Tuesday, June 17, 2008

தமிழ் படம் பார்க்க மூளை தேவையா..?

இது தாமதமான பதிவுதான் ..ஆனா ரொம்ப தாமதம் இல்லைன்னு நான் நினைக்கிறேன்.இப்போதான் அந்த கண்றாவி படத்தை பார்க்க வேண்டியதாச்சு. 'யாரடி நீ மோகினி' தான் அது.இது போல அபத்தக்குவியலை சமீபத்தில் நான் பார்த்ததில்லை. பட்டியலிடுகிறேன் அபத்தங்களை..
  1. முதல்ல கம்ப்யுட்டர் நிறுவன ஆள் எடுக்கும் காட்சி. குழு விவாதத்தில தனுஷ் பொருளாதாரத்தை பத்தி பொளந்து கட்டுவாரு தமிழ்லயே..(நல்லவேளை யுவன் பின்னணி இசையால பேச்சை அமுக்கி இருப்பாரு)
  2. எந்த மாங்கா மடையனும் தன் பையன் காதலுக்காக இடம்,பொருள்,ஏவல் தெரியாம இப்படி எல்லார் முன்னாடியும் காதல் பிச்சை கேட்க மாட்டான்.ஆனா மெட்ரோ சிட்டியில வேலை பார்க்கிற ஒரு நடுத்தரக் குடும்பத்து அப்பா(ரகுவரன்) ,இவ்வளவு கேவலமா நயன்தாரா கிட்ட கெஞ்சுவாரு..(இயக்குனர் குழு கதை விவாதத்தில என்னதான் ஆணி புடுங்கிரான்களோ..?)
  3. நயன்தாரா குடும்பத்தை பத்தி நாம தனியா பேச வேண்டியதில்லை . தனுஷ் சொல்லிருவாரு அது ஒரு 'லூசு குடும்பம்' ன்னு ..
  4. தனுஷும்,அப்பா ரகுவரனும் பேசிக்கிற காட்சிகள் ரொம்ப அன்னியோன்னியம் ..(இதை விட 'ம..','ங்..' அப்படின்னு பேசி இருந்தா ரொம்ப எதார்த்தமா இருந்திருக்கும்..ஆமா தனுஷ் வீட்டுல எப்பிடி..?!)
  5. நயனோட கதா பாத்திரம் அருமை..?! தனுஷை காதலிக்கிறாங்களா இல்லை சைட் மட்டும் அடிக்கிறாங்களா இல்லை டெஸ்ட் பண்ணுறாங்களா அட சாமி ஒரு எழவும் புரியல்லை. (இதோட தெலுங்கு மூலம் இவ்வளவு மோசமாவா இருந்தது.? நான் பார்க்கலை . யாராவது பார்த்தவங்க சொல்லுங்க..)
  6. தன் மனைவியா வரப் போகும் நயனை வர்ணிச்சு பாட ,தன்னோட நண்பனை கூப்பிடுவாரு பாருங்க..இதான்யா கற்பனை ..கண்றாவிடா ...(செருப்பை கழட்டி அடிக்கலாம்ன்னு தோனுச்சு..செல்வா வா இப்படில்லாம் கதை பண்ணாரு..?!)
  7. பாம்பு காமெடி(..?)..யோவ் இயக்குனரே இதை பார்த்து உங்க வீட்டு குழந்தை கூட சிரிக்காது..
  8. நயனோட தங்கை தன்னோட காதலை அக்காகிட்ட சொல்லும்போது நயன் கோபப்படுறது கூட அவளோட அறியா வயசு காதலை நினைச்சு இல்லை..தன்னை சைட் அடிச்ச தனுஷை ,தங்கச்சி ரூட் விட்டதால ஏற்பட்ட கோபம்தான் அது..நல்ல அக்கா ,நல்ல தங்கை..
  9. தன்னோட தங்கச்சி சின்ன பொண்ணு ..அதுனால அவளுக்காக அக்காவே முதலிரவு சாங் கற்பனை பண்ணுவாங்க பாருங்க..சூப்பரப்பு..
  10. கடைசி காட்சில தனுஷ்,கார்த்திக்,நயன் மூணு பேரும் தாத்தாகிட்ட மாறி மாறி "நான்தான் தப்பு பண்ணினேன் .என்னை கம்பால அடிங்க.."ன்னு சண்டை போடுறப்போ , 'இந்தப்படத்தை இவ்வளவு நேரம் பார்த்தது என் தப்பு..என்னை முதல்ல கம்பால அடிங்க..'ன்னு என்னை கதற வைச்சிட்டாங்க..
  11. கல்யாண மேடையில கார்த்திக் எப்படி நெளிஞ்சுக்கிட்டு உக்கார்ந்திருப்பாரோ ,அப்படி உக்கார்ந்துதான் இந்த படத்தை பார்த்தேன்..(ஏன் பார்த்தான்னு கேட்கிறீங்களா ..பக்கத்துல என் நண்பன் ஒருத்தன்,தனுஷ் வெறியன் உணர்ச்சிவசப்பட்டு பார்த்துகிட்டிருந்தான் ..இதுல அப்பா செண்டிமெண்ட் சூப்பர்ன்னு டைலாக் வேற..)

சரி படத்துல நல்ல விஷயமே இல்லையான்னு கேட்கிறீங்களா ..எனக்கு பிடிச்ச நல்லவைகள்..

  1. குட்டி பொண்ணு சரண்யா (ஏற்கெனவே ஒ.நா.ஒ.க பாட்டில இருந்தே எனக்கு பிடிக்கும்ன்னு சொல்ல தேவை இல்லை)
  2. தனுஷின் நண்பன் கார்த்திக்
  3. ஆங்காங்கே ஆங்கில வரிகளை தவிர்த்து பார்த்தால் பாடலும்,இசையும்

இப்போ சொல்லுங்க தமிழ் படம் பார்க்க மூளை தேவையா இல்லையா..?(இதுல 'அஞ்சாதே','சந்தோஷ் சுப்பிரமணியம்' படங்கள் சேர்த்தி இல்லை)..

இது என்னோட தமிழ்மண(ன) நுழைவு பதிவு..குறைகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வேன் வரும் பதிவுகளில்..

15 comments:

  1. /
    'இந்தப்படத்தை இவ்வளவு நேரம் பார்த்தது என் தப்பு..என்னை முதல்ல கம்பால அடிங்க..'ன்னு என்னை கதற வைச்சிட்டாங்க..
    /

    நல்லவேளை இன்னும் இந்த தப்ப பண்னலை

    :)))

    ReplyDelete
  2. //இது என்னோட தமிழ்மன நுழைவு பதிவு//

    ஆரம்பமே அமர்க்களமா இருக்கே :-))

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மணிப்பையல்June 20, 2008 at 8:39 AM

    பெண்கள் ஏன் தெரியுமா தங்கள் அறிவை விட மேக்கப்புக்கு அதிக முக்கியத்வம் தர்ராங்க? ஆண்களில குறுடர்களைவிட மடையர்களே அதிகம்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். தமிழ் சினிமா உலகமும் தமிழ் சமுதாயமும் இந்த நிலமையில்தான் ஓடிட்டு இருக்குங்க. பாவம் நீங்க!
    :-)

    ReplyDelete
  4. முதல் பதிவுல இவ்வளவு கோபம் கூடாது தம்பி, பின்ன மொத பதிவு எப்படி போடனும்னா? (உம் )என் முதல் பதிவு..

    ReplyDelete
  5. ///
    'இந்தப்படத்தை இவ்வளவு நேரம் பார்த்தது என் தப்பு..என்னை முதல்ல கம்பால அடிங்க..'ன்னு என்னை கதற வைச்சிட்டாங்க..
    /

    நல்லவேளை இன்னும் இந்த தப்ப பண்னலை//

    தமிழ் படங்களை பொறுத்தவரை நான் தப்பே பண்ணுவதில்லை

    வால்பையன்

    ReplyDelete
  6. மங்களூர் சிவா,கிரி,மணிப்பையல்,ஜாக்கி சேகர் மற்றும் சங்க சிங்கங்கள் ரிஷான்,கேயாரெஸ் ...அனைவரின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி..

    //நல்லவேளை இன்னும் இந்த தப்ப பண்னலை//
    நீங்க சந்துல சிந்து பாடுற ஆளுன்னு தெரியும்ல எங்களுக்கு..

    //இது என்னோட தமிழ்மன நுழைவு பதிவு//

    அண்ணே அது தவறுதலா அடிச்ச வரிகள்.. ஆனா நீங்க சொன்னப்புறம்தான் தெரியுது.. இதுதான் சரின்னு.. நன்றி..

    //தமிழ் சினிமா உலகமும் தமிழ் சமுதாயமும் இந்த நிலமையில்தான் ஓடிட்டு இருக்குங்க.//
    மணியா சொன்னீங்க.. ஆனா இது ரொம்ப ஆழத்தோட இருக்கு..இது பத்தி நாம பின்னால விவாதிக்கலாம்..

    //முதல் பதிவுல இவ்வளவு கோபம் கூடாது தம்பி, பின்ன மொத பதிவு எப்படி போடனும்னா? (உம் )என் முதல் பதிவு..//
    அண்ணே இன்னும் உங்க பதிவு பார்க்கலை.. பார்த்துட்டு வந்து தெரிஞ்சுக்கிறேன்..
    இப்போதான் சங்கத்துல உங்க சார்பா ஒரு கண்டன (எழுத்து) பேரணி நடத்திட்டு வந்துருக்கேன்...

    ReplyDelete
  7. //தமிழ்மன நுழைவு//

    மக்கள் மனங்களில் இடம்பிடிக்க மேலே இருக்கும் எழுத்துப் பிழையை திருத்துங்க தல ;)

    நல்லாத்தான் பிரிச்சு மேஞ்சிருக்கீங்கப்பு

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி வால் பையன்..

    தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி ப்ரபா அண்ணாச்சி...

    ReplyDelete
  9. //தமிழ்மன நுழைவு//

    திருத்திட்டேன் அண்ணாச்சி..முன்னைக்கு இப்போ பரவாயில்லைன்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  10. //தனுஷை காதலிக்கிறாங்களா இல்லை சைட் மட்டும் அடிக்கிறாங்களா இல்லை டெஸ்ட் பண்ணுறாங்களா அட சாமி ஒரு எழவும் புரியல்லை.//

    சாமி.. எல்லா பொண்ணுங்களும் அப்படித்தான்!!!!!

    ReplyDelete
  11. //'இந்தப்படத்தை இவ்வளவு நேரம் பார்த்தது என் தப்பு..என்னை முதல்ல கம்பால அடிங்க..'ன்னு என்னை கதற வைச்சிட்டாங்க//

    :-))))))

    ReplyDelete
  12. //இசையும்இப்போ சொல்லுங்க தமிழ் படம் பார்க்க மூளை தேவையா இல்லையா..?//

    இல்லை.. இல்லவேயில்லை...

    ReplyDelete
  13. வாங்க ச்சின்னப்பையன்...வ‌ருகைக்கு ந‌ன்றி..
    //சாமி.. எல்லா பொண்ணுங்களும் அப்படித்தான்!!!!!
    //
    போக‌ப்போக‌த்தெரியும்...அவ‌ள் ஆப்பு வைப்ப‌து புரியும்...(சொன்ன‌து: யாரோ)

    ReplyDelete
  14. ஏங்க இப்படி பொய் சொல்லுரிங்க.. நிங்க படத்த ரசிச்சு பாக்கலைனா இப்படி ஒரு விமர்சனம் எழுத முடியுமா

    ReplyDelete
  15. varukaikkum, karuththukkum nanri..
    //ஏங்க இப்படி பொய் சொல்லுரிங்க.. நிங்க படத்த ரசிச்சு பாக்கலைனா இப்படி ஒரு விமர்சனம் எழுத முடியுமா//
    hi..hi..hi..rasichchu paartheen nayan matrum saranyaavai..(escape...:-) :-)

    ReplyDelete