ்ட்....உஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  6. செல்லம் போட்டுட்டியா....சூப்பரு மாப்பி...;))

    பார்த்தியா முதல் விருதே தெய்வத்துக்கு வந்திருக்கு...;))

    நீயூஸ் பார்த்தில் இருந்து செம குஷி ;)) இந்த வருஷம் இது ரெண்டவாது விருது ஓய் ;)))

    ReplyDelete
  7. ராஜா எப்போதுமே ராஜாதான்....

    மேஸ்ட்ரோவை நானும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  8. பின்னூட்டத்தில் விட்டுப்போனது.

    கீதாஞ்சலி: 0.45 -1.10 வயலினில் கவுண்டர்பாயிண்ட் வாசிக்கிறார்.

    கவுண்டர்பாயிண்ட்:(தெரியாதவர்களுக்கு)
    ஒரு சமயத்தில் இரண்டு மெட்டுக்கள் இசைப்பது.

    ReplyDelete
  9. என் தெய்வத்துக்கு வாழ்த்துக்கள் ....,தலைவா ..அந்த வீடு பின்னணி இசை கண்களில் நீருடன் என்னை என்னோவோ செய்து விட்டது .. ..,

    ReplyDelete
  10. சார் ,
    இந்த வீடு படம் இசை ஒன்னே போதும் சார் ...,நாங்கே ஏன் சார் ,மொசார்ட் ,பீதோவன் ,ஜான் வில்லியம்ஸ் ன்னு போனும்

    ReplyDelete
  11. இளையராஜாவின் தேசிய விருதுக்கே மகிழ்பவர்கள், ரஹ்மானின் ஆஸ்காருக்கு 1000 நொட்டை சொன்னது ஏன்..? தமிழ்ப்பறவை, உங்களைச் சொல்லவில்லை...!!

    ReplyDelete
  12. இளையராஜா நம் பெருமைக்குரியவர்.

    ReplyDelete
  13. என்னுடைய வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  14. பின்னனி இசையில் முதல் விருதே இசைஞானிக்கு....
    இசைஞானியால் அந்த விருதுக்கே பெருமை...
    பின்னனி இசையில் அவரை வீழ்த்த யாரால் முடியும் வீழ்த்த்தவும் முடியாது வீழவும் மாட்டார் அவரின் தமிழிசைக்கு முன்னாலும் சரி பின்னாலும் சரி கன்னுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை...
    அந்த இசைசூறாவளி தனது 14 வயதில் இசைப்பயனத்தை தொடங்கி இன்று வரை இசையாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் ஜீவன்....
    ராகதேவனின் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே பெருமையாக இருக்கிறது...
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
    இசையின் கடவுளை....

    ReplyDelete
  15. @கோசி,@ஹேமா,@சிவராம்குமார்,@சே.குமார், @ஆதிமூலகிருஷ்ணன், @தியாவின் பேனா,@தர்ஷினி, @பனங்காட்டு நரி, @மாணவன்...
    ராஜாவை வாழ்த்துவதில் என்னுடன் இணைந்த அனைவருக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  16. @கார்க்கி...
    நன்றி சகா...நீங்க சொன்ன ரெண்டும் பிடிக்காதவங்க யாரும் இருக்க முடியுமா? இரண்டிலும் ‘மணி’யான இசை அல்லவா வெளிப்பட்டிருக்கும்...:-)

    ReplyDelete
  17. @இரா.வசந்தகுமார்...
    //இளையராஜாவின் தேசிய விருதுக்கே மகிழ்பவர்கள், ரஹ்மானின் ஆஸ்காருக்கு 1000 நொட்டை சொன்னது ஏன்..? தமிழ்ப்பறவை, உங்களைச் சொல்லவில்லை...!!//

    :-) வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  18. @கே.ரவிஷங்கர்...

    உங்களுக்குப் பாடலைக் கேட்டுவிட்டுப் பதில் போட எண்ணியதால், பதில் பின்னூட்டம் போட மொத்தம் தாமதமாகிவிட்டது சார்.
    ஆண்பாவம் 0.55-0.59 இசை கேட்டேன். அது சொல்லி விட்டது அக்கதையை...மொத்தமுமே கலக்கல் இசைதானே..
    ‘இதழில் கதை’ எழுது மறுபடியும் கேட்டேன். வீடியோவின் சிறப்பு பாடலுக்கு முன் சில் காட்சிகளுடன் வந்ததுதான். நாயகியின் பெயர் ‘லலிதா கமலம்’ தொடரும் பாடலும் அதே ராகமாம். எனக்குத் தெரியவில்லை. நீங்கள் உணர்ந்திருக்கலாம்.

    ‘கீதாஞ்சலி’ கவுண்டர் கேட்டேன். ரசித்தேன்...
    நீங்கள் பதிவு போடுவீர்கள் என எதிர்பார்த்தேன்....:-(

    ReplyDelete