Thursday, March 10, 2011

75வது பதிவு- போர்ட்ரெய்ட் ஓவியங்கள் ஸ்பெஷல்-பொக்கிஷம்

     மிழ்ப்பதிவுலகுக்கு வந்து மூன்றாண்டுகள் ஆனநிலையில் இப்போதுதான் 75வது பதிவு வருகிறதெனில் நான் எவ்வளவு ஆக்டிவாக உள்ளேன் என எண்ணிப்பாருங்கள். ;-) நம்பர்களில் நம்பிக்கையில்லை.(தரத்தில் மட்டும் என்ன வாழுதாம் எனக்கேட்டு விடாதீர்கள்) மனதுக்குத் தோணும் போது மட்டும் பதிவிடுகிறேன். பல பத்து(பல நூறு சொல்லுமளவுக்கு இல்லை) ரசனையான பதிவ நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். இப்போது எழுத்தை விடவும் கோடுகள் பக்கமே அதிகம் சாய்ந்து கொண்டிருக்கிறேன்.

      ன்று பெட்டியை நோண்டுகையில் கிடைத்த பழைய நோட்டில், பத்து வருடங்களுக்கு முன்(வேலையில்லாத போது) கிடைத்த இதழ்களைப் பார்த்துக் கிறுக்கித் தள்ளிய இவ்வோவியங்கள் கிடைத்தன. பெரும்பான்மை படங்கள் கறுப்பு பால்பாயிண்ட் பேனாவில் அரைமணி நேரத்திற்குள் வரையப் பட்டவை. ஒரு ஆவணமாக்க வேண்டுமெனவும், சில நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும்(கொஞ்சம் சுயமோகம்) அவற்றைப் பதிவிடுகிறேன். இப்போது அதிகம் உருவப் படங்கள் வரைவதில்லை.உங்களின் வாழ்த்துக்கள் இன்னும் நிறைய நல்ல கோடுகளை என்னிடமிருந்து வெளிக் கொணரும் என நம்புகிறேன்.

குறிப்பு: அதிகப் படங்கள் போட்டிருப்பதால் சிறியதாக்கியிருக்கிறேன். கிளிக்கிப் பெரிதாக்கிப் பார்த்தால் ஓரளவு நன்றாக இருக்கும்.

பாவனா-பென்(ண்)சில்
இதழ் அட்டைப்படம்-பென்(ண்)சில்
ஓவியர் கோபுலு-பால்பாயிண்ட் பென்
ஏதோ ஜோக்-பால் பாயிண்ட் பென்
பெண்-பால்பாயிண்ட் பென்
மாதவன் -பால்பாயிண்ட் பென்
ஸ்வேதா குட்டி-பால் பாயிண்ட் பென்
வாலி- பால் பாயிண்ட் பென்
கீர்த்தனா-கன்னத்தில் முத்தமிட்டால்-பால்பாயிண்ட் பென்
திரிஷா(சினிமாவுக்கு முன்)-பால்பாயிண்ட் பென்
நந்திதா தாஸ் அஸ் அழகி-பால் பாயிண்ட் பென்
லாலேட்டன் -பால் பாயிண்ட் பென்
தனுஷ்-பால்பாயிண்ட் பென்
வைரமுத்து-போஸ்டர் (அ) வாட்டர் கலர்(நினைவில்லை) ம.செ வின் ஓவியத்தில் இன்ஸ்பைர் ஆகி வரைந்தது
ஜெயகாந்தன் - ஜெல் பென்
இசை-பால் பாயிண்ட் பென்
     

17 comments:

  1. 75 பதிவு அதனால வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிட்டு போறேன் ;)

    மத்தபடி தனியா வா

    ReplyDelete
  2. சான்சே இல்லை..

    அதுவும் இசை :)))

    ”கை” கொடுங்கன்னு சொல்ல பிடிக்கல.. கட்டிபிடிச்சுக்கிறேன்

    ReplyDelete
  3. Sketches மிகவும் அருமை. நான் வரைந்த பழைய கிறுக்கல்கள்( கல்லூரியில் போர் அடிக்கும் கிளாஸ்களில்) நினைவுக்கு வருகின்றன..

    ReplyDelete
  4. ஓல்டு இஸ் கோல்டு.வாலி கம் பெரியார்.

    இன்னொரு 10 வருடம் கழித்து மதிப்புக் கூடும்.

    75வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. பரணி அண்ணா வாழ்த்துகள் 75 ஆவது பதிவுக்கு.இசைராஜாவின் படம் மிக மிக அழகா வந்திருக்கு !

    ReplyDelete
  6. @கோபிநாத்....
    மிக்க நன்றி கோபி...விரைவில் சந்திப்போம்...

    @கார்க்கி...
    வாழ்த்துக்கு நன்றி சகா...

    ReplyDelete
  7. @விஜிசெந்தில்...
    முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...

    @ரவிஷங்கர்...
    வாழ்த்துக்கு நன்றி சார்...

    ReplyDelete
  8. @ஹேமா...
    நன்றி ஹேமா வாழ்த்துக்கு,,,

    @சி.பி. செந்தில் குமார்...
    நன்றி நண்பரே...’சார்’ எல்லாம் வேணாம். உங்களின் அனைத்துப் பதிவுகளும் உடனே படித்தும் கருத்திடா சோம்பேறி நான் :(...

    ReplyDelete
  9. ஓவியங்கள் ஸ்பெஷல் என்று தலைப்பிருந்தாலும் எல்லாருடைய பெயர் போட்டு ராஜா பெயர் போடாமல் இசை என்று போட்டு இசை ஸ்பெஷல் ஆக்கி விட்டீர்கள். நன்றி

    ReplyDelete
  10. @மனசாலி...
    முதல் வருகைக்கும், ரசிப்புக்கும் மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  11. @மதுரை சரவணன்...

    வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே...!

    ReplyDelete
  12. வாழ்த்துகள் 75 ஆவது பதிவுக்கு வரைந்த ஓவியங்கள் அழகு.

    ReplyDelete
  13. அப்பா ! ஒரே மூச்சுல எல்லாத்தையும் போட்டுட்டீங்களே. முதல் படத்து பெண்மணியின் டிரஸ்ஸில் ஹக்கோபா (?) டிசைன் பிரமாதம். போர்ட்ரெயிட் எல்லாத்திலேயும் வெரைடி நல்லா இருக்கு. சீக்கிரமே நூறு பதிவுகளை அடைய வாழ்த்துகள்

    ReplyDelete
  14. @தோழி பிரஷா...
    முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி தோழி பிரஷா...

    @கபீரன்பன்...
    வாழ்த்துக்கு நன்றி சார்...//ஹக்கோபா (?) டிசைன் //
    தெரியலை சார். அப்டியே படத்துல இருந்தத ட்ரை பண்ணினேன். :)
    இனிமே பதிவுல படம் போடனும்னா புதுசா வரைஞ்சுதான் போடணும்னு ஒரு குறிக்கோள். அதான் பழசெல்லாம் போட்டுட்டேன். :)

    ReplyDelete