Saturday, December 13, 2008

நீர் வண்ண ஓவியம்...ஒரு சுய சோதனை முயற்சி

         
         இதுவரை எனது பதிவில் போட்ட பழைய ஓவியங்களுக்கு கிடைத்த வரவேற்பு என்னைச் சிறிது வெட்க வைத்தது. அதற்குக் கிடைத்த பாராட்டுக்களைப் பார்க்கையில், அவற்றிற்கு இப்போது நான் உரித்தானவனா என என்னுள் எழுந்த கேள்வியே என்னை இப்படம் வரையத்தூண்டியது.
இரு வாரத்திற்கு முன் என் வீட்டு மொட்டைமாடியில் உலாவச் சென்றிருந்த போது, கேட்பாரற்றுக் கிடந்தது கிழிந்த காலண்டர் ஒன்று. காலண்டர் என்றாலே கிழிந்துதான் இருக்கும் எனக் கேட்காதீர்கள். ஏனெனில் இது மாதக் காலண்டர்.புரட்டிப் பார்க்கையில் அழகிய வண்ண ஓவியங்கள் (ஆறில் நான்குதான்) இருந்தது.
ஜான் என்னும் ஓவியர் 'இந்தியப் பெண்கள்' என்னும் தலைப்பில் 98ஆம் ஆண்டு வரைந்தது. தற்போது அவர் உயிருடன் இல்லை எனும் குறிப்புகள் இருந்தன.
அதில் முதல் ஓவியமாக இப்படத்தைப் பார்த்தேன்.இப்படத்தைப் பார்த்தால் கவிஞருக்குக் கவிதையும், படைப்பாளிக்குக் கதையும் உடனே தோன்றும். எனக்குத் தோன்றியது பிரஷைக் கையிலெடுக்க வேண்டுமென்பதுதான். இதற்கு முன் 2007 ஆரம்பத்தில் வரைந்த இவ்வோவியத்திற்குப்(பென்சிலில்) பின், 2001ல் வரைந்த இவ்வோவியத்திற்குப்(வண்ணத்தில்) பின் , வெகு நீண்ட இடைவெளி விட்டு ஒரு விதத் தயக்கத்துடன் தொடங்கினேன். பரவாயில்லை. ஓரளவு திருப்தி தந்தது. இன்னும் இதில் திருத்தப்பட வேண்டிய பல குறைகள், செய்ய வேண்டிய பல நுணுக்கங்கள் இருப்பினும் எனக்கு அலுவலகத்தில் வேலைச்சுமை, நேரமின்மை காரணமாக இத்துடன் திருப்தி கொள்ள வேண்டியதாயிற்று.,(பின்னர் நேரம் கிடைக்கையில் கை வைத்துக்கொள்ளலாம்).
வாட்டர்கலரில் போதிய அனுபவமில்லாததால் ஒரு வித ஃபினிஷிங் இருக்காது. இருந்தும் இவ்வோவியத்திற்கு வண்ணம் தீட்டுகையில் நிறையக் கற்றுக் கொண்டேன்...('0' நம்பர் பிரஷ் இருப்பது, பிரஷ்களில் ரௌண்ட், ஃப்ளாட் என வகைகள் இருப்பதும், வண்ணம் கலக்குவதும் என...)

பி.கு.: தற்போது உலகளாவிய அளவில் தொழில்துறையில் நிலவி வரும் தேக்கநிலை ஆட்டோமொபைல் துறையையும் விட்டு வைக்கவில்லை. அதனால் நாட்கள் வெகுக் கடினமாக நகர்கின்றது. அதிக வேலை, அதைவிட வேலையில் நம்மை இருத்திக்கொள்ளும் நிலை, அதையும் விட என்னை நானே பலப்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு சூழலும் அமைந்து விட்ட படியால் வலைப்பூக்களில் முன்போல உலாவ நேரமில்லை. பதிவுக்குச் சிந்திப்பதற்கும் முடியவில்லை. இதுவரை எனது வலைப்பூவுக்கு வந்தும், வாழ்த்தியும், ஊக்கம் கொடுத்துப் பின்னூட்டியும், பின்னூட்டாமலும் சென்ற அனைத்து நல் உள்ள நண்பர்களுக்கும் நன்றிகளை வார்த்தையில் சொல்லவியலாமல் மனதுக்குள் சொல்லிக்கொள்கிறேன். ரெகுலராக நான் செல்லும் பதிவுகளுக்கு, அவ்வப்போது செல்லலாமென இருக்கிறேன். பின்னூட்டமிடுவது குறைந்து விடும் ஆனால் முற்றிலும் நின்று விடாது.
இடைவேளை.....

   படம் பெரிதாக இருந்ததால் ஸ்கேன் செய்து போட முடியவில்லை. புகைப்படமெடுத்துப் போட்டிருக்கிறேன்.

46 comments:

  1. ஷக்திப்ரபாDecember 13, 2008 at 11:54 PM

    அருமை!

    நீங்கள் கூறியதைப் போல் இன்னும் ஃபினிஷிங் செய்திருந்தால் மேலும் மெருகேறியிருக்கும் (இப்போது இருக்கும் மெருகுக்கு ஒன்றுமே குறைச்சல் இல்லை என்றாலும்)

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. எல்லாம் சரியாயிடும் தல.. படம் நிஜ்மா அருமை

    ReplyDelete
  3. நன்றிகள் ஷக்திப்ரபா...
    வாங்க கார்க்கி... வருகைக்கு நன்றி. காத்திருப்போம். it will pass

    ReplyDelete
  4. படம் அருமையா இருக்குங்க. முக்கியமாகப் புடவையும், முந்தாணை செருகிக் குடம் வச்சுருக்கறது எல்லாமே அமர்க்களமா வந்துருக்கு. பொண்ணோட முகமும் சூப்பர்.

    மனம் நிறைந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  5. ஸ்கேன் செய்திருந்தால் இன்னும் தெளிவாக இருந்திருக்கும்.....அருமையாக வரைந்திருக்கிறீர்கள்.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  6. படம் அருமையே ...

    முதல் நீர் வண்ண ஓவிய முயற்சி மிக அருமையாக வந்திருக்கிறது ..

    அனைவரும் சொல்லியது போல ஸ்கேன் பண்ணி இருந்தால்
    இனியும் சிறப்பாக இருக்கும் ...

    மேலும் .ஓவியம் பற்றிய விளக்கமும் ..அதை வரைந்தவர் பற்றிய விளக்கமும் ..உங்களுக்கே உரிய தனித்துவம் ..அருமை ..

    வேலை சுமை ..அதெல்லாம் சரியாகிவிடும் ..கவலையே வேண்டாம் ...

    அவ்வப்போது படைப்புகளை
    பதிய மறக்கவேண்டாம் ...என்ற வேண்டுதலோடு ...

    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete
  7. தமிழ்பறவை அண்ணா,நிறைய யோசிக்கிறீங்க.கவலைப்படவேணாம்.
    எல்லாம் சரியாயிடும்.வாழ்வில் இடக்குமுடக்கு என்பது என்றும் இயல்புதானே.யதார்த்த வாழ்வில் அதைக் காவிக்கொண்டே(தூக்கிக்
    கொண்டு)இயல்பாய் இருப்பவன் தானே மனிதன்.

    வாவ்...ஓவியம் அருமை...அருமை.
    வண்ணத்தோடு படு அசத்தல்.
    ஓவியத்தில் ஏன் உங்கள் பெயர் போடாமல் விட்டுவிட்டீர்கள்.
    போடுங்கோ.சாதாரண ஏழைக் கிராமத்து அழகான பெண் இயல்பாய்.
    கிழிந்த கலண்டரின் ஓவியம் அழிந்துபோகாமல் உங்கள் கைகளால் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது.
    எவ்வளவு சந்தோஷமான் விஷயம்.
    இதற்கு முதல் "ச்சும்மா போட்ட படம்".ச்சும்மா போட்ட படத்திற்கே எத்தனை பாராட்டுப் பின்னூட்டங்கள்.
    தொடருங்கள் இன்னும்.

    அண்ணா,நேரம் கிடைக்கும் சமயங்களில எங்களோடு உலவிக் கொள்ளுங்கோ.முற்றாகக் காணாமல் போய்விட வேண்டாம்.நிச்சயம் நான் தேடிக்கொண்டிருப்பேன் உங்களை.

    ReplyDelete
  8. படம் நல்லா இருக்கு

    ReplyDelete
  9. வலைப்பூ உங்களுக்கு ஒரு வடிகால். நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் .

    ஓவியம் நல்ல இருக்கு.ஏழை பெண் என்பதால் ரவிக்கை மாட்சிங் ஆக இல்லையோ.

    ReplyDelete
  10. வாங்க துளசி டீச்சர்...நன்றி...(இந்தத் தடவை கட்டுன வீட்டுக்கு பழுதொண்ணும் சொல்லலை)...

    வருகைக்கு நன்றி அன்புடன் அருணா...(முடிந்தால் ஸ்கேன் செய்து போடுகிறேன்...)

    வாங்க‌ விஷ்ணு... ப‌திவிட‌ நேர‌மிருக்கையில் முய‌ற்சிக்கிறேன். த‌ங்க‌ளின் ஊக்க‌த்திற்கும் ந‌ன்றி...

    வாங்க‌ ஹேமா...(உங்க‌ள் ப‌திவில் கேட்ட‌ கேள்விக்கு இங்கு சாதுர்ய‌மாக‌ விடைய‌ளித்து விட்டீர்க‌ள்.)
    //ஓவியத்தில் ஏன் உங்கள் பெயர் போடாமல் விட்டுவிட்டீர்கள்//
    போட்டிருக்கிறேன் ப‌ட‌த்தின் இட‌து ஓர‌த்தில் இன்றைய‌ தேதிய்ட‌ன் இருக்கும். ப‌ட‌த்தைப் பெரிதாக்கிப் பாருங்க‌ள்.
    அவ்வ‌ப்போது வ‌ருகிறேன்...

    வாங்க‌ ஞான‌ சேக‌ர‌ன் ந‌ன்றி...

    வாங்க‌ ரவி சார்... அத‌னால்தான் அவ‌ளுக்கு ஒரு க‌ருப்பு வ‌ளைய‌ல் த‌விர‌ வேறு எந்த‌ ந‌கையும் இல்லை. உங்க‌ளுக்கு இப்ப‌ட‌ம் எதுவும் க‌தை சொல்ல‌த் தோன்ற‌வில்லையா சார்...?

    ReplyDelete
  11. படம் அருமையா வந்து இருக்கு!!!

    நிறைய வரையுங்க!!!

    தேவா...

    ReplyDelete
  12. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி தேவா...

    ReplyDelete
  13. //ஓவியம் நல்ல இருக்கு.ஏழை பெண் என்பதால் ரவிக்கை மாட்சிங் ஆக இல்லையோ.//

    இப்படி ஒரு பாய்ண்ட் இருக்கோ? முக்கால்வாசி ஆம்பளைங்க துணிகளில் மட்டும் கலர் ப்ளைண்ட் னு சொல்வது சரிதான் போல!!!!!

    பிங்க் முந்தாணைக்குப் பொருத்தமா பிங்க் ரவிக்கை இருக்கே. அப்புறம் என்ன? இப்படியும் ஒரு மேட்சிங் இருக்கு.

    ReplyDelete
  14. வழக்கம் போல கலக்கல் தல.

    ReplyDelete
  15. //எல்லாம் சரியாயிடும் தல.. படம் நிஜ்மா அருமை//

    ரிப்பீட்டு.

    படத்தை பார்த்து, பதிவை படித்து வருகையில், உங்கள் பென்சில் ட்ராயிங்க் பார்க்கும்போது, "இவரு கண்டிப்பா க்ளாஸ் எங்காவது போயிருப்பாரு" என்று தங்கமணிகிட்ட சொன்னேன்.

    //('0' நம்பர் பிரஷ் இருப்பது, பிரஷ்களில் ரௌண்ட், ஃப்ளாட் என வகைகள் இருப்பதும், வண்ணம் கலக்குவதும் என...)//

    இந்த வரிகளைப் படித்தும் ஆச்சர்யம்.

    நன்றாக வண்ணம் தீட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. அன்பு தமிழ்ப்பறவை...

    சூப்பர்..! அருமை..! உங்களது முதல் வாட்டர்பெய்ண்டிங் முயற்சி என்று நம்பவே முடியவில்லை. ஏதாவது தப்பு கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று முட்டி மோதிப் பார்த்தேன். ம்ஹூம்..! கண்டுபிடிக்கவே முடியவில்லை..!

    குறிப்பாக மூக்கு மேடுகள், கழுத்துச் சரிவுகளில் நிழலைக் கொண்டு வருவது எப்போதும் எனக்கு அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே அமையும். கேமலின் ஒரு அடர் சிவப்புக் கலரில் இண்டியன் ஒய்ட்டை மிக்ஸ் செய்து முகத்தின் ரோஸ் நிறத்தைக் கொண்டு வருவேன். நீங்கள் என்ன செய்து இந்த ரோஸ் கலர் கொண்டு வந்தீர்கள் என்று சொல்லுங்களேன்..!

    மற்றபடி 'இதுவும் கடந்து போகும்'.

    ReplyDelete
  17. எல்லோரும் இப்பிடி பிலிம் காட்டுவது பேஷனா போச்சுதுபா... சண்டேக்களிலாவது வாங்கப்பா..! (படம் பிரமாதங்க..)

    ReplyDelete
  18. //இப்படி ஒரு பாய்ண்ட் இருக்கோ? முக்கால்வாசி ஆம்பளைங்க துணிகளில் மட்டும் கலர் ப்ளைண்ட் னு சொல்வது சரிதான் போல!!!!!//
    ஹி..ஹி...

    //பிங்க் முந்தாணைக்குப் பொருத்தமா பிங்க் ரவிக்கை இருக்கே. அப்புறம் என்ன? இப்படியும் ஒரு மேட்சிங் இருக்கு//
    நானே சொல்ல நினைச்சேன். நீங்க சொல்லீட்டிங்க டீச்சர்..நன்றி...

    வாங்க குடுகுடுப்பையாரே...
    நன்றிகள்...

    வாங்க பழமைபேசி...
    உங்கள் பக்கத்தின் மௌன வாசகன் நான். வருகைக்கு நன்றி...

    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி தாமிரா சார்...
    வார இறுதி நாட்கள்ல கண்டிப்பா வந்துரலாம்...

    ReplyDelete
  19. வாங்க சதங்கா...
    வருகைக்கும், வாழ்த்துக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள்...
    உங்களோட 'குசேலா இக்கடச் சூடு' பதிவைப் பார்த்த பின்னாடிதான் நான் என் வலைப்பூவில படங்களே போட ஆரம்பிச்சேன்.
    உங்கள் மற்றும் கபீரன்பன் பதிவுகள்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.
    எனக்கு பிரஷ்ல கொஞ்சம் ப்ரச்சினையா இருக்கப்ப்போ நினைக்கிறது உங்களோட 'நந்தி' படம்தான். (லாவகமா பிரஷைப் பயன்படுத்தி வரைய வந்த படம்ன்னு சொல்லியிருப்பதா ஞாபகம்)..
    உங்களோட படங்கள்ல இருக்கிற ஃபினிஷிங் கொண்டு வர முடியல.(ஆயில் வண்ணத்துல ஒரு மஞ்சள் பூ மற்றும் வாட்டர்கலர் கார்ட்டூன், பறவை படம்.. அதுவும் வாட்டர்கலர்ன்னு நினைக்கிறேன்)
    இணைய உதவில வாட்டர்கலர் நுட்பம் கத்துக்கிட்டதா சொன்னீங்க. நானும் ட்ரை பண்ணினேன். பட்.. ரொம்பப் பொறுமை இல்லை.
    சரி தப்பு பண்ணிப் பண்ணிக் கத்துக்குவோம்ன்னு விட்டுட்டேன்.
    இதுவரைக்கும் 1 அல்லது 2 நம்பர் பிரஷ்தான் யூஸ் பண்ணீனேன். முத முதல்லா 0 நம்பர் பிரஷைப் பார்க்கவும் ஆச்சரியம். இவ்ளோ பாயிண்ட்டடா இருக்கேன்னு.
    கடையில் போய் பிரஷ் வேணும்னு கேட்டேன். ரவுண்டா, ஃப்ளாட்டான்னான். அட இதுல இவ்வளவு உள்குத்து இருக்கான்னு மனசுக்குள்ளா யோசிச்சிட்டு "ரெண்டையும் எடு பார்க்கலாம்"னு சொல்லி வாங்கிட்டு வந்தேன்.

    ReplyDelete
  20. வாங்க நண்பர் வசந்த்...
    நன்றிகள்...(இருந்தும் ஒரு நெருடல் , பின்னூட்டம் என்பதால் நன்றாக இருக்கு என்று சொல்கிறாரோ என்று)
    இது முதல் வாட்டர் பெயிண்டிங் முயற்சி அல்ல. இதற்குமுன் 2000ம் வருடத்திற்கு முன் செய்திருக்கிறேன். ஒரு வைரமுத்து ஓவியம் வைத்திருக்கிறேன். தனி மடலில் அனுப்புகிறேன்.

    //எப்போதும் எனக்கு அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே அமையும்//
    எனக்கும் அப்படித்தான் .... ஆனால் வெகு முயற்சி செய்து அடிக்கடி அதிர்ஷ்டத்தை அழைத்துக் கொள்வேன்.இப்படத்தில் கூட நீங்கள் கூறிய இடங்களில் சரியாக வராமல் நான்கு நாட்கள் படத்தையே தொடவில்லை. பின்புதான் எடுத்து ஓரளவிற்கு சரி செய்தேன்.

    //கேமலின் ஒரு அடர் சிவப்புக் கலரில் இண்டியன் ஒய்ட்டை மிக்ஸ் செய்து முகத்தின் ரோஸ் நிறத்தைக் கொண்டு வருவேன். நீங்கள் என்ன செய்து இந்த ரோஸ் கலர் கொண்டு வந்தீர்கள் என்று சொல்லுங்களேன்..!//
    இன்டியன் ஒயிட் என்றால் வாட்டர்கலர் பாக்ஸில் உள்ள ஒயிட் தானே... அதே முறைதான் நானும் செய்தேன். அதே சமயம், முகத்தில் கொடுக்கும் வண்ணமென்பதால் உபயோகிக்கும் இடத்திற்கேற்ப ப்ரவுன், பழுப்பு, ஆரஞ்சு நிறக்கலவை விகிதத்தைக் கூட்டிக் கொண்டேன். மேற்கண்ட முறைப்படிப் பார்த்தால் கண்களை,காதுகளைச் சுற்றியுள்ள பகுதி(ப்ரவுன்+ஒயிட்+தேவைக்கேற்ப கருப்பு), முன் நெற்றிப்பகுதியில் (பழுப்பு+ஒயிட்+சிறிது ஆரஞ்ச்), மற்ற பெரும்பாலான் முகப் பகுதிகளுக்கு (ஆரஞ்ச்+ஒயிட்+தேவைக்கேற்ப அடர் அல்லது இளஞ்சிவப்பு) என 'ட்ரையல் அண்ட் எர்ரர்' முறைப்படி வண்ணமடித்தேன்.

    //மற்றபடி 'இதுவும் கடந்து போகும்'//
    காத்திருப்போம்...

    ReplyDelete
  21. இங்கேயும் ஆர்ட் சப்ளைஸ்லே அட்டகாசமான ப்ரஷ்கள் கிடைக்குது.

    இப்ப எல்லாருடைய பெயிண்டிங்ஸ்ம் பார்க்கும்போது, நம்ம ஆரம்பகாலப் படங்கள்(கத்துக்குட்டிக் காலம்) ஒன்னுரெண்டை இங்கே போட்டு எல்லார்கிட்டேயும் 'ஆ... ச்ச்சீ' வாங்கலாமான்னு இருக்கு:-))))

    ReplyDelete
  22. அதிக வேலை அதைவிட வேலையில் நம்மை இருத்திக்கொள்ளும் நிலை, அதையும் விட என்னை நானே பலப்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு சூழலும் அமைந்து விட்ட படியால் வலைப்பூக்களில் முன்போல உலாவ நேரமில்லை. பதிவுக்குச் சிந்திப்பதற்கும் முடியவில்லை.
    //
    தமிழ்பறவையாரே கிட்டதட்ட உங்கள் நிலைமை தான் எனக்கும். அதனால் இந்த கருத்தை நான் வரவேற்கிறேன்.
    பொதுவாக நம்முடைய பதிவை எட்டி பார்பார்த்து றுமொழியிடுகிறவர்களுக்கே மறுமொழியிட முடியில்லை. இதனால் தவறhக கருதி மறுமுறை திரும்பிக்கூட பார்க்க மாட்டுகிறhர்கள். என்ன செய்ய?
    கிடைக்கிற நேரத்தில் ஒரு பதிவு போட்டு விட்டு.... ஒரு வாரம் கழித்து மறுமொழி போட வேண்டியிருக்கிறது.
    அப்படியே நேரம் கிடைக்கின்ற போதும் சொல்ல வந்த கருத்தை சரியாக சொல்ல முடியாமல் போய் விடுகிறது.
    சரி விடுங்க ...
    உங்களை போன்ற ஓவியர் வலையுலகத்திற்கு தேவை. பறவையின் ஓவிய விரும்பிகள் இங்கு நிறைய பேர் இருக்கிறhர்கள். அதில் நானும் ஒருவன். நான் பார்க்கின்ற பதிவுகளில் முதன்மையானவர் நீங்கள் தான். அதிகமாக பின்னுட்டம் போட முடியாவிட்டால[ம் உங்கள் பதிவை பார்த்து விடுவேன். முயன்றhல் முடியாதது உண்டா? தமிழ்பறவையாரே....

    ReplyDelete
  23. வாங்க ஆனந்த்...

    //அப்படியே நேரம் கிடைக்கின்ற போதும் சொல்ல வந்த கருத்தை சரியாக சொல்ல முடியாமல் போய் விடுகிறது. //
    இப்போ சரியாச் சொல்லிட்டீங்க... அதேதான் என் கருத்தும்...
    //பறவையின் ஓவிய விரும்பிகள் இங்கு நிறைய பேர் இருக்கிறhர்கள். அதில் நானும் ஒருவன்//
    நன்றிகள் நண்பரே...
    முயற்சிப்போம்....

    ReplyDelete
  24. அண்ணா ,
    தங்களின் வார்த்தைகளை விட தங்கள் ஓவியம் அதிகம் சொல்கிறது.

    யாருக்காக அந்த பெண்மணி கையில் குடத்துடன் மாலை வேளையில் ஒரு மரத்தடியில் காத்துகொண்டு இருக்கிறாள் .

    அட ஒரு ஆணின் மனது இன்னொரு பெண்ணின் மனதை வண்ணங்களில் சொல்லும் மர்மம் என்ன ?

    வெள்ளொளி வெளிப்படுத்தும் உண்மை என்ன .

    தாங்கள் ஒரு படைப்பாளி ஒன்றும் ஆகாது பயம் கொள்ள வேண்டாம் .

    ஏற்ற இறக்கம் இருந்தால் தான் அது தாராளமயம் .

    இதெல்லாம் இயல்பே .

    வலை பூக்களில் தங்கள் வளம் எங்களுடைய சிந்தனைக்கு நலம் .

    ReplyDelete
  25. அருமையாக வரைந்திருக்கிறீர்கள்.முதல் வண்ண ஓவிய முயற்சி மிக அருமை.

    ReplyDelete
  26. You have good potential and can try more paintings of various forms. The pencil drawing of that old man is simply superb...! Keep it up and try to have an exhibition of your paintings soon. Best Wishes from Rathi

    ReplyDelete
  27. ரொம்பப் பிரமாதம். பிரச்சனைகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும். அதனால் என்ன ? அது பாட்டுக்கு அது,இது பாட்டுக்கு இது :))

    ReplyDelete
  28. நைஸ் டைம், பெயரில்லா(ரதி), ஷான் நல்லையா வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்...
    கபீர் அன்பன் சார் தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தெரிவிக்கும் தங்கள் ரசிகன்...(குருவி படம் சூப்பர்)

    ReplyDelete
  29. தமிழ் பறவை!

    நிறைய இடைவெளி விழுந்துடுச்சு.புதிய பதிவு காணும்.ஒரு
    பின்னூட்டத்தில் உங்களைப் பார்த்தேன்.Soon going to be back in action?

    ReplyDelete
  30. இன்னும் முழு வீச்சில் வரவில்லை ரவி சார்.. அவ்வப் போது படிக்க எளிதான பதிவுகள் படித்து வருகிறேன்.(கண்களுக்கு மட்டும் சென்று சேரும் வரையில்...)புதுப் பதிவுகள் போடும் எண்ணம் இப்போதைக்கு இல்லை சார்.அடுத்த மாத ‘அப்ரைசல்’ அல்லது ‘ஆப்புரைசல்’ பாத்துட்டு முடிவு பண்ணிக்கலாம் சார்...
    கவனமெடுத்து விசாரித்ததற்கு நன்றி சார்...

    ReplyDelete
  31. நான் போட்ட பின்னூட்டதையே கானோம்... anyway
    மறுபடியும் சொலிட்ரேன் ஓவியம் சூப்பர்.
    மீண்டும் உங்கள் ஒவியத்தை எதிர்பார்து....

    ReplyDelete
  32. வாங்க தர்ஷினி... நன்றி வருகைக்கு...
    இதற்கு முன் பின்னூட்டம் வரவில்லை அல்லது தொழில்நுட்பக் கோளாறின் பசிக்கிரையாகியிருக்குமென நினைக்கிறேன்.

    ReplyDelete
  33. welcome mayvee...thanks for ur first visit and comment...
    (whenevr i saw ur name, im reading like,'mayaavee'... sorry)

    ReplyDelete
  34. தமிழ்பறவை... என்னங்க இப்படி அசத்தறீங்க...!!

    நம்ம கருப்புவெள்ளை படத்துக்கு தத்துவமா கருத்து சொன்னத பாத்து ‘ஆஹா யாருப்பா இதுன்னு' வந்து இந்தப் பதிவதாங்க பாத்தேன்.. ஓவியத்தப் பாத்ததும் ஒரு நாழி அசந்துபோய்ட்டங்க.. நீங்களே வரஞ்சது அதுவும் முதல் முயற்சிங்கறது.. இன்னும் அசத்தல்..

    அட்டகாசமா இருக்குங்க படம். முக்கியமா வண்ணங்கள்.. ரொம்ப ரொம்ம்ப அருமைங்க..

    நானும் ஒரு காலத்தில் இப்படியெல்லாம் வரைய முயற்சி செஞ்சதுண்டுங்க.. பொறுமையும் திறமையும் பத்தலன்றதாலதான் கேமராவத் தூக்கியாச்சு..

    You are having a such a gifted talent.. please paint more & more..!!

    BTW, your thoughts about my photo is very impressive.. No wonder you are an artist!!

    ReplyDelete
  35. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சூர்யா...

    ReplyDelete
  36. உண்மையாய் ரசித்தேன்... ஆட்டோமொபைலில் இருப்பவர் இரும்பாய் இருக்கவேண்டியதில்லை என்பதை அடிக்கடி உங்களைப் போல் பலர் எனக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்...

    ReplyDelete
  37. நன்றி பேரின்பா வருகைக்கும், ரசிப்புக்கும்

    ReplyDelete
  38. உங்களின் அனைத்து ஓவியங்களும் மிகவும் அருமையாக இருக்கு . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  39. முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ஃபைஸா காதிர் மேடம்.
    அனைத்து ஓவியங்களையும் ரசித்தமைக்கு நன்றி..
    நான் உங்கள் தளம் வருகை தந்திருக்கிறேன்...

    ReplyDelete
  40. அழகான ஓவியம். ரசித்தேன்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  41. ரசித்தமைக்கு நன்றி சேரல்...

    ReplyDelete
  42. dear this is saravanan (mapilai) your drawing is excellent. wat i am trying to say is your drawing and my dream girl face and structure is simillar wat a coincidence. really super

    ReplyDelete