Sunday, August 23, 2009

நினைத்தாலே இனிக்கும்….-என் பார்வையில்…

        னது விருப்ப இசை அமைப்பாளர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். ’சுக்ரன்’,’டிஷ்யூம்’,’காதலில் விழுந்தேன்’ பாடல்களில் பெரும்பான்மை எனக்குப் பிடித்திருந்தது.இவரால் நல்ல மென்மெட்டுக்களைத் தரமுடியும்.’இருவர் மட்டும்’ என ஒரு (பப்)படம் வந்தது. அதில் கூட  இரண்டு அழகான மென்பாடல்கள்(‘ரோஜா மலரின்’,’அழகா அழகா’ ) தந்திருப்பார். ஆனாலும் இவர் ‘நாக்க மூக்கி’யோ, ஆத்திச்சூடியோதான் பிரபலமாகிறார்.

      மலையாளத்தில் ஓரளவுக்கு வல்லிய ஹிட்டடித்த ‘க்ளாஸ்மேட்ஸ்’ இன் தமிழ் வடிவமான ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் மென் மற்றும் குத்துப்பாடல்களில் கலந்து கட்டி அடித்திருக்கிறார். மூலப்படத்தின் ஹிட் பாடலான ‘எண்ட கல்பிலே’ யின் தமிழ் வடிவம் எது எனப் பிடிபடவில்லை எனக்கு. இருப்பினும் தனித்தன்மையோடு பாடல்களில், வரிகள் சுதந்திரமாகச் சுவாசிக்கும் வகையில் இசையின் கதவுகளை அகலத் திறந்து வைத்திருக்கிறார்.

Ninaithale Inikkum

       ழைநேரத் தேனீராய் ருசிக்கிறது ’அழகாய்ப் பூக்குதே’ பாடல்.பியானோவில் மிதமாக ஆரம்பிக்கும்போதே புரிந்து விடுகிறது பாடலின் போக்கு. இதமான காதலிசை.ஜானகி ஐயர்,பிரசன்னா குரல்களின் குழைவும்,இடையிசைகளில் ததும்பாமல் அளவாய் நிரம்பிச்செல்லும் வாத்தியங்களும் சேர்ந்து அழகாய்ப் பூத்த பாடல்.முதல் கேட்பிலேயே பிடித்துப் போய்,எனது விருப்பப்பட்டியலில்(பிளே லிஸ்ட்டில்) எளிதாக இடம் பிடித்து விட்டது.பாடல் வரிகளும் இளமையை இதமாகச் சொல்லிப்போகின்றது. கலைக்குமாருக்கு வாழ்த்துக்கள்.ஆண்குரல் அள்ளிச்செல்கிறது.

”அழகாய் பூக்குதே…சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே”

  ‘நண்பனைப் பார்த்த தேதி மட்டும்’ நட்பைப்பற்றி (அண்ணாமலை-பாடல்) மேற்கத்திய சத்தங்களுக்கு இடையில் சொல்லும் பாடல்.(ஆரம்ப ஹம்மிங்கைக் கேட்டுவிட்டு எங்கே ‘கண்ணுக்கு மையழகு’ என வார்த்தைகள் வந்து விடுமோ எனப் பயந்துவிட்டேன். .)கேட்கப் பிடிக்கிறது. கச்சித இசைக்கோர்வை.பென்னி தயாளின் குரலும் இதம்.

’மழை தூங்கும் வெயில் நேரம் அதுபோலே மனது…

மனம் போலே தடுமாறும் வயது…’ பளிச் வரிகள்.

   ’அல்லா’,’பியா பியா’ இரண்டு பாடல்களும் அக்மார்க் விஜய் ஆண்டனி ரகக் குத்துக்கள். முன்னதில் பதமாகக்குத்தியவர், பின்னதில் காதைப் பதமாக்கக் குத்தியிருக்கிறார்.’ஆத்திச்சூடியை’ நினைவிற்குக் கொண்டு வரும் பாடலிது.இம்மாதிரிப் பாடல்களுக்கு எப்படி இருக்குமோ அப்படியே இருக்கும் வரிகள்.ஆராயாமல் அனுபவிக்கலாம்.பாடலை எழுதிய அண்ணாமலை இன்னொரு பேரரசாக உருவாகக்கூடிய அபாய அறிகுறிகள் தெரிகின்றன.குத்தியவர் மட்டுமல்ல கத்தியவரும் விஜய் ஆண்டனிதான்.

’செக்ஸி லேடி’ கேட்டவுடன் பிடிக்க வைக்கும் அடிப்பாடல்.(பீட் ஸாங்..?).’கைய்ஸ் வேக் அப்’ என்ற குரலோடு தொடங்கும் பாடல் உருமி ஓசைகளோடு சொக்க வைக்கிறது.பிரியனின் வரிகளில் போதையேறுகிறது.ரம்யா குழுவினரின் குரல்கள் மேலும் உடுக்கடிக்கின்றன.மெதுவாகவும் நகராமல், வேகமாகவும் ஓடாமல் நின்று அடித்து ஆடியிருக்கிறார் பாடல் முழுவதும்.ரசித்துக்கேட்கலாம்.

kavya2(மூலப்படமான ‘க்ளாஸ்மேட்ஸ்’ நாயகி. இவங்களுக்கும், இந்தப் பதிவு(வரு)க்கும் இதைத் தவிர வேறு எதுவும் சம்பந்தமில்லை)

     வை தவிர பட ஓட்டத்திற்குதவும் வகையில் இரு சிறு பாடல்கள் உள்ளன.

‘கல்லூரி’ பாடல் பார்க்கையில் பிடித்துப் போகலாம்.

’நாட்கள் நகர்ந்து’-   ஆர்ப்பாட்டமில்லாமல் ஆரம்பமாகும் இசைக்கோர்வையினூடே வந்தது தெரியாமல், இதமாக இசையோடு கலந்துவிடுகிறது கௌஷிக்கின் குரல்.நான்குவரிப்பாடல்தான். நீட்டியிருந்தால் பிடிக்காமல் போயிருக்குமோ என்னவோ…நகரா நகரப் பேருந்தில் வேர்வையால் நசநசத்துப்போயிருக்கையில், ஓட்டுநர் தயவால் ஓரிரு அடிகள் பேருந்து நகர்கையில் கொஞ்சிவிட்டுப் போகும் காற்றின் சுகம் தருகிற பாடலிது.

’நினைத்தாலே இனிக்கும்’-கேட்டு ரசிக்கலாம்.

25 comments:

  1. அண்ணா! பாட்டு எல்லாம் நல்லா இருக்கு,

    ReplyDelete
  2. உன்கள் விமர்சனமும் அருமை.

    நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்து இருக்கீங்க. நின்னு நிதானமா அடிச்சு ஆடுங்க... உங்க பாணியில.

    ReplyDelete
  3. பதிவு நல்லா இருக்கு.கேட்டுட்டுத்தான்
    சொல்லணும்.

    ReplyDelete
  4. parani, appadiaye dld link kodutha nalla irukkum :-)

    ReplyDelete
  5. நல்லா எழுதியிருகீங்க.

    ReplyDelete
  6. பதிவு நல்லா இருக்கு. பாடல்கள் இதே மாதிரி இருந்தால் போதும். கேட்டுப் பார்க்கிறேன். :)

    ReplyDelete
  7. @மகேஷ்...
    நன்றி மகேஷ்...

    @ரவிஷங்கர்...
    நன்றி சார்.கேட்டுப் பாருங்கள்..பிடித்துப் போகலாம்...

    @கடையம் ஆனந்த்...
    நன்றி ஆனந்த்...

    @யாசவி...
    நன்றி யாசவி...

    @கோசி...
    தனி மெயில்ல அனுப்புறேண்டா.

    @நாடோடி இலக்கியன்...

    வாங்க இலக்கியன். முதல் வருகைக்கு நன்றி. நானே உங்கள் பக்கம் வர நினைத்தேன். அதற்குள் நீங்கள் வந்து விட்டீர்கள்.உங்களிடம் நிறையப் பகிர வேண்டியுள்ளது. வருகிறேன்...

    @கார்த்திக்...
    வருக கார்த்திக். கொஞ்சம் ஓவராப் புகழுறீங்க.. பாடல்கள் பதிவை விட நல்லாவே இருக்கும்.நன்றி...

    @ஆதிமூலகிருஷ்ணன்...

    உங்கள் சிரிப்பிற்குப் பின்னால் பல அர்த்தம் தொனிக்கிறதே.. நன்றி...

    @வழிப்போக்கன்...
    நன்றி வழிப்போக்கன்.. விரைவில் அதையும் பார்க்கலாம்.

    ReplyDelete
  8. போன முன்னோட்டத்தில் விட்டுப்
    போனது.

    இவரின் “ஏன் எனக்கு மயக்கம்”(நா.அ)
    ஹிந்தி பாடல் டைப் பிறகு “நெஞ்சாங்கூட்டில்”(டிஷ்யூம்) பாடலும் பிடிக்கும்.

    ReplyDelete
  9. //இவரின் “ஏன் எனக்கு மயக்கம்”(நா.அ)
    ஹிந்தி பாடல் டைப் பிறகு “நெஞ்சாங்கூட்டில்”(டிஷ்யூம்) பாடலும் பிடிக்கும்.//
    எனக்கும் பிடிக்கும் சார்...இவரின் பாடல்களில் வரிகள் தெளிவாகக் கேட்கும்(ஒரு சில பாடல்களைத் தவிர). இப்போதிருக்கும் மற்றவர்களுக்கு இவர் பரவாயில்லை.

    ReplyDelete
  10. //நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

    ReplyDelete
  11. உங்களுக்கு நல்ல ரசனை பரணி..

    ReplyDelete
  12. உங்களுக்கு ஒரு விருது என் பக்கம் வாருங்கள்.

    ReplyDelete
  13. @பிரபா...
    :-)

    @தர்ஷினி...
    நன்றி தர்ஷினி...

    @கடையம் ஆனந்த்...
    நன்றி ஆனந்த்...

    ReplyDelete
  14. வருக வருக

    வெகு நாட்களுக்கு பின் பதிவு

    எழுதியுள்ளீர்கள்

    தொடர்ந்து எழுதுங்கள்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. அழகாய் பூக்குதே அள்ளுது

    செக்ஸி லேடி மயக்குது

    மீதியெல்லாம் அவ்வலவா கேட்கல சகா..எனக்கும் விஜய் ஆண்டனி பிடிக்கும். வேட்டைக்காரன் காரணமல்ல :))

    ReplyDelete
  16. @சக்தி...
    வாங்க சக்தி.. வாழ்த்துக்கு நன்றிகள்...

    @கார்க்கி....
    வாங்க சகா... சரியாச் சொன்னீங்க.. நான் முழுப் பதிவாப் போட்டேன். நீங்க ரெண்டு வார்த்தை பின்னூட்டத்தில சொல்லீட்டீங்க...
    //எனக்கும் விஜய் ஆண்டனி பிடிக்கும். வேட்டைக்காரன் காரணமல்ல :))//
    ‘டிஷ்யூம்’ பண்ணியவராச்சே...

    ReplyDelete
  17. நல்ல அலசல் தமிழ்பறவை

    ReplyDelete
  18. வாழ்த்துக்கு நன்றி முரளி சார்...

    ReplyDelete
  19. பேரை சரியாத்தான் சொல்லியிருக்கீங்க...

    ReplyDelete
  20. பாடல்களை பற்றிய உங்கள் விமர்சனம் அருமையோ அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சரவணகுமரன் சார்...

    ReplyDelete