சரி ரொம்ப நாள் கழிச்சு இந்தோர்ல தமிழ் படம் போடுறாங்கன்னு (போன வருஷம் சிவாஜி போட்டாங்களாம்) தடபுடலா இங்க இருக்கிற நம்ம தங்க தமிழர்களை எல்லாம் பி.வி.ஆர் காம்ப்ளெக்ஸ் கூட்டிட்டி போனா (டிக்கெட் லாம் அவங்க அவங்க பொறுப்புதான்) ,அங்க போனப்புரம்தான் தெரிஞ்சது தசாவதாரம் ஹிந்தில தான் போட்டிருக்காங்களாம்..
சரி.. நமக்கு தெரிஞ்ச 'ஆவோ' ,'ஜாவோ' ஹிந்திய வைச்சுக்கிட்டு அளம்பிரலாம்னு பசங்களை டிக்கெட் எடுக்க அனுப்பிச்சுட்டு ,நான் போஸ்டர் பார்க்க போனேன். (என்னதான் தியேட்டர்ல முழு படமும் பார்க்க போரோம்னாலும் , சுவர் ஒட்டில படம் பார்த்து கதைய அனுமாநிக்கிரதுல தமிழன மிஞ்ச முடியாது..)
பார்த்தா போஸ்டர்ல அசினையும் காணாம்,மல்லிகாவையும் காணாம். வேற நிறைய சாமி படமா இருந்தது..ராமர்,க்ரிஷ்ணர்ந்னு ..சரி அதெல்லாம் நம்ம கமல்தான் அப்படி வேஷம் கட்டிருக்காருன்னு நம்பி.., அடுத்தடுத்த போஸ்டரா பார்த்திட்டிருந்தேன் .
ஒரு வழியா ரெண்டு மூணு இடத்துல மல்லிகா ஷெராவத் படத்தை பார்த்தேன்.. சரி நம்ம கமல் அசினை டம்மி ஆக்கிட்டு ,மல்லிகா அக்காவுக்கு முக்கியத்துவம் குடுத்துட்டாருன்னு நினைச்சுக்கிட்டேன்..
டிக்கெட் எடுக்க போன பசங்க ரொம்ப நேரமா வரலை.. என்ன கொடுமைடா இது ? இங்க தமிழ் படத்துக்கு கூடவா இவ்வளவு கூட்டம்ன்னு நினைச்சுகிட்டிருந்த நேரம் , டிக்கெட் எடுக்க போன நம்ம தங்கங்கள் எல்லாம் கொஞ்சம் சோகமா வந்தானுங்க..
சரி..கமல் படம்ன்றதால இங்கயும் அரங்கம் நிறைஞ்ச்டுச்சி போல நாளைக்கு பார்க்கலாம்ன்னு பசங்களை தேத்த போனேன்..'விடுற மாப்ளை ,தமிழ் படமா இருந்தாலும்,தலைவர் படம் இல்லையா..அதான் ஹவுஸ் புல் ஆயிடுச்சு..புக் பண்ணிட்டு வரலாம்' ன்னு சொல்லி முடிக்கலை..
அதுக்குள்ள அவன் ரெண்டு நல்ல வார்த்தைய எடுத்துவிட்டான் (தனிக்கைகுரியது)
' இது கமலோட தசாவதாரம் இல்ல. கிருஷ்ணரோட தச அவதாரங்கள் ..ஹிந்தி அனிமேஷன் மூவி .இதோட பேரும் தசாவதார். '
வாயில பட்ட ஜிலேபி ,காலில விழுந்த மாதிரி ஆச்சு.
'சரி வாங்கடா , படத்துக்கு வேணாம் ..சும்மா சுத்தி பார்க்கலாம்..ஏகப்பட்ட மல்லிகாவும் ,அசினும் நேராவே பார்க்கலாம்ன்னு ' கூப்ட்டேன்..
'இல்லைடா.. வந்தது வந்திட்டோம் . இதுக்கே டிக்கெட் எடுத்திட்டேன் வாடா படம் பார்க்கலாம்' ன்னான்.
'அடப்பாவி.. கேயாரெஸ் பார்க்க வேண்டிய படமெல்லாம் இந்த சின்ன வயசுல நமக்கு எதுக்கு?' ன்னு சொல்லி நூறு ரூபா போனாலும் பரவாயில்லைன்னு ,ஓடி வந்தாச்சு..
நான் பார்த்த மல்லிகா போஸ்டர் எல்லாம் ஹிந்தி பட போஸ்டர்.
எனக்கு ஒரு டவுட்டு .. எப்படி இந்த மாதிரி படத்தை தயாரா வச்சுட்டு , நம்ம படம் வெளி ஆகுற அதே நாள்ல ,அதே பேர்ல வெளி இட்டாங்க ..? ரூம் போட்டு யோசிக்கிரதுன்னா இதானா..?
தசாவதாரம் போலி அல்ல.. போலி தசாவதாரம் தான் நான் சொல்ல வந்தது ..
(கடைசில பிட்டு படம் பார்க்க போயி ,ரிஷானு போட்ட மசாலா படம் பார்த்த மாதிரி ஆயிடுச்சு)
சோதனை பின்னூட்டம்தான் .. மற்றபடி பின்னூட்ட கயமை எல்லாம் கிடையாது..
ReplyDeleteby thamizhparavai
100/= கொடுத்து சினிமா தியேட்டர்ல போய் போஸ்டர் மட்டுமே பார்த்துட்டு வந்த முதல் ஆள் நீங்கதான் அண்ணாச்சி.. :P
ReplyDeleteஆமா..தமிழ்ப்பறவை இப்போ எந்த ஊர்ல பறந்திட்டிருக்கு?:P
//(கடைசில பிட்டு படம் பார்க்க போயி ,ரிஷானு போட்ட மசாலா படம் பார்த்த மாதிரி ஆயிடுச்சு)//
ReplyDeleteஇதுல உள்குத்து,பின்குத்து ஏதும் இல்லையே?
//'அடப்பாவி.. கேயாரெஸ் பார்க்க வேண்டிய படமெல்லாம் இந்த சின்ன வயசுல நமக்கு எதுக்கு?'//
ReplyDeleteகையைக் கொடுங்க அண்ணாச்சி..
அதானே நமக்கு எதுக்கு? :P
வருகைக்கு நன்றி ரிஷான் அவர்களே..
ReplyDelete/100/= கொடுத்து சினிமா தியேட்டர்ல போய் போஸ்டர் மட்டுமே பார்த்துட்டு வந்த முதல் ஆள் நீங்கதான் அண்ணாச்சி.. :P/
கலையுலக வரலாற்றில இதெல்லாம் ஜகஜம்..
இப்போ பறவை இந்தோர் ல (மத்திய பிரதேசம்) இருக்கு..
குஜராத்ல கூட தமிழ்ல தசாவதாரம் வருது.. இங்க இந்தியில கூட உட மாட்டேன்றானுங்க..
/இதுல உள்குத்து,பின்குத்து ஏதும் இல்லையே?/அப்படி எல்லாம் எதுவும் இல்லை அண்ணே..உங்க பேரப்போட்டா ஒரு வெளம்பரம்ன்னுதான்..:-)
ReplyDelete//'அடப்பாவி.. கேயாரெஸ் பார்க்க வேண்டிய படமெல்லாம் இந்த சின்ன வயசுல நமக்கு எதுக்கு?'//
ReplyDelete//கையைக் கொடுங்க அண்ணாச்சி..
அதானே நமக்கு எதுக்கு? :P//
அதை பார்த்துட்டாரா என்னன்னு தெரியல.. கூடிய சீக்கிரம் விமர்சனம் போடுவாருன்னு எதிர்பார்க்கலாம்..( இன்னும் சிவலிங்க பதிவே முடிஞ்சுதா இல்லையான்னு தெரியல..)
கேயாரெஸ் அண்ணாச்சிதான் பதிலிறுக்கணும்..
//அண்ணே..உங்க பேரப்போட்டா ஒரு வெளம்பரம்ன்னுதான்..:-)//
ReplyDeleteஎன்னது? என் பேரப் போட்டா விளம்பரமாக நான் என்ன நமீதாவா?குஷ்பூவா?
சரி சரி..
போடுறதப் போட்டுட்டீக..
விளம்பரப்படுத்தினதுக்கு இப்போ காசை எடுத்துவைங்க :P
//அடப்பாவி.. கேயாரெஸ் பார்க்க வேண்டிய படமெல்லாம் இந்த சின்ன வயசுல நமக்கு எதுக்கு?' ன்னு சொல்லி நூறு ரூபா போனாலும் பரவாயில்லைன்னு ,ஓடி வந்தாச்சு..//
ReplyDeleteஅடப்பாவிங்களா
கேயாரெஸ் பாக்க வேண்டிய படமா அந்த இந்தி தசாவ்தார்? என்ன கொடுமை ரிசானு!
இப்படி எல்லாம் வம்பு பண்ணினதால தான் உங்களுக்கு டிக்கெட் கெடைக்கல!
ஆனாப் பாருங்க அதுக்குள்ளாற கேயாரெஸ் ரெண்டு தபா மல்லிகாவின் தசாவதாரத்தைப் பாத்திட்டு வந்துட்டான்! மூனாவது இலவச டிக்கெட் வேற வந்துரிச்சி!
ஹா ஹா ஹா!
acho
ReplyDeleteintha word verification-ai eduthurunga tamizh paravai annachi! illeenaa rishan-ai vittu paravai vettai aada cholla vendiyathu thaan!
//சரி சரி..
ReplyDeleteபோடுறதப் போட்டுட்டீக..
விளம்பரப்படுத்தினதுக்கு இப்போ காசை எடுத்துவைங்க :P//
தமிழ்பறவை அண்ணாச்சி மாதிரி நல்லவங்க கிட்ட நமீதா, குஷ்பூ எல்லாம் வெளம்பரத்துக்கு காசு வாங்குறதில்லையாம்! மொதல்ல அதைத் தெரிஞ்சிக்கோ ரிசானு! :-)
தமிழ்ப்பறவை அண்ணாச்சி
ReplyDeleteஇப்போ இந்த word verification-ai தூக்கல, உங்கள தூக்கிருவோம்! சொல்லிட்டேன் ஆமா! பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு!
....பாவனா வீடு வரை! :-)
வருகைக்கு நன்றி கேயாரெஸ் அண்ணாச்சி..இப்பொ 'வார்த்தை சோதிப்பி' இருக்காதுன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஉதவிக்கு நன்றி...
//தமிழ்ப்பறவை அண்ணாச்சி
ReplyDeleteஇப்போ இந்த word verification-ai தூக்கல, உங்கள தூக்கிருவோம்! சொல்லிட்டேன் ஆமா!
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு!
....பாவனா வீடு வரை! :-)//
இத நானே ஜொல்லனும்னு நெனச்சேன்ன்..நீங்க ஜொள்ளிட்டீக கேயாரெஸ் அங்கிள்.
ஐயையோ நான் பாவனாக்காவைச் சொல்லல..வேர்ட் வெரிபிகேஷனை சொன்னேன். :P
அப்புறம் பாவனா அக்கா போய் இப்போ மீரா நந்தன்னு ஓரு புது அக்கா பீல்டுக்கு வந்திருக்கிறதா 'கானா பிரபா'சித்தப்பா ஜொல்லிட்டே இருந்தார்.நெசம்தானா அது?
still 'word verification' is there,please guide me to remove that one.. இதுக்கெல்லாம் பாவனா வீடு வரைக்கும் போக வேணாம் கேயாரெஸ் அண்ணாச்சி.. பாவம் .. தேவதைகளை தூக்கத்தில் துன்புறுத்தக்கூடாது...
ReplyDelete//அப்புறம் பாவனா அக்கா போய் இப்போ மீரா நந்தன்னு ஓரு புது அக்கா பீல்டுக்கு வந்திருக்கிறதா 'கானா பிரபா'சித்தப்பா ஜொல்லிட்டே இருந்தார்.நெசம்தானா அது?//
ReplyDeleteஅப்பிடியா.. நம்ம கானா ப்ரபா இல்லை மங்களூர் சிவா கிட்ட சொல்லி அந்த மீராக்கா போட்டா ஒண்ண அடுத்த சங்க பதிவுல போடுங்க.. இல்லை நாங்க எங்க பதிவுல போட்ருவோம்...
/
ReplyDeleteகடைசில பிட்டு படம் பார்க்க போயி ,ரிஷானு போட்ட மசாலா படம் பார்த்த மாதிரி ஆயிடுச்ச
/
கலக்கல் பினிஷிங்!!!!
ஐ லைக் இட் வெர்ர்ர்ர்ரி மச்!!
:))))
/
ReplyDeleteதமிழ்ப்பறவை said...
இதுக்கெல்லாம் பாவனா வீடு வரைக்கும் போக வேணாம் கேயாரெஸ் அண்ணாச்சி.. பாவம் .. தேவதைகளை தூக்கத்தில் துன்புறுத்தக்கூடாது...
/
கொக்க மக்கா எங்களை மாதிரியே நல்லவனாய்யா நீயும்!?!?!?!?
:)))))))
/
ReplyDeleteதமிழ்ப்பறவை said...
//அப்புறம் பாவனா அக்கா போய் இப்போ மீரா நந்தன்னு ஓரு புது அக்கா பீல்டுக்கு வந்திருக்கிறதா 'கானா பிரபா'சித்தப்பா ஜொல்லிட்டே இருந்தார்.நெசம்தானா அது?//
அப்பிடியா.. நம்ம கானா ப்ரபா இல்லை மங்களூர் சிவா கிட்ட சொல்லி அந்த மீராக்கா போட்டா ஒண்ண அடுத்த சங்க பதிவுல போடுங்க.. இல்லை நாங்க எங்க பதிவுல போட்ருவோம்...
/
அவ்வ்வ்வ்வ்வ்வ்
நான் இங்க வர்றதுக்கு முன்னாடியே என் பேர் வந்திருச்சா?????
(இந்த அளவுக்கு ரிப்பேர் ஆகிக்கெடக்கா )
:)))))))
வருக.. வருக... தமிழ்ப் பதிவுலகத்திற்கு...!
ReplyDeleteரொம்ப பாவம் நீங்க. :)
ReplyDeleteஅசத்தல்ங்க :)
ReplyDelete