Wednesday, September 29, 2010

விரல்வழிக் கசியும் துளிகள்...2

       ப்பொழுதும் தவறவிடாமல் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி விஜயில் வரும் ‘ஏர்டெல் சூப்பர் சிங்கர்’ தான்.இளங்கலைஞர்கள் பாடுகையில் ஏதோ நாமே மேடையில் பாடுவது போலொரு ஆனந்தம். இன்றும் அப்படித்தான். அதில் கிளாசிக் வகையைத் தேர்ந்தெடுத்த ஹரிணிதிவ்யா பாடிய பாடல் கேட்டவுடன் பிறந்ததே இப்பகிர்வு.
   
     ண்முகப்ரியா ராகமாம்.(நன்றி. எஸ்.பி. சைலஷா). எனக்குத் தெரியாது. ரவி சார் தெளிவு படுத்துவார் என நம்புகிறேன். ராஜாவின் இசையில் விரகமும், காதலும்(நல்லதோ கெட்டதோ காதல்தான் அது. வள்ளுவரின் வாக்கில் சொன்னால் ‘காமம்’), தவிப்பும், ஏக்கமும், இயலாமையும் பிரவாகமாய் வெளிப்படும் பாடல்.ஆரம்பப் பின்னிசையிலேயே நான் இதைத்தான் சொல்லப் போகிறேன் எனச் சொல்லிவிடுவார்.(இப்பல்லாம் படங்களுக்கு டிரைலர் காட்டுவது போல).
           
            குழலில் ஆரம்பிக்கும் தாகம், பின் வயலின்களின் வருகையால் ஆறுதலடையும் நேரத்தில் வந்துவிடுவார் ஜானகி ‘சொல்லாயா’ எனச் சொல்லிக் கொண்டு. உடனே ஆரம்பித்துவிடும் தபேலாவின் தட்டுக்கள் மற்ற ராஜாவின் பாடல்களில் வரும் தாலாட்டுத் தட்டுக்கள் அல்ல.சிறிதே சீண்டிப்பார்க்கும் செல்லத் தட்டுக்கள்.

    ல்லவி முடியவும் வரும் இசை சிதாரில் ஆரம்பித்துப் பின் வயலின்களைப் பாடவிட்டுப் பக்கவாத்தியமாகிவிடுகின்றது.
  சரணத்தில்
   ‘ஆகாய சூரியன் மேற்கினில் சாய...
    ஏகாந்த வேளையில் மோகமுள் பாய
    தூண்டிலில் புழுவாக திருமேனி வாட
    தாமதம் இனியேனோ இருமேனி கூ’ இதுவரையில் செல்லத்தட்டு தட்டிய தபேலா
அந்திவரும் தென்றல் சுடும் ஓர் விரகம் விரகம் எழும்’எனும் வரிகளில் வேக,விவேகமாக ரிதம் மாறி,  நம்மை ஒரு விதமாக உருட்டிச் செல்லும்.
இரண்டாவது பின்னிசையின் போது தபேலா மவுனமாக, வந்து விடுவார்கள் பிரதான வயலின் பாடகர்கள்.சிறிது தாபத்தை அது கொடுக்க புல்லாங்குழல் வந்து கசியவிடும் சோகம் இனிது.ஜானகியின் பங்களிப்பைப் பற்றி நானென்ன பெரிதாகச் சொல்லப் போகிறேன். அதெல்லாம் அனுபவிக்கணும்.


   கிளாசிக்கலோ, வெஸ்டர்னோ எதுவும் தெரியாத என்னைப் போன்ற பல பாமரர்களுக்கான இசைதான் இது.

   
            சைக்கான வித்து நல்வித்து. தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’.
அதிலிருந்து சில பகுதிகள் இப்பாடல் காட்சியோடு தொடர்புடையவை கீழே சிறிது தந்திருக்கிறேன்.

          "அங்கே யாருமில்லை” என்ற அர்த்தத்தில் அவள் உதடு பிதுங்கிற்று.முகம் பளபளவென்றிருந்தது.காதில் பூரித்த வைரத்தோடு கன்னத்தில் வீசிக் கொட்டிற்று.காதின் முன் மயிர் சற்று அதிகமாகவே கீழே இறங்கியிருந்தது, முகத்தின் களையை இன்னும் உயர்த்திவிட்டது. அந்த முகம் அழகி என்று சொல்வதே, இந்த இறக்கத்தால்தானோ என்னவோ! முகத்தில் ரோஜா நிறப் பவுடர் குளுகுளுவென்று கமழ்ந்தது. தலையில் வைத்திருந்த பூவின் ஓரம் வெள்ளையாக எடுப்பாகத் தெரிந்தது. பளீர் என்று மஞ்சள் குங்குமம். மூக்கில் ஒரு வைரப்பொட்டு நீலமாக இறைத்தது...... தங்கம்மா...


   

"நீ சோதனை செய்தாய் நான் தோற்றுவிட்டேன்., என்னைச் சோதனை செய்ததில் உனக்கென்ன பெருமை? சிங்கம் பூனையோடு பலப்பரீட்சை செய்வதுபோல்தான் இது. ஆனால்...அதாவது... என்ன.  இனிமேல் நான் அஜாக்ரதையாக இருக்க மாட்டேன். நேற்ற் இரவைப் போல் வெளிக்கதவைத் தாழிட்டு விடுவேன். மதில் காவலா, மனம் காவலா என்று சிரிப்பதுண்டு சிலர். ஆனால் உள்கதவும் திறக்காது என்பதற்கு அடையாளம்தான் வெளிக்கதவு மூடியிருப்பதும், வெளிக்கதவு மூடியிருந்தால் உள்கதவு திறவாது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.”.........பாபு



“நேத்தி ராத்திரி நான் வந்து ஜன்னலில் நின்று தொண்டை வறளக் கத்தினேன். கதவைத் தட்டினேன்.நீங்கள் ஒன்றுக்கும் எழுந்திருக்கவில்லை. எப்படித்தான் இவருக்குத் தூக்கம் வருகிறதோ என்று நினைச்சுண்டே நின்னேன்.எனக்குத் தூக்கம் வரவில்லையே! எனக்குக் கோபம் கோபமாக வந்தது. ஒரு பொம்மனாட்டி மானத்தை விட்டு விட்டு எத்தனை நாழி ஒண்டியாக நின்னு கத்துகிறது.நீங்கள் கதவைச் சாத்திண்டு தூங்கினதுமே எனக்குப் பயமாயிருந்தது.உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லையோன்னுதான் பயமாயிருக்கு....................”.........தங்கம்மாவின் கடிதம்...


  இப்போது பாடல் கேட்டு, முள்ளை ஏற்றிக் கொள்ளுங்கள்.

12 comments:

  1. சூப்பர் சிங்கர் நான் பார்க்கும் தொடர்.நானும் கவனித்தேன்.
    அண்ணா....உங்கள் விமர்சனம் இன்னொருமுறை நிகழ்ச்சியைப் பார்க்கத் தூண்டுகிறது.

    மோகமுள் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.அற்புதமான தெரிவு.நீங்கள் தந்த வரிகள் பாடலை அழகுபடுத்துகிறது.அழகு நன்றி.

    ReplyDelete
  2. முதல் முறை கேட்கிறேன்.

    நன்றாக இருக்கிறது அண்ணா.

    ReplyDelete
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    ReplyDelete
  4. நன்றாக இருக்கிறது அண்ணா(ச்சி).
    அருமையானப் பாட்டு.வாலி?

    படத்தின் ஓபனிங் ஷாட்டே அருமை.ஆரம்ப புல்லாங்குழலோடு ஊஞ்சல் ஆட்டம் அருமை.

    ////ரவி சார் தெளிவு படுத்துவார் என நம்புகிறேன்//

    எனக்கும் எல்லாம் கேள்வி ஞானம்தான்(ணா).இது நம்ம கத ”தல” தி.ஜா படம்.இவரும் King of Romantic feelingsஎழுத்தில்.
    இசையில் ராஜா.

    //ஷண்முகப்ரியா ராகமாம்// இது

    கடவுள் முருகனின் பிரியமான ராகம் என்று சொல்லுவார்கள். இது both பக்தி அண்ட் உருக்கம்/விரகதாபம் ஹாண்டில் செய்திருக்கிறார்கள்.

    “முத்தைத் தரு பத்தித் திரு நகை” ”மறைந்திருந்தே பார்க்கும்”பாட்டு ”தம்தனம் தனனம்”இதே ராகம்தான்.

    ராஜா “வெங்காய சாம்பாரும் வேகாத சோறும்” இதேதான்.

    நன்றி.

    ReplyDelete
  5. மோகமுள் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.அற்புதமான தெரிவு.

    ReplyDelete
  6. அண்ணா மிக அருமையான பதிவு அண்ணா ;))

    ReplyDelete
  7. முதன்முதல் மோகமுள் படித்தது எனக்கு இன்னும் மனதில் அச்சுப்போல் பதிந்திருக்கின்றது. விடியவிடியப் படித்து முடித்து கிட்டத்தட்ட ஒருவாரம் பைத்தியம்போல் சுற்றிக்கொண்டிருந்தேன்.

    நினைவுகளை மீண்டும் தூசு தட்டி இருக்கின்றீர்கள்.

    அற்புதமான பாடல்! அழகான பகிர்வு!

    ReplyDelete
  8. @ஹேமா...
    நீங்களும் சூப்பர் சிங்கர் பார்ப்பீர்களா? நல்லது...
    நன்றி...

    @மகேஷ்...
    நன்றி.. நீ கேட்க வேண்டியது நிறைய உள்ளது..கேட்டால் சொல்கிறேன்

    ReplyDelete
  9. @ரவிஷங்கர்..
    நன்றி சார்..
    ‘வெங்காய சாம்பாரும்’ இதே ராகமா?
    கேட்டுப் பார்க்கிறேன்...
    தி.ஜா... தி.ஜாதான்...
    அவர் நாவல்களில் சத்தங்கள் பற்றிய விவரணை அருமையாக இருக்கும்.உங்கள் வழிகாட்டுதலில்தான் ‘அம்மா வந்தாள்’ படித்தேன்..:-)நன்றி

    @சே.குமார்...
    வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  10. @கோபிநாத்..
    மாப்பி என்னய்யா கிண்டல் பண்ற மாதிரிப் பின்னூட்டம். அப்ப பதிவு உனக்குப் பிடிக்கலை போல... :-(
    நன்றி...

    @விந்தைமனிதன்...
    நீங்கள் ‘காமம்’ பற்றி எழுதியது பார்க்காமலேயே இதை எழுதிவிட்டேன்.. :-)
    வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி,,,

    ReplyDelete
  11. நான் மோகமுள் கதைதான் படித்திருக்கேன், படமாக பார்க்கவில்லை. பாடல் கூட இப்பொழுதுதான் கேட்கிறேன்.(ஆனால் கற்பனையில் இருந்த தங்கம்மா வேறு) பாடல் இனிமை.

    ReplyDelete
  12. @தர்ஷினி...
    நன்றி தர்ஷினி...
    படம் அவ்வளவாக இல்லை...
    தங்கம்மாள் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காதது வருத்தமே...
    ஆனால் படம் பார்த்துவிட்டுப் பின் கதை படித்தேன். எனக்கு கேரக்டர் செலக்‌ஷன் எல்லாம் பொருத்தமாய்த் தெரிந்தது.,..
    விவேக்கின் பாத்திரம் தவிர(ராஜம்)...
    அதுவும் மராத்தி ஐயர் பாத்திரத்தில் சங்கீதா, அர்ச்சனா ஜோக்லேக்கர் பிரமாதம் என்றே சொல்வேன் நான்...

    ReplyDelete